முவ்வகை குணங்கள்!

மனு ஸ்மிருதியில்‌, வகுக்கப்பட்டுள்ள, சட்ட விதிமுறைகளில்மேலும்ஒரு சிலவற்றைப்பார்ப்போம்‌ : 

ஒருவன்வாங்கிய கடனுக்கு, மற்றொருவன்உத்திரவாதம்தந்திருந்தால்‌, அப்போது, கடன்வாங்கியவன்நீதிமன்றத்தின்முன்பு வராத நிலையில்‌, உத்திரவாதம்தந்திருப்பவன்‌, அந்தக்கடன்தொகையை இருப்பிச்செலுத்த வேண்டியவன்ஆகிறான்‌! என்று கூறுகிறது மனுஸ்ம்ருதி. இன்றுஷ்யூரிட்டிபற்றிய விதிமுறை இத்தகையதே. இதுவும்அன்றே சிந்திக்கப்பட்டிருக்கிறது

மனிதர்களுக்கு தவறான சிகிச்சை அளிக்கிற மருத்துவர்கள்‌, இன்று சட்டத்திற்கு பதில்சொல்ல வேண்டியவர்கள்ஆகிறார்கள்‌. ஆனால்மனுஸ்ம்ருதியில்‌, மனிதர்களுக்கு மட்டுமல்லாமல்‌, மிருகங்களுக்குக்கூட ஒரு மருத்துவர்தவறான சிகிச்சை அளித்தால்‌, அவர்தண்டனைக்குரியவர்ஆக்கப்பட்டிருக்கிறார்‌. 

கலப்படம்செய்பவர்கள்‌, தரம்குறைந்த பொருளை விற்பவர்கள்‌, வெவ்வேறு பேர்களுக்கு வெவ்வேறு விலைகளில்பொருட்‌: களை விற்பவர்கள்‌ – ஆகியோரும்தண்டனைக்குரியவர்கள்என்று மனுஸ்ம்ருதி கூறுகிறது

வழக்குகள்‌, குற்றங்கள்‌, சாட்சியங்கள்‌, தண்டனைகள்ஆகி யவை பற்றி மனுஸ்ம்ருதி கூறியுள்ளதில்ஒரு சிறு பகுதியைப்பார்த்தோம்‌. குடும்பம்பற்றியும்‌, அதில்கணவன்‌ – மனைவி ஆகியோர்கடமை பற்றியும்மனுஸ்ம்ருதி விரிவாகப்பேசுகிறது :

பெண்களைப்பற்றி மனு மிகச்கடுமையாக பல கருத்துக்களைக்கூறியிருக்கிறார்‌. உதாரணமாக, ‘நகைகள்மீது மோகம்‌, படுக்கை போன்ற சுகங்களில்நாட்டம்‌, மிதமிஞ்சிய உணர்வு, கோபம்‌, துரோக சிந்தனை, அவதூறு பேசுவது ஆகியவை பெண்களின்இயற்கை…’ என்று மனுஸ்ம்ருதி சொல்கிறது

அதே சமயத்தில்‌, மனு பெண்களின்உயர்வையும்கூறியிருக்கிறார்‌. 

பெண்கள்‌, மகனைப்பெற்றுத்தருகிறவர்கள்‌; வீடுகளின்விளக்கு போன்றவர்கள்‌; செல்வம்மற்றும்மங்களம்ஆகியவற்றின்இருப்பிடமானவர்கள்‌; அவர்களை கெளரவிக்க வேண்டும்‌; ஒரு இல்லத்தில்மனைவிக்கும்‌, செல்வத்தின்தெய்வத்திற்கும்இடையே வித்தியாசமில்லை

ஒருவனுக்கு மறுமணம்நடக்க மனுஸ்ம்ருதி அனுமதிக்கிறது. ஆனால்இது தொடர்பாக, சில நேரங்களில்ஒரு நிபந்தனை இருக்கிறது : கணவனின்நன்மையை விரும்புகிறவளாகவும்‌, நன்னடத்தை உடையவளாகவும்உள்ள மனைவிக்கு, ஏதாவது ஒரு இராத நோய்வந்து விட்டால்‌, அப்போது அவளுடைய அனுமதி பெற்று, அவளுடைய கணவன்வேறொரு பெண்ணை மணக்க லாம்‌; ஆனால்ஒருபோதும்எந்த நிலையிலும்‌, முதல்மனைவியை அவன்அவமக்கக்கூடாது ‘.

 ‘கற்பு நிலை என்று சொல்ல வந்தால்‌, இரு கட்சிக்கும்‌, அது பொதுவில்வைப்போம்‌” என்றார்பாரதியார்‌. இன்று பலரும்‌, கற்பு இரு தரப்புக்கும்வேண்டும்என்று பேசுஇறார்கள்‌. பல நூறு வருடங்களுக்கு முன்பாக இயற்றப்பட்ட மனுஸ்ம்ருதி என்ன சொல்கிறது?

 ‘ஒற்றுமையாகவும்‌, ஒருவருக்கொருவர்அபசாரம்செய்யா மலும்இருவரும்இருக்க வேண்டும்‌. அது கணவன்‌, மனைவி ஆகியோர்முதற்கடமையாகும்‌. ஒருவரை விட்டு ஒருவர்பிரிந்து வாழ்வது, ஒருவருக்கு ஒருவர்துரோகம்இழைப்பது ஆகியவற்றை இருவருமே தவிர்க்க வேண்டும்‌’ என்று சொல்கிறது மனுஸ்ம்ருதி. அதாவது, கற்பு நிலையை பொதுவில்வைப்பது, இன்று ஏதோ புதிதாகத்தோன்றிவிட்ட புரட்சிக்கருத்து அல்ல. அன்றே கூட, இதுவும்சொல்லப்பட்டிருக்கிறது

ஸத்வம்‌, ரஜஸ்‌, தமோகுணங்கள்பற்றிய விளக்கத்துடன்ஆன்மாவை உணர வேண்டிய அவசியத்தை வற்புறுத்தி, மனு ஸ்ம்ருதி நிறைவு அடைகிறது

ஸத்வம்‌ – ஞானம்‌; ரஜஸ்‌ – பற்று; மற்றும்விருப்பு வெறுப்பு; தமஸ்‌ – அறியாமை. எல்லா ஜீவராசிகளிடமும்இந்த மூன்று குணங்களும்இருக்கின்றன… 

தூய்மையான அமைதி ஸத்வம்என்று உணரப்பட வேண்டும்‌… ஆன்மாவிற்கு வேண்டாததும்‌, துன்பத்துடன்இணைந்ததும்‌, மனிதர்களை இந்திரிய இன்பங்களை நாட வைப்பதுமான குணம்ரஜஸ்‌; நல்லது, கெட்டது என்ற பாகுபாடு எதையும்உணராமல்‌, இந்திரிய இன்பத்திவேயே மூழ்கி, அறியாமையில்உழல்கிற குணம்‌ – தமஸ்‌… 

வேதங்களை அறிய முற்படுவது, தவங்களைச்செய்வது, சாஸ்திர அறிவை நாடுவது, இந்திரியங்களை அடக்குவது, தர்மத்இன்பாதையில்செல்வது, தூய்மை, ஆன்ம அறிவை நாடுவதுஆகியவை ஸத்வ குணத்தை குறிக்கும்நடத்தைகள்‌… 

ஆசையினால்உந்தப்பட்டு குறிப்பிட்ட காரியத்தை முடிப்ப இல்ஈடுபாடு; பொறுமையின்மை; விலஃகப்பட்ட செயல்களில்நாட்டம்‌; இந்திரிய இன்பங்களில்சுகம்காண்பதுஆகியவை ரஜோ குணத்தைக்குறிக்கும்நடத்தைகள்‌…

பேராசை; சோம்பல்‌; கொடுமை; விலக்கப்பட்ட வாழும்வகைகளை நாடுவது; மூடத்தன்மைஆகியவை தமோ குணத்தைக்குறிக்கும்நடத்தைகள்‌…” 

ஸத்வம்‌, ரஜஸ்‌, தமஸ்‌ – ஆகிய குண வகைகள்எல்லா மனிதர்களிடமும்இருக்கின்றன. ஒரு மனிதனிடம்‌, இந்த மூன்றில்எது அதிகமாக இருக்றெதோ, அந்த குணமுடையவனாக அந்த மனிதன்இகழ்கிறான்‌… ‘

 – இவ்வாறு முவ்வகை குணங்களைப்பற்றிச்கூறிவிட்டு, ஆன்ம அறிவைப்போற்றுகிறார்மனு. யாகங்கள்போன்ற வேதச் சடங்குகள்இரு வகையானவை என்று கூறுகிறார்‌. ஒன்றுப்ர வ்ருத்தம்‌; மற்றொன்றுநிவ்ருத்தம்‌’. மகழ்விற்கும்‌, செழிப்பிற்கும்வழி செய்வது ப்ரவ்ருத்தம்‌; மோட்சம்அடைய பாதை அமைப்பதுநிவ்ருத்தம்‌’. இவ்வுலக வாழ்வில்ஒரு காரியம்நிறைவேற வேண்டும்என்றோ, மேலுலகில்நற்கதி கிட்ட வேண்டும்என்றோ விரும்பி, அதற்காகச்செய்யப்படுகிற சடங்கு ப்ரவ்ருத்தம்‌. வேதச்சடங்கைச்செய்வது கடமை என்றெண்ணி, எந்த ஒரு வேண்டுதலும்மனதில்இல்லாமல்‌, அந்தச்சடங்கைச்செய்தால்‌ – அது நிவ்ருத்தம்‌. இரண்டாவதுதான்‌, மோட்ச ஸாதனம்‌, எல்லா உயிர்களிலும்தன்னையே கண்டு, தன்னிலே எல்லா உயிர்களையும்கண்டு, தன்னையே அர்ப்பணித்து விடுகிறவன்‌,, விடுதலை என்னும்நிலையை எய்துவான்‌ – என்று கூறுகிறது மனுஸ்ம்ருதி

ஆக, மனுஸ்ம்ருதி, அன்றாட வாழ்க்கையில்கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகலிலிருந்து, மோட்ச மார்க்கத்தை எய்துகிற வழி வரையில்‌, பல விதிமுறைகளை வகுத்திருக்கிறது. வளர்ந்துவிட்ட இன்றைய மனித சமுதாயத்தினால்‌, இயற்றப்பட்டுள்ள சட்டங்களின்வழிமுறைகளில்சிலவும்கூட, அன்றே மனுவினால்காணப்பட்டவை என்பது வியப்புக்குரிய விஷயம்‌. நியாய ஸ்தலத்தில்‌, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்என்பதிலிருந்து, ஒரு வேலையாளுக்கு உரிய நியாயமான ஊதியம்கொடுக்கப்பட்டாக வேண்டும்என்பது வரைபில்‌, மனு கூறியிருக்கிற பல விதி முறைகளில்‌, ஒரு ஆழமான சமூக பொறுப்புணர்வு காணப்படுகிறது

இதைத்தவிர, யுத்த வழிமுறைகளும்‌, விரிவாகக்கூறப்பட்டிருக்இன்றன. எந்தெந்தப்படை, யுத்த அரங்கில்எங்கெங்கே நிறுத்தப்பட வேண்டும்என்பது உட்பட, மனு கண்ட யுத்த சாத்திரம்பல போர்முறைகளைக்கூறுகிறது. அமைச்சரவை, நிர்வாகம்‌, வரி விதிப்பு, வர்த்தகம்‌, பாதுகாப்புஎன்று ஆட்சியின்‌, பொறுப்புகள்பலவற்றை வகைப்படுத்தி அவற்றிற்கான விதிமுறைகளையும்மனுஸ்ம்ருதி எடுத்து வைக்கிறது. இத்தனை பொறுப்புகளை நிர்வகிப்பதால்‌, அரசனுக்கு மிக உயர்ந்த ஸ்தானத்தை மனுஸ்ம்ருதி அளிக்கிறது

இவ்வளவையும்சொல்லி, ஆன்ம ஞானத்தையும்வலியுறுத்துகிற இந்த நூல்இப்போது பெரிதும்கண்டனத்திற்குள்ளாவது வருத்தத்திற்குரிய விஷயம்‌. ‘நான்கு வர்ணங்களை சிருஷ்டி செய்து, ப்ராம்மணனுக்கு பிறப்பின்மூலமே பல சலுகைகளை தந்து விட்ட நூல்மனுஸ்ம்ருதி: என்ற எண்ணமே, இன்றைய பல கண்டனங்களுக்கு அடிப்படைக்காரணம்‌. வர்ணங்கள்பிறப்பினால்அடையப்படுகின்றன என்ற நிலை, மனுவினால்தோற்றுவிக்கப்பட்டது அல்ல. வர்ணங்கள்‌, வாழும்வகையினாலும்‌, குணத்தினாலும்அடையப்பெறுகின்றன என்கிற நிலை மாறி, அவை பிறப்பிலேயே அடையப்படுகின்றன என்கிற நடைமுறை நிலை, மனுஸ்ம்ருஇிக்கு முன்பாகவே வந்துவிட்டது. அதை மனுவும்ஏற்றிருக்கிறார்‌. ஆனால்‌, ஒரு வர்ணத்தைச்சார்ந்தவர்‌, மற்றொரு வர்ணத்தை அடைய முடியும்என்றும்மனு கூறியிருக்கிறார்என்பதை நாம்பார்த்தோம்‌.

அது தவிர, ‘பிறப்பினால்மட்டுமே ப்ராம்மணனாக இருந்து கொண்டு, மற்றபடி ப்ராம்மணனுக்கு விதிக்கப்பட்ட மிகக்கடுமையான வாழ்க்கை முறையை மேற்கொள்ளாதவனுக்கு, மனு சலுகைகளை மறுத்திருக்கிறார்‌. அப்படிப்பட்ட ப்ராம்மணனை மனுஸ்ம்ருதி மிகக்கடுமையாகப்பார்க்கிறது. அவனுக்கு தானம்கொடுப்பது கூட மகா பாவம்என்று கூறுகிறார்மனு.

முன்பே ஒரு அத்தியாயத்தில்நாம்பார்த்தது போல, நீதிமன்றத்இல்பதவி வகிக்கும்வாய்ப்பு, பிறப்பினால்மட்டுமே ப்ராம்மண னாக இருப்பவனுக்கு தரப்படுகிறது. மற்றபடி வாய்ப்புகள்அவ னுக்கு மறுக்கப்படுகின்றன. ஆகையால்‌, ஒருவன்ப்ராம்மண வகுப்பில்பிறந்து விட்டால்‌, மனு அவனை மிக உயர்ந்த நிலையில்வைக்கிறார்என்ற கருத்து மிகவும்தவறானது. இந்தத்தவறான கருத்தின்அடிப்படையில்‌, மிகவும்அதிசயிக்கத்தக்க அற்புதமான நூலாகிய மனுஸ்ம்ருதியை கண்டனத்திற்கு மட்டுமே உரிதாக்கு வது, நமது சாதனையை நாமே இழிவுபடுத்துகிற செயலாகும்‌. தன்னிலே மற்ற எல்லாவற்றையும்காண வேண்டும்என்ற சமப்பார்வையை வலியுறுத்துக நூல்‌, கண்டிக்கத்தக்கது அல்ல.

மனுஸ்ம்ருதி இறுதியாகச்சொல்வது இதுவே : எல்லாவற்றி லும்தன்னையே பார்த்து, சமப்பார்வையைப்பெற்று, தன்னையே உணர்ந்தவன்ப்ரம்ம நிலையை எய்துகிறான்‌.