யுத்த முறைகள்; வரி விதிப்பு

மோதுகின்ற இரு தரப்பினருக்கிடையே வெற்றி யாருக்கு என்பது நிச்சயமற்றது; எதிராளி வெல்லக்கூடும்என்ற சாத்தியக்கூறு யுத்தத்தில்எப்போதும்உண்டு என்பதால்‌, யுத்தம்தவிர்க்கத்தக்கது!

என்று கூறுகிற மனுஸ்ம்ருதி மேலும்இவ்வாறு சொல்நிறது :

ஸாம்ன தானேன பேதேன

ஸமஸ்தைரதவா ப்ருதக்

விஜேதும்ப்ரயதேதாரின்

யுத்தேன கதாசன.

சமாதானப்பேச்ச, நிதியைத்தருவது, பிளவைத்தோற்று விப்பது என்பனவற்றை தனித்தனியாகவோ, கூட்டாகவோ பிரயோகம்செய்து, எதிரியை வெல்வதற்கு முயல வேண்டும்‌; யுத்தத்தினால்வெல்வதற்கு முயற்சிப்பது என்பது ஒருபோதும்கூடாது.

த்ரயானாம்அபி உபாயாநாம்

பூர்வோக்தாநாம்அஸம்பவே

ததா யுத்யேத ஸம்பன்னோ

விஜயேத ரிபூன்யதா

மேலே கூறப்பட்ட மூன்று வழிமுறைகளும்பலன்தர வில்லை என்றால்‌, அப்போது எதிரியை வெற்றி கொள்ளும்வகையில்முழுமையாக தயார்செய்து கொண்டு யுத்தம்புரிய வேண்டும்‌. 

யுத்தத்தைத்தவிர்ப்பது மிகவும்முக்கியம்என்று கூறுகிற மனுஸ்ம்ருஇ, தவிர்க்க முடியாத நிலையில்யுத்தத்தின்அவசியத்தை ஏற்கிறது. யுத்தம்புரிவதற்கான வழிமுறைகளையும்இந்த ஸ்ம்ருதி வர்ணிக்கிறது

யுத்தத்தில்புறமுதுகு காட்டாத அரசன்‌, தனது ஆயுளின்முடிவில்ஸ்வர்க்கத்தை அடைகிறான்‌… யுத்தத்தில்விஷம்தோய்ந்த அம்புகளினாலோ, முட்கள்பொருத்தப்பட்ட ஆயுதங்களினாலோ எதிரியை வீழ்த்த முனையக்கூடாதுஉறங்கிக்கொண்டிருப்பவனையோ, நிராயுதபாணியாக இருப்பவனையோ, யுத்தத்தில்பங்கேற்காமல்பார்வையாளனாக இருப்பவனையோதாக்கக்கூடாதுயுத்தத்திலிருந்து தப்பி ஓடுகிறவனையும்‌, மடிந்து விட்ட உறவினனை நினைத்து துக்கத்தில்ஆழ்ந்து விட்டவனையும்‌, படுகாயமுற்றவனையும்தாக்கக்கூடாது… 

தன்னுடைய பலவீனங்களை எதிரி அறிந்து கொண்டு விடா மல்மறைத்துக்கொண்டு, எதிரியின்பலவீனங்களை அறிந்து கொள்ள முற்பட வேண்டும்‌; ஆமை தனது அவயவங்களை உள்ளே இழுத்துக்கொள்வது போல, தனது பலவீனங்களை மறைத்துக்கொள்ள வேண்டும்‌. 

நாரை போல, தனக்கு சாதகமானதையே எதிர்நோக்க வேண்டும்‌; சிறுத்தையைப்போல பாய வேண்டும்‌; சிங்கம்போல எதிரியை பலமாகத்தாக்க வேண்டும்‌; முயலைப்போல, நெருக்கடியில்நொடியில்பின்வாங்கவும்வேண்டும்‌… 

தன்னைவிட பலம்மிகுந்த எதிரியிடம்‌, நேரத்திற்குத்தகுந்த வாறுசகப்பது, சமாதான ஒப்பந்தம்செய்து கொள்வது, யுத்தம்புரிவது, இடர்தாக்குதல்செய்வது, கூட்டு வைத்துக்கொள்வது என்ற வழிமுறைகளில்எது பொருத்தமோ, அதைக்கையாள வேண்டும்‌…

அண்டை நாடு, எதிரியாக உருவெடுக்கக்கூடும்என்பதை அரசன்உணர்ந்திருக்க வேண்டும்‌; அதே போல அண்டை நாட்டின்நட்பு நாட்டையும்எதிரியாக உருவெடுக்கக்கூடிய நாடாகவே உணர வேண்டும்‌. அண்டை நாட்டிற்கு அருகில்இருக்கிற நாடு நட்புறவு கொள்ளத்தக்கது; இவ்வாறு இல்லாத நாடுகள்பெரும்கவனத்திற்கு உரியவை அல்ல… 

ஒரு நாட்டுடன்யுத்தம்நேரிடுகிறபோது மேற்சொன்ன எதிரி நாடு, நட்பு நாடு, கவனத்திற்கு உரியதல்லாத நாடு ஆகிய எதுவும்‌, எதிர்பாராத நடவடிக்கைகள்மூலம்தன்னை ஏமாற்றி விடக்கூடிய சூழ்நிலை ஏற்படாதவாறு அரசன்பார்த்துக்கொள்ள வேண்டும்‌… 

மார்கழி, பங்குனி, சித்திரைஆகிய மாதங்கள்‌, ஒரு அரசன்தனது எதிரியை நோக்கி தனது படையை நடத்திச்செல்வதற்கு உரிய மாதங்கள்‌… 

மேற்கண்ட மாதங்கள்அல்லாத மற்ற மாதம்ஏதாவது ஒன்றில்‌, எதிரி நாட்டில்நிலவக்கூடிய சோதனையான சூழ்நிலையின்காரணமாக, வெற்றி நிச்சயம்என்ற நிலை தோன்றினால்‌, அப்போது ஒரு அரசன்‌, உடனடியாக தனது படைகளை நடத்திச்சென்று அந்நாட்டின்மீது படையெடுத்துவிட வேண்டும்‌… 

மனுஸ்ம்ருதியில்யுத்தங்களை நடத்துகிற முறைகள்பற்றிச்சொல்லியிருப்பதில்ஒரு சிறிய பகுதியையே நாம்இங்கே பார்த்தோம்‌. படையின்எந்தெந்தப்பிரிவினர்எப்படி எப்படி செயல்பட வேண்டும்என்பது உட்பட, போர்முறைகள்மிகவும்விரிவாக மனுஸ்ம்ருதியில்கூறப்பட்டுள்ளன. இந்த விஷயத்திலும்சரி, அடுத்து வருகிற பகுதிகளிலும்சரி, நாம்முக்கியமாக நினைவில்வைத்துக்கொள்ள வேண்டியது ஒன்று உண்டு

மனுஸ்ம்ருதி இயற்றப்பட்ட காலம்‌, நிச்சயமாக நிர்ணயம்‌  ஆகவில்லை. அதில்கண்டுள்ள சிந்தனையின்பரப்பையும்‌,  ஆழத்தையும்கண்டு, அதை வைத்துக்கொண்டேஇது மிகவும்‌  முந்தைய காலத்தில்இயற்றப்பட்டது அல்லஎன்ற முடிவிற்கு  மேலை நாட்டவர்வந்துவிட்டனர்‌. அதனால்அது இயற்றப்பட்ட  காலம்‌, அவர்களால்மிகவும்பின்னுக்குத்தள்ளப்பட்டது. அதையே நாமும்ஏற்றுக்கொண்டு விட்டோம்‌. அவ்வளவு பின்னுக்குத்தள்ளப்பட்டும்கூட, இதன்தோற்றம்‌ ‘கி.மு. இரண்டாவது நூற்றாண்டிலிருந்து, கி.பி. இரண்டாவது நூற்றாண்டுக்குள்‌! என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது

ஆனால்‌, மேற்கண்ட கால அளவிற்கு மிகவும்முந்தையது என்று ஏற்கப்பட்டுள்ள மஹாபாரதத்திலேயே, மனுஸ்ம்ருதி பற்றிய குறிப்புகள்வருகின்றன. அதாவது, இது மிகப்பழமை யான நூல்‌. அப்படிப்பட்ட நூலில்உள்ள சிந்தனைகள்எவ்வளவு ஆழமுடையவையாக இருக்கின்றன என்ற நினைப்பை மனதில்வைத்துக்கொண்டு இதன்பகுதிகளைப்படிக்க வேண்டும்‌. அப்போது தான்‌, மற்ற பல நாடுகள்யுத்த முறைகள்‌, சட்டம்‌, நிர்வாகம்‌, அமைச்சரவைபோன்றவை பற்றி சிந்திக்கத்தொடங்குவதற்கு மிகவும்முன்னதாகவே, நமது நாட்டில்இந்த சிந்தனைகள்பெரிதும்வளர்ந்திருந்தன என்பதை நம்மால்உணர முடியும்‌. 

உதாரணமாக, ‘நீதிமன்றத்தில்சாட்சிகள்விசாரிக்கப்பட வேண்டும்‌; அவர்கள்நீதிமன்றத்தில்பொய்கூறினால்‌, அதற்கு தண்டனை உண்டு…’ என்பதெல்லாம்இன்று, சர்வசாதாரணமான தகவல்களாகத்தெரியும்‌. ஆனால்உலக நாடுகள்பலவும்இவை பற்றி யோசிப்பதற்கு முன்பாக, இங்கே இதற்கான வழிமுறை கள்கூட வகுக்கப்பட்டு விட்டன என்பது பெருமைக்குரிய விஷயம்தானே

நிர்வாகம்பற்றி மனுஸ்ம்ருதி கூறியுள்ளவற்றில்ஒரு சில பகுதிகள்‌ : 

ராஜ்யம்ஒழுங்காக நடத்திச்செல்லப்படுவதற்காக நூறு, ஆயிரம்என்ற அளவில்கிராமங்களைக்கொண்ட பகுதிகளுக்கும்தலைமை அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்‌…

 ‘ஒரு கிராமத்திற்கு தலைமை அதிகாரியாக இருப்பவர்‌, அந்த இராமத்தில்நடக்கும்நிகழ்ச்சிகளைப்பற்றிய வழக்குகளை விசாரிக்கலாம்‌; தனக்கு அதிகாரமில்லாத வழக்குகளை அந்தத்தலைமை அதிகாரி, பத்து கிராமங்களின்தலைவரின்விசாரணைக்கு அனுப்ப வேண்டும்‌; தன்னுடைய அதிகாரம்பற்றிய நிச்சயமில்லாத தன்மை நிலவினால்‌, அப்போது பத்து கிராமங்களின்தலைவர்‌, சம்பந்தப்பட்ட வழக்கை நூறு கிராமங்களின்தலைவருடைய விசாரணைக்கு அனுப்ப வேண்டும்‌; அதே போன்ற நிலையில்வழக்கு, ஆயிரம்கிராமங்களின்தலைவருக்கு அனுப்பப்பெற வேண்டும்‌… 

நகரங்களில்நியமிக்கப்படும்அதிகாரிகள்‌, அங்கு நடக்கும்பணிகளை மேற்பார்வையிட வேண்டும்‌; அரசனால்நியமிக்கப்பட்டவர்கள்‌, சில நேரங்களில்மோசடி செய்யக்கூடும்‌; அம்மாதிரியான அதிகாரிகளிடமிருந்து மக்களைக்காப்பாற்றுவது அரசனின்கடமை… 

தவறான வழிகளில்பணம்சம்பாதிக்கும்அதிகாரிகள்‌, மற்றும்வழக்குகளில்சம்பந்தப்பட்டவர்களிடம்பணம்பெறும்அதி காரிகள்ஆகியோரிடமிருந்து, அவர்களுடைய சொத்துக்களை அரசன்பறிமுதல்செய்து, அவர்களை நாடு கடத்த வேண்டும்‌… 

அட்டைகள்மெதுவாக ரத்தத்தை உறிஞ்சுகின்றன; கன்றுக்குட்டிகள்மெதுவாக பசுவின்பாலைக்குடிக்கின்றன; வண்டுகள்மெதுவாக மலர்களிலிருந்து தேனை சேர்க்கின்றன; அதே போல அரச னானவன்‌, வரியை கொஞ்சம்கொஞ்சமாகப்பெற வேண்டும்‌… 

ஒரு பொருளை வியாபாரி பெற்ற விலை; அதை அவன்விற்கும்விலை; போக்குவரத்து செலவு; பொருளைப்பாது காப்பதற்கு ஆன செலவுஆகியவை ஒருபுறம்‌; காடுகள்‌, மலைப்பகுதிகள்‌, நதிகள்முதலியவற்றையும்சேர்த்து, பலவற்றை நிர்வகிக்க அரசுக்கு ஏற்படும்செலவு ஒருபுறம்‌. இவை இரண்டையும்பற்றி தீவிரமாக சிந்தித்து, அரசன்தனது வரிவிதிப்பு விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும்‌… 

சிறு வியாபாரிகளாகிய வசதியற்றவர்கள்மீது விதிக்ஃப்படுகிற வரி, பெயரளவில்தான்இருக்க வேண்டும்‌… 

ஆதரவளிக்க யாரும்இல்லாதவர்களுடைய சொத்துக்களை, அரசன்தனது பராமரிப்பில்வைத்திருந்து, அவர்கள்உரிய வயதை அடைந்தவுடன்அவர்களிடம்ஒப்படைக்க வேண்டும்‌…

அதே போல, மக்கட்பேறு இல்லாத தனி பெண்மணிகள்‌, நெருங்கிய உறவினர்கள்இல்லாத பெண்மணிகள்‌, விதவைகள்‌, நெடுந்தூரம்உள்ள நாடுகளுக்குச்சென்றுள்ள கணவனை உடைய பெண்மணிகள்‌- ஆகியோரின்சொத்துக்களையும்அரசன்பாதுகாத்து பராமரிக்க வேண்டும்‌’… 

மேற்கூறப்பட்ட வகையான நிலைகளில்உள்ள பெண்மணி களின்சொத்தை அபகரித்துவிட முயல்கிற அவர்களுடைய ஆண்உறவினர்களை, திருடர்களாக பாவித்து, அரசன்தண்டனை அளிக்க வேண்டும்‌… 

பெண்களை மிகக்கேவலமான நிலையில்வைத்து விட்ட நூல்‌ – என்று விமர்சிக்கப்படுகிற மனுஸ்ம்ருதி, பெண்கள்மீது காட்டியுள்ள உண்மையான அக்கறை மேற்கண்ட பகுதிகளில்தெளிவாகிறது. மேலெழுந்தவாரியாகப்பார்த்து, விவரம்அறியா மலே விமர்சனம்செய்வது பெரும்தவறாக முடியும்என்பதற்குமனுஸ்ம்ருதி பற்றிய பல அரசியல்வாதிகளின்விமர்சனங்களே சான்று

மேலே கண்டவாறு நிர்வாகம்‌, வரிகள்‌, பெண்களின்சொத்துக்கள்‌- போன்ற விஷயங்கள்பற்றி கூறியுள்ள மனுஸ்ம்ருஇி, வழக்குகள்பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்‌.