ஏவல், சூன்யமும் பேசப்படுகிறது!

அரசு நிர்வாகம்பற்றி அர்த்தசாஸ்திரம்கூறுகிற பல விஷயங்களில்சிலவற்றை ஏற்கெனவே பார்த்தோம்‌. மற்ற தர்ம சாஸ்திரங்கள்போலவே, அர்த்தசாஸ்திரமும்அரசனை மிக உயர்ந்த இடத்தில்வைக்கிறது: ‘ஒருவனை நெருப்பு நண்டினால்‌, அவ னுடைய உடலின்ஒரு பகுதியோ, அல்லது உடலே கூடவோ பொசுங்கி விடும்‌; ஆனால்அரசனை விரோதித்துக்கொள்பவன்‌, மனைவி மக்களோடு சேர்ந்து அழிவான்‌; அரசன்நினைத்தால்ஒருவனை நன்றாக வாழவும்வைக்கலாம்‌ ‘. 

அறிவு பூர்வமான தகுதிகள்‌; சக்தி பூர்வமான தகுதிகள்‌; தன்னுடைய தன்மை ரீதியிலான தகுதிகள்‌ – ஆகிய மூன்றுமே ஒரு அரசனுக்குத்தேவை. அறிந்து கொள்ளும்ஆர்வம்‌; அறிந்ததை மனதில்நிறுத்திக்கொள்ளும்ஆற்றல்‌; கேட்பதை நன்றாகப்புரிந்து கொள்ளுதல்‌; கேட்டதில்எதை நிராகரிப்பது, எதை ஏற்பது என்று ஆலோசித்து தீர்மானிக்கிற திறன்‌… ஆகியவை அறிவுபூர்வமான தகுதிகள்‌. 

தைரியம்‌, உடனடியாகச்செயல்படுகிற தன்மை; சாமர்த்திய மாகச்செயல்படுகிற திறன்‌; உக்ரம்ஆகியவை சக்தி பூர்வமான தகுஇகள்‌. 

ஞாபகத்திறன்‌; தீய பழக்கங்கள்இல்லாமை; கலைகளில்தேர்ச்சி; இயதைச்செய்ய வெட்கப்படுகிற குணம்‌; சாதாரண காலத்திலும்‌, நெருக்கடி நேரத்திலும்‌ 9ராகச்செயல்படுகிற மனோபாவம்‌; உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல்இருக்கிற குணம்‌; கோபம்‌, பேராசை, நிச்சயமின்மை, அவதூறு பேசுவது போன்றவற்றைத்தவிர்த்து விட்டிருக்கிற மனம்‌; நேர்கொண்ட பார்வை; சிரித்த முகத்துடனும்‌, கெளரவத்தை விட்டுக்கொடுக்கா மலும்பேசுவது; பெரியோர்வார்த்தைகளை மதிப்பது ஆகியவை, தன்னுடைய தன்மை ரீதியான தகுதிகள்‌.

இவை அனைத்துமே ஒரு அரசனிடம்இருக்க வேண்டும்என்று வலியுறுத்துகிறார்கெளடில்யர்‌. எப்போது ஒரு நாட்டுடன்யுத்தம்செய்வது, எப்போது யுத்தத்தைழ்தவிர்ப்பது என்பவை பற்றி யெல்லாம்இந்த நூல்மிக விரிவாகப்பேசுகிறது. ‘எதிரியுடன்ஒப்பிட்டுப்பார்க்கும்போது, பலவீனமான நிலை இருந்தால்‌ – சமாதானத்தை நாட வேண்டும்‌; எதிரியை விட பலம்மிகுந்து இருந்தால்‌, யுத்தத்தை நாட வேண்டும்‌. எதிரியினாலும்நம்மை ஒன்றும்செய்ய முடியாதுநம்மாலும்எதிரியை ஒன்றும்செய்துவிட முடியாது என்ற நிலை இருந்தால்‌, பேசாமல்இருந்து விட வேண்டும்‌’ என்று சொல்கிற கெளடில்யர்‌, மேலும்இவ்வாறு கூறுகிறார்‌ :

தனக்கு சமமான பலம்உடைய, அல்லது தன்னை விட பலம்கூடிய எதிரியுடன்சமாதானம்செய்து கொள்ள வேண்டும்‌; தன்னை விட பலவீனமான எதிரியுடன்யுத்தம்செய்ய வேண்டும்‌; ஏனென்றால்தன்னை விட பலத்தில்மிஞ்சிய அரசனுடன்யுத்தம்செய்வது தனியாய்நின்று கொண்டு யானையுடன்போரிடுவது போல: சம பலம்உள்ள அரசனுடன்யுத்தம்செய்வது :- அரைகுறையாகச்சுடப்பட்ட இரண்டு மண்பாண்டங்கள்மோதிக்கொள்வது போலஅது இரு தரப்புக்குமே நாசம்‌; ஆனால்பல வீனமானவனோடு யுத்தம்செய்தால்‌, அதுமண்பாண்டத்தை பாறாங்கல்லினால்நொறுக்குவது போல ‘.

பலம்மிக்க அரசன்சமாதானத்தை விரும்பவில்லை என்றால்‌ – அவனிடம்விட்டுக்கொடுக்க வேண்டும்‌. சம பலம்உள்ளவன்சமாதானத்தை விரும்பவில்லை என்றால்‌ – அவனுக்கு ஏதாவது ஒரு கெடுதலைச்செய்ய வேண்டும்‌; –அந்த சூடு அவனைச்சமாதானத்தை நாடச்செய்யும்‌; சூட்டிற்கு இணைக்நி சக்தி உண்டு; சூட்டினால்காய்ச்சப்படாத உலோகம்‌, இன்னொரு உலோ கத்துடன்சேராது; அது போலவே இதுவும்‌. 

அயல்நாட்டு உறவைப்பொறுத்தவரையில்‌ – அதாவது வேறு ஒரு அரசனோடு காட்ட வேண்டிய அணுகுமுறைகள்பற்றி பேசுகிற போது, அர்த்தசாஸ்திரம்வகுத்துள்ள வழிமுறைகள்முற்றிலும்காரியார்த்தமானவை. அயல்நாட்டு அரசனுடன்கொள்கிற உறவு முறையில்‌, ‘தனக்கு எது நல்லதுஎன்பதையே ஒரு அரசன்கவனிக்க வேண்டும்‌. இதுதான்இப்போதுஎன்லைட்டன்ட்ஸெல்ஃப்இன்ட்ரஸ்ட்‌! – அதாவதுவிவரமறிந்த சுயநலம்‌’ என்று கூறப்படுகிறது. அயல்நாட்டு உறவில்இன்றும்கூட, இது ஒரு அடிப்படை தேவை. இந்த அணுகுமுறையைத்தான்யுத்தம்‌, சமாதானம்போன்ற விஷயங்களில்கெளடில்யர்வலியுறுத்துகிறார்‌. அயல்நாடுகளுடன்செய்து கொள்ளப்படுகிற ஒப்பந்தங்கள்பற்றி பேசுகிற அர்த்தசாஸ்திரம்‌, ஒப்பந்தங்களை மீறுவதற்கான வழி முறைகளையும்சொல்கிறது. ஒப்பந்தங்களை மீறுவது என்பது கூட, ஒரு அரசன்அவசியம்கையாள வேண்டிய வழிமுறையாகச்சில நேரங்களில்ஆகிவிடும்என்பதை உணர்ந்து, அதற்கான கால நேரங்களை இந்த நூல்வர்ணிக்கிறது

அது மட்டுமல்லாமல்‌, எதிரி நாட்டில்உளவாளிகள்மூலமாக, கலகங்களைத்தோற்றுவிப்பதும்‌, மக்களிடையே பரஸ்பர விரோதங்களை வளர்ப்பதும்கூட ஒரு அரசனுக்கு சில சமயங்களில்தேவைப்படக்கூடிய அணுகுமுறையாக அர்த்தசாஸ்திரத்தில்ஏற்கப்பட்டிருக்கிறது. இதற்காக எதிரி நாட்டிற்குள்எந்த வகையான உளவாளிகள்அனுப்பப்பட வேண்டும்‌; அங்கே அவர்கள்எந்த மாதிரியான மனிதர்களை அணுக வேண்டும்‌; எந்த எந்த வகை மனிதர்கள்எந்தெந்த வகையில்பயன்தருவார்கள்‌… என்பதெல்லாம்பல கோணங்களிலிருந்து அணுகப்பட்டு மிக விரிவாகச்சொல்லப்பட்டிருக்கின்றன

நட்பு நாட்டு அரசர்களிடம்எப்படி நடந்து கொள்ள வேண்டும்என்பதையும்கெளடில்யர்விவாதிக்கிறார்‌. இது பற்றி முந்தைய சில நூல்கள்கூறியதை ஏற்க மறுத்து, அதற்கான காரணங்களை யும்அவர்கூறுகிறார்‌ : ”பரஸ்பர பிரச்னைகள்நட்பை உறுதி செய்ய உதவும்‌. நட்பு அரசர்களில்இரு வகை உண்டு; நமது கட்டுப்பாட்டுக்குள்வந்து விடாத, ஆனால்உறுதியாக நட்பு பாராட்டுகிற அரசன்ஒரு வகை; நமது கட்டுப்பாட்டுக்குள்வந்தும்கூட, அவ்வப்போது உறுதி குலைகிற அரசன்ஒரு வகை; முந்தைய நூலாசிரியர்கள்‌ ‘கட்டுப்பாட்டுக்குள்வராவிட்டாலும்‌, உறுதி காட்டுகிற அரசன்மேல்‌! என்று கூறுகின்றனர்‌; கெளடில்யன்இதை மறுக்கிறான்‌; உறுதி நழுவினாலும்கூட, கட்டுப்பாட்டுக்குள்வந்து விட்ட அரசனே மேல்‌; பயன்படுகிற வரையில்தான்ஒரு அரசன்நட்பு அரசனாகிறான்‌; அதுவரை நம்கட்டுப்பாட்டில்இருப்பவனே மேல்என்று கெளடில்யன்கூறுகிறான்‌…

இவ்வாறு சொல்லி விட்டுமிகவும்ஏற்கத்தக்க நட்பு அரச னிடம்ஆறு அம்சங்கள்‌, இருக்க வேண்டும்‌ – உறுதி; நமது கட்டுப்பாட்டுக்குள்இருப்பது; தேவைப்படுகிற போது ராணு வத்தை உடனடியாகத்தயார்நிலையில்வைப்பது; பரம்பரை பரம்பரையாக நட்பு கொண்டிருப்பது; மேன்மை; இரட்டை வேடம்போடாமல்இருப்பது.

மற்ற அரசர்கள்நம்மிடம்இரட்டை வேடம்போடாமல்இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்என்று கூறுகிற கெளடில்யரே, சற்றும்தயக்கமில்லாமல்‌, மற்ற அரசர்களிடம்நாம்இரட்டை வேடம்போட வேண்டிய அவசியத்தையும்‌, அதற்கான வழிமுறைகளையும்வர்ணிக்கிறார்‌. இது முரண்பாடானதல்ல. ராஜநீதி என்பது, மனித நீதியிலிருந்து சில நேரங்கள்மாறுபட்டதாகத்தான்இருக்க முடியும்என்பதை உணர்ந்து, ஏற்று, அந்த சிக்கலான பாதையை செப்பனிட்டுத்தருகிற நூல்அர்த்தசாஸ்திரம்‌.

போர்முறைகளிலிருந்துதன்னை பாதுகாத்துக்கொள்ள ஒரு அரசன்எடுக்க வேண்டிய முயற்சிகள்வரை பலவற்றைப்பற்றியும்இந்நூல்வர்ணிக்கிறது. போர்செய்கிற தருணம்வந்துவிட்டால்‌, நாள்‌, நக்ஷ்த்திரங்களைப்பார்த்துத்தயங்கிக்கொண்டிருக்கக்கூடாது என்றும்எச்சரிக்கிறார்கெளடில்யர்

அர்த்தசாஸ்திரத்தின்இறுதிப்பகுதியில்‌, அதிர்ச்சி தரத்தக்க. விஷயங்கள்இடம்பெறுகின்றன. யார்கண்ணுக்கும்தெரியாமல்‌ ‘இன்விஸிபிள்‌’ ஆகி விடுவது; காடு, மலை, மேடுகளைக்கடந்து செல்ல நேரிட்டாலும்‌, கால்வலி ஏற்படாமல்பார்த்துக்கொள்வது; எதிரி நாட்டில்நோய்பரவச்செய்வது; உடனடி மரணத்தையோ, அல்லது சிறிது சிறிதாக வரும்மரணத்தையோ விளைவிப்பது; எதிரிப்படையினரின்கண்களைக்குருடாக்குவது; பசியே எடுக்காமல்ஒரு மாதக்காலத்தைக்கடக்கக்கூடிய திறன்பெறுவது; நடு நிசி நேரத்தில்‌, முழு இருட்டில்‌, எல்லாவற்றையும்பார்க்கும்திற னைப்பெறுவது; தன்னுடைய நிழல்கூட மற்றவர்களுக்குத்தெரியாமல்செய்வது; ஒரு படையையே நீண்ட காலம்தூங்க வைத்து விடுவது; மூடிய கோட்டைக்ககவை உடனடியாகத்திறந்து விடுகிற வழிமுறைஎன்று பல யுக்திகள்இந்நூலின்இறுதி பாகத்தில்வர்ணிக்கப்படுகின்றன.

 ஏவல்‌, சூன்யம்மாதிரி பல விஷயங்களும்பேசப்படுகின்றன. கூழாங்கல்லிலிருந்துமுள்ளம்பன்றியின்முள்உட்படஒட்டகம்‌, ஓநாய்‌, நரி போன்ற மிருகங்களின்கண்கள்வரை, பல பொருட்கள்பட்டியலிடப்பட்டு, எந்தெந்த காலத்திற்கு எவை எவை தேவை என்பது கூறப்படுகிறது. சில மந்திரங்களும்தரப்பட்டிருக்கின்றன; இந்த மந்திரங்களில்சிவன்‌, விஷ்ணு, முருகன்‌, அம்பிகை போன்ற தெய்வங்கள்குறிப்பிடப்படவில்லை. மாறாக, சிறு தேவதைகளே இந்த மந்திரங்களினால்துதிக்கப்படுகின்றனஅமிலா, இமிலா, வாயுசாரா, பலி, விரோசனன்‌, சம்பரன்‌, நாகன்‌, நிகும்பன்‌… என்றெல்லாம்பலரைத்துதிக்கிற மந்திரங்கள்இவை

சரி. இதை எதிரி நாட்டவர்நம்மீது பிரயோகித்து விட்டால்என்ன செய்வது? அப்படிப்பட்ட தாக்குதல்களிலிருந்து நம்மைக்காப்பாற்றிக்கொள்ளவும்வழிமுறைகள்கூறப்பட்டுள்ளன. இதற்கும்பல பொருட்கள்‌, பல மூலிகைகள்போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன

 இவையெல்லாம்இன்று பலிக்குமா என்பது சந்தேகமே. ஏனென்றால்இதில்குறிப்பிடப்படுகிற பல மூலிகைகளும்‌, பொருட்களும்எவை என்பது மொழி பெயர்ப்பாளர்களுக்குப்புரியவில்லை; அதனால்ஒரு வகை மூலிகை; ஒரு வகை மிருகம்‌; ஒரு வகை செடிஎன்றெல்லாம்பொருள்கூறப்படுகிறது. மந்திரங்களும்முழுமையாக இல்லை. அவற்றைப்பிரயோகம்செய்யும்வழிமுறையும்மேலெழுந்தவாரியாகவே விளக்கப்படுகிறது. ஆகையால்இதையெல்லாம்இன்று பரீட்சித்துப்பார்க்க முடியாது

இவற்றை எல்லாம்சொந்த நாட்டில்பயன்படுத்துமாறு கெளடில்யர்கூறவில்லை. எதிரிகளிடம்பயன்படுத்துவதற்காக இவை கூறப்படுகின்றன என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல்தெளிவாக்கப்பட்டிருக்கிறது

சொந்த நாட்டைப்பொறுத்தவரையில்‌, மிக உயர்ந்த நோக்கம்அரசனுக்கு விதிக்கப்படுகிறது

ப்ரஜா ஸுகே ஸுகம்ராக்ஞ

ப்ரஜானாம் ஹிதே ஹிதம்‌. 

ஆத்மப்ரியம்ஹிதம்ராக்ஞ

ப்ரஜானாம்து ப்ரியம்ஹிதம்‌. 

மக்களின்மகிழ்ச்சியில்தான்‌, அரசனின்மகிழ்ச்சி இருக்கிறது; மக்களுக்கு இதமானதே, அரசனுக்கு இதமானது; அரசனுக்கு, அவனுடைய விருப்பம்நன்மை செய்யாது; மக்கள்விருப்பம்எதுவோ, அதுவே அரசனுக்கு நன்மை

நிர்வாக சாஸ்திரம்‌, ஆட்சிமுறை, யுத்தவழிமுறைகள்என்றெல்லாம்பார்க்கும்போது, எடுத்துக்கொள்ளப்பட்டவிஷயங்களின்வீச்சிலும்சரி, கருத்தின்ஆழத்திலும்சரி, கெளடில்யரின்அர்த்தசாஸ்திரத்துக்குநிகரானஒருநூல்உலகின்எந்தபாகத்திலும்‌, இரண்டாயிரம்ஆண்டுகளுக்கும்பலஆண்டுகள்முன்பாக, இயற்றப்பட்டிருக்கமுடியுமா? நம்நாட்டுப்பொக்கிஷங்களுள்‌, அர்த்தசாஸ்திரமும்ஒன்றுஎன்பதில்சந்தேகமில்லை.