விதவா விவாஹம், விவாகரத்து – அன்றே இருந்தன!

ஒவ்வொரு வழக்கிற்கும்நான்கு பாதங்கள்உள்ளன. சட்டம்‌; நடந்த நிகழ்ச்சி; வழக்கத்தில்வந்துவிட்ட வழிமுறை; மற்றும்அரசனின்உத்திரவு” – என்ற அந்த நான்கு பாதங்களில்‌, முதலில்வருவதை விட அடுத்து வருவதற்கு வலு அதிகம்‌. 

இவற்றில்சட்டம்‌ – உண்மையை ஆதாரமாகக்கொண்டது; நிகழ்ச்சியோ, சாட்சியங்களை நம்பி தீர்மானிக்கப்படுவது; வழக்கு முறை, மனித சமுதாயத்தின்கருத்தையொட்டியது; அரசனின்உத்திரவோ அதிகாரத்தில்பிறப்பது… 

சட்டத்தின்படி செயல்பட்டு பிரஜைகளைப்பாதுகாக்கும்அரசன்‌, தனது கடமையைச்செய்வதால்‌, ஸ்வர்க்கக்தை அடை வான்‌; மக்களை பாதுகாக்காமல்‌, நியாயமற்ற தண்டனைகளை வழங்குகிற மன்னன்‌, இதற்கு நேர்மாறான நிலையை எய்துவான்‌… 

குற்றத்தின்தன்மையைப்பொறுத்து தனது மகனுக்கும்‌, தனது பகைவனுக்கும்ஒரே நியாயத்தை வழங்குகிற மன்னனால்இந்த பூமி பாதுகாக்கப்பட்டதாகிறது; அப்படிப்பட்ட மன்னன்பூமி யின்நான்கு இசைகளிலும்வெற்றிக்கொடி நாட்டுவான்‌…. 

சட்டத்தில்முரண்பாடுகள்தெரிகிறபோது, அரசனின்உத்திரவு மேன்மை பெறுகிறது.

இவ்வாறு சட்டத்தின்தன்மை பற்றியும்‌, நீதி பரிபாலனம்பற்றியும்பொதுவான விளக்கங்களை அளிக்கிற அர்த்தசாஸ்திரம்‌, வழக்குகள்நடத்தப்பட வேண்டிய முறையை விரிவாக எடுத்துச்சொல்கிறது

மந்திரிகளுக்குச்சமமான அந்தஸ்தைப்பெற்றுள்ள மூன்று நீதிபதிகள்ஒரு வழக்கை விசாரிக்க வேண்டும்‌… வருடம்‌, பருவம்‌, மாதம்‌, தினம்‌, இடம்‌, நடந்த நிகழ்ச்சி, வாதி மற்றும்பிரதிவாதியின்பெயர்குடும்பம்‌, ஜாதி, தொழில்ஆகிய விவரங்களை நீதிமன்றத்தின்ஊழியர்எழுத்தில்வடிக்க வேண்டும்‌; பின்னர்வாதி, பிரதிவாதி ஆகயோர்களிடம்கேட்கப்பட்ட கேள்விகள்மற்றும்விடைகளை எழுத வேண்டும்‌. 

தனது பிராதுக்கு பதில்அளித்துள்ள பிரதிவாதியின்வாதத்திற்கு, முறையாக அதே இனத்தில்பதில்கூறாத வாதியின்வழக்கு தள்ளுபடியாகும்‌. ஏனென்றால்‌, வழக்கைத்தொடுத்தவன்வாதி; என்ன செய்யப்பட வேண்டும்என்பதை அறிந்தவனாக முன்வருபவன்அவனே; ஆகையால்அவன்அன்றைய தினமே பதில்தர வேண்டும்‌. பிரதிவாதி தனது பதில்வாதத்தைக்கூறுவதற்கு மூன்று நாட்கள்அவகாசம்தரப்படலாம்‌. இதில்தாமதம்நிகழ்ந்தால்‌, அவனுக்கு அபராதம்விதிக்கப்பட வேண்டும்‌. தலைமறைவாகும்பிரதிவாதிக்கு அபராதம்விதிக்கப்படும்‌; தலைமறைவாகிற வாதியின்வழக்கு தள்ளுபடியாகும்‌…’ 

இவை மட்டுமல்லாது, சாட்சிகளின்விசாரணையிலிருந்து, முரண்பாடுகள்தோன்றும்போது காட்டப்பட வேண்டிய அணுகு முறை, வழக்கு விசாரணையின்விதிமுறைகள்ஆகியவை விரிவாக எடுத்துச்சொல்லப்படுகின்றன

திரைப்படங்களிலும்‌, சரித்திரக்கதைகளிலும்கதாநாயகன்அரச சபையில்பொரிந்து தள்ளுவதையும்‌, அரசன்திடீரென ஒரு முடிவிற்கு வருவதையும்பார்த்து விட்டு, நமது நாட்டில்இருந்து வந்த நீதிபரிபாலன முறை பற்றி நாம்ஒரு தவறான முடிவிற்கு வந்திருப்போம்‌. எல்லாமே ஒருகட்ட பஞ்சாயத்து முறைமாதிரி நமக்குக்காட்சி அளித்திருக்கலாம்‌. ஆனால்அர்த்தசாஸ்திரத்தில்விவரிக்கப்பட்டுள்ள விதிமுறைகளையும்‌, வழிமுறைகளையும்பார்த்தால்‌ – அப்போதே நம்நாட்டில்நீதிபரிபாலனம்மிக வும்முதிர்ச்சி அடைந்து, பெரும்பொறுப்புணர்வுடன்நடத்தச்செல்லப்பட்டிருக்கிறது என்பது புரியும்‌. 

இதில்மட்டுமல்ல, திருமணங்கள்தொடர்பான விஷயங்களில்கூட, ‘இன்றைய வளர்ச்சிஎன்று நாம்நினைக்கக்கூடிய பல வழிமுறைகள்அன்றே இங்கு அறிமுகமாகி உள்ளன. உதாரணத்இற்கு ஒரு சில விஷயங்களைப்பார்ப்போம்‌. 

விதவைகள்மறுமணம்செய்து கொள்வது இன்று ஒரு பெரிய விஷயமல்ல. ஆனால்‌, இந்நாட்டில்‌, கணவனை இழந்த பெண்மணிகள்‌, வாழ்நாள்முழுவதும்எந்த உரிவமையும்இல்லாமல்மிகவும்பரிதாபமான நிலைக்குத்தள்ளப்பட்டிருந்ததாகத்தான்நாம்நம்புகிறோம்‌. 

ஆனால்அர்த்தசாஸ்திரமோ, விதவைகள்மறுவிவாகம்பற்றி பேசுகிறது. ‘கணவனை இழந்த பெண்மணி, பக்இி மார்க்கத்தில்தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வாழ நினைத்தால்‌ – திருமணத்இன்போது, அவளுக்கு அளிக்கப்பட்ட செல்வமும்‌, நகைகளும்‌, அவளையே சாரும்‌. இவற்றைப்பெற்றுக்கொண்ட பிறகு, அந்தப்பெண்மீண்டும்திருமணம்செய்து கொண்டால்‌, இவற்றை அவள்வட்டியுடன்இருப்பிக்கொடுக்க வேண்டும்‌. ஆனால்‌, விதவை யானவுடன்‌, அவள்ஒரு குடும்பச்தலைவியாகவே வாழ விரும்பி னால்‌, தன்னுடைய (இறந்துவிட்ட) கணவன்மற்றும்அவனுடைய தகப்பனார்ஆகியோரால்தரப்பட்ட செல்வம்அவளையே சாரும்‌. அதே சமயத்தில்‌, அவள்தன்னுடைய மாமனாரின்விருப்பத்திற்கு மாறாக மறுமணம்செய்து கொண்டால்‌, அப்போது முதல்கணவன்மற்றும்மாமனார்அளித்த நிதி அவளைச்சாராது

மகன்களைப்பெற்ற ஒரு பெண்விதவையான பிறகு, மறு விவாகம்செய்து கொண்டால்‌, அவளுடைய கணவன்அளித்திருந்த செல்வம்அவளைச்சாராது; ஆனால்அது அவளுடைய மகன்களுக்குப்போய்ச்சேரும்‌’.  இந்த வழிமுறைகளிலிருந்து, ‘விதவா விவாஹம்‌’ அப்போதேவழக்கில்இருந்தது என்பது தெளிவாகும்‌. இல்லாத ஒரு நிலையை கெளடில்யர்கற்பனை செய்து பேசவில்லை. இருக்கிற வழி முறையை ஒழுங்குபடுத்தவும்‌, சொத்துரிமை பற்றி தெளிவு ஏற்படவும்‌, அவர்விதிமுறைகளைக்கூறியுள்ளார்‌. 

ஆக, விதவா விவாஹம்என்பது கூட, மேலைநாட்டவர்நமக்களித்த புரட்சிக்கருத்து அல்ல. இங்கேயே அந்த சிந்தனை, இரண்டாயிரம்ஆண்டுகளுக்கும்முன்பாகவே இருந்திருக்கிறது

இதே போல, ஒரு மனிதன்தன்இஷ்டம்போல, பல பெண்களை மணக்கலாம்என்ற நிலை இங்கே இருந்தது என்ற எண்ணம்இப்போது நம்மிடையே இருக்கிறது. ஆனால்அர்த்தசாஸ்திரம்வகுத்துள்ள விதிமுறைகளைப்பார்த்தால்‌, இது ஒன்றும்அவ்வளவு சர்வ சாதாரணமான விஷயமாக அப்போதும்இருக்கவில்லை என்றே தெரிய வருகிறது. இது தொடர்பாக அர்த்தசாஸ்திரம்கூறு வதைப்பார்ப்போம்‌: 

திருமணம்நடந்து, எட்டு ஆண்டுகள்கழிந்த பின்னரும்தன்னுடைய மனைவிக்கு குழந்தைகளே பிறக்கவில்லை என்றாலோஅல்லது திருமணம்நடந்து பன்னிரண்டு ஆண்டுகள்கழிந்த பின்னரும்தன்மனைவிக்கு ஒரு மகன்பிறக்கவில்லை என்றாலோஒரு மகனைப்பெறுவதற்காக அந்தக்கணவன்‌, இரண்டாவது இருமணம்செய்து கொள்ளலாம்‌, இந்த விதிமுறையை மீறுகறவன்‌ –இருமணத்தின்போது முதல்மனைவி மூலம்கிட்டிய சொத்து மற்றும்செல்வங்களையும்‌; அந்த சொத்து மதிப்பில்சரி பாதி அளவிற்கு நஷ்டஈடுத்தொகையும்‌; அபராதத்தொகையும்சேர்த்து அவளுக்குச்செலுத்த வேண்டும்‌’. 

அதாவது, திருமணமான ஒருவன்‌, இரண்டாவது மனைவியை அடைவது என்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்க வில்லை. ‘சரி, ஏதோ சில வழிகளில்‌, ஆண்களுக்கு அந்த உரிமை இருந்ததே? ஆனால்பெண்களுக்கு அந்த உரிமையே இல்லையே?! என்றும்கேட்க முடியாது. அதற்கும்வழிமுறைகளும்‌, விதிமுறை களும்அர்த்தசாஸ்இிரத்தில்கூறப்பட்டுள்ளன

இழிவான செயலை செய்துவிட்டஅல்லது அரசனுக்கு எதிராகக்குற்றம்புரிந்து விட்டஅல்லது ஏதோ ஒரு அயல்நாடு சென்று, இரும்பி வராதஅல்லது தனது உயிருக்கு ஆபத்து விளைவிக்கிறஅல்லது தாம்பத்திய உறவுக்கு அருகதையற்ற நிலையில்உள்ளகணவனை ஒரு பெண்கைவிடலாம்‌’. 

கல்லானாலும்கணவன்‌; புல்லானாலும்புருஷன்‌ – என்ற லட்சியம்பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது உண்மையே; ஆனால்அந்த லட்சிய நிலையிலிருந்து சில விதிவிலக்குகளுக்கும்இடம்அளிக்கப்பட வேண்டும்என்ற சிந்தனையும்‌, அக்காலத்தில்இருந்திருக்க வேண்டும்‌. இல்லாவிடில்மேற்சொன்னது போன்ற விதி முறைகளுக்கு இடமே இருந்திருக்காது

இந்த மாதிரி சிந்தனையையொட்டியே, ‘விவாகரத்து க்கும்இடம்அளிக்கப்பட்டிருக்கிறது. சில வகையான இருமணங்கள்விஷயத்தில்விவாகரத்துக்கு இடமில்லை என்றும்அர்த்தசாஸ்இரம்கூறுகிறது. பெண்ணைப்பெற பணம்கொடுக்காமல்‌ (பெண்வீட்டார்தரும்வரதட்சணை பற்றிய பேச்சே பழமையான நூல்களில்இல்லை), பெரியோர்களால்நிச்சயிக்கப்பட்டு, தர்மத்தை காப்பதற்காக நடத்தப்படுகிற திருமணங்களில்இந்த வழி இருக்கவில்லை

அர்த்தசாஸ்இரத்தின்மொழி பெயர்ப்புகளில்‌, இதுவிவாகரத்துடைவோர்ஸ்‌” என்று குறிப்பிடப்பட்டாலும்‌, அந்த நூலில்பயன்படுத்தப்படுகிற சொல்‌ ‘மோட்சம்‌’ என்பதேஅதாவதுவிடு தலை‘. நடந்த இருமணத்தலிருந்து விடுதலை என்பதால்‌, அது விவாகரத்து என்றே மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. பிறப்பு, இறப்பு என்ற சக்கரத்திலிருந்து பெறுகிற விடுதலை, ‘மோட்சம்‌’ என்று ஆன்மிக ரீதியில்குறிப்பிடப்படுகிறது. இருமணத்திலிருந்து பெறப்படுகிற விடுதலையையும்கெளடில்யர்மோட்சம்என்றே குறிப்பிடுகிறார்‌. 

ஆனால்ஒன்று. கணவன்‌, மனைவி இருவரும்சேர்ந்து விடு தலையை விரும்புகிறபோதுதான்இதுசாத்யமாகறது. இப்போதும்கூடடைவோர்ஸ்பை கன்ஸன்ட்‌’ எளிதானதல்ல. ஆனால்அப்போது அதற்கு வழி இருந்திருக்கிறது.

அமோக்ஷ்யா பர்துரகாமஸ்ய 

த்விஷதி பார்யா, பார்யாஸ்ச பர்த்தா

பரஸ்பரம்த்வேஷான்மோக்ஷ

கணவன்மீது விருப்பம்அகன்றுவிட்ட பெண்கேட்பதாலோ, அதே போல கணவன்கேட்பதாலோவிடுதலை கட்டாது; இருவருமே பரஸ்பரம்வெறுப்புற்று, நாடுகிறபோது தான்விடுதலை உண்டு‘., 

இவ்வாறு, விவாகரத்து, மறுமணம்‌, விதவா விவாஹம்என்ற பல சிந்தனைகள்அன்றே தோன்றியிருக்கின்னன. இவை எல்லாம்‌, நல்லதா அல்லவா என்பது பற்றி பலவித கருத்துகளுக்கு இட முண்டு. ஆனால்‌, அன்று கட்டி போடப்பட்ட பெண்‌, இன்று மேலைநாட்டு சிந்தனைகள்காரணமாக, விடுதவை பெற்றாள்‌ – என்ற எண்ணம்தவறானது

அர்த்தசாஸ்திரம்பற்றி மேலும்கொஞ்சம்பார்ப்போம்‌.