துறவைப் பற்றியும் மனுஸ்ம்ருஇ பேசுகிறது : ‘பிரம்மச் சாரியாக இருந்து வேதங்களைக் கற்று, விதிமுறைகளின்படி இல்லறம் நடத்தி, மக்களைப் பெற்று, சக்திக்கேற்ப யாகங்களைச் செய்து பின்னர், மோக்ஷ மார்க்கத்தை நாட வேண்டும்… சகல ஜீவராசிகளுக்கும் தன்னால் எந்தக் கேடும் வராது என்ற விரதம் பூண்டு, வீட்டை விட்டு வெளியேறி துறவறம் பூண்டவன் மேன்மையான உலகங்களை எய்துகிறான்… துறவுக்கேற்ற சின்னங் களை ஏற்று, எல்லா ஆசைகளையும் புறக்கணித்து, பேச்சையும் பெருமளவு விடுத்து, கிராமத்தில் பிட்சை பெற்று, நண்பர்களோ, எதிரிகளோ இல்லாமல், ஊதியத்திற்காக காத்திருக்கும் ஊழிய னைப் போல, அவன் மரணத்திற்காக காத்திருப்பானாக! தன்னை ஏசுபவர்களையும் அவன் பொறுப்பானாக! இவ்வுலக வாழ்க்கைக் குரிய விஷயங்கள் பற்றி பேசுவதை அவன் தவிர்ப்பானாக…
‘சாஸ்திரம் கற்பிப்பது, சகுனம் சொல்வது, ஜோதிடம் பார்ப்பது போன்றவற்றைச் செய்து தானம் பெற அவன் முயற்சிக்கக் கூடாது… தண்டத்தையும், கமண்டலத்தையும் ஏந்தி, யாருக்கும் எந்த சிரமத்தையும் ஏற்படுத்தாமல், அவன் கால் போன வழியில் போக வேண்டும்…
ஒரு தினத்திற்கு ஒருமுறை அவன் பிட்சையை நாடலாம்; ஆனால் அதிகமான அளவு உணவு பெறக் கூடாது; வீடுகளில் உள்ளவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடிந்த நேரத்திற்குப் பிறகு, அவன் பிட்சையை நாட வேண்டும்… பிட்சை கிடைக்காவிடில் அவன் வருந்தக் கூடாது; உயிர் வாழ்வதற்குத் தேவையான அளவு உணவையே அவன் பிட்சையாகப் பெற வேண்டும்…
‘இந்த்ரியங்களை அடக்கி, விருப்பு–வெறுப்புகளைத் தவிர்த்து, எல்லா ஜீவராசிகளிடமும் கருணை காட்டி, அவன் வாழ்வானாக…
‘இரவானாலும் சரி, பகலானாலும் சரி, சிறிய புழு, பூச்சிகள் கூட தன்னால் துன்புறுத்தப்படாத வகையில், அவன் மிகவும் ஜாக் கிரதையாக நடந்து செல்ல வேண்டும்… துறவிக்குரிய வகையில் முறையாக வாழ்ந்தால், அவன் பிரம்மத்துடன் ஐக்கியமாகிறான்’.
அடுத்து, மனு ஸ்ம்ருதி பற்றி, ஒரு விஷயத்தைப் பார்ப்போம். ப்ராம்மணன், க்ஷத்ரியன், வைச்யன், சூத்ரன் – என்ற நான்கு வர்ணங்களைச் சேராத, ‘பஞ்சமன்’ என்ற ஒரு பிரிவு உருவான தற்கு மனுஸ்ம்ருதியே ஆதாரம் – என்று ஒரு விமர்சனமும் உண்டு. ஆனால் மனுஸ்ம்ருதி,
நாஸ்தி து பஞ்சம:
‘ஐந்தாவதாக ஒரு பிரிவு கிடையாது‘
– என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெளிவாகக் கூறியிருக் இறது..
அத்துடன் மனு ஸ்ம்ருதி நின்று விடவில்லை. ‘நான்கு வர்ணங் களில் சேராதவர்களாகச் சிலர் இருந்தால், அவர்களை எப்படி, எதில் சேர்ப்பது? – என்ற கேள்வி எழக் கூடும் என்பதால், அதற்கும் அது விடையளிக்கிறது.
“நான்கு வர்ணங்களில் சேராதவர்கள், எதைச் சார்ந் தவர்கள் என்பதைக் கண்டறிய, அவர்களுடைய நடத்தையே, சரியான நிர்ணயத்திற்கு ஆதாரமாக அமைய வேண்டும்.
அதாவது, ஒருவனின் நடத்தையை வைத்தே, அவனுடைய வர்ணப் பிரிவு நிச்சயிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை, மனுவும் இங்கே ஏற்கிறார். வேறொன்றையும் கவனிக்க வேண்டும். நான்கு வர்ணங்களில், ப்ராம்மணனுக்குத்தான் மிகக் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
நீண்ட நாட்களுக்குத் தேவைப்படக் கூடிய அளவு உணவுப் பொருட்களை சேமிக்கக் கூடாது என்பதிலிருந்து – செல்வம் ஈட்டுவதில் முனைப்பு இருக்கக் கூடாது என்பது உட்பட – நியமங் கள் மற்றும் நெறிமுறைகளிலிருந்து தவறினால், சமூகத்தினால் ஒதுக்கப்பட வேண்டியவன் – என்பது வரை, பல கடுமையான வழிமுறைகள் ப்ராம்மணனுக்கு மனுவினால் விஇிக்கப்பட்டுள்ளன.
அரசன், ப்ராம்மணனையும் விட உயர்ந்தவனாக, தெய்வாம்சம் பொருந்தியவனாக வர்ணிக்கப்படுகிறான்; வைச்யன் வர்த்தகம் செய்வதில் பூர்ண சுதந்திரம் பெறுகிறான்; வேதம் கற்பது தவிர மற்ற எல்லாவற்றையும் கற்று, பல வழிகளிலும் செல்வம் ஈட்டும் வாய்ப்பு சூத்ரனுக்கு அளிக்கப்பட்டது. ஆனால் ப்ராம்மணனுக்கோ, பெரும் கட்டுப்பாடுகள். இதுதான் மனு சுண்ட ‘வர்ணப் பிரிவுகளின் உரிமைகள் ‘.
ஏற்கெனவே பார்த்தபடி, மனு ஸ்ம்ருதியில் ப்ராம்மணனுக்குக் கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கும், நிபந்தனைகளுக்கும், விதி முறைகளுக்கும் உட்பட்டு வாழ்கிறவன், சமூகத்தினால் மிக்கப் படுவதில் எந்தத் தவறுமில்லை. ஏனென்றால் அப்படிப்பட்டவன் வாழ்வதே சமூகத்திற்காகத்தான். அந்த மாதிரி ப்ராம்மணர்கள் இன்று எவரும் இல்லை.
அடுத்து ஆட்சி முறை பற்றி மனுஸ்ம்ருதி சொல்வதைப் பார்ப்போம்.
அரசனுக்கு மனு ஸ்ம்ருதி மிக உயர்ந்த ஸ்தானத்தை அளித்திருக் இறது. இந்திரன், வாயுதேவன், யமன், சூரியன், அக்னி தேவன், வருணன், சந்திரன், குபேரன் – ஆகியோரின் அம்சங்களை எல்லாம் ஒரு அரசன் கொண்டிருக்கிறான் என்று மனுஸ்ம்ருதி சொல்கிறது. ‘நெருப்பை தீண்டி விடுகிற மனிதன் ஒருவனை அந்தத் தீ சுட்டு எரித்துவிடும்; ஆனால் அரசனுடைய கோபம் என்கிற தீ, அதைத் தூண்டுகிறவனை மட்டுமல்லாது அவனுடைய குலத்தையும், உடமைகளையும் சேர்த்து பொகக்கிவிடும்.”
அரசனின் மாட்சிமையைப் பற்றி மிகவும் சிறப்பாகப் பேசுற மனுஸ்ம்ருதி, அவனுடைய கடமைகளையும் விவரிக்கிறது. ‘அரசனிடம் இருக்கும் ‘தண்டம்’ என்கிற தண்டனை அளிக்கிற அதிகாரம் பெரும் கமையுடையது. தகுதி இல்லாத அரசர்களினால், அதை சுமக்க முடியாது. அப்படிப்பட்ட தகுதியற்ற அரசர்களையும், அவர்களுடைய நண்பர்களையும், சுற்றத்தார்களையும் அந்த ‘தண்ட நீதியே அழித்து விடும்… உண்மையையே நாடுகிறவனாகவும், அறிவுடையவனாகவும், நல்ல ஆலோசகர்களை உடையவனாக வும், தர்ம சாத்திரங்களை மீறாமல் நடக்கின்றவனாகவும் உள்ள ஒரு அரசனால்தான், தண்ட நீதி என்கிற தண்டனை சாத்திரத்தை சரிவர பரிபாலிக்க முடியும்…
‘எதிரிகளை வீழ்த்துவதில் கடுமையைக் காட்ட வேண்டிய அரசன், தன்னுடைய நாட்டில் மிகவும் நியாயத்துடனும், தர்மத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்…
‘கர்வம் ஒரு அரசனுக்கு இருக்கவே கூடாது. கர்வத்தினாலேயே அழிந்து விட்ட அரசர்கள் பலர் உண்டு. மாறாக, இழந்த ராஜ்யத் தையும் அடக்கத்தினால் மீண்டும் பெற்ற அரசர்களும் பலர் உண்டு…
சதா வேட்டையாடுதல், சூதாடுதல், பகலில் உறங்குதல், அவதூறு பேசுதல், உடல் இன்பத்தையே நாடுதல், குடி மயக்கத்திற்கு ஆளாவது, சங்கதம், நடனம் போன்றவற்றில் அளவுக்கு அதிகமாக ஈடுபடுவது, சோம்பலுற்றிருப்பது – ஆகிய குணங்கள் ஆசையிலிருந்து பிறப்பவை; ஏமாற்றுதல், தொட்ட தெற்கெல்லாம் ஆத்திரமடைதல், அஜாக்கிரதையாக இருப்பது, மற்றவர்களை துன்புறுத்துவதில் இன்பம் காண்பது, பொறாமை, எல்லோரிடமும் குற்றம் காண்பது, மற்றவன் உடமையை அப கரிக்க முனைவது, நியாயமாக இருப்பித் தர வேண்டிய நிதிகளை தராமல் இருப்பது, கடுமையான மொழிகளைப் பேசுவது, ஹிம் சிப்பது – ஆகிய குணங்கள் கோபத்தினால் விளைகின்றவை.
‘மேற்சொன்ன ஆசையினால் விளைகிற குற்றங்களையும், கோபத்தினால் விளைகிற குற்றங்களையும் ஒரு அரசன் தவிர்க்க வேண்டும். இவற்றுக்கு அடிமையாகி விட்ட அரசன் அழி கிறான்…
அதாவது, அரசன் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிற மனுஸ்ம்ருதியே, அவனுடைய கண்டிப்பில் தர்மமும், நியாயமும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்து இறது. ‘தண்டனைக்கு பயந்துதான் மனிதர்கள் ஒழுங்கு தவறாமல் இருப்பார்கள்! என்று கூறுகிற மனுஸ்ம்ருதியே, ‘அந்த தண்ட நீதியை அரசன் நேர்மை தவறாமல் செயல்படுத்த வேண்டும்” என்றும் வலியுறுத்துகிறது. ‘எதிரிகளை வீழ்த்துவதில் தயவு தாட்சண்யத்தை அரசன் காட்டக் கூடாது! என்று கூறுகிற மனு ஸ்ம்ருதியே, ‘தன்னுடைய ராஜ்யத்தில் அரசன் கருணை மிக்கவனாக நடந்து கொள்ள வேண்டும்’ என்றும் வலியுறுத்துகிறது.
ஆக, அரசனுக்கு இரு முகங்கள் தேவை. ஒன்று – கருணை, இன்னொன்று – கடுமை. எந்தெந்த நேரங்களில் எதைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிந்து மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், அந்த வகையிலேயே செயல்படுகிற அரசன் மேன்மையுறுகிறான் என்பதையே – மனுஸ்ம்ருதியின் கட்டளைகளில் இருந்து நாம் புரிந்து கொள்கிறோம்.
அரசனின் ஆலோசகர்கள், அவனுடைய நிர்வாகக் கடமைகள், சொத்துரிமை, பல வகைக் குற்றங்களும், அவற்றிற்கான தண்டனை களும், போர் முறை போன்றவை பற்றியும் – மனுஸ்ம்ருஇி நிறையவே சொல்லி இருக்கிறது. அது போன்ற விஷயங்களில் ஒரு சிலவற்றை அடுத்து பார்ப்போம்.