எட்டு வகையான இருமணங்கள் பற்றி மனுஸ்ம்ருதி கூறுகிறது. இந்த வகைகளை, தான் வகுப்பதாக மனு சொல்ல வில்லை; வழக்கத்தில் இருந்து வருகிற இருமண வகைகளை விவரிப்பதாகவே இந்த நூல் கூறுகிறது. இவற்றில் கூடாதது எது, ஏற்கத்தக்கது எது என்று மனு சுட்டிக்காட்டுகிறார்.
ஆபரணங்களினால் நன்கு அலங்கரிக்கப்பட்ட ஒரு பெண், தன்னுடைய தந்தையினால் அழைக்கப்பட்ட, கற்றறிந்த நற்குண முடைய ஆணை மணப்பது – பிரம்ம முறை இருமணம்.
யாகத்தில் புரோகதராக பணி புரிபவருக்கு, யாகத்தை நடத்துபவர் மனமுவந்து தனது பெண்ணைக் கொடுத்து நடத்தி வைப்பது – தைவ முறை திருமணம்.
ஒரு எருது அல்லது பசு மாடு ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டு, ஒரு பெண் ஒருவனுக்கு மாலையிடுவது – ஆர்ஷ முறை இருமணம்.
கணவனாக வர இருப்பவனை, மணப்பெண் வணங்க, ‘நீங்கள் இருவரும் முறையாக இல்லறம் நடத்துவீர்களாக! என்று மணமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு, பெரியவர்களால் நடத்தி வைக்கப்படுவது – பிராஜாபத்யம் என்கிற திருமண முறை.
மணமகன் தானாக விரும்பி, மணப்பெண்ணுக்கும், அவளுடைய தந்தைக்கும் பணம் கொடுத்த பிறகு நடத்தி வைக்கப்படுவது – ஆஸுர முறைத் இருமணம்.
ஒருவனும், ஒருவளும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் இதய பூர்வமாக விரும்பி, தாங்கள் இணைந்து வாழ வேண்டும் என்ற அந்த இருவரின் உணர்வு பூர்வமான ஆசையின் காரணமாக நடப்பது – காந்தர்வ முறை திருமணம்.
மணமகளின் உறவினர்களை துன்புறுத்தியோ, கொன்று விட்டோ அவளை பலவந்தமாக கடத்திச் சென்று ஒருவன் இருமணம் செய்து கொள்வது – ராக்ஷஸ முறை விவாகம்.
உறக்கத்தினாலோ அல்லது வேறு காரணத்தினாலோ உணர்வற்று கிடக்கிற ஒரு பெண்ணை, பலாத்காரத்திற்கு உள்ளாக்கி, ஒருவன் திருமணம் புரிவது – பைசாச முறை இருமணம்.
இந்த கடைசி முறையை மனு மிகவும் கண்டித்திருக்கிறார். ஆஸுர முறையும் மனுஸ்ம்ருதியில் கண்டிக்கப்படுகிறது. ஆஸுர முறையில், மணப் பெண்ணுக்கும், அவளுடைய தந்தைக்கும் மணமகனால் பணம் அளிக்கப்படுகிறது; இதற்குப் பெயர் சுல்கம். இதுவே கன்யாசுல்கம் என்று வழக்கில் கூறப்படுகிறது.
ஒரு விஷயம் நமது கவனத்திற்குரியது. மணப்பெண் தரப்பிற்கு பணம் கொடுத்து நடத்தப்படுகிற இருமணம் கண்டிக்கப்படுகிற அதே நேரத்தில் – ‘மணமகனுக்கு பணம் கொடுத்து நடத்தப்படுகிற இருமணம் என்று எந்த வகையையும் மனுஸ்ம்ருதி சுட்டிக்காட்ட வில்லை. அதாவது, இன்று பல கொடுமைகளுக்குக் காரணமாகியுள்ள ‘வரதட்சணை‘ அன்று இருக்கவே இல்லை. அதனால் அது பற்றி குறிப்பே இல்லை. வரதட்சணை என்பது பின்பு எப்போதோ வந்து விட்ட விபரீதம். மனுஸ்ம்ருதியில் மட்டுமல்ல, வேறு தர்மசாஸ்திர நூல்களிலும் சரி, புராணங்களிலும் சரி, வர தட்சணை வாங்கி நடத்தப்படுகிற திருமணங்கள் பற்றி எதுவுமே கூறப்படவில்லை. அந்த அளவிற்கு அப்போது கேள்விப்பட்டே யிராத விஷயம் இது. ஆகையால் இன்று வளர்ந்து விட்ட இந்த அநாகரிகத்திற்கு, ஹிந்து தர்மத்தைப் பழிப்பது நியாயமல்ல. தந்தைக்கும் பணம் கொடுத்த பிறகு நடத்தி வைக்கப்படுவது – ஆஸுர முறைத் இருமணம். ஒருவனும், ஒருவளும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் இதய பூர்வமாக விரும்பி, தாங்கள் இணைந்து வாழ வேண்டும் என்ற அந்த இருவரின் உணர்வு பூர்வமான ஆசையின் காரணமாக நடப்பது – காந்தர்வ முறை திருமணம். மணமகளின் உறவினர்களை துன்புறுத்ிதியோ, கொன்று விட்டோ அவளை பலவந்தமாக கடத்திச் சென்று ஒருவன் இருமணம் செய்து கொள்வது – ராக்ஷஸ முறை விவாகம். உறக்கத்தினாலோ அல்லது வேறு காரணத்தினாலோ உணர் வற்று கிடக்கிற ஒரு பெண்ணை, பலாத்காரத்திற்கு உள்ளாக்கி, ஒருவன் திருமணம் புரிவது – பைசாச முறை இருமணம். இந்த கடைசி முறையை மனு மிகவும் கண்டித்திருக்கிறார். ஆஸுர முறையும் மனுஸ்ம்ருதியில் கண்டிக்கப்படுகிறது. ஆஸுர முறையில், மணப் பெண்ணுக்கும், அவளுடைய தந்தைக்கும் மணமகனால் பணம் அளிக்கப்படுகிறது; இதற்குப் பெயர் சுல்கம். இதுவே கன்யாசுல்கம் என்று வழக்கில் கூறப்படுகிறது. ஒரு விஷயம் நமது கவனத்திற்குரியது. மணப்பெண் தரப்பிற்கு பணம் கொடுத்து நடத்தப்படுகிற இருமணம் கண்டிக்கப்படுகிற அதே நேரத்தில் – ‘மணமகனுக்கு பணம் கொடுத்து நடத்தப்படுகிற இருமணம் என்று எந்த வகையையும் மனுஸ்ம்ருஇி சுட்டிக்காட்ட வில்லை. அதாவது, இன்று பல கொடுமைகளுக்குக் காரண மாகியுள்ள ‘வரதட்சணை‘ அன்று இருக்கவே இல்லை. அதனால் அது பற்றி குறிப்பே இல்லை. வரதட்சணை என்பது பின்பு எப்போதோ வந்து விட்ட விபரீதம். மனுஸ்ம்ருதியில் மட்டுமல்ல, வேறு தர்மசாஸ்திர நூல்களிலும் சரி, புராணங்களிலும் சரி, வரதட்சணை வாங்கி நடத்தப்படுகிற திருமணங்கள் பற்றி எதுவுமே கூறப்படவில்லை. அந்த அளவிற்கு அப்போது கேள்விப்பட்டே யிராத விஷயம் இது. ஆகையால் இன்று வளர்ந்து விட்ட இந்த அநாகரிகத்திற்கு, ஹிந்து தர்மத்தைப் பழிப்பது நியாயமல்ல.
பெண்களைப் பற்றிப் பேசத் தொடங்குகிற மனுஸ்ம்ருதி – ‘ஒரு பெண் தனது குழந்தைப் பருவத்தில் தந்தையிடமும், இளமையில் கணவனிடமும், வயோதிகத்தில் மகனிடமும் கட்டுப்பட்டு வாழ்கிறாள்; சுதந்திரமான வாழ்க்கையை ஒரு பெண் விரும்பக் கூடாது! – என்று கூறுகிறது.
மேலும் ‘கணவனிடம் மாறாத அன்பு வைப்பதை விட மேலான ஒரு விரதம் கிடையாது. மனம், வாக்கு, சரீரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, கணவனிடம் உண்மையான அன்பு கொண்டு, தனது கடமைகளைச் செய்யும் பெண் இவ்வுலகில் மேன்மை அடை வாள்; மரணத்திற்கு பின் நல்ல உலகை அடையிறாள்….
பெண்ணிற்கு மனுஸ்ம்ருதி சில கடுமையான நிபந்தனைகளை: விதித்தாலும், அவளுக்கு ஒரு உயர்ந்த இடத்தை அளிக்கிறது.
யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே
ரமந்தே தத்ர தேவதா:
யத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே
ஸர்வாஸ்தத்ர அபலா: க்ரியா:
பெண்கள் கெளரவமாக நடத்தப்படுகிற இல்லங்களில் தெய்வங்கள் மகிழ்கின்றன; பெண்கள் கெளரவமாக நடத்தப் படாத இல்லங்களில், எல்லாக் காரியங்களும் பயனற்றுப் போகின்றன.
மனு ஸ்ம்ருதி மேலும் சொல்கிறது :
பெண்கள் துன்பத்திற்கு ஆளாகாத இல்லங்களில், நலம் கொழிக்கிறது; பெண்கள் துன்பத்திற்கு உள்ளாகிற இல்லங் களில், நாசம் விளைகிறது.
மேலும் பெண்கள் வாழ்வைப் பற்றி மனுஸ்ம்ருஇ, பின்னர் இவ்வாறும் கூறியிருக்கிறது :
ஒருவனுடைய அம்சமே அவனுடைய மகன்; மகளும், மகனைப் போலவே ஆவாள்; ஒருவனுடைய மகள் உயிருடன் இருக்கும்போது, அவனுடைய சொத்துக்கு வேறு யார் உரிமை கோர முடியும்?
பெண்ணானவள், மக்களைப் பெறுகிற பாக்கியசாலி; பெண்கள் குடும்பத்தின் ஒளி விளக்குகள்; மங்களகரமான வர்கள்; அவள் கெளரவத்திற்கு உரியவள். பெண்களுக்கும், செழிப்புக்கும், எந்த பேதமும் இல்லை.
மனுஸ்ம்ருதி பெண்களை மிகவும் இழிவான நிலையில் வைத்து விட்டது என்ற கருத்து தவறானது என்பது மேற்கண்ட பகுதிகளைப் படித்தால் புரியும்.
நான்கு ஆச்ரமங்கள் என்று கூறப்படுகிறது. நான்கு நிலைகளாகிய பிரம்மச்சர்யம், இல்லறம், வானப்ரஸ்தம் (வன வாழ்க்கை), ஸந்யாஸம் – ஆகியவற்றில் இல்லற வாழ்விற்கு மனுஸ்ம்ருதி முதன்மை ஸ்தானத்தை அளிக்கிறது.
‘ஜ்யேஷ்டாச்ரமோ க்ருஹீ‘ என்று குறிப்பிட்டு, முதன்மை நிலை, இல்லறமே என்று சொல்கிற மனுஸ்ம்ருதி, ‘மற்ற ஆச்ரமங்களைச் சார்ந்தவர்களைத் தாங்கி நிற்பது, இல்லறத்தை நடத்துபவனே‘ என்பதை இதற்குக் காரணமாகக் கூறுகிறது.
ரிஷிகள், தெய்வங்கள், பித்ருக்கள், விருந்தாளிகள் ஆகியோரை வணங்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிற மனுஸ்ம்ருதி, அத்துடன் நின்றுவிடவில்லை; ‘தீராத வியாதி பெற்றவர்களுக்கும், மிகவும் தாழ்வான நிலையை அடைந்து விட்டவர்களுக்கும், மிருகங்களுக்கும், காக்கைகளுக்கும், புழுக்களுக்கும் கூட – இல்லறத்தான் உணவு அளிக்க வேண்டும்’ என்றும் சொல்கிறது.
ப்ராம்மண விருந்தாளிகளை, ஒரு இல்லறத்தான் கெளரவித்து, உணவு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிற மனு, இப்படியும் விதித்திருக்கிறார் : ‘வைச்யர்களோ, சூத்ரர்களோ, விருந்தாளிகளாக வந்தால், அவர்களுக்கு தன்னுடைய குடும்பத்தினரோடு விருந் தளிக்க வேண்டும்’.
விருந்தாளிகள் மட்டுமல்ல; வேலைக்காரர்களும் சாப்பிட்ட பிறகுதான், ஒரு குடும்பஸ்தனும் அவருடைய மனைவியும் உணவு உட்கொள்ள வேண்டும்.
சிராத்தங்கள் செய்வதின் முக்கியத்துவத்தை மனுஸ்ம்ருதி பெரிதும் வலியுறுத்துகிறது. வேதங்களை நன்கு கற்றறிந்த, விரதங்களை முறையாக அனுஷ்டிக்கிற பூஜைகளை ஒழுங்காகச் செய்து வருகிற ப்ராம்மணன்தான், சிராத்தத்தில் விருந்து உண்ணத் தகுதியுடையவன். ‘நம்பிக்கையற்றவனும், வைத்யம், வர்த்தகம், அரசுப் பணி போன்றவற்றில் ஈடுபடுகிறவனுமாகிய ப்ராம் மணன், சிராத்தத்தில் விருந்துக்கு தகுதியற்றவன்; இனமும் செய்ய வேண்டிய அக்னி வழிபாட்டைச் செய்யாத ப்ராம்மணனும் தகுதி அற்றவனே; வட்டிக்கு பணம் கொடுத்து பணம் சம்பாதிக்கிற ப்ராம்மணன், பொது நன்மைக்காக ஏற்படுத்தப்பட்ட தர்ம அமைப்பின் நிதியில் வாழ்க்கை நடத்துபவன், நாட்டியக் கலை யில் ஈடுபடுகிறவன், பணம் பெறுவதற்காகவே வேதத்தைக் கற்பிப்பவன், கொடுமையான வார்த்தைகளைப் பேசுகறவன், பெற்றோரைக் கைவிட்டவன், கடல் கடந்து சென்றவன், குடிப் பழக்கம் உடையவன், கர்வமுடையவனாக இருப்பவன், நின் பண்டங்களை விற்பவன், வேதங்களைப் பழிப்பவன், ஜோதிடத் தைத் தொழிலாக மேற்கொண்டவன், யுத்த சாத்திரத்தைக் கற்பிப் பவன், வயல்களுக்கு நீர் போவதைத் தடுப்பவன், பணத்திற்காக பணிகள் புரிபவன், நற்குணம் அற்றவன், ஆடு, மாடு வளர்த்து ஜீவனம் நடத்துபவன் – ஆகிய ப்ராம்மணர்கள், சிராத்தத்தில் தவிர்க்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு அலிக்கப்படுகிற உணவு, ராக்ஷஸர்களுக்கு அளிக்கப்பட்டதாகும்’.
அசைவ உணவு உட்கொள்ளும் பழக்கத்தை மனுஸ்ம்ருதி கடுமையாக வர்ணிக்கிறது. ஒரு ஜீவராசியைக் கொல்லாமல், மாமிசம் கிட்டாது; ஒரு ஜீவனைக் கொல்வது, ஸ்வர்க்கத்திற்குச் செல்லும் பாதை அல்ல; ஆகையால் மாமிசம் உட்கொள்வதை மனிதன் தவிர்க்க வேண்டும்.
“மிருகத்தின் மாமிசத்தை, இந்தப் பிறவியில் உண்கிற மனிதனின் மாமிசத்தை, அடுத்த பிறவியில் மிருகம் உண்ணும்; இது மாமிசத்தின் நிர்ணயிக்கப்பட்ட தன்மை. இந்த விதிமுறையை மீறி மாமிசத்தை உண்பவனுக்கு அடுத்த பிறவியில் வந்து சேர்கிற அளவு பாதிப்பு – அந்த மிருகத்தைப் பணத்திற்காக கொல்கிற வேடனை வந்தடையாது‘.
மாமிசம் உண்பது கண்டிக்கப்பட்ட பிறகு, மாமிச உணவைத் தவிர்ப்பது, இவ்வாறு போற்றப்படுகிறது: ‘மாமிச உணவைத் தவிர்ப்பவன் பெறுகிற புண்யம், நூறு வருடங்கள், வருடா வருடம் அச்வமேத யாகம் செய்பவன் அடையக் கூடிய புண்யத்திற்குச் சமமானது. துன்புறுத்தப்படுவதாலோ, கொல்லப்படுவதாலோ ஒரு பிராணி அனுபவிக்கும் வேதனையைத் தவிர்க்க விரும்புகிறவன், சுகம் பெறுகிறான்.
– இவ்வாறெல்லாம் கூறுகிற மனுஸ்ம்ருதி, துறவு நிலை பற்றிக் கூறுவதைப் பார்ப்போம்.