சிருஷ்டி காண்டம்; பூமி காண்டம்; ஸ்வர்க்க காண்டம்; பாதாள காண்டம்; உத்தர காண்டம் – என ஐந்து பகுதிகளாக அமைந் திருக்கிறது பத்ம புராணம். மற்ற புராணங்களைப் போலவே, இதுவும் பல விஷயங்களைத் தொடுகிறது. அவற்றில் சில சிருஷ்டிக்காக பிரும்ம தேவன் நடத்திய யாகம்; பல ரிஷிகளைப் பற்றிய வரலாறுகள்; கங்கை முதலான பல நதிகளின் புனிதத்துவம் பற்றிய விளக்கங்கள்; காசி போன்ற புண்ய ஸ்தலங்கள் பற்றிய குறிப்புகள்; கந்தர்வர்கள் பற்றிய விவரங்கள்; விரதங்களின் மகிமை; விஷ்ணு, சிவன் ஆகியோரை பூஜிக்கும் பலன்கள்; சில ஸ்தோத் திரங்களின் மேன்மை – போன்ற விஷயங்கள் இப்புராணத்தில் இடம் பெறுகின்றன.
ரிஷிகள் கூடியிருந்தபோது, அவர்களுக்கு லோமஹர்ஷனர் கூறுவதாகவே இப்புராணமும் அமைந்திருக்கிறது. பல கதைகள், அவற்றின் உட்கதைகள் ஆகியவை மூலமாக, இந்த புராணம் பக்தியின் மேன்மையை எடுத்துச் சொல்கிறது.
சிவசர்மா என்பவருக்கு ஐந்து மகன்கள். வேதங்களைக் கற் றறிந்து, பல யாகங்களைச் செய்து, பெரும் புண்யத்தை அடைந் திருந்த சிவசர்மா, தனது மகன்களைப் பரீட்சித்தார். தந்தை சொல் மாறாத அவருடைய முதல் நான்கு மகன்களும், அவர் வைத்த சோதனைகளைக் கடந்து, தந்தையை மகிழ்வித்து ஸ்வர்க்க பதவி அடைந்தனர்.
ஐந்தாவது மகனாகிய ஸோமசர்மாவையும், சிவசர்மா சோத னைக்கு உள்ளாக்கினார். தன்னுடைய நான்காவது மகன் முன்பு கொண்டு வந்திருந்த அமிர்தக் குடத்தை, ஸோமசர்மாவிடம் கொடுத்து, ‘இதைப் பத்திரமாக பாதுகாத்து வருவாயாக. நான் உன் தாயாருடன் பல புண்ணிய தீர்த்தங்களுக்கு யாத்திரை செல்கிறேன். நான் திரும்பி வந்த பிறகு, இந்த அமிர்தத்தை உன்னிடமிருந்து மீண்டும் பெற்றுக் கொள்கிறேன்‘ என்று கூறிச் சென்று விட்டார்.
ஸோமசர்மா, அமிர்தக் குடத்தை கவனமாகப் பாதுகாத்து வந்தான். சிவசர்மா, மகனைப் பரிசோதிப்பதற்காக, தன்னையும் தனது மனைவியையும் குஷ்டரோகம் கொண்டவர்களாக உரு மாற்றிக் கொண்டு, மகனை வந்து சந்தித்தார். அவர்களுடைய நிலை கண்டு அருவெறுப்பு அடையாமல், ஸோமசர்மா அவர்களுக்குப் பணிவிடை செய்தான்.
சிவசர்மா இத்துடன் சோதனையை முடிக்கவில்லை. அமிர்தக் குடத்திலிருந்த, அமிர்தம் மறைந்து விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார். பின்னர் மகனிடம் நான், அமிர்தம் பற்றி மறந்தே போய்விட்டேன். இப்போதுதான் எனக்கு அது நினைவிற்கு வந்தது. அந்த அமிர்தக் குடத்தைக் கொண்டு வா. அந்த அமிர்தம், உன் தாயாரையும், என்னையும் இந்தக் கொடுமையான குஷ்ட ரோகத்திலிருந்து விடுவித்து விடும்‘ என்று கூறினார்.
ஸோமசர்மா, அமிர்தக் குடத்தைக் கொண்டு வருவதற்காக. அதை பத்திரமாக வைத்திருந்த இடத்திற்குச் சென்று பார்க்கையில், அது காலியாக இருப்பது கண்டு திகைத்தான். ஆனால் தந்தையிடம் அவன் வைத்திருந்த மாறாத பக்தியின் காரணமாக, அவன் வேண்டிக் கொண்ட உடனேயே, அமிர்தம் இல்லை என்ற தோற்றம் மறைந்து, அக்குடத்தில் அமிர்தம் காணப்பட்டது. மகனின் பித்ரு பக்தியை மெச்சிய சிவசர்மாவும். அவருடைய மனைவியும், இறுதியில் விஷ்ணுலோகத்தை அடைந்தனர்.
ஸோமசர்மாவோ, தவங்களில் ஈடுபட்டு, பெரும் சாதனை புரிந்து கொண்டிருந்தான். அரக்கர்கள் வந்து அவன் தவத்தை கலைக்க முற்பட்டபோது, அவன் உயிர் நீத்தான். தவமிருந்த நிலையில், அரக்கர்களைக் கண்டு பயம் கொண்ட காரணத்தினால், அவன் தனது அடுத்த பிறவியில், அரக்கர் குலத்தில் பிறந்தான். ஆனால் தந்தை மீது கொண்ட பக்தியின் காரணமாகவும், தவங் களினாலும், பெரும் புண்ணியத்தை அவன் அடைந்திருந்த காரணத்தினால், அரக்கர் குலத்தில் பிறந்தும் கூட பெரும் பக்தி மானாக, உலகம் புகழும் பிரஹலாதனாக அவன் பிறப் பெய்தினான்.
ஹிரண்யகசிபுவின் மகனாகிய பிரஹலாதன் வரலாறு பல புராணங்களில் வருகிறது; விஷ்ணு புராணம் அதை விரிவாகவே சொல்கிறது. இந்த பத்ம புராணத்தில், அவனைப் பற்றி விரி வாகச் சொல்லப்படா விட்டாலும், அவனுடைய முற்பிறப்பாகிய ஸோமசர்மா பற்றிய விவரங்கள் இவ்வாறு கூறப்பட்டுள்ளன.
அரக்கர்கள், திதி என்பவளுக்குப் பிறந்தார்கள் என்று முன்பு பார்த்தோம். அந்த திதி, தனது கணவர் கச்யபரிடம் விண்ணப்பித்து, இந்திரனை எதிர்க்கக் கூடிய மகனைப் பெற்றாள். கச்யபரின் அருளினால் திதிக்குப் பிறந்த ‘பலன்‘, இந்திரனை வீழ்த்துவதற்காக மேற்கொண்ட தவம் முடிவதற்கு முன்பாகவே இந்திரனால் மாய்க்கப்பட்டான்.
கச்யபரிடம், திதி மீண்டும் வேண்டி, இந்திரனைக் கொல்லக் கூடிய மகனை அருளுமாறு கேட்டாள். கச்யபர், நீ கடும் தவம் புரிய வேண்டும்; ஒரு சிறிய அசுத்தமும் உன்னை நெருங்கிவிடக் கூடாது; அப்படி ஒரு உண்மையான தவத்தை நீ மேற்கொண்டால், உனக்குப் பிறக்கும் மகன் இந்திரனை வீழ்த்துவான். தவத்தில் தவறுகள் நிகழ்ந்தால், உனக்குப் பிறக்கும் மகன் இந்திரனின் நண்பனாகி விடுவான்‘ என்று கூறினார்.
இதையடுத்து திதி கடும் தவம் மேற்கொண்டாள். ஆனால் அதில் தவறுகள் நிகழ்ந்தன. அவருக்குப் பிறந்த மருத்துக்கள், இந்திரனுக்கு வேண்டியவர்களாகவே ஆகி விட்டார்கள். இதற்கடுத்து, திதி பெற்ற விருத்ரனும் இந்திரனால் கொல்லப்பட்டான். இப்படி இந்திரனை மாய்க்க திதி செய்த முயற்சிகள் எல்லாம் வீணாயின.புரிந்து கொண்டிருந்தான். அரக்கர்கள் வந்து அவன் தவத்தை கலைக்க முற்பட்டபோது, அவன் உயிர் நீத்தான். தவமிருந்த நிலையில், அரக்கர்களைக் கண்டு பயம் கொண்ட காரணத்தினால், அவன் தனது அடுத்த பிறவியில், அரக்கர் குலத்தில் பிறந்தான். ஆனால் தந்தை மீது கொண்ட பக்தியின் காரணமாகவும், தவங் களினாலும், பெரும் புண்ணியத்தை அவன் அடைந்திருந்த காரணத்தினால், அரக்கர் குலத்தில் பிறந்தும் கூட பெரும் பக்தி மானாக, உலகம் புகழும் பிரஹலாதனாக அவன் பிறப் பெய்தினான்.
ஹிரண்யகசிபுவின் மகனாகிய பிரஹலாதன் வரலாறு பல புராணங்களில் வருகிறது; விஷ்ணு புராணம் அதை விரிவாகவே சொல்கிறது. இந்த பத்ம புராணத்தில், அவனைப் பற்றி விரி வாகச் சொல்லப்படா விட்டாலும், அவனுடைய முற்பிறப்பாகிய ஸோமசர்மா பற்றிய விவரங்கள் இவ்வாறு கூறப்பட்டுள்ளன.
அரக்கர்கள், திதி என்பவளுக்குப் பிறந்தார்கள் என்று முன்பு பார்த்தோம். அந்த திதி, தனது கணவர் கச்யபரிடம் விண்ணப்பித்து, இந்திரனை எதிர்க்கக் கூடிய மகனைப் பெற்றாள். கச்யபரின் அருளினால் திதிக்குப் பிறந்த ‘பலன்‘, இந்திரனை வீழ்த்துவதற்காக மேற்கொண்ட தவம் முடிவதற்கு முன்பாகவே இந்திரனால் மாய்க்கப்பட்டான்.
கச்யபரிடம், திதி மீண்டும் வேண்டி, இந்திரனைக் கொல்லக் கூடிய மகனை அருளுமாறு கேட்டாள். கச்யபர், நீ கடும் தவம் புரிய வேண்டும்; ஒரு சிறிய அசுத்தமும் உன்னை நெருங்கிவிடக் கூடாது; அப்படி ஒரு உண்மையான தவத்தை நீ மேற்கொண்டால், உனக்குப் பிறக்கும் மகன் இந்திரனை வீழ்த்துவான். தவத்தில் தவறுகள் நிகழ்ந்தால், உனக்குப் பிறக்கும் மகன் இந்திரனின் நண்பனாகி விடுவான்‘ என்று கூறினார்.
இதையடுத்து திதி கடும் தவம் மேற்கொண்டாள். ஆனால் அதில் தவறுகள் நிகழ்ந்தன. அவருக்குப் பிறந்த மருத்துக்கள், இந்திரனுக்கு வேண்டியவர்களாகவே ஆகி விட்டார்கள். இதற்கடுத்து, திதி பெற்ற விருத்ரனும் இந்திரனால் கொல்லப்பட்டான். இப்படி இந்திரனை மாய்க்க திதி செய்த முயற்சிகள் எல்லாம் வீணாயின. நன்மைக்கும், தீமைக்கும் நடக்கும் போராட்டத்தில், தீமையின் தவறுகள் காரணமாகவே அவை இறுதியில் தோற்கும் என்பது இந்த நிகழ்ச்சிகள் மூலமாக வலியுறுத்தப்படுகிறது. தீய சக்திகள் பலமற்றதாக, என்றுமே ஹிந்து மத நூல்களில் வர்ணிக்கப்படு வதில்லை. அவை பலமுள்ளவைதான்; அவற்றை எதிர்ப்பதோ, வீழ்த்துவதோ எளிதான காரியங்கள் அல்ல; ஆனால் இறுதியில், மமதை, அலட்சியம், பேராசை, கர்வம் போன்ற பல குணங்களின் விளைவாக தீய சக்திகள் தவறிழைத்து, தங்கள் அழிவிற்குத் தாங் களே காரணமாகி விடுகின்றன. இந்திரனை வீழ்த்தும் தீய எண்ணம் கொண்ட திதியின் முயற்சிகள் இதற்கு உதாரணம்.
கதைக்குள் கதை, அதற்குள் இன்னொரு கதை… என்று பத்ம புராணத்தில் பல நிகழ்ச்சிகள் வர்ணிக்கப்படுகின்றன. ஒரு உதாரணம்:
ஸுகலா என்ற பதிவிரதையின் வரலாற்றில், யாத்திரை சென்று திரும்பி வந்த கணவனை நினைத்து, அவள் கடும் விரதங்களை மேற்கொள்கிறாள். இது வீண் வேலை என்று உபதேசம் செய்த வர்களுக்கு அவள், ஸுதேவா என்ற பெண்ணின் கதையைக் கூறுகிறாள் :
ஸுதேவா, க்ஷ்வாகு மன்னனின் மனைவி. இக்ஷ்வாகு மன்னன் ஒருமுறை காட்டுக்குச் சென்றபோது, காட்டுப் பன்றிகளை வேட்டையாடினான்.
ஆண் பன்றி இறந்தது. பெண் பன்றி அடிபட்டுக் கிடந்தது. அப்போது ஸுதேவா, அதன் மீது இரக்கம் கொண்டு, அதன் வாய் வழியே கசிந்த இரத்தத்தை துடைத்து விடுகிறாள். உடனே அந்தப் பன்றி, ‘ராணியே! உனக்கு நன்றி. உன் கரம் பட்டதால் என்னுடைய பாவங்கள் விலகின‘ என்று கூறியது.
‘நீ யார்?’ என்று ஸுதேவா கேட்டாள்.
‘இங்கே மரித்து கிடக்கும் என் ஆண் (பன்றி), ஒரு கந்தர்வனாக இருந்தது. முனிவர் ஒருவரின் தவத்தைக் கெடுத்ததால், அந்த கந்தர்வனுக்கு பன்றிப் பிறப்பு கிட்டியது. ஆனால் இந்திரன், ‘கீர்த்தி வாய்ந்த இக்ஷ்வாகு மன்னன் கையினால் மடிகிறபோது, நீ மீண்டும் கந்தர்வனாகி விடுவாய்‘ என்று அருள் புரிந்தான். இப்போது, இந்த ஆண், இக்ஷ்வாகுவின் கையினால் அடிபட்டு மடிந்ததால், மீண்டும் கந்தர்வனாகி விட்டது‘ என்று அந்த பெண் பன்றி கூறியது.
சரி. ஆண் பன்றியின் விவரத்தைச் சொன்னாய். உன்னைப் பற்றிய விவரம் என்ன?’ என்று ஸுதேவா கேட்டாள்.
‘ஒரு பிராம்மணன், தன் மகளை மணப்பவன், தன் வீட்டிலேயே வந்து வசிக்க வேண்டும் என்று நினைத்தான். அப்படியே ஒரு மாப்பிள்ளையும் கிடைத்தான். ஆனால், தந்தையினால் மிகச் செல்லமாக வளர்க்கப்பட்ட அந்தப் பெண், கணவனை அவ மதித்துக் கொண்டே இருந்தாள். இது பொறுக்காமல் ஒருநாள் அவன் வீட்டை விட்டு வெளியேறினான்‘ என்று அந்தப் பன்றி ஒரு வரலாற்றைக் கூற ஆரம்பித்தது.
அவளுடைய கர்வத்தைக் கண்டு கோபம் கொண்ட தந்தை, அவளையும் வீட்டை விட்டு வெளியேறச் சொன்னார்.
அவருடைய மனைவி இதற்கு ஆட்சேபித்தாள். “இது என்ன நியாயம்? நீர் செல்லம் கொடுத்து மகளைக் கெடுத்து விட்டு, இப் போது அவளை பழிப்பதில் அர்த்தம் இல்லை. ஐந்து வயது வரை குழந்தையிடம் அன்பை மட்டுமே காட்ட வேண்டும்; அதன் பிறகு கண்டிப்பைக் காட்ட வேண்டும்; இல்லையெனில் குழந்தை கெடும். இது தவிர, திருமணமான பெண், கணவனின் வீட்டில்தான் வாழ வேண்டுமே தவிர, பிறந்த வீட்டில் வாழக் கூடாது. உமக்கு உக்கிரசேனன் கதை தெரியுமா?” என்று கேட்டு, அந்த பிராம்மண னின் மனைவி உக்கிரசேனன் கதையைச் சொன்னாள்.
விதர்ப தேசத்து அரசன் ஸத்யகேதுவின் மகள் பத்மாவதி, உக்ரசேனன் எனும் அரசனை மணந்தாள். தனது தந்தையின் செல்வம் பெரிது என்றும், உக்ரசேனனின் செல்வம் அந்த அளவிற்கு இல்லை என்றும் பத்மாவதி குறைபட்டுக் கொண்டே இருந்தாள். ஒருமுறை, தந்தையின் வீட்டிற்கு வந்த பத்மாவதி, அவருடைய செல்வச் செழிப்பில் காலம் கழித்துக் கொண்டு, கணவன் வீட்டிற்கு திரும்பாமலே இருந்தாள்.
இந்நிலையில் குபேரனின் தோழன் கோவிலன், அவளைக் கவர முயற்சித்தான். உக்ரசேனன் உருவில் வந்த அவனை தன் கணவன் என்று பத்மாவதி முதலில் நம்பி விட்டாள். அவர்கள் இணைந்தனர். ஆனால் பின்னர் பத்மாவதிக்கு, உண்மை புரிந்து விட்டது. அவள் கோவிலனிடம் இதுபற்றிக் கேட்டபோது, அவன், ”உன் கணவனை விட்டு பிரிந்துவிட முனைந்து விட்ட நீ, என்னை அடைவதில் தவறில்லை” என்று வாதிட்டான். பின்னர் அவர்கள் பிரிந்தனர்.
‘அவள் உக்ரசேனனை மீண்டும் அடைந்தாள். அப்போது அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். ஆனால் அவன் உக்ரசேனனுக்குப் பிறந்தவன் அல்ல; கோவிலனின் மகன். இப்படி பாவத் தொடர் பினால் பிறந்ததால், அவன் கொடியவனாக இருந்து, கிருஷ்ணனால் அழிக்கப்பட்டான். அவன்தான் கம்சன்.
இந்தக் கதையைக் கூறி, ”கணவனைப் புறக்கணிக்கும் பெண்களின் கதி இதுதான். ஆகையால் நமது மகளை, அவளுடைய கணவனிடமே அனுப்பி வையுங்கள் என்று பிராம்மணனின் மனைவி கூறினாள். ‘கணவனிடம் போ‘ என்று கூறி, தந்தை தனது மகளை அனுப்பிவிட, கணவன் இருப்பிடம் தெரியாமல், அலைந்து திரிந்து, அனாதையாகி, அவள் பிச்சையெடுக்கத் தொடங்கினாள். ஒருமுறை ஒரு வீட்டில் அவளுக்கு சாப்பாடு போட்டபோது, அந்த வீடு தன் கணவருடையது என்பதையும், அவருக்கு வேறு ஒரு கல்யாணம் நடந்து விட்டது என்பதையும் அவள் அறிந்தாள். அவளை, அவளுடைய கணவனும் அவனது இரண்டாவது மனைவியும் நன்றாகவே நடத்தினாலும், தன்னுடைய தவறுகளின் பாரம் தாங்க முடியாமல் மனமொடிந்து அவள் மாண்டாள். நரகத்தை அடைந்து, துன்பத்தை அனுபவித்து, பூச்சியாகப் பிறந்து, பின்னர் பன்றியாகவும் அவள் பிறந்தாள். அந்தப் பெண் பன்றி நான்தான்‘.
இவ்வாறு கூறிய அந்தக் காட்டுப் பன்றியைப் பார்த்து, மனம் இளகிய இக்ஷ்வாகுவின் மனைவி, தன் புண்ணியம், அந்தப் பன்றிக்குப் பயன்பட்டு, அதற்கு மேன்மை கிட்ட வேண்டும் என்று வேண்டிக் கொள்ள, அந்தக் காட்டுப் பன்றி அழகான பெண் உருவம் எய்தி மேல் உலகம் சென்றது‘.
இவ்வாறு சொல்லி முடித்த ஸுகலா, கணவன் திரும்பி வருவதற்காக பல வருடங்கள் காத்திருந்து, அவன் வந்தவுடன் அவனுடன் சேர்ந்து புண்ணிய காரியங்களைச் செய்து, இந்திரனால் ஆசீர்வதிக்கப்பட்டு, கணவனுடன் நல்லுலகை அடைந்தாள். அவள் வீழ்ந்த இடம் நாரி தீர்த்தம் என்ற புண்ணிய தீர்த்தமாகியது.
இப்படி ஒரு நிகழ்ச்சி, அதனுள் மற்றொரு நிகழ்ச்சி, அதற்கும் உள்ளாக மற்றொரு நிகழ்ச்சி… என்று விவரித்து, அதன் மூலமாக பெண்ணின் கடமை, கர்வத்தினால் ஏற்படும் அழிவு, செல்வச் செருக்கு விளைவிக்கும் தீமை… என்ற பல போதனைகளை அளிக்கிறது பத்ம புராணம். இந்நிலையில் குபேரனின் தோழன் கோவிலன், அவளைக் கவர முயற்சித்தான். உக்ரசேனன் உருவில் வந்த அவனை தன் கணவன் என்று பத்மாவதி முதலில் நம்பி விட்டாள். அவர்கள் இணைந்தனர். ஆனால் பின்னர் பத்மாவதிக்கு, உண்மை புரிந்து விட்டது. அவள் கோவிலனிடம் இதுபற்றிக் கேட்டபோது, அவன், ”உன் கணவனை விட்டு பிரிந்துவிட முனைந்து விட்ட நீ, என்னை அடைவதில் தவறில்லை” என்று வாதிட்டான். பின்னர் அவர்கள் பிரிந்தனர்.
‘அவள் உக்ரசேனனை மீண்டும் அடைந்தாள். அப்போது அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். ஆனால் அவன் உக்ரசேனனுக்குப் பிறந்தவன் அல்ல; கோவிலனின் மகன். இப்படி பாவத் தொடர் பினால் பிறந்ததால், அவன் கொடியவனாக இருந்து, கிருஷ்ணனால் அழிக்கப்பட்டான். அவன்தான் கம்சன்.
இந்தக் கதையைக் கூறி, ”கணவனைப் புறக்கணிக்கும் பெண்களின் கதி இதுதான். ஆகையால் நமது மகளை, அவளுடைய கணவனிடமே அனுப்பி வையுங்கள் என்று பிராம்மணனின் மனைவி கூறினாள். ‘கணவனிடம் போ‘ என்று கூறி, தந்தை தனது மகளை அனுப்பிவிட, கணவன் இருப்பிடம் தெரியாமல், அலைந்து திரிந்து, அனாதையாகி, அவள் பிச்சையெடுக்கத் தொடங்கினாள். ஒருமுறை ஒரு வீட்டில் அவளுக்கு சாப்பாடு போட்டபோது, அந்த வீடு தன் கணவருடையது என்பதையும், அவருக்கு வேறு ஒரு கல்யாணம் நடந்து விட்டது என்பதையும் அவள் அறிந்தாள். அவளை, அவளுடைய கணவனும் அவனது இரண்டாவது மனைவியும் நன்றாகவே நடத்தினாலும், தன்னுடைய தவறுகளின் பாரம் தாங்க முடியாமல் மனமொடிந்து அவள் மாண்டாள். நரகத்தை அடைந்து, துன்பத்தை அனுபவித்து, பூச்சியாகப் பிறந்து, பின்னர் பன்றியாகவும் அவள் பிறந்தாள். அந்தப் பெண் பன்றி நான்தான்‘.
இவ்வாறு கூறிய அந்தக் காட்டுப் பன்றியைப் பார்த்து, மனம் இளகிய இக்ஷ்வாகுவின் மனைவி, தன் புண்ணியம், அந்தப் பன்றிக்குப் பயன்பட்டு, அதற்கு மேன்மை கிட்ட வேண்டும் என்று வேண்டிக் கொள்ள, அந்தக் காட்டுப் பன்றி அழகான பெண் உருவம் எய்தி மேல் உலகம் சென்றது‘.
இவ்வாறு சொல்லி முடித்த ஸுகலா, கணவன் திரும்பி வருவதற்காக பல வருடங்கள் காத்திருந்து, அவன் வந்தவுடன் அவனுடன் சேர்ந்து புண்ணிய காரியங்களைச் செய்து, இந்திரனால் ஆசீர்வதிக்கப்பட்டு, கணவனுடன் நல்லுலகை அடைந்தாள். அவள் வீழ்ந்த இடம் நாரி தீர்த்தம் என்ற புண்ணிய தீர்த்தமாகியது.
இப்படி ஒரு நிகழ்ச்சி, அதனுள் மற்றொரு நிகழ்ச்சி, அதற்கும் உள்ளாக மற்றொரு நிகழ்ச்சி… என்று விவரித்து, அதன் மூலமாக பெண்ணின் கடமை, கர்வத்தினால் ஏற்படும் அழிவு, செல்வச் செருக்கு விளைவிக்கும் தீமை… என்ற பல போதனைகளை அளிக்கிறது பத்ம புராணம்.