உளவாளிகள் பலவிதம்!

உளவுப்பணிபுரிய தகுதியானவர்கள்யார்யார்என்பதையும்‌, அவர்களில்யாரை எந்தவிதமான உளவு வேலையில்அமர்த்துவது என்பது பற்றியும்அர்த்தசாஸ்திரம்விவரமாகப்பேசுகிறது. இதில்ஒரு பகுதி மிகவும்சுவாரஸ்யமானது

சடைமுடி தரித்துக்கொண்டோ, தலையை மொட்டை அடித்துக்கொண்டோ, ஸன்யாஸி போல்காணப்பட்டாலும்‌, வாழும்வழியை நாடி அலைபவன்‌ ‘தோற்ற ஸன்யாஸி‘ ” – என்று கூறி, இப்படிப்பட்டவர்கள்உளவு வேலைக்கு பொருத்தமான வர்கள்என்கிறார்கெளடில்யர்‌. 

அவர்களைப்பயன்படுத்துகிற வழிமுறையும்விவரிக்கப்படு இறது. ”தன்னைப்போலவே சடைமுடி தரித்து, அல்லது தலையை மழித்துக்காணப்படுகிற சீடர்கள்பலரை சேர்த்துக்கொண்டு, அந்த போலி ஸன்யாஸி, நகரத்திற்கு அருகில்ஓரிடத்தில்வாழ வேண்டும்‌. மாதத்திற்கு ஒருமுறை, கொஞ்சம்காய்கறியை சாப்பிட்டு, அதுவே தனது உணவு என்று அவன்காட்டிக்கொள்ள வேண்டும்‌. வெளிப்படையாக இப்படி நடந்து கொண்டு, தனிமையில்அவன்தினந்தோறும்தாராளமாக உணவு உட்கொள்ளலாம்‌. 

இந்த புண்ய 8லர்‌, எல்லோருக்கும்சிறப்புகளை அளிக்க வல்லவர்‌’ என்ற பேச்சை, சீடர்கள்மூலமாக அவன்பரப்ப வேண்டும்‌. தன்னை நாடி வருபவர்களின்குடும்பங்களில்நடக்கிற நிகழ்ச்சிகள்‌, விபத்துக்கள்‌, திருட்டு போன்ற சம்பவங்கள்‌, லாபநஷ்டங்கள்‌, போன்றவற்றை அவன்விவரிக்க வேண்டும்‌. சீடர்கள்தருகிற தகவல்கள்மூலம்‌, இந்த விவரங்களை முன்கூட்டியே அவன்தெரிந்து வைத்திருக்க வேண்டும்‌. ‘நாளைய தினம்அரசு இதைச்செய்யும்‌. அரசன்இப்படி செயல்படுவான்‌! என்ற மாதிரி செய்திகளை, இந்த போலி ஸன்யாஸி தன்னை நாடி வருபவர்களிடம்சொல்ல வேண்டும்‌; இதற்கு அரசனும்‌, அமைச்சர்களும்அவனுடன்ஒத்துழைக்க வேண்டும்‌. இவ்வளவு நடக்கிறபோது, இந்த போலி ஸன்யாஸிகள்மூலமாக, தன்னுடைய அதிகாரிகளைப்பற்றிய உண்மைகளைக்கூட அரசன்அறிந்து கொள்ள முடியும்‌. ஆகையால்‌, இவர்களை அரசன்போஷிக்க வேண்டும்‌.” 

இப்போதும்கூட, சில சமயங்களில்மதத்தலைவர்கள்‌, இப்படியெல்லாம்ஆட்சியாளர்களுக்குப்பயன்படுவதாக சில வதந்திகள்அவ்வப்போது பரவத்தான்செய்கின்றன. மனிதர்களின்பலவீனத்தைப்பயன்படுத்தி, உளவு வேலை செய்ய, கெளடில்யர்போலி ஸன்யாஸிகளைப்பற்றி கூறியிருப்பதுஅன்றே கூட, இந்த ஸன்யாஸ நிலை, சில நேரங்களில்துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டு விட்டது என்பதையும்நமக்கு உணர்த்துகிறது

தனது நாட்டிலேயே உளவுத்துறையைப்பயன்படுத்தி, தனக்கு எதிராகத்இரும்பக்கூடியவர்களை முன்கூட்டியே அரசன்அடை யாளம்கண்டு கொள்ள வேண்டும்என்று வலியுறுத்துகிற கெளடில்யர்‌, அயல்நாடுகளில்‌, உளவாளிகளை எப்படிப்பயன்படுத்த வேண்டும்என்பதையும்விவரிக்கிறார்‌.  ”அரசனால்உறுதியளிக்கப்பட்ட நன்மை, பின்னர்கிட்டாமற்போனதால் கோபமுற்றவன்‌;

அரசனால்அவமஇக்கப்பட்டவன்‌; அரசனுக்கு வேண்டியவனால்அவமதக்கப்பட்டவன்‌; அரச னால்போட்டியில்ஈடுபடுத்தப்பட்டு அதில்தோல்வியைத்தழுவியவன்‌; தன்பணத்தை செலவு செய்தும்கூட அதற்குரிய பலனை அடையாதவன்‌; பதவி பறி போனவன்‌; சிறையில் வைக்கப்பட்டவன்‌; சொத்து பறிமுதல்செய்யப்பட்டவன்‌; தனது உறவினர்கள்பாதிக்கப்பட்டதைக்கண்டவன்‌… ஆகியோர்‌, குரோதமுடையவர்கள்‌.  ‘

பெரிய தவறைச்செய்தவன்‌; தான்செய்த தவறையே செய்த மற்றொருவனுக்கு, கிடைத்த தண்டனையைப்பார்த்து கவலை கொண்டுள்ளவன்‌; அரசுத்துறையில்பணிபுரிந்து கொண்டு, தவறான வழியில்பெரும்செல்வத்தை சேர்த்துக்கொண்டு விட்டவன்‌; நாட்டின்அரசனால்‌. வெறுக்கப்பட்டவன்‌… ஆகியோர்அச்சம்உடையவர்கள்‌… 

பெரும்பணத்தை அடைய விரும்புகிறவன்‌; தீய பழக்கங்களில்நாட்டம்கொண்டவன்‌; பெரும்இழப்புக்களை சந்இத்திருப்பவன்‌. ஆகியோர்பேராசை உடையவர்கள்‌… 

தனக்கு வேண்டாதவன்‌, அரசனிடம்பெற்ற பெருமையைப்பார்த்து பொறாமை கொண்டவன்‌; தன்னைப்பற்றி மிகப்பெரிதாக எண்ணிக்கொண்டிருப்பவன்‌; கனது சம்பாத்தியத்தில்இருப்தி யுறாமல்‌, தனக்கு மேலும்கிடைக்க அருகதை உண்டு என்று நினைப்பவன்‌… ஆகியோர்கர்வம்உடையவர்கள்‌…

 ‘ எதிரியின்நாட்டில்உள்ள இப்படிப்பட்டவர்களை அடை யாளம்கண்டு, தனது உளவாளிகள்மூலம்அவர்களை. அந்நாட்டு அரசனுக்கு எதிராகச்செயல்பட தூண்டிவிட வேண்டும்‌. அவர்களுடன்நயம்பட பேசியும்‌, பொருள்கொடுத்தும்‌, அந்நாட்டு அரசனுக்கு எதிரான பணிகளில்அவர்களைப்பயன்படுத்த வேண்டும்‌. 

எதிரி நாட்டில்இப்படி அரசனுக்கு எதிராக காரியங்களைச்செய்ய சிலரைத்தூண்டுவதோடு, அங்கே கலகத்தையும்விளைவிக்க வேண்டும்என்று அரசனுக்கு அறிவுறுத்துகிறது அர்த்தசாஸ்திரம்‌. இந்த மாதிரி எல்லாம்கூறுவதால்தான்இது ஒரு கொடுமையான ராஜநீதி நூல்என்ற பெயர்வந்துவிட்டது. ஆனால்நாம்ஒரு விஷ யத்தை மறக்கக்கூடாது. ஒரு ஆட்சியை நடத்திச்செல்வது என்பதும்‌, ஒரு நாட்டை ஆள்வது என்பதும்‌, சமரச சன்மார்க்க சமாச்சாரங்கள்அல்ல. கடுமையைக்காட்ட வேண்டிய நேரத்இல்‌, மென்மையைக்காட்டுகிற ஆட்சி நிலைக்காது. பல தரப்பட்ட மனிதர்களைக்கொண்ட நாட்டை வழிநடத்திச்செல்ல வேண்டிய அரசன்‌, பல வழிமுறைகளைக்கையாளத்தான்வேண்டியிருக்கும்‌. இதை உணர்ந்ததால்தான்‌, ஹிந்து தர்மங்கள்ராஜநீதியை, ஒரு தனி சாத்திரமாக அமைத்தன. சாதாரண மனிதன்பொய்சொல்லக்கூடாது என்கிறது சாஸ்திரம்‌; தனது நாட்டைக்காப்பாற்றவோ, யுத்தத்தில்வெற்றி கொள்ளவோ அரசன்பொய்சொல்லலாம்என்று கூறுகிறது ராஜநீதி. சாதாரண மனிதன்கொலை செய்தால்‌ – அது பாவம்என்று சொல்கிறது சாஸ்திரம்‌; தவறு செய்பவர்களை தண்டிக்க வும்‌, யுத்தத்தில்வெற்றி பெறவும்அவர்கள்கொலைகளைச்செய்ய வேண்டும்என்கிறது ராஜநீதி. செல்வத்தைத்தேடி அலைவது பேராசை என்கிறது சாஸ்திரம்‌; நாட்டின்அரசனால்மேலும்‌, மேலும்செல்வம்குவிக்கப்பட வேண்டும்என்கிறது ராஜநீதி

ஆக, நாட்டு நிர்வாகத்தில்‌, தனி மனித நியாயங்களுக்கு அப்பாற்பட்ட செயல்கள்நடக்கத்தான்செய்யும்என்பதை அந்த காலத்து சிந்தனையாளர்கள்ஏற்றார்கள்‌. கெளடில்யரின்அர்த்த சாஸ்திரம்‌, இதை மிகவும்விவரமாக எடுத்துச்சொல்கிறதுஅவ்வளவுதான்‌. இதை வைத்துக்கொண்டு இது கடுமையான வழி முறைகளைக்காட்டுகிற நூல்என்று கருதிவிட முடியாது. இது நடைமுறை சாத்திரம்‌; மோட்ச மார்க்க விளக்கம்அல்ல

அமைச்சர்களை அரசனின்கண்களாக வர்ணிக்கிறது அர்த்தசாஸ்இரம்‌. சில அரசு காரியங்கள்வெளிப்படையாகச்செயல்படுத்தப்படுவதற்கு முன்னால்‌, ரகசியத்தில்தீர்மானிக்கப்பட வேண்டும்என்று கூறி, இதன்காரணமாக, அமைச்சரவைக்கூட்டங்கள்மிகப்பெரிதாக இருந்துவிடக்கூடாது என்று சொல்கிற பழமையான நூல்களை கெளடில்யர்குறிப்பிடுகிறார்‌. தேவைக்குத்தகுந்த எண்ணிக்கை உடைய அமைச்சர்கூட்டத்தில்‌, இம்மாதிரி விஷயங்கள்ஆலோ சிக்கப்பட வேண்டும்என்ற தனது முடிவையும்அவர்எடுத்துரைக்கிறார்‌. 

இது தொடர்பாக அர்த்தசாஸ்திரம்தருகிற ஒரு விளக்கம்‌, வேறு எந்த நூலிலாவது இருக்கிறதா என்பது தெரியவில்லை. இந்திர னுக்கு ஆயிரம்கண்கள்என்று சொல்லி அதற்கு பல காரணங்களைப்புராணங்கள்கூறுகின்றன. கெளடில்யர்சொல்வது வித்தியாச மானது : ”ஆயிரம்முனிவர்களைக்கொண்டு, தனது அமைச்சரவை ஆலோசனைகளை நடத்தினான்இந்திரன்‌; அதுதான்அவ னுடைய கண்கள்‌. இதனால்தான்இரண்டு கண்களே உடைய வனாகய இந்திரன்‌, ‘ஆயிரம்கண்ணுடையோன்‌’ என்று வர்ணிக்கப்படுகிறான்‌” என்று குறிப்பிடுகிறார்கெளடில்யர்‌. 

இந்த விஷயம்ஒருபுறமிருக்க, எத்தனை பேருடன்கலந்தாலோசிப்பது என்பதை அரசன்‌, அவ்வப்போது ஏற்படுகிற தேவைகளுக்கேற்ப முடிவு செய்து கொள்ள வேண்டும்‌ – என்பது கெளடில்யரின்அறிவுரை.