அர்த்தசாஸ்திரம் – ஒரு அறிமுகம்!

குடிசையின்ஓர்புறத்தில்‌, விரட்டிகளை உடைக்க ஒரு கல்காணப்படுகிறது; மற்றொருபுறம்தர்ப்பைக்கட்டுகள்‌; ஈரக்கட்டைகள்உலர்வதற்காக கூரையின்மீது போடப்பட்டு, அதனால்குடிசையின்கூரை, அழுந்திக்கிடக்கிறது. இந்த பாழடைந்த குடிசைதான்சாணக்கியனின்இல்லம்‌. 

இதுமுத்ராராக்ஷஸம்‌’ என்னும்சரித்திர நாடக நூலில்‌, சாணக்யர்எனப்படும்கெளடில்யரின்‌, எளிமையான வாழ்க்கை முறையை விளக்குகிற வாசகம்‌ : 

ஓஹோ! இதுதான்இந்நாட்டு அரசனுடைய பிரதம மந்திரியின்வீடோ! என்று ஒருவன்பரிகாசமாகக்கேட்க, சாணக்யர்சொல்கிறார்‌: ‘ஒரு நாட்டின்பிரதம அமைச்சன்‌, குடிசையில்வாழ்ந்தால்‌, அந்நாட்டு பிரஜைகள்மாளிகைகளில்வாழ்கிறார்கள்‌; பிரதம அமைச்சனே வானளாவிய கட்டிடத்தில்வாழத்தொடங்கினால்‌, அந்நாட்டு மக்கள்குடிசைகளில்வாழ்வார்கள்‌. 

இப்படி ஒரு தியாக மனப்பான்மையுடன்‌, சேவை ஒன்றையே பெரிதாக நினைத்து வாழ்ந்த சாணக்யன்‌, நந்தர்களை வீழ்த்தி, சந்திர குப்தனை மன்னன்ஆக்கினான்‌. சாணக்யனைப்பற்றிய சரித்திரக்குறிப்புகளைப்பார்த்தால்‌, தியாகம்‌ – கோபம்‌; பெருந்தன்மைகர்வம்‌; தன்னம்பிக்கைசந்தேகம்‌; பேரன்புகடுமைஎன்ற பல மாறுபட்ட குணாதிசயங்கள்அவனிடம்இருந்திருப்பதை உணர முடிகிறது.

ஆனால்இவை எல்லாவற்றையும்விட சாணக்யனிடம்முக்கிய மாக விளங்கிய குணாதிசயம்‌ – தனக்கென்று எதையுமே விரும்பாத ஒரு யோகியின்மனப்பாங்கு. இப்படிப்பட்டவனுக்கு அசாத்ய மான அறிவு தீட்சண்யம்இருந்ததால்‌, அவனால்ஒரு சாம்ராஜ்யத்தையே ஸ்தாபிக்க முடிந்தது. விஷ்ணுகுப்தன்‌, சாணக்யன்என்ற பெயர்களையுடைய கெளடில்யர்எழுதிய ராஜநீதி சாஸ்இரம்தான்‌. அர்த்தசாஸ்திரம்‌.

தர்மம்‌, அர்த்தம்‌, காமம்‌, மோட்சம்என்ற சொற்றொடரில்வர்ணிக்கப்படுகிற நான்கு நிலைகளில்‌ ‘அர்த்தம்‌’ என்பதற்கு செல்வம்என்று அர்த்தம்கொள்ளலாம்‌. ஆனால்அர்த்தசாஸ்திர நூலில்இது இன்னமும்விரிவான பொருளுடன்பயன்படுத்தப்படுகிறது. இந்த நூலின்ஆரம்பமே இதைத்தெளிவாக்குகிறது :

பூமியை அடைவதற்கும்‌, பாதுகாப்பதற்கும்‌, பல ஆச்சார்யர்‌. களால்இயற்றப்பட்ட அர்த்தசாஸ்திர நூல்களை ஒருங்கிணைத்து, இயற்றப்பட்ட நூல்இந்த அர்த்தசாஸ்இரம்‌”,

இந்த ஆரம்பத்இலிருந்தே இரண்டு விஷயங்கள்புரிகின்றன. ஒன்று : கெளடில்யனின்அர்த்தசாஸ்திரம்‌, இந்த விஷயம்பற்றிய முதல்நூல்அல்ல; கெளடில்யருக்கு முன்பாகவே பலர்அர்த்த சாஸ்திர நூல்களை இயற்றி இருக்கிறார்கள்‌. இரண்டு : அர்த்த சாஸ்திரம்என்பது பூமியை பெறுவதற்கும்‌, பாதுகாப்பதற்கும்வழி முறைகளைக்கூறுகிறதுஅதாவது இது ஒரு ராஜநீதி நூல்‌, நிர்வாக நூல்‌, யுத்த சாஸ்இரம்‌.

தனக்கு முன்பாகவே இருந்து வந்த அர்த்தசாஸ்திர நூல்களை: ஒருங்கிணைத்துத்தருவதாக கெளடில்யர்கூறினாலும்‌, பலரிட மிருந்து தான்மாறுபடுவதை, இந்த நூவில்அவர்பல இடங்களில்சுட்டிக்காட்டுகிறார்‌. தனக்கு முந்தையவர்கள்ஒரு விஷயம்பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள்என்பதைச்சொல்லி விட்டு, தன்னுடைய கருத்து அவற்றிலிருந்து மாறுபட்டது என்பதையும்கெளடில்யர்குறிப்பிடுகிறார்‌.

ஆக, இது ஒரு தொகுப்பு நூல்அல்ல; முந்தைய கருத்துக்களை யும்கவனிக்கிற, புதிய விளக்க நூல்‌. இந்த அணுகுமுறை, அர்த்தசாஸ்திரத்தின்தொடக்கத்திலேயே காணப்படுகிறது. தர்க்கம்‌ (தத்துவம்‌); வேதங்கள்‌; பொருளீட்டல்‌ (பொருளாதாரம்‌): நிர்வாகம்‌ – இவை வித்யைகள்என்று கூறிவிட்டு, கெளடில்யரின்அர்த்த சாஸ்திரம்மேலும்சொல்கிறது

மனுவை மட்டுமே ஏற்பவர்கள்‌, வேதங்கள்‌, பொருளாதாரம்‌, நிர்வாகம்‌ – ஆகியவை மட்டுமே வித்யைகள்என்று கூறுகின்றனர்‌; ஏனென்றால்தத்துவம்என்பது, வேதங்களின்ஒரு பகுதியே என்பது அவர்கள்எண்ணம்‌. பிரஹஸ்பதியை ஏற்பவர்களோ, பொருளாதார மும்‌, நிர்வாகமும்மட்டுமே வித்யைகள்என்று கருதுகிறார்கள்‌; அவர்கள்கூற்றின்படி, மற்றவை வேதத்தின்அங்கங்களே, தண்டநீதி எனப்படும்‌, நிர்வாக சாஸ்திரமே வித்யை என்பது, உசனஸ்ஸின்வழியை ஏற்பவர்களின்கருத்து. ஆனால்கெளடில்யனோ முதலில்கூறப்பட்ட நான்குமே வித்யைகள்என்று கூறுகிறான்‌; அவற்றின்உதவி கொண்டு, ஆன்மீக ரீதியாகவும்‌, நடைமுறை பலன்கள்ரீதியாகவும்‌, ஒருவன்மேன்மை பெறலாம்என்பதால்‌, இவை நான்கும்வித்யைகள்ஆகின்றன“. 

இப்படி எடுத்த எடுப்பிலேயே, மற்ற தத்துவ விதிகளிலிருந்து, தான்மாறுபடுவதை கெளடில்யர்விளக்கி விடுகிறார்‌. இந்த அணுகுமுறை, அவருடைய நூல்முழுதும்வியாபித்திருக்கிறது. பல இடங்களில்‌, ‘கெளடில்யன்சொல்கிறான்‌! என்று கெளடில்யரே எழுதுகிறார்‌. இது அக்கால இலக்கியங்களின்வழிமுறை

இந்த நூல்பற்றி ஆராய்ச்சிகள்நடத்திய சில மேலைநாட்டு அறிஞர்கள்‌, இதை மாக்கிவில்லியின்‌ ‘தி பிரின்ஸ்‌! என்ற நூலுடன்ஒப்பிடுகிறார்கள்‌. மாக்கிவில்லி, இத்தாலியில்‌ 500 ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த ஒரு அரசியல்தத்துவவாதி. இவர்அங்கே ஒரு பகுதியின்ஆட்சியிலும்பதவி வகித்தார்‌. இவருடையபிரின்ஸ்‌! – இன்றைய உலதின்பெரும்கண்டனத்திற்குள்ளான நூல்‌. ‘எந்தவித தர்ம நியாயத்தையும்நினைத்துப்பார்க்காமல்‌, தன்னை வளர்த்துக்கொள்வதிலேயே, ஒரு அரசன்கவனமாக இருக்க வேண்டும்மக்களின்அன்பைப்பெறுவதை விட, அவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதுதான்அரசனுக்கு நல்லது… ‘ என்றெல்லாம்அறிவுரை கூறுகிற நூல்‌, மாக்கிவில்லியின்‌ ‘தி பிரின்ஸ்‌’. 

ஆனால்அர்த்தசாஸ்திரம்இப்படிப்பட்ட நூல்அல்ல. எதிரிகளை வீழ்த்துவதிலும்‌, அழிப்பதிலும்தயை தாட்சண்யமற்ற அணுகுமுறையை அர்த்தசாஸ்இரம்வற்புறுத்துகிறது. தந்இரம்‌, நம்ப வைத்து ஏமாற்றுவது, திடீர்தாக்குதல்என்ற வழிமுறைகள்‌ – ஏன்‌, ஏவல்‌, பில்லி, சூன்யத்தையும்கூடகடைப்பிடித்து, ஒரு அரசன்தனது எதிரியை வீழ்த்த வேண்டும்என்று கெளடில்யர்கூறுகிறார்‌. ஆனால்தன்நாட்டு மக்களை பாதுகாப்பதில்அரசனுக்கு பெரும்கடமைகளை அவர்விதிக்கிறார்‌. ‘தன்மக்களிடத்தில்கருணை; எதிரிகளிடத்தில்கடுமை! என்பதே அர்த்தசாஸ்திரம்ஒரு அரச னுக்கு எடுத்துக்சொல்கிற வழிமுறை. இது மாக்கிவில்லியின்நூலில்இல்லை எனும்போது, இந்த இரண்டு நூல்களை சமமாகப்பார்ப்பது சரியல்ல

தன்நாட்டு மக்களிடம்அரசன்நடந்து கொள்ள வேண்டிய விதத்தை கெளடில்யர்அணுகுகிற விதத்திற்கு ஒரு உதரணம்‌ – இயற்கையின்சீற்றங்களின்போது, அரசனுக்கு அர்த்தசாஸ்திரம்விதிக்கிற வழிமுறை : இயற்கையின்சிற்றத்தினால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தந்தையாக இருந்து அரசன்உதவிகளைச்செய்ய வேண்டும்‌’ என்று கெளடில்யர்விதிக்கிறார்‌. 

இது மட்டுமல்லாமல்‌, தீயினால்விபத்துக்கள்நேரிடாமல்இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள்எடுக்கப்பட வேண்டும்என்பதும்விவரிக்கப்படுகிறது. கோடை காலங்களில்தெரு ஓரங்களில்எல்லாம்‌, தண்ணீர்குடங்கள்நூற்றுக்கணக்கில்வைக்கப்பட்டிருக்க வேண்டும்என்பதிலிருந்து, வீடுகளின்உள்ளே, அடுப்பைப்பற்ற வைக்காமல்நெருப்பு மூட்டுவதை வெளியே செய்ப வேண்டும்என்பது வரை, பல அணுகுமுறைகள்கூறப்படுகின்றன. நெருப்பை அணைப்பதற்கான உபகரணங்கள்பட்டியலிடப்பட்டு, அவை எல்லா வீடுகளிலும்இருக்குமாறு பார்த்துக்கொள்வது, நகர அதிகாரியின்கடமை என்பதும்கூறப்படுகிறது

மழைக்காலங்களில்‌, நீர்நிலைகளின்அருகே உள்ள இராமங்களைச்சார்ந்த மக்களை, வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்என்றும்கூறப்பட்டிருக்கிறது. இவற்றை சரியாக நடைபெற வைப்பது அரசனின்கடமை என்றும்கெளடில்யர்விதித்இருக்கிறார்‌. 

இவ்வளவு விவரமாக அரசனின்கடமைகளைப்பார்க்கிற இந்த நூலில்எத்தனை நிர்வாக அம்சங்கள்எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன என்பது வியப்புக்குரிய விஷயம்‌. என்னென்ன விஷயங்கள்எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன என்பது, இந்த நூலின்ஆரம்பத்இல்கெளடில்யராலேயே பட்டியலிடப்பட்டிருக்கிறது. ‘வித்யை களின்விவரங்கள்‌; பெரியோர்நட்பு; இந்திரியங்களை அடக்குவது; அமைச்சர்களை நியமிப்பது; அதிகாரிகள்நியமனம்‌; அமைச்சர்களின்நேர்மையை சோதிப்பது; உளவுத்துறையினர்நியமனம்‌; தன்நாட்டில்பலவித ஆசை காட்டுதல்களுக்கு மயங்கி விடக்கூடிய வர்களை கண்காணிப்பதுஅத்தகையவர்கள்எதிரி நாட்டில்இருப்பதை கவனித்து அவர்களை தனது வசம்இழுப்பது; அயல்நாடு செல்லும்தூதுவரின்தகுதிகள்‌; அரசனின்பாதுகாப்பு; விவசாயத்இற்கு உதவாத நிலங்களை விற்பது; கோட்டை நிர்மாணம்‌; வரி விதிப்பு; கணக்குகள்மற்றும்ஆவணங்கள்துறை; வசூல்ஆகிவிட்ட வரியை மோசடி செய்து பெற்றவர்களிடமிருந்து அதைக்கைப்பற்று வது; தொழிற்சாலைகள்மற்றும்உலோகச்சாலைகள்‌; வனத்துறை; விவசாயத்துறை; அளவுகள்மற்றும்எடைகள்துறை; துணி வகைகள்துறை; மதுபான கட்டுப்பாடு; நகர அதிகாரிகள்கடமைகள்‌… என்பவை இந்த நூலின்ஒரு பகுதி. இது தவிர, நிதி நிர்வாகம்‌, அயல்நாட்டு உறவு, யுத்த சாஸ்திரம்‌… போன்றவை பல்வேறு பகுதிகளில்மிகவும்விவரமாக வர்ணிக்கப்பட்டிருக்இன்றன. இறுதியில்‌, ஏவல்மூலம்எதிரியை வீழ்த்தும்விஷய மும்வருகிறது

சுமார்‌ 2300 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட, இந்த அதிசயிக்கத்தக்க நூலின்ஒரு சில பகுதிகளை மட்டும்நாம்பார்ப்போம்‌.