அமைச்சர்கள் நியமனம்!

நடைமுறை வாழ்க்கை, ஒழுங்கு முறையுடன்இருக்க வேண்டும்என்பதற்காக, அரசன்தனது கோலை (ஆட்‌8ி) உயர்த்திப்பிடிக்க வேண்டும்‌. மக்களை ஒழுங்குப்படுத்த கோலைப்போன்ற தொரு சாதனம்வேறெதுவும்இல்லை‘ – என்று பல ஆச்சார்யர்கள்கூறியிருக்கிறார்கள்‌.

இதை கெளடில்யன்மறுக்கிறான்‌. ஏனெனில்கொடுமையான ஆட்சியையே நடத்துகிற அரசன்மக்களால்வெறுக்கப்படுகிறான்‌; மென்மையான ஆட்சியையே நடத்துகிற அரசனோ அலட்சியப்படுத்தப்படுகிறான்‌; நியாயமான ஆட்சியை நடத்துகிற அரசன்கெளரவிக்கப்படுகிறான்‌… 

ஆத்திரத்தினாலோ, மற்றவர்களை அவமதிக்கும்தன்மை யினாலோ, அரசனின்கோல்‌ (ஆட்சி) தவறாகப்பயன்படுத்தப்பட்டால்துறவிகளுக்கும்கூட கோபம்பொங்கி எழும்‌; அப்படி யிருக்க இல்லற தர்மத்தில்இருக்கும்மக்களைப்பற்றி கேட்பானேன்‌? ஆனால்‌, அரசனின்கோல்பயன்படுத்தப்படாமலே இருந்தால்‌, மீன்களின்விதிமுறைதான்நிலவும்‌ – பலவான்‌, பலவீனமானவனை ஒடுக்குவான்‌; அரசனின்கோலினால்பாது காக்கப்பட்டால்பலவினனும்வாழ்வான்‌… 

என்று ஆரம்பிக்கிற கெளடில்யர்‌, மேலும்சொல்கிறார்‌ :

அரசன்இந்த்ரியங்களை வெல்ல வேண்டும்‌. தர்மம்‌, அர்த்தம்‌, காமம்என்ற மூன்றில்‌, எது ஒன்றிலும்மிகை இருக்கக்கூடாது. ஆனால்‌, ‘அர்த்தம்‌’ என்பதுதான்மிக முக்கியமானது என்று கெளடில்யன்கூறுகிறான்‌. ஏனெனில்‌, அதை ஒட்டியே தர்மமும்‌, காமமும்கூட இருக்கின்றன…” 

தர்மம்‌, அர்த்தம்‌, காமம்‌, மோட்சம்‌ (அறம்‌, பொருள்‌, இன்பம்‌, வீடு) என்கிற நான்கில்மோட்சத்தைத்தவிர்த்து இருக்கின்ற மூன்றில்‌, பொருள்ஈட்டல்ஆகியஅர்த்தமே முக்கியமானது என்ற கெளடில்யர்கருத்து, மற்ற பலருடைய கருத்திலிருந்து மாறுபட்டது. ‘இன்பத்தைவிட, பொருள்ஈட்டல்மேலானது என்பதை புரிந்து கொள்ள முடியும்‌. ஆனால்‌ ‘தர்மத்தையும்விட பொருள்ஈட்டலே மேலானதுஎன்பதை எப்படி ஏற்பது? ‘- என்ற கேள்வி சிலர்மனதில்எழலாம்‌. ஆனால்‌, இந்த கருத்து, இதிஹாஸங்களில்கூட சிலரால்சொல்லப்படுகிறது. நல்ல காரியங்களைச்செய்வதற்குக்கூட பொருள்வேண்டுமல்லவா? அதனால்அது முக்கியத்துவம்பெறுகிறது

ஹிந்து தர்மமே கூட, இல்லறத்தைப்பெரிதும்மதிக்கிறது. பிரம்மச்சர்யம்‌, இல்லறம்‌, வானப்ரஸ்தம்‌ (காட்டில்வாழ்தல்‌), ஸன்யாஸம்‌ – என்ற நான்கு நிலைகளில்இல்லறம்மிக முக்கிய மானது என்று பல நூல்கள்வற்புறுத்திக்கூறுகின்றன. இல்லறத்தில்இருப்பவர்களால்தான்‌, மற்ற மூன்று நிலையில்உள்ளவர்கள்போளஷிக்கப்படுகிறார்கள்‌ – என்பதால்‌, இல்லறம்முக்கியத்துவம்பெறுகிறது. பிரம்மச்சாரியிடமோ, வானப்ரஸ்தத்தை ஏற்றவரி டமோ, ஸன்யாஸியிடமோபொருள்இருக்காது. இல்லறத்தானிடம்பொருள்இருக்கும்‌. அதைக்கொண்டே அவன்மற்றவர்களுக்கு உதவுவான்‌. ஆக, பொருளீட்டல்என்பது ஹிந்து தர்மத்தினால்‌, முக்கியமானதாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது. நடைமுறை உண்மைகளைப்புறக்கணித்து, கண்மூடித்தனமாக, கனவுலகில்சஞ்சரித்துக்கொண்டு, உலக வாழ்க்கைக்கு ஒவ்வாத, கற்பனை நியாயங்களைக்கூறுகிற சாத்திரம்அல்ல, ஹிந்து தர்மம்‌. நடை முறையை ஏற்றுத்தான்அது நியாயங்களைக்கூறுகிறது. ஆகையால்‌, பொருள்ஈட்டலுக்கு கெளடில்யர்தருகிற முக்கியத்துவம்வியப்புக்குரியது அல்ல.

அமைச்சர்கள்‌, ஆலோசகர்கள்பற்றி கெளடில்யர்கூறுவதை எடுத்துக்கொள்வோம்‌ – இதைப்படித்தாலே, அர்த்தசாஸ்இிரத்தை இயற்றிய கெளடில்யர்‌, இந்த மாதிரி விஷயங்களைப்பற்றி எவ்வளவு விரிவாக சிந்தனை செய்திருக்க வேண்டும்என்பது புரியும்‌. இதைப்பற்றி, தான்கருதுவதை மட்டும்கூறி மேலே போகாமல்‌, தனக்கு முன்பே வேறு பலர்தெரிவித்துள்ள மாறுபட்ட கருத்துக்களை சுட்டிக்காட்டி, இறுதியில்தனது கருத்தையும்கூறுகிறார்அவர்‌. அர்த்தசாஸ்திரத்தின்முதல்பகுதியிலேயே வருகிற, இந்த விஷயத்தைப்பார்ப்போம்‌ : 

ஒரு சக்கரம்சுழன்று வண்டி செல்லாது; ஆகையால்அரசன்அமைச்சர்களை நியமித்து, அவர்களுடைய கருத்துக்களையும்கவனமாகக்கேட்டுக்கொள்ள வேண்டும்‌…” 

சரி, யாரை அமைச்சர்களாக நியமிப்பது? கெளடில்யர்‌, மற்றவர்களின்கருத்துக்களைக்கூறி பின்னர்தனது முடிவைச்சொல்கிறார்‌. 

பரத்வாஜர்‌, தன்னுடன்கல்வி பயின்றவர்களின்திறன்மற்றும்நேர்மை பற்றி ஏற்கெனவே தெரிந்திருக்கும்என்பதால்‌, அப்படிப்பட்டவர்களை அமைச்சர்பதவிகளில்அரசன்நியமிக்க வேண்டும்என்று கூறுகிறார்‌.” 

விசாலாக்ஷர்இதை மறுத்து, ‘ஒருவனுடன்கல்வி பயின்ற வர்கள்‌, அவனிடம்மரியாதை காட்ட மாட்டார்கள்‌; தனது சொந்த வாழ்க்கையில்‌, தன்னுடன்சேர்ந்து சம்பந்தப்பட்டவர்களையே அமைச்சர்களாக ஒரு அரசன்நியமிக்க வேண்டும்‌. அரசனுக்கும்அவர்களுக்கும்ஒரே மாதிரியான குணமும்‌, ஒரே வகையான பல வினங்களும்இருக்கும்‌. அவர்களுடைய ரகசியங்கள்அரசனுக்குத்தெரிந்திருக்கும்என்பதால்‌, அவர்கள்அரசனிடம்மரியாதை காட்டுவார்கள்‌! என்று கூறுகிறார்‌.

‘”பராசரரை ஏற்பவர்களோ, இதை ஏற்கவில்லை. ‘அவர்களுக்கும்‌ (மேற்குறிப்பிட்டவர்களுக்கு) அரசனுடைய ரகசியங்கள்தெரிந்திருக்கும்‌. அதனால்அரசன்அவர்களிடம்பயந்து அவர்கள்செய்வதையும்‌, செய்யத்தவறியதையும்பொறுத்துக்கொள்ள நேரிடும்‌. எத்தனை பேரிடம்‌, அரசனின்ரகசியங்கள்பகிர்ந்து கொள்ளப்படுகின்தனவோ, அத்தனை பேரிடம்‌, அவன்சக்தியற்ற வனாகிறான்‌. ஆபத்துக்காலத்திலும்தனக்கு அனுசரணையாக இருந்தவர்களை அரசன்தனது அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்‌. ஏனெனில்அவர்களுடைய விசுவாசம்ஏற்கெனவே நிரூபணம்ஆிவிட்டதுஎன்பது பராசரரின்சீடர்கள்சொல்வது.” 

பிசுனர்‌, இதை ஏற்க மறுக்கிறார்‌. ‘விசுவாசம்என்பது பக்தி பூர்வமானது; அது ஒரு அறிவுத்திறன்அல்ல. ஒரு பணியை ஏற்கும்போது, அதன்மூலம்அரசுக்குச்சே வேண்டிய அளவு நிதியையோ, அதற்கு மேலாகவோ, எவன்கொண்டு வருகிறானோ, அவனே நல்ல அமைச்சன்‌. அப்படிப்பட்டவர்களின்நோமை தெளிவாகத்தெரிவதால்‌, அவர்களையே அமைச்சர்களாக ஒரு அரசன்நியமிக்க வேண்டும்‌’ என்கிறார்அவர்‌. ” 

கெளணதந்தர்‌, இதை மறுதளித்துமேற்குறிப்பிடப்பட்ட வர்கள்மற்ற தகுதிகள்அற்றவர்களாக இருக்கக்கூடும்‌. தன்னுடைய தந்தை, அல்லது பாட்டனார்ஆகியோரின்கழ்பணிபுரிந்தவர்களையே, அரசன்தனது அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்‌.  ஏனென்றால்‌, அவர்களுடைய தகுதியும்‌, நடத்தையும்ஏற்கெனவே நிரூபணம்ஆனவை. அரசன்அவர்களிடம்சரியாக நடந்து கொள்ள வில்லை என்றால்கூட, அவர்கள்அவனை விட்டு விலகுவதில்லை. மிருகங்களின்நடத்தையிலிருந்தே இதை உணரலாம்‌. ஒரு மந்தையைச்சார்ந்த ஆடுமாடுகள்‌, மற்றொரு மந்தையைச்சார்ந்தவற்றை எதிர்கொண்டால்கூட, அவற்றோடு சேர்ந்து விடுவ இல்லை; தங்கள்மந்தையுடனேயே செல்கின்றன! என்று வாதாடுகிறார்‌. 

வாதவ்யாதியோ, இதை ஏற்கவில்லை. ‘இப்படி பரம்பரை பரமபரையாகப்பணிபுரிந்தவர்கள்‌, அரசனின்உடமைகளைக்கூட தங்கள்கட்டுப்பாட்டில்உள்ள விஷயங்கள்போலக்கருதி விடு இறார்கள்‌; அவர்களே எஜமானர்கள்போல நடந்து கொள்கிறார்கள்‌. ஆகையால்அரசன்‌, ஆட்சி முறையில்நல்ல அறிவு பெற்ற, புதியவர்களையே அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்‌. கொலை (ஆட்சியை) கையில்ஏந்தியுள்ள அரசனை, புதியவர்கள்அவமதிப்ப இல்லை; அவனை யமனைப்போலவே நினைத்து நடந்து கொள்கிறார்கள்‌ ‘ என்று அவர்சொல்கிறார்‌. 

பாஹுதந்தீபுத்ரர்‌, இப்படி முற்றிலும்புதியவர்களை நியமிப்பதை ஒப்புக்கொள்ளாமல்‌, “தத்துவத்தை மட்டும்கற்றறிந்து, நடைமுறை அனுபவம்சற்றும்இல்லாதவன்‌, காரியங்களை நடத்துவதில்திணறுவான்‌. ஆகையால்நற்குடிப்பிறப்பு, அறிவுக்கூர்மை, நேர்மை, துணிவு, விசுவாசம்‌, அனுபவம்ஆகியவற்றைப்பெற்றவர்களையே அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்‌! என்று சொல்கிறார்‌, 

இப்படி அமைச்சர்கள்‌, மற்றும்ஆலோசகர்கள்நியமனம்பற்றி மற்ற ஆச்சார்யர்கள்பலர்சொன்னதை எல்லாம்பட்டியலிட்டு விட்டு, தன்கருத்தைக்கூறுகிறார்கெளடில்யர்‌.

 ‘ மற்றவர்கள்கூறியவை எல்லாவற்றிலுமே, ஒவ்வொரு நியாயம்இருக்கிறது. ஒருவனுடைய பணியை: நிறைவேற்றும்திறனை வைத்து, அதற்கேற்ப அமைச்சர்களை நியமிக்க வேண்டும்‌. 

கெளடில்யர்இப்படி பொதுவாகச்சொல்லி, அத்துடன்அமைச்சர்கள்நியமனம்என்ற விஷயத்தை விட்டு விடவில்லை. ஒரு அமைச்சருக்கு வேண்டிய பல தகுதிகளை அவர்பட்டிய விட்டுக்காட்டுகிறார்‌, 

தனது தேசத்தைச்சார்ந்தவன்‌; நற்குடியில்பிறந்தவன்‌; வித்யைகளில்தேர்ந்தவன்‌; அறிவுக்கூர்மை, விடா முயற்சி, பேச்சுத்திறன்‌, சாமர்த்தியம்ஆகியவை உடையவன்‌; உடன்பதில்சொல்லும்இறமை, சக்தி, நேர்மை, நற்குணம்‌, விசுவாசம்‌,  ஆரோக்யம்‌, மனவலிமை ஆகியவற்றை உடையவன்‌; சுமுகமாக: நடந்து கொண்டு, விரோதங்களை வளர்க்காமல்இயங்குபவன்‌; சபலமும்‌, உறுதியின்மையும்அற்றவன்‌ – என்ற தகுதிகளை எல்லாம்உடையவர்கள்தான்அமைச்சர்களாக நியமிக்கப்படத்தகுதியானவர்கள்‌. 

இவை எல்லாம்ஒருவனிடம்நிறைந்திருந்தால்‌, அவன்உயர்ந்த அமைச்சனாவான்‌; இவற்றில்ஒரு பகுதி ஒருவனிடம்இல்லையென்றால்அவன்சாதாரண நடுத்தர அமைச்சனாவான்‌; இவற்றில்பாதி ஒருவனிடம்இல்லையென்றால்‌. அவன்தாழ்ந்த நிலையில்உள்ளவன்‌. ” 

இதையெல்லாம்சொல்லி விட்டு, அர்த்தசாஸ்திரம்‌, இந்த குணங்கள்‌, தகுதிகள்‌, ஒருவனிடம்இருக்கிறதா என்பதைக்கண்டறிய யார்யாரிடம்விசாரிக்க வேண்டும்என்பதையும்கூறுகிறது

இன்று, ஒரு அமைச்சரை நியமனம்செய்வதில்‌ – இதில்பத்தில்ஒரு பங்கு அக்கறையைக்கூட நம்மால்காண முடிவதில்லை. ஒரு அமைச்சருக்கு வேண்டிய தகுதிகள்பற்றி அர்த்தசாஸ்திரம்கூறுவது, இன்றும்அர்த்தமுள்ளதே. இதோடு மட்டுமல்லாமல்‌, தன்னால்நியமிக்கப்பட்ட மந்திரிகளை, அரசன்பரீட்சித்துப்பார்க்க வேண்டும்என்று கூறி, அதற்கான வழிமுறைகளையும்கூட கெளடில்யர்விவரித்திருக்கிறார்‌. 

இதில்நமது விசேஷ கவனத்திற்குரிய ஒரு விஷயம்என்ன வென்றால்‌ – கெளடில்யருக்கும்முன்பாகவே பல சிந்தனை யாளர்கள்‌, அமைச்சர்கள்நியமனம்பற்றி சிந்தித்து, சில வழிமுறை களைக்கூறியிருப்பதுதான்‌. அவர்கள்யார்யார்என்பது கூட இன்றைய ஆராய்ச்சியாளர்களுக்கு விளங்கவில்லை

அப்படி எப்போதோ வாழ்ந்து, அரசியல்பற்றியும்‌, ஆட்சி முறை பற்றியும்சிந்தனைகளை வெளியிட்டுள்ளவர்களின்பெயர்கள்‌, 2300 ஆண்டுகளுக்கு முன்இயற்றப்பட்ட அர்த்தசாஸ்திரத்தில்காணப்படு கிறது என்றால்‌ – இந்நாட்டில்நிர்வாக சாத்திரம்எப்போது தோன்றியது என்று யார்சொல்வது!