நைமிசாரண்ய வனத்தில், ஒரு யாகம் செய்து கொண்டிருந்த முனிவர்கள், அங்கு வந்த ஸுதரிடம், மிகவும் புனிதமானது எது என்று கேட்க, அவர் விஷ்ணுவின் மகிமைகளை விவரித்தார். வியாசரிடமிருந்து தான் அறிந்து கொண்ட அக்னி புராணத்தையும் முனிவர்களிடம் ஸுதர் கூறினார்.
விஷ்ணுவின் அவதாரங்கள் பல உண்டு என்றாலும், அவற்றில் முக்கியமாகக் கருதப்படுவது பத்து அவதாரங்கள். இந்தப் பட்டியலில் கூட ஒரு சிறிய வித்தியாசம் நேர்வது உண்டு. மத்ஸ்ய, கூர்ம, வராஹ, நரஸிம்ஹ, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண அவதாரங்கள் ஏற்கெனவே நிகழ்ந்தவை; கல்கி அவதாரம் நிகழப் போவது. இதில் பலராம அவதாரத்தை விட்டுவிட்டு, கிருஷ்ண அவதாரத்திற்குப் பிறகு, புத்த அவதாரம் சில பட்டியல் களில் இடம் பெறுகிறது. அக்னி புராணத்திலும் இவ்வாறே கூறப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அவதாரம் பற்றியும் விளக்கிக் கொண்டு போகையில், புத்த அவதாரத்தைப் பற்றி, அக்னி புராணம் இவ்வாறு கூறுகிறது:
முன்பு ஒருமுறை தேவர்களுக்கும், அஸுரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது, அஸுரர்களின் கை ஓங்கியது. தேவர்கள் விஷ்ணுவை நாட, அவர் ‘மாயாமோஹம், புத்தராகப் பிறக்கும். புத்தரின் உபதேசங்கள், அஸுரர்களை மயக்கும். அப்போது அவர்கள் சக்தி இழப்பார்கள்‘ என்று கூறினார். இதைத் தவிர, ‘கலியுகத்தில், யுக முடிவில், மனிதர்கள் மிகவும் சீரழிந்து போவார்கள். வேதங்களை நிந்திப்பார்கள். பணம் சேர்ப்பது ஒன்றே மனிதனின் லட்சியமாகி விடும். இவர்களில் பலர் அரசர்களும் ஆகிவிடுவார்கள். அந்த நிலையில் பகவான், கல்கி அவதாரம் எடுப்பார். அவர் இந்த தீய சக்திகளை அழிப்பார். மனிதர்கள் தீமையை விலக்குவார்கள். அப்போது, மீண்டும் க்ருத யுகம் ஆரம்பிக்கும்‘ என்றும் கூறப்பட்டது.
ஆலயங்களைக் கட்டுவது, அவற்றில் வழிபடுவது ஆகியவற் றிற்கான வழிமுறைகள் அக்னி புராணத்தில் கூறப்பட்டுள்ளன. சிவன்,விஷ்ணு,சூரியன், மற்ற தெய்வங்கள் – ஆகியவற்றை வழி படும் முறைகள் கூறப்பட்டுள்ளன. தெய்வங்களின் விக்ரஹங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்றும் விளக்கப்பட்டுள்ளது. பத்து அவதாரங்களின் உருவ அமைப்பு, கையில் ஏந்தியுள்ள ஆயு தங்கள், ஆகியவையும் விவரிக்கப்பட்டுள்ளன. இதேபோல, சண்டிகை, துர்க்கை, சரஸ்வதி, சௌமாரி, சாமுண்டி, விநாயகர், முருகன், மஹாலக்ஷ்மி, பைரவி, காளி, விஷ்வக்ஸேனர்… என்று பல தெய்வங்களின் விக்ரஹ அமைப்புகளுக்கான குறிப்புகளும் தரப்பட்டுள்ளன.
க்ஷேத்திரங்கள் பற்றியும், பூகோளம் பற்றியும் கூறிவிட்டு, ஜோதிஷம் பற்றியும் அக்னி புராணம் பேசுகிறது. ஜோதிட சாத்திரத்தை ஒட்டி, ‘வெளியூருக்குப் பயணம் செய்வதானால், புறப்படுவதற்கு சிறந்த தினம் வெள்ளிக்கிழமை ; நோய்வாய்ப் பட்டு அது குணமான பிறகு, ஒருவன் ஸ்நானம் செய்கிற தினம், சனிக்கிழமையாக இருப்பது நல்லது; முதல் முறையாக குழந்தை யின் முடியிறக்கம் செய்கிற தினம் செவ்வாயாகவோ, சனிக் கிழமையாகவோ இருக்கக் கூடாது; அறுவடையை ஆரம்பிக்க புதன்கிழமை மிகவும் நல்ல தினம்…’ என்றெல்லாம் அக்னி புராணம் சொல்கிறது.
விரதங்களின் விவரங்கள் தரப்பட்டுள்ளன. எந்தெந்த தினத்தில் எந்தெந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. தானங்கள் பற்றி பேசுகையில் ‘தானங்கள் தரப்படுகிற விதம் ஒவ்வொரு யுகத்தில், ஒவ்வொரு வகையாக அமைகிறது. க்ருத யுகத்தில் தானம் செய்ய நினைப்பவன், தானம் வாங்குகிறவனை தேடிக் கண்டுபிடித்து, தானம் செய்வான்; த்ரேதா யுகத்தில் தானம் பெறுகிறவன், தானம் செய்பவனின் இல்லத்திற்குச் சென்று தானம் பெறுவான்; த்வாபர யுகத்தில் கேட்கப்பட்டால் ஒழிய, எவனும் தானம் செய்ய மாட்டான்; கலி யுகத்திலோ, தன்னைப் பணிந்து துதிப்பவனுக்கே, ஒருவன் தானம் செய்வான்‘ என்று குறிப்பிடுகிறது.
ராஜ தர்மம் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. மக்களின் நல்வாழ்வைக் காப்பது அரசனின் முதல் கடமை. நான்கு வகையான அமைச்சர்கள் அரசனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைப்பார்கள். பிராம்மண அமைச்சர்கள், க்ஷத்ரிய அமைச்சர்கள், வைசிய அமைச்சர்கள், சூத்ர அமைச்சர்கள் – ஆகிய நான்கு வகையினரும், நான்கு புறமாக நின்று, அரசனுக்கு அபிஷேகம் செய்வார்கள். (இதிலிருந்தே, நான்கு வர்ணத்தாருமே மந்திரிகளாக நியமிக்கப் பட்டு வந்தனர் என்பது தெரிகிறது).
அரசனால் வெவ்வேறு பொறுப்புகளில் நியமிக்கப்படுகிறவர் கள், அரசனின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்யக் கூடாது; மற்றவர்கள் எதிரில், அரசனுடன் மாறுபட்ட கருத்தைக் கூறி, அவனை எதிர்த்துப் பேசக் கூடாது; அம்மாதிரி ஏதாவது சொல்ல் வேண்டிய அவசியம் இருந்தால், அதை அரசன் தனியாக இருக் கும்போது, சொல்லலாம்…
யாராலும் உரிமை கோரப்படாத சொத்து இருந்தால், அதை மூன்று வருட காலம் பாதுகாப்பது அரசனின் கடமை; அதற்குள் உரிமையாளர் தக்க ஆதாரத்துடன் அதைக் கோரினால், அவரிடம் அதைக் கொடுத்துவிட வேண்டும்; மூன்று வருடங்கள் முடிகிற வரையில் யாருமே அதைக் கோரவில்லை என்றால், அந்த சொத்து அரசாங்கத்தைச் சாரும். வயதுக்கு வராத சிறியவர்களின் உடமை களும், சொத்துக்களும் பறி போகாமல், அவர்களுடைய உரி மையை பாதுகாப்பது அரசனின் கடமை. ஒருவரின் உடமைகள் திருட்டுப் போய்விட்டால், அதற்கு ஈடான தொகையை தனது பொக்கிஷத்திலிருந்து, அரசன், அவனுக்குத் தர வேண்டும்; இப்படிச் செய்த பிறகு, களவு போன பொருட்கள் கிட்டி விட் டால், அவை அரசாங்க கஜானாவில் சேர்க்கப்படலாம்…
அரச குமாரர்களின் கல்வியில், அரசன் விசேஷ கவனம் செலுத்த வேண்டும். தர்ம சாத்திரம், அர்த்தசாத்திரம், தனுர் வேதம் என்கிற வில் வித்தை பயிற்சி, மற்றும் பல்வேறு கலைகளில் பயிற்சி ஆகியவற்றை அரச குமாரர்கள் பெறுவதற்கு அரசன் ஏற்பாடு செய்ய வேண்டும்.
தான் திட்டமிட்டு வருகிற செயலை, அரசன் பகிரங்கமாகத் தெரிவிக்கக் கூடாது. மந்திரிமார்களை கலந்து ஆலோசித்த பிறகு, வேறு எவருக்கும் அறிவிக்காமல், அரசு தனது திட்டத்தை செயல்படுத்த வேண்டும்…
இப்படி ராஜ தர்மத்தை விளக்குகிற இப்புராணம், கனவுகள் பற்றியும் சகுனங்கள் பற்றியும் பல விவரங்களைத் தருகிறது. உடலிலிருந்து (நாபி பிரதேசத்தைத் தவிர) புல் முளைப்பது; மொட்டைத் தலையுடன் தானே காட்சியளிப்பது; திருமணங்கள் நடப்பது; ஆடல் பாடல் காட்சிகள்; பாம்பு சாகடிக்கப்படுவது; குரங்குகளுடன் விளையாடுவது; தன் வீடு இடிக்கப்படுவது… போன்றவற்றை கனவுகளில் காண நேரிட்டால், அவை கெட்ட கனவுகள்.
பிரும்ம தேவன், சிவன், விஷ்ணு, சூரியன், விநாயகர் ஆகியோரை பிரார்த்தித்துக் கொள்வது – இந்த மாதிரி கெட்ட கனவுகளின் பலனைத் தணிக்கும்.
இந்த கெட்ட கனவுகளுக்கு மாறாக – மலைகள்; அரண்மனை கள்; பாம்புகள்; குதிரை சவாரி செய்தல்; ஆகாயத்தில் வெள்ளை நிறப் பூக்கள்; மரங்கள்; நாபி பிரதேசத்திலிருந்து புல் முளைத் திருப்பது அல்லது புதர் வளர்ந்திருப்பது; வெள்ளை ஆடை அல்லது மாலைகள் அணிந்திருப்பது; சூரிய, சந்திர கிரஹணங்கள் போன்ற வற்றை கனவுகளில் காண நேரிட்டால் அவை நல்ல கனவுகள். அரிசிக் கஞ்சி சாப்பிடுவது போல் கனவு கண்டாலும் நல்லது. தன்னுடைய தலை வெட்டப்படுவது, தனது வீடு தீயிட்டு கொளுத்தப்படுவது, மரத்தில் ஏறுவது போன்ற காட்சிகள் கனவில் வந்தால், அவையும் நல்ல கனவுகளே.
இரவில் உறங்குகிற வேளையை நான்கு பாகங்களாகப் பிரித்துக் கொண்டால் – முதல் பாகத்தில் காணப்படுகிற கனவுகள், ஒரு வரு டத்தில் பலிக்கலாம்; இரண்டாவது பாகத்தில் வருகிற கனவுகள், ஆறு மாதங்களில் பலிக்க வாய்ப்புண்டு; மூன்றாவது பாகத்தில் வருகிற கனவுகள், மூன்று மாத அவகாசத்திலும்; கடைசி பாகத்து கனவுகள் பதினைந்து நாட்களிலும் பலிக்கக் கூடும். பொழுது விடிகிற நேரத்தில் வருகிற கனவுகள் அடுத்த பத்து தினங்களிலேயே பலிக்கலாம்.
ஒருவன் முதலில் நல்ல கனவு கண்டு, பின்னர் கெட்ட கனவு கண்டால், இரண்டாவதே பலிக்கும். ஆகையால்தான் ஒருவன் நல்ல கனவு கண்டால், மீண்டும் மேலும் தூங்காமல், உடனே எழுந்து விட வேண்டும் என்று கூறப்படுகிறது.
கனவுகள் பற்றி இவ்வாறு கூறிவிட்டு, அக்னி புராணம் சகுனங்கள் பற்றி சொல்வதைப் பார்ப்போம். வீட்டை விட்டு வெளியே புறப்படுகிற போது – தோல், வைக்கோல், பசு மாட்டுச் சாணம், பஞ்சு, சாம்பல், எலும்புத் துண்டு, உடைந்த பாத்திரம் ஆகியவற்றில் எதையாவது காண நேர்ந்தால் – அது கெட்ட சகுனம். புறப்படுகிற சமயத்தில் இப்படி ஒரு கெட்ட சகுனம் அமைந்தால், உடனே புறப்படாமல், விஷ்ணுவை பிரார்த்தித்து விட்டு பின்னர் புறப்படலாம்.
ஒரு பயணத்தைத் தொடங்குகிற போது, சங்கீத வாத்யங்கள் ஒலிக்கக் கேட்டால் – அது நல்ல சகுனம் அல்ல. எந்த வண்டியில் பயணம் நடக்கப் போகிறதோ, அந்த வண்டி பழுதாவதும் நல்ல சகுனமல்ல. தலைக்கு மேல் விரிக்கப்பட்ட குடை விழுவது; வாயிற்படியின் மேல் தலையை இடித்துக் கொள்வது ஆகியவையும் கெட்ட சகுனங்களே. இவ்வாறெல்லாம் நேரிட்டால், சற்று தாமதித்து, விஷ்ணுவை பிரார்த்தித்து விட்டு, பின்னர் புறப்பட லாம். புறப்பட்டு விட்டவனை, உடனே அழைப்பது தவிர்க்கப்பட வேண்டும்; ஏனென்றால் அது அவனுக்குக் கெட்ட சகுனம். புறப்படுகிற போது – வெண்மை நிறப் பூக்கள்; நிறைந்து காணப்படுகிற பாத்திரங்கள்; எங்கோ கேட்கிற சப்தங்கள்; பசு மாடு; வயதான ஆடு; யானை; குதிரை; நெருப்பு; தங்கம்; கத்தி; குடை; பழம்; வெண்ணெய்; தயிர்; சங்கு; கரும்பு… ஆகியவற்றில் எதையாவது காண நேர்ந்தால், அது நல்ல சகுனம். இடியோசை கேட்பதும், மின்னல் தோன்றுவதும் நல்ல சகுனமே.
பயணம் இல்லாத நேரங்களில் சகுனங்கள் நல்லவையாகவோ, கெட்டவையாகவோ அமையலாம். தனது இடதுபுறத்திலிருந்து ஒரு மயில் கூவினால்– பொருள் களவு போகும்; கழுதை கத்தினால் நல்லது நடக்கும்; இடதுபுறமிருந்து ஒரு பன்றியோ, எருமையோ வலதுபுறம் சென்றால் அது நல்லது; ஆனால் அவையே வலதுபுறத்திலிருந்து, இடதுபுறம் சென்றால் – அது கெடுதல்.
இப்படி இன்னும் பல சகுனங்கள் பற்றிய விவரங்கள் இப் புராணத்தில் கூறப்பட்டுள்ளன. விரதங்களின் மேன்மை பெரிதும் வலியுறுத்தப்படுகிறது. எந்தெந்த தினங்களில், என்னென்ன விரதம் கடைப்பிடிக்க வேண்டும் – என்ற விவரமும் தரப்பட்டிருக்கிறது.
இலக்கியம் மற்றும் இலக்கணம் பற்றியும் பல விவரங்கள் இப்புராணத்தில் அடங்கியிருக்கின்றன. இலக்கியம் பற்றி பேசுகையில், அனுபவிக்கத்தக்க உணர்ச்சிகள் இடம் பெறாமல், ஒரு நூல் இலக்கியமாகாது என்று சொல்கிறது அக்னி புராணம். இந்த உணர்ச்சிகள், ஒன்பது. அதாவது, நவரஸங்கள் – ஹாஸ்யம்; சோகம் ; கோபம்; வீரம்; பயங்கரம்; விரசம்; விநோதம்; அமைதி, சிருங்காரம் – என்ற இந்த நவரஸங்கள், இலக்கியத்துக்கு அழ கூட்டுகின்றன. ஆனால் இந்த நவரஸங்களும், மனதில் உணர்ந்து பயன்படுத்தப்பட வேண்டும்; அப்படியில்லை என்றால், அந்த முயற்சி தாழ்ந்த ரகத்தைச் சார்ந்ததாகி விடும்.
சூரிய வம்சத்தில் தோன்றிய ராமனின் சரித்திரமாகிய ராமா யணமும், சந்திர வம்சத்தில் தோன்றிய பாண்டவர்கள் சரித்திரமாகிய மஹாபாரதமும் சுருக்கமாக இப்புராணத்தில் எடுத்துரைக்கப்படு கின்றன. வில் வித்தை, ஆயுர்வேதம் போன்றவை பற்றிய குறிப்பு கள்; பிரும்மனை உணர்ந்து கொள்ள முற்படுதல்; நசிகேதஸின் வரலாறு… என்று பல விஷயங்களை விளக்கிக் கூறி முடிகிறது அக்னி புராணம். புறப்படுகிற போது – வெண்மை நிறப் பூக்கள்; நிறைந்து காணப்படுகிற பாத்திரங்கள்; எங்கோ கேட்கிற சப்தங்கள்; பசு மாடு; வயதான ஆடு; யானை; குதிரை; நெருப்பு; தங்கம்; கத்தி; குடை; பழம்; வெண்ணெய்; தயிர்; சங்கு; கரும்பு… ஆகியவற்றில் எதையாவது காண நேர்ந்தால், அது நல்ல சகுனம். இடியோசை கேட்பதும், மின்னல் தோன்றுவதும் நல்ல சகுனமே.
பயணம் இல்லாத நேரங்களில் சகுனங்கள் நல்லவையாகவோ, கெட்டவையாகவோ அமையலாம். தனது இடதுபுறத்திலிருந்து ஒரு மயில் கூவினால்– பொருள் களவு போகும்; கழுதை கத்தினால் நல்லது நடக்கும்; இடதுபுறமிருந்து ஒரு பன்றியோ, எருமையோ வலதுபுறம் சென்றால் அது நல்லது; ஆனால் அவையே வலதுபுறத்திலிருந்து, இடதுபுறம் சென்றால் – அது கெடுதல்.
இப்படி இன்னும் பல சகுனங்கள் பற்றிய விவரங்கள் இப் புராணத்தில் கூறப்பட்டுள்ளன. விரதங்களின் மேன்மை பெரிதும் வலியுறுத்தப்படுகிறது. எந்தெந்த தினங்களில், என்னென்ன விரதம் கடைப்பிடிக்க வேண்டும் – என்ற விவரமும் தரப்பட்டிருக்கிறது.
இலக்கியம் மற்றும் இலக்கணம் பற்றியும் பல விவரங்கள் இப்புராணத்தில் அடங்கியிருக்கின்றன. இலக்கியம் பற்றி பேசுகையில், அனுபவிக்கத்தக்க உணர்ச்சிகள் இடம் பெறாமல், ஒரு நூல் இலக்கியமாகாது என்று சொல்கிறது அக்னி புராணம். இந்த உணர்ச்சிகள், ஒன்பது. அதாவது, நவரஸங்கள் – ஹாஸ்யம்; சோகம் ; கோபம்; வீரம்; பயங்கரம்; விரசம்; விநோதம்; அமைதி, சிருங்காரம் – என்ற இந்த நவரஸங்கள், இலக்கியத்துக்கு அழ கூட்டுகின்றன. ஆனால் இந்த நவரஸங்களும், மனதில் உணர்ந்து பயன்படுத்தப்பட வேண்டும்; அப்படியில்லை என்றால், அந்த முயற்சி தாழ்ந்த ரகத்தைச் சார்ந்ததாகி விடும்.
சூரிய வம்சத்தில் தோன்றிய ராமனின் சரித்திரமாகிய ராமா யணமும், சந்திர வம்சத்தில் தோன்றிய பாண்டவர்கள் சரித்திரமாகிய மஹாபாரதமும் சுருக்கமாக இப்புராணத்தில் எடுத்துரைக்கப்படு கின்றன. வில் வித்தை, ஆயுர்வேதம் போன்றவை பற்றிய குறிப்பு கள்; பிரும்மனை உணர்ந்து கொள்ள முற்படுதல்; நசிகேதஸின் வரலாறு… என்று பல விஷயங்களை விளக்கிக் கூறி முடிகிறது அக்னி புராணம்.