அன்றே வந்துவிட்ட, இன்றைய சட்ட தத்துவங்கள்!

மனு ஸ்ம்ருதியில்‌, குற்றங்கள்‌, வழக்குகள்‌, தண்டனைகள்ஆகியவை பற்றிய பகுதி, வழக்குகளின்தன்மை பற்றிய குறிப்புடன்தொடங்குகிறது

திருப்பித்தரப்படாத கடன்தொகை; அறக்கட்டளை நிறுவப்படுவது; ஒரு சொத்திற்கு உரிமை இல்லாதவன்அதை விற்பது; கூட்டு வியாபார விஷயங்கள்‌; மற்றவனுக்குக்கொடுக்கப்பட்டதை திரும்பப்பெறுவது; ஒரு வேலையாளுக்கு சம்பளம்தரப்படாமல்இருப்பது; ஒப்பந்தம்அல்லது கொடுத்த வார்த்தை ஆகியவற்றின்படி செயல்படாமல்இருப்பது; விற்கப்பட்ட பொருளை, கொடுக்காமல்இருப்பதுஆடு, மாடுகளின்சொந்தக்காரனுக்கும்‌, அவற்றைப்பார்த்துக்கொள்பவனுக்கும்இடை யிலான விசாரணைகள்‌; எல்லைத்தகராறுகள்‌; அடிதடி; வசை மொழிகள்பேசப்படுவது; திருட்டு; கண்மூடித்தனமான செயல்‌; பிறன்மனை நாடுதல்‌; கணவன்‌ – மனைவி கடமைகள்‌; பிதுரார்ஜித சொத்துப்பங்கீடு; சூதாட்டம்‌… ஆகியவை வழக்குகளின்காரணங்களாகும்‌… 

உண்மையை பொய்வென்று விடுகிற இடமாகவும்‌, நீதி என்ற ஊசி முனையினால்பொய்மை துளைக்கப்படாத இடமாகவும்இருக்கிற நீதிமன்றத்தில்அமர்கிறவர்கள்‌, பாவத்தினால்பீடிக்கப்பட்டவர்கள்ஆவார்கள்‌…

ஒரு பொய்ப்புகாரை பஇவு செய்பவனுக்கு கால்பாகம்‌; அவன்சார்பாக பொய்கூறுகிற சாட்சிகளுக்குக்கால்பாகம்‌; வழக்கில்அவனுக்குச்சாதகமாக தீர்ப்பளிக்கிற நீதிபதிகளுக்கு கால்பாகம்‌; அந்த நாட்டின்அரசனுக்கு கால்பாகம்‌ – என்று அதர்மத்திற்கான பாவம்பகிர்ந்து கொள்ளப்படுகிறது… 

இன்னமும்கூட, உலக நாடுகள்எதிலும்செய்யப்படாத ஒரு சட்டம்மனுவினால்வகுக்கப்பட்டிருக்கிறது. திருட்டுப்போன ஒரு பொருள்கண்டுபிடிக்கப்பட்டால்‌, அது உரியவனிடம்சேர்ப்பிக்கப்பட வேண்டும்‌; இது அரசின்கடமை என்று இன்றைய சட்டங்கள்கூறுகின்றன. ஆனால்மனுவோ, ‘கண்டுபிடிக்கப்பட்டால்‌! என்று கூறவில்லை. அம்மாதிரி பொருள்‌ ‘கண்டுபிடிக்கப்பட்டுஉரிய வரிடம்சேர்ப்பிக்கப்பட்டே ஆக வேண்டும்என்று மனுஸ்ம்ரதி கண்டிப்பு செய்கிறது; அத்துடன்விட்டுவிடவில்லை; அம்மாதிரி பொருள்‌, உரியவரிடம்சேர்ப்பிக்கப்படாமல்இருந்தால்‌, திருட னின்பாவம்அரசனை வந்து சேரும்என்று மனு எச்சரிக்கிறார்‌. 

ஆட்சியின்மூலமாகவே கூட பொய்வழக்குகள்போடப்படலாம்என்பது அந்த காலத்திலேயே சிந்இிக்கப்பட்டிருக்கிறது; கண்டிக்கப்பட்டிருக்கிறது. அதே போல, ஒரு ஆதாயத்தைப்பெற்று, அதன்காரணமாக வழக்குத்தள்ளிப்போடப்படுவதற்கு, அரசு வழி செய்யக்கூடாது என்றும்மனுஸ்ம்ருதி கூறுகிறது

அரசனோ, அரசு அலுவலர்களோ, பேராசையின்காரண மாக, பொய்வழக்குப்போடுவதும்‌, ஆதாயத்திற்காக ஒரு வழக்கு விசாரணையை தள்ளிப்போடுவதும்கூடாது‘. 

அதாவது ஆட்சியாளர்களின்இம்மாதிரி கூடாத அணுகு முறைகள்‌, ஏதோ இன்று திடீரென்று தோன்றிவிட்ட வக்ரங்கள்அல்ல. அதிகார துஷ்பிரயோகத்தின்மூலம்‌, இந்த மாதிரி செயல்கள்அப்போதும்நடந்திருக்க வேண்டும்‌; அதனால்தான்இதற்கென்று குறிப்பாக ஒரு பகுதி ஒதுக்கப்பட்டு, இந்த அணுகுமுறை சுண்டிக்கப்பட்டிருக்கிறது

கடன்வாங்கியவர்‌, ‘வாங்கவே இல்லைஎன்று கூறி மறுத்தால்‌, கடன்கொடுத்ததாகக்கூறி, அதைத்திரும்பப்பெறுவதற்காக வழக்கு போடுகிறவன்தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்‌; அப்படி சமர்ப்பித்தால்‌, கடன்இருப்பித்தரப்பட வேண்டும்என்கிற உத்திரவு இடுவதோடு மட்டுமல்லாமல்‌, கடன்வாங்கியவன்மீது அபராதமும்விதிக்க வேண்டும்‌… சாட்சிகளாக சிலரைக்குறிப்பிட்ட வாத, பின்னர்அந்த சாட்சிகளை கொண்டு வர: முடியவில்லை என்று சொன்னால்‌, அப்போது அவனுடைய வழக்குத்தள்ளுபடி யாகும்‌… 

வழக்கில்சம்பந்தப்பட்டவரோடு, அல்லது அவர்களுடைய உறவினர்களோடு, பண விஷயங்களில்தொடர்புடையவர்கள்‌; அவர்களுடைய எதிரிகளுடன்அம்மாதிரி தொடர்பு உடையவர்கள்‌) நோயுற்றவர்கள்‌; குற்றங்களைப்புரிந்தவர்கள்‌; ஏற்கெனவே ஒரு வழக்கில்பொய்சாட்சி அளித்தவர்கள்‌- ஆகியோர்சாட்சிகளாக ஏற்கத்தகாதவர்கள்‌…’ 

இவ்வாறெல்லாமும்‌, இன்னமும்பல விதிமுறைகளின்‌  மூலமாகவும்‌, சாட்சிகள்பற்றி மனுஸ்ம்ருதி விரிவாகப்பேசுகிறது. இன்றையஎவிடென்ஸ்ஆக்ட்‌’டின்ஆரம்பம்அன்றே மனுவினால்செய்யப்பட்டிருக்நெது என்று கூட சொல்லி விடலாம்‌. அவ்வளவு விவரமாக இந்த அம்சம்மனுவினால்அலசப்பட்டிருக்கிறது. சாட்சிகள்உண்மை கூற வேண்டியதன்அவசியத்தைப்பெரிதும்வலியுறுத்துகிற மனுஸ்ம்ருதி, ஒரு விஷயத்தில்சாட்கெள்பொய்சொல்வதையும்ஏற்கிறது என்பது வியப்புக்குரிய விஷயம்‌. 

ஒரு சூத்ரனோ, ஒரு வைசியனோ, க்ஷ்த்ரியனோ, ப்ராம்மணனோ, தனது சாட்சியத்தினால்தூக்கிலிடப்படலாம்என்கிற நிலையில்ஒரு சாட்சி பொய்சொல்வது தவறல்ல; அந்த நிலையில்பொய்‌, மெய்யைவிட விசேஷமானது

எதனால்இப்படி ஒரு விதிவிலக்கு ஏற்படுத்தப்பட்டது என்பது புரியவில்லை; ஒரு மனிதனின்உயிரைக்காப்பாற்றுவது மிகவும்முக்கியம்என்ற அடிப்படையில்‌, இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுருக்கலாம்என்று தோன்றுகிறது. இந்த விதிவிலக்கின்ழ்ஒருவன்பொய்சாட்சியம்அளிக்க நேர்ந்தால்‌, அதன்பின்அதற்காக அவன்செய்ய வேண்டிய பிராயச்சித்த வழிமுறைகளும்‌, மனுஸ்ம்ருதியிலேயே விளக்கப்பட்டிருக்கின்றன.

வட்டி விகிதங்கள்‌, அடமானம்‌, விற்பனை போன்றவற்றிற்கான விதிமுறைகளும்இந்த ஸ்ம்ருதியில்வகுக்கப்பட்டிருக்கின்றன. இன்றைய சட்டத்தில்‌ ‘அட்வர்ஸ்பொஸஷன்‌’ என்ற ஒரு அம்சம்உண்டு. அதாவது ஒருவன்ஒரு சொத்தை குறிப்பிட்ட காலத்திற்கு, ஆட்சேபணைகள்எதையும்சந்திக்காமல்அனுபவித்து வந்இருந்தால்‌- அதுவே அவனுக்குச்சொத்துரிமையைத்தந்துவிடும்‌. இப்படி ஒரு விதிமுறை மனுஸ்ம்ருதியில்கூறப்பட்டிருப்பது, அந்த காலத்இலேயே சட்ட சிந்தனை எவ்வளவு ஆழமாக இருந்தது என்பதற்கு ஒரு உதாரணமாகத்திகழ்கிறது

ஒரு சொத்தின்சொந்தக்காரன்‌, பத்து வருடங்களுக்கு வேறு: ஒருவன்அந்த சொத்தை அனுபவிப்பதை பேசாமல்பார்த்துக்கொண்டிருந்தால்‌ – அப்போது அந்த சொத்துக்குரியவன்அந்த சொத்தைத்இரும்பிக்கேட்க முடியாது‘. 

இவ்வாறுஅட்வர்ஸ்பொஸஷன்‌’ தத்துவத்தைக்கூறிவிட்டு, அதற்கு ஒரு விதிவிலக்கையும்மனுஸ்ம்ருஇி ஏற்படுத்தியிருக்கிறது. அந்த சொத்துக்குரியவன்சிறுவனாகவோ (மைனர்‌), அறிவு வளர்ச்சி இல்லாதவனாகவோ (இடியட்‌) இருந்தால்‌, அப்போது அவன்பத்து வருடம்பேசாமல்இருந்தான்என்பதால்‌, அவனுடைய சொத்தை அனுபவித்தவன்அதில்உரிமை கோர முடியாதுஎன்று மனுஸ்ம்ருதி விதித்திருக்கிறது

இதுவும்கூட இன்றைய சட்ட சிந்தனையே. மைனர்கள்‌, மனவளர்ச்சி இல்லாதவர்கள்ஆகியோர்ஒப்பந்தம்செய்து கொள்ளத்தகுதி இல்லாதவர்கள்என்று இன்றைய சட்டம்கூறுகிறது. அதாவது, சட்ட நிர்பந்தங்களிலிருந்து அம்மாதிரியானவர்களுக்கு இன்று விதிவிலக்கு இருக்கிறது; இது அன்றே விஇக்கப்பட்டிருக்கிறது என்பதுதான்விசேஷம்‌. 

மனுவின்சட்ட விதிகளில்‌, இன்றைய சட்டத்தின்வேறு சில அம்சங்களையும்பார்க்க முடிகிறது. அவற்றில்ஓரிரண்டைப்பார்ப்போம்‌.