பிரும்ம புராணம்

புராணங்களைப் பட்டியலிடுகிறபோது, முதலில் கூறப் படுவது பிரும்ம புராணம். இதுதான் முதலில் தோன்றிய புராணம் என்று சில நூல்கள் கூறுகின்றன. ஆகையால் இதற்கு ஆதி புராணம் என்ற பெயரும் வழங்குகிறது. உலகின் சிருஷ்டி, உலகைப் பற்றிய பூகோள ரீதியான பல விளக்கங்கள்; தக்ஷன் நடத்திய யாகம் பற்றிய வர்ணனை; புனித யாத்திரைக்குரிய பல இடங்களைப் பற்றிய குறிப்புகள்; கங்கை இறங்கி வந்த நிகழ்ச்சி; ஸ்ரீ கிருஷ்ணரின் வரலாறு; வராஹ, நரசிம்ம அவதாரங்கள் போன்ற மஹா விஷ்ணுவின் சில அவதாரங்களைப் பற்றிய சில விளக்கங்கள்; யோகம் பற்றிய சில விளக்கங்கள்போன்ற விஷயங்கள் பிரும்ம புராணத்தில் இடம் பெறுகின்றன.

நைமிசாரண்யம் என்ற வனத்தில் பல மஹரிஷிகள் கூடி ஒரு மாபெரும் யாகத்தை நடத்தினர். அங்கே லோமஹர்ஷனர் வந் திருந்தார். (ரோமஹர்ஷனர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவர் கூறிய புராணங்கள் போன்றவை, கேட்போரின் ரோமங்களை கூச்சம் எடுக்க வைக்கும் தன்மையுடையனவாக இருந்ததால், இவருக்கு இந்தப் பெயர் வந்தது.) இவர் வியாசரின் சீடர்; வியாசரிடமிருந்து புராணங்களை அறிந்து கொண்டார். இவரிடம், நைமிசாரண்யத்தில் கூடியிருந்த ரிஷிகள், ‘புராணங்களை எங்க ளுக்கு கூறுங்கள்என்று கேட்டுக் கொண்டனர். முன்பு தக்ஷனும், பல ரிஷிகளும் பிரும்மதேவனிடம் இதே போல் கேட்டுக் கொண்டனர். அப்போது பிரும்ம தேவன் கூறிய பதில்களை, என் குரு வியாசர் மூலமாக நான் அறிந்து கொண் டேன். அவற்றை இப்போது சொல்கிறேன்என்று ஆரம்பித்தார் லோமஹர்ஷனர்.

வேறு பல விவரங்களுக்கிடையேதக்ஷனின் தோற்றம்; உலகை ஆள்வதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட பல தக்ஷர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் தோன்றினார்கள் என்ற விவரம்; தக்ஷனின் மகள்கள் மணம் புரிந்த விவரம்; அவர்களில் இருபத்தேழுவர் சந்திரனை மணந்தது; கச்யபர் மணந்த சந்திரனின் மகள்களில், அதிதி என்பவளிடம் பன்னிரெண்டு தேவர்கள் தோன்றியதும், திதி என்பவளிடம் ஹிரண்யாக்ஷகன், ஹிரண்யகசிபு என்ற இரண்டு அசு ரர்கள் தோன்றியதும்; தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே தோன்றிய விரோதம்போன்ற நிகழ்ச்சிகளை லோமஹர்ஷனர் கூறினார்.

வேனன் என்பவனின் வரலாறு தெய்வத்தையும், பெரியோர் களையும் இகழ்ந்து நடந்து கொண்டவர்கள் எப்படி அழிவார்கள் என்பதை விளக்குகிறது. வேனன் அழிகிற நிலையில் அவ னிடம் தோன்றியவர் பிருது. இவரை அரசனாக பிரும்ம தேவனே முடிசூட்டினான். பிருதுவின் ஆட்சியில் பூமி செழித்து விளங் கியது. மக்கள் பெரும் மகிழ்வோடு வாழ்ந்தனர்.

ஜன சமுத்திரத்திற்கு எங்கே உணவு கிடைக்கும்; பூமியின் எப்பகுதிகள் மனிதர்கள் வாழத் தகுந்தவை, என்பதையெல்லாம் நிர்ணயித்தவன் பிருது. பூமியை சமன்படுத்தியவனும் அவனே. அதனால்தான் இந்த பூமியே, அவன் பெயரைக் கொண்டுபிருத்விஎன்று குறிப்பிடப்படுகிறது.

லோமஹர்ஷனர், சூரிய சந்திர வம்சங்களின் விவரங்களைக் கூறினார். யயாதியின் கதை, மஹாபாரதத்திலிருந்து சற்று மாறுபட்ட வடிவத்தில் இப்புராணத்தில் கூறப்படுகிறது. சூரிய, சந்திர வம்சங்களை லோமஹர்ஷனர் வர்ணித்த பிறகு, ரிஷிகள் அவரிடம் பூமியின் விவரங்களைக் கேட்டதற்கு, பூமி எவ்வாறு ஏழு த்வீபங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் விளக்கினார். ஒரு த்வீபம் என்பதை ஒரு பிரதேசம் என்றும் கொள்ளலாம்; ஒரு கண்டம் என்றும் இப்போது கூறப்படுகிற மாதிரி எடுத்துக் கொள்ளலாம்.

பூமி ஏழு கண்டங்களை உடையது என்பது இப்புராணத்தில் வருகிறது. இந்த கண்டங்கள் (பிரதேசங்கள்,த்வீபங்கள்) ஏழு கடல்களால் சூழப்பட்டுள்ளன என்ற விவரமும் கூறப்படுகிறது. ஜம்பூ த்வீபத்தின் ஒரு பகுதி பாரத வர்ஷம். இந்த பாரதத்தின் விவரங்களும் கூறப்படுகின்றன.

சூரியனின் நூற்றியெட்டு நாமாக்கள் (பெயர்கள்) பிரும்ம தேவனால், ரிஷிகளுக்குக் கூறப்பட்டது என்று சொல்லி, அந்த பெயர்களையும் இப்புராணம் தருகிறது. சில கேஷத்திரங்களைப் பற்றிய விவரங்களையும் லோமஹர்ஷனர் ரிஷிகளுக்கு எடுத் துரைத்தார்.

மஹாபலியின் சரித்திரம் இப்புராணத்திலும் கூறப்பட்டுள்ளது. தேவர்களை வென்று அவர்களுடைய இடத்தை அடைய வேண் டும் என்றும், தானே இந்திரன் ஆகிவிட வேண்டும் என்றும் அவன் விரும்பியதாலும், தேவர்களை ஒடுக்க முற்பட்டதாலும், தேவர்கள் தவிப்புற்று மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். குள்ள உருவம் கொண்ட வாமனனாக அவர் அவதரித்தார். பலி நடத்திக் கொண் டிருந்த அச்வமேத யாகத்திற்கு வாமனர் வந்தார்.

பலியின் குரு, அசுரர்களின் ஆசாரியரான சுக்ராச்சாரியார். அவர் வாமனரைப் பார்த்ததுமே, சந்தேகம் கொண்டார். மஹாவிஷ்ணு தான் இந்த உருவத்தில் இங்கே வந்திருக்கிறார் என்று நான் நினைக் கிறேன். உன்னிடம் அவர் எதையோ யாசிக்கத் திட்டமிட்டிருக் கிறார் என்பது என் சந்தேகம். அதனால்தான், இந்த பிரம்மச்சாரி உருவத்தில், யாகம் நடக்கிறபோது அவர் வந்திருக்கிறார். ஆகை யால் அவர் எதைக் கேட்டாலும், என்னிடம் கலந்தாலோசிக்காமல், நீ சம்மதித்து விடாதேஎன்று சுக்ராச்சாரியார், பலியை எச்சரித்தார்.

பலியோ இதுபற்றி சற்றும் கவலைப்படவில்லை. ‘விஷ்ணுவே என்னை நாடி வந்திருந்தால், எனக்கு மகிழ்ச்சியே. அவர் ஏதாவதுத்வீபங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் விளக்கினார். ஒரு த்வீபம் என்பதை ஒரு பிரதேசம் என்றும் கொள்ளலாம்; ஒரு கண்டம் என்றும் இப்போது கூறப்படுகிற மாதிரி எடுத்துக் கொள்ளலாம்.

பூமி ஏழு கண்டங்களை உடையது என்பது இப்புராணத்தில் வருகிறது. இந்த கண்டங்கள் (பிரதேசங்கள்,த்வீபங்கள்) ஏழு கடல்களால் சூழப்பட்டுள்ளன என்ற விவரமும் கூறப்படுகிறது. ஜம்பூ த்வீபத்தின் ஒரு பகுதி பாரத வர்ஷம். இந்த பாரதத்தின் விவரங்களும் கூறப்படுகின்றன.

சூரியனின் நூற்றியெட்டு நாமாக்கள் (பெயர்கள்) பிரும்ம தேவனால், ரிஷிகளுக்குக் கூறப்பட்டது என்று சொல்லி, அந்த பெயர்களையும் இப்புராணம் தருகிறது. சில கேஷத்திரங்களைப் பற்றிய விவரங்களையும் லோமஹர்ஷனர் ரிஷிகளுக்கு எடுத் துரைத்தார்.

மஹாபலியின் சரித்திரம் இப்புராணத்திலும் கூறப்பட்டுள்ளது. தேவர்களை வென்று அவர்களுடைய இடத்தை அடைய வேண் டும் என்றும், தானே இந்திரன் ஆகிவிட வேண்டும் என்றும் அவன் விரும்பியதாலும், தேவர்களை ஒடுக்க முற்பட்டதாலும், தேவர்கள் தவிப்புற்று மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். குள்ள உருவம் கொண்ட வாமனனாக அவர் அவதரித்தார். பலி நடத்திக் கொண் டிருந்த அச்வமேத யாகத்திற்கு வாமனர் வந்தார்.

பலியின் குரு, அசுரர்களின் ஆசாரியரான சுக்ராச்சாரியார். அவர் வாமனரைப் பார்த்ததுமே, சந்தேகம் கொண்டார். மஹாவிஷ்ணு தான் இந்த உருவத்தில் இங்கே வந்திருக்கிறார் என்று நான் நினைக் கிறேன். உன்னிடம் அவர் எதையோ யாசிக்கத் திட்டமிட்டிருக் கிறார் என்பது என் சந்தேகம். அதனால்தான், இந்த பிரம்மச்சாரி உருவத்தில், யாகம் நடக்கிறபோது அவர் வந்திருக்கிறார். ஆகை யால் அவர் எதைக் கேட்டாலும், என்னிடம் கலந்தாலோசிக்காமல், நீ சம்மதித்து விடாதேஎன்று சுக்ராச்சாரியார், பலியை எச்சரித்தார்.

பலியோ இதுபற்றி சற்றும் கவலைப்படவில்லை. ‘விஷ்ணுவே என்னை நாடி வந்திருந்தால், எனக்கு மகிழ்ச்சியே. அவர் ஏதாவது கேட்டால், அது பற்றி கலந்தாலோசிக்க என்ன இருக்கிறது? அவர் எதைக் கேட்டாலும், நான் கொடுப்பேன்என்று அவன் கூறி விட்டான்.

பலி தருவதாகச் சொன்ன எல்லாவற்றையும் வாமனர் மறுத்து, ‘என்னுடைய காலடி மூன்றினால் அளக்கப்படுகிறதை, நீ கொடுத்தால் போதும்என்று கூறினார். அப்போதும் சுக்ராச் சாரியார் எச்சரித்தார். ஆனால் பலி அதைப் பொருட்படுத்தவில்லை. வாமனர் ஓர் கால் அடியை பூமியில் வைத்தார்; அடுத்ததால் பிரும்ம லோகத்தை அளந்தார்; அவ்வளவு பெரிய உருவத்தை அவர் எடுத்துக் கொண்டு விட்டார்.

மூன்றாவது அடியை எங்கே வைப்பது? இடம் இல்லையே? காலின் அடுத்த அடியை எடுத்து வைக்க, இடம் கூறுவாயாக!’ என்றார் வாமனர்.

சற்றும் தயங்காமல், ‘என் தலை மீது வையுங்கள்என்றான் பலி. இவ்வாறு ராஜ்யத்தை இழந்தாலும், விஷ்ணுவின் அன்பைப் பெற்றான்.எதிர்காலத்தில், ஒரு மன்வந்திரத்தில் அவனுக்கு இந்திர பதவி கிட்டுமென்று கூறிய விஷ்ணு, அவனை பாதாள உலகிற்கு அரசனாக்கினார். இந்திரன் தப்பித்தான்.

வாமன அவதாரத்தில் மஹாவிஷ்ணு பலியை அடக்கினார் என்பது பற்றி ஒரு கேள்வி எழுவதுண்டு. ‘நல்ல அரசனை, வீரனை, மக்களை மகிழ்வித்தவனை ஏன் இப்படி நடத்த வேண்டும்? என்ற கேள்வி எழக்கூடும்தான். ஆனால் இதில் ஒரு தர்மம் இருக்கிறது. அந்த அரசன் ஆசைப்பட்டது இந்திர பதவிக்கு, தேவ லோகத் திற்கு அவனது ஆசை அளவு மீறியது; அதனால் அவனுக்கு இந்த கதி நேர்ந்தது. ஆனாலும் கூட, அவன் விஷ்ணுவின் பக்தன் என்பதால், அவனுக்கு ஆள்வதற்கு ஒரு ராஜ்யமும், பெரும் புகழும் கிட்டின. இந்த வாமன அவதார விஷயங்கள், பிரும்ம புராணம் தவிர, வேறு சில நூல்களிலும் வருகின்றன.

இதையடுத்து கங்கை பூமிக்கு வந்த நிகழ்ச்சி கூறப்படுகிறது. விஷ்ணு, தனது இரண்டாவது அடியை எடுத்து வைத்தபோது, அது பிரும்மலோகத்தை எட்டியது என்று பார்த்தோம். அதைக் கண்டகேட்டால், அது பற்றி கலந்தாலோசிக்க என்ன இருக்கிறது? அவர் எதைக் கேட்டாலும், நான் கொடுப்பேன்என்று அவன் கூறி விட்டான்.

பலி தருவதாகச் சொன்ன எல்லாவற்றையும் வாமனர் மறுத்து, ‘என்னுடைய காலடி மூன்றினால் அளக்கப்படுகிறதை, நீ கொடுத்தால் போதும்என்று கூறினார். அப்போதும் சுக்ராச் சாரியார் எச்சரித்தார். ஆனால் பலி அதைப் பொருட்படுத்தவில்லை. வாமனர் ஓர் கால் அடியை பூமியில் வைத்தார்; அடுத்ததால் பிரும்ம லோகத்தை அளந்தார்; அவ்வளவு பெரிய உருவத்தை அவர் எடுத்துக் கொண்டு விட்டார்.

மூன்றாவது அடியை எங்கே வைப்பது? இடம் இல்லையே? காலின் அடுத்த அடியை எடுத்து வைக்க, இடம் கூறுவாயாக!’ என்றார் வாமனர்.

சற்றும் தயங்காமல், ‘என் தலை மீது வையுங்கள்என்றான் பலி. இவ்வாறு ராஜ்யத்தை இழந்தாலும், விஷ்ணுவின் அன்பைப் பெற்றான்.எதிர்காலத்தில், ஒரு மன்வந்திரத்தில் அவனுக்கு இந்திர பதவி கிட்டுமென்று கூறிய விஷ்ணு, அவனை பாதாள உலகிற்கு அரசனாக்கினார். இந்திரன் தப்பித்தான்.

வாமன அவதாரத்தில் மஹாவிஷ்ணு பலியை அடக்கினார் என்பது பற்றி ஒரு கேள்வி எழுவதுண்டு. ‘நல்ல அரசனை, வீரனை, மக்களை மகிழ்வித்தவனை ஏன் இப்படி நடத்த வேண்டும்? என்ற கேள்வி எழக்கூடும்தான். ஆனால் இதில் ஒரு தர்மம் இருக்கிறது. அந்த அரசன் ஆசைப்பட்டது இந்திர பதவிக்கு, தேவ லோகத் திற்கு அவனது ஆசை அளவு மீறியது; அதனால் அவனுக்கு இந்த கதி நேர்ந்தது. ஆனாலும் கூட, அவன் விஷ்ணுவின் பக்தன் என்பதால், அவனுக்கு ஆள்வதற்கு ஒரு ராஜ்யமும், பெரும் புகழும் கிட்டின. இந்த வாமன அவதார விஷயங்கள், பிரும்ம புராணம் தவிர, வேறு சில நூல்களிலும் வருகின்றன.

இதையடுத்து கங்கை பூமிக்கு வந்த நிகழ்ச்சி கூறப்படுகிறது. விஷ்ணு, தனது இரண்டாவது அடியை எடுத்து வைத்தபோது, அது பிரும்மலோகத்தை எட்டியது என்று பார்த்தோம். அதைக் கண்ட பிரும்மதேவன், அதை வணங்குகிற வகையில், தனது கமண்ட லத்திலிருந்து புனித நீரை விட்டு, விஷ்ணுவின் காலை பூஜித்தார். அந்த நீர் வழிந்தோடியது. வடக்கு முகமாக ஓடிய நீரை விஷ்ணு ஏற்றார்; மேற்கு முகமாக ஓடிய நீர் பிரம்மதேவனின் கமண்ட லத்தையே சென்றடைந்தது; கிழக்கு திசையில் ஓடிய நீரை தேவர்களும், ரிஷிகளும் பெற்றனர்; தெற்கு திசையில் ஓடிய நீர் பரமசிவனின் ஜடாமுடியில் சிக்கியது. அதைத்தான் பகீரதன் பூமிக்குக் கொண்டு வர தவம் செய்தான்; வெற்றியும் பெற்றான்; கௌதமர் இதன் மிகுதியிருந்த பகுதியை பூமிக்குக் கொண்டு வந்தார்.

கங்கை பூமிக்கு வந்து சேர்ந்த விஷயம் வேறு சில நூல்களில் வேறு வகையில் கூறப்பட்டிருக்கிறது. இதில் முரண்பாடு இருக்கத் தான் செய்கிறது. ஆனால் கங்கை பூமிக்கு வருவதற்கு, பகீரதனே காரணமானவன் என்பதும், அந்த நீர் பரமசிவனால் தாங்கப்பட்டது என்பதும் இந்த நிகழ்ச்சியின், சில வேறு வடிவங்களில் காணப் படுகிற ஒற்றுமை.

கண்ணப்பர் கதையை நினைவூட்டுகிற ஒரு நிகழ்ச்சியும் இப்புராணத்தில் வருகிறது. சிவலிங்கத்திற்கு ஒரு ரிஷி முறையாக பூஜை செய்து வந்தார். அதே லிங்கத்திற்கு ஒரு வேடன், மாமிசத்தை அர்ப்பணித்து பூஜித்து வந்தான். ‘இவை எல்லாம் யார் செய்த அட்டூழியமோ, தெரியவில்லையேஎன்று வருந்தியவாறே, மாமிசத்தை அகற்றி விட்டு பூஜை செய்வது ரிஷிக்கு வழக்கமாகி விட்டது.

ஒருநாள், இந்த அக்கிரமத்தை செய்பவனை பிடித்து விடுவது என்ற தீர்மானத்துடன் ரிஷி மறைவாக காத்திருந்தார். அன்று வேடன், நேரம் கழித்து தாமதமாக வந்தான்.

சிவபெருமான் அவன் எதிரே தோன்றி, ‘ஏன் இன்று தாமதமாகி விட்டது? களைத்துக் காணப்படுகிறாயே? நலம்தானே? உனக்காகத் தான் நான் காத்திருந்தேன்என்றெல்லாம் கூறினார். வேடனோ, வழக்கம் போல, மாமிசத்தை லிங்கத்திற்கு படைத்து விட்டு, தன் வழி சென்றான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரிஷி, சிவனிடம் இது என்ன? மாமிசத்தை வைத்து இடத்தை அசுத்தமாக்குகிற வேடனுக்கு காட்சியளிக்கின்றாய்! ஆனால் தவறாமல் பூஜித்து வரும் என் முன் தோன்றியதே இல்லையே? ஏன் இந்த பார பட்சம்? என்று கேட்டார்.

சிவன், ‘நீ எனக்கு பூஜைகள் செய்தாய். அந்த வேடனோ, தன்னையே அர்ப்பணித்தான்என்று விளக்கினார். பில்லன் என்ற பெயருடைய அந்த வேடன் சிவனை வணங்கிய இடம், பில்ல தீர்த்தம் என்ற பெயரைப் பெற்றது.

மார்க்கண்டேயர் பற்றியும் சில விஷயங்களைக் கூறுகிற ஒன்பதினாயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட பிரும்ம புராணத்தை கூறி முடித்த லோமஹர்ஷனர் இதைக் கேட்டதால், ஒருவனுடைய ஆசைகள் நிறைவேறுகின்றன; பல புண்ணிய தீர்த்தங்களுக்கு சென்று வந்த புண்ணியத்தை அவன் அடைகிறான்என்று கூறி முடிக்கிறார்.

அடுத்து, பத்ம புராணத்தைப் பார்ப்போம்.