கருட புராணத்தை, நைமிசாரண்யத்தில் கூடியிருந்த ரிஷிகளுக்கு, லோமஹர்ஷணர் கூறத் தொடங்கியபோது, முதலில் மஹாவிஷ்ணுவின் இருபத்தியிரண்டு அவதாரங்கள் பற்றிக் கூறி னார். சாதாரணமாக, பத்து அவதாரங்களே பலரும் அறிந்ததாக இருக்கின்றன; ஆனால் பாகவத புராணம் உட்பட, பல நூல்களும் மஹாவிஷ்ணு வின் வேறு வர்ணிக்கின்றன.
பல அவதாரங்கள் பற்றியும்
குமாரன் அவதாரத்தில் மஹாவிஷ்ணு பிரம்மச்சாரியாக இருந்து, கடும் தவம் புரிந்தார்; வராஹ அவதாரத்தில் பூமியை மீட்டார்; தேவரிஷியாக அவதரித்து பலவகை தந்திர சாஸ்திரங் களைப் பரப்பினார்; நான்காவதாக நர நாராயணர்கள் என்ற இரு ரிஷிகளாக அவதரித்தார்; ஸாங்க்ய யோகத்தை கற்பித்த கபில முனிவராக அடுத்த அவதாரம் எடுத்தார்; ஆறாவது அவதாரத்தில் அத்ரி முனிவருக்கும் அவருடைய மனைவி அனசூயைக்கும் தத்தாத்ரேயன் என்ற மகனாகப் பிறந்தார்; ருசி என்ற முனிவரின் மக னாகப் பிறந்து பல யாகங்களைச் செய்தது – ஏழாவது அவதாரம்; நன்னெறிகளைப் போதித்தது, உருக்குமன் என்ற எட்டாவது அவதாரத்தில்; ஒன்பதாவதாக அவர் அவதரித்து ப்ருது என்ற மன்னனாக; மத்ஸ்யாவதாரம் பத்தாவது; அதையடுத்து கூர்மாவ தாரம்; தன்வந்த்ரியாகப் பிறந்து, மருத்துவ சாத்திரத்தை உருவாக்கியது –பன்னிரெண்டாவது அவதாரத்தில்; பதிமூன்றாவதாக மோகினி அவதாரம் எடுத்து, அஸுரர்களை மயக்கி தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்கச் செய்தார்; நரசிம்மாவதாரம் பதினான்காவது; பதினைந்து வாமனாவதாரம்; பதினாறாவது பரசுராம அவதாரம்; வேத வியாசராக தோன்றி வேதங்களை முறையாக வகுத்துக் கொடுத்தது – பதினேழாவது அவதாரம்; நாரதராக தோன்றியது – பதினெட் டாவது அவதாரம்; பத்தொன்பதாவதாக ராமனாக அவதரித்தார்; பின்னர் கிருஷ்ணாவதாரம் – இருபதாவது; புத்தராகத் தோன்றியது – இருபத்தியொன்று; வர இருப்பது இருபத்தி இரண்டாவது அவதாரமாகிய கல்கி அவதாரம்.
இந்தப் பட்டியலில், வேறு சில நூல்களில் ஒரு சில விடப் பட்டு, ஒரு சில சேர்க்கப்படுகின்றன. ஆக, முக்கியமான விஷயம் – விஷ்ணுவின் அவதாரங்கள் பத்து மட்டும் அல்ல; இருபதையும் கடந்தவை அவை. இவையேதான் முக்கியமான அவதாரங்கள் என்றும், இவை தவிர, வேறு சில முறைகளும் விஷ்ணு அவ தரித்தார் என்றும் லோமஹர்ஷணர் கூறினார்.
இந்தப் புராணம் விஷ்ணுவிடமிருந்து வரம் பெற்று, கருடன் இயற்றியது, விஷ்ணுவே பின்னர் இதை சிவனுக்கும், பிரும்ம தேவனுக்கும் எடுத்துரைத்தார். இதை வியாசரிடமிருந்து கற்ற லோமஹர்ஷணர் நைமிசாரண்யத்தில் இருந்த ரிஷிகளுக்கு விவரித்தார்.
படைப்பு; விஷ்ணுவைக் குறித்து துதிக்க வேண்டிய விதம்; மனிதப் பிறவியின் சிறப்பு; பக்தி முறையின் மேன்மை… போன்ற பல விஷயங்களைக் கூறிவிட்டு, இப்புராணம் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை குறிப்பிடுகிறது. மஹாபாரதத்தில் இடம் பெற்று, பலருக்கும் தெரிந்துள்ள விஷ்ணு சஹஸ்ர நாமமும், இந்த ஆயிரம் நாமங்களும் மாறுபடுகிறவை. இது எல்லா விதமான துதிகளையும் விட, மேம்பட்டது என்றும் இப்புராணம் கூறுகிறது.
விஷ்ணுவை வேண்டுவதற்கு வேறு ஒரு மந்திரத்தையும் இப்புராணம் விவரிக்கிறது :
‘விஷ்ணுவே உன்னை நான் துதிக்கிறேன். உன்னுடைய சுதர்ஸன சக்ரத்தினால், என்னுடைய கிழக்குப் பகுதியை பாது காப்பாயாக! கௌமோதகி என்கிற உன்னுடைய கதாயுதத்தினால் என்னுடைய தெற்குப் பகுதியை பாதுகாப்பாயாக! ஸௌனந்தம் என்கிற உன்னுடைய கலப்பையினால் என்னுடைய மேற்குப் பகுதியை பாதுகாப்பாயாக! தாமரைக் கண்ணனே, நீயே எனக்குக் கதி. உன்னையே நான் சரண் அடைந்தேன். உன்னுடைய சதானமுலசத்தினால் என்னுடைய வடக்குப் பகுதியை பாது காப்பாயாக! பிரபுவே, விஷ்ணுவே, உன்னை துதிக்கிறேன். உன் னுடைய வாள் மற்றும் கேடயத்தைக் கொண்டு, என்னுடைய வடகிழக்குப் பகுதியை பாதுகாப்பாயாக! பாஞ்சஜன்யம் என்கிற உன் சங்கு கொண்டும், அனுத்வேதம் என்கிற தாமரை மலராலும் என்னுடைய வடமேற்குப் பகுதியை பாதுகாப்பாயாக! சந்திர ஹாஸம் என்கிற உன்னுடைய வாளினால் என்னுடைய தென் கிழக்குப் பகுதியை பாதுகாப்பாயாக! ஸ்ரீவத்ஸம் என்கிற உன்னுடைய ஆபரணத்தினால் என் தென்மேற்குப் பகுதியை பாதுகாப்பாயாக! கருடன் மீதேறி, மேல்புறமிருந்து என்னை பாதுகாத்திடு! உன்னை நான் வணங்குகிறேன். கீழ் உலகங்களிலிருந் தும் என்னை பாதுகாப்பாயாக! நான் உன்னை சரணம் எய்தினேன்‘.
இந்தப் பொருள் கொண்ட துதியைக் கூறி விஷ்ணுவை பிரார்த்திப்பது விசேஷமானது; இதனினும் சிறப்பு வாய்ந்தது, விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைக் கூறித் துதிப்பது.
வீடு கட்டுவது; தான தர்மங்களின் வகைகள்; பாவத்திற்காகச் செய்யப்பட வேண்டிய பிராயச்சித்தங்கள்; பூகோள விவரங்கள் போன்ற பலவற்றைப் பற்றிப் பேசிவிட்டு, இந்தப் புராணம் வான சாத்திரம் பற்றியும் சில விவரங்களைக் கூறி, பின் ஜோதிடம் தொடர்பான சில விஷயங்களையும் சொல்கிறது.
அச்வினி, மூலம், மிருகசீர்ஷம், புனர்வஸு, ரேவதி, ஹஸ்தம், கேட்டை போன்ற நட்சத்திரங்கள் வானில் தெரிகிறபோது ஒரு பயணத்தை மேற்கொண்டால், அப்பயணம் நன்மை பயக்கும். ஹஸ்தம், சித்திரை, ஸ்வாதி, விசாகம், உத்திரபல்குணி ஆகிய நட்சத்திரங்கள் – புத்தாடை உடுத்த உகந்தவை. பரணி, கிருத்திகை; விசாகம், மூலம் போன்ற நட்சத்திரங்கள் கிணறுகளை தோண்டவும்; ரேவதி, அஸ்வினி, சித்திரை, ஸ்வாதி, ஹஸ்தம், புனர்வஸு, கேட்டை ஆகியவை விதைகளை விதைக்கவும், சிறந்தவை. இந்த விவரங்களுடன் வேறு சில ஜாதக பலன்களையும் இப்புராணம் சொல்கிறது.
சஷ்டி, அஷ்டமி, நவமி, த்வாதசி, சதுர்தசி, அமாவாஸ்யை, பௌர்ணமி ஆகிய தினங்களில் எந்தக் காரியத்தையும் தொடங்கக் கூடாது. இது தவிர, அங்க அமைப்புகள் பற்றியும், அவை ஒரு மனிதனைப் பற்றி கூறுகிற தகவல்களையும் கருட புராணம் விவரிக்கிறது. ரத்தினங்களின் வகைகள்; திருமண வகைகள் போன்றவற்றையும் கூறிவிட்டு, இந்தப் புராணம், மிகவும் விவரமாக இறப்பு, அதையொட்டிய சடங்குகள், இறந்தபின் மனித னின் பயணம், சிராத்தம்… மறுபிறப்பு போன்ற விஷயங்களைப் பற்றி கூறுகிறது.
ஒரு மனிதன் மரணமெய்தி, அவனுடைய உடல் எரிக்கப்பட்ட பிறகு, பத்து தினங்கள் அவனுடைய மகன்கள் தினமும் மூன்று முறை நீராட வேண்டும்; தரையில்தான் படுத்துறங்க வேண்டும்; தலைமுடியை வாரிக் கொள்வது போன்றவற்றைச் செய்யக் கூடாது; மண்பாண்டங்கள் அல்லது இலைகளில்தான் உணவை உட்கொள்ள வேண்டும்; இந்த பத்து தினங்களில், ஒருநாளாவது அந்த தினம் முழுவதும் எந்த ஆகாரமுமே உட்கொள்ளக் கூடாது.
இந்த பத்து தினங்களில் ஒவ்வொரு தினமும், இறந்தவருக்கான ‘பிண்டம்‘ வைக்க வேண்டும்; எல்லா தினங்களும் ஒரே மாதிரி
யாக
அது இருக்க வேண்டும்; பிண்டத்துடன் தண்ணீரும் வைக்கப்பட வேண்டும். பத்தாவது தினத்தில் பிண்டம் வைக்கப் பட்ட பின், மகன்கள் தங்கள் ஊரை விட்டு வெளியே சென்று முடிவெட்டிக் கொள்ள வேண்டும். பிண்டம் வைக்கப்படுகிற போது, அது நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒரு பாகம் யமதூதர்களுக்கும்; இரண்டாவது, பிரேத வாழ்க்கைக்கும் போகி றது. மூன்றாவது, நான்காவது பாகங்கள், யமனுலகு செல்ல உதவுகிற உருவத்தை ஏற்படுத்திக் கொள்ள உதவுகின்றன. ஒவ்வொரு நாள் அந்த உருவத்தின் ஒவ்வொரு அங்கம் அமை வதற்கு, பிண்டம் உதவுகிறது.
பதினோறாவது தினம் சிராத்தம் நடைபெறுகிறது. முதல் ஒரு வருடத்திற்கு, ஒவ்வொரு மாதமும், ஒரு சிராத்தம் நடக்கிறது. பிரேதத்தை எடுத்துச் செல்ல யமதூதர்கள் பதிமூன்றாவது தினத்தில் வருகிறார்கள். பிரேத சரீரம் அன்று விலகி, பிண்டங்களினால் உருவாக்கப்பட்ட, மனிதர் கண்களுக்கு தெரியாத சரீரமாக இருக்க, அது அவர்களால் எடுத்துச் செல்லப்படுகிறது. இது யமனுலகை அடைய ஒரு வருட காலம் ஆகும்.
அந்த காலகட்டத்தில், அந்த உயிருக்கு சமர்ப்பணமாக அளிக்கப்படுவதுதான் பிண்டமும், தண்ணீரும். யமனுலகை பிண்ட சரீரம் அடைந்த பிறகு, இறந்த மனிதன் அங்கே ‘பித்ரு ஸ்தானத்தை அடைகிறான். அவனுடைய கர்மங்களுக்கு ஏற்ப, அவனுடைய நிலையை யமன் நிர்ணயிக்கிறான். இதற்கு சித்ரகுப்தனின் பதிவுகள் உதவுகின்றன. பிண்டம் வைப்பது, சிராத்தம் நடத்துவது போன்ற வற்றைச் செய்யாவிட்டால், இறந்த மனிதனின் பிரேத சரீரம், இரவு பகலாகத் திரிந்து, அல்லல்பட்டு, பசி, தாகத்தால் திணறி, பின்னர் நரகம் சென்று, மறுபிறவி எடுத்துத் துன்புறும். இப்படியெல்லாம் நடக்காமல் இருப்பதற்காகத்தான், இறந்தவருக்குரிய சடங்குகள்
விதிக்கப்பட்டிருக்கின்றன.
(இது முழுக்க முழுக்க நம்பிக்கையின்பாற்பட்டது. இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, இவை எல்லாம் பிதற்றலாகத்தான் தெரியும். விஞ்ஞானம் என்கிற முத்திரையைப் பெற்றால், நமக்குப் புரியாத விஷயங்களையும் நாம் அப்படியே ஏற்கிறோம்; அப்படிக் கூறப்பட்டது தவறு என்று மற்றொரு விஞ்ஞான ஆராய்ச்சி கூறினால், அதையும் புரிந்து கொள்ளா மலே ஏற்கிறோம்; பின்னர் அதே விஷயம் பற்றி ‘இதுதான் சரி‘ என்று ஒரு புதிய ஆய்வு எதைக் கூறுகிறதோ, அதையும் புரிந்து கொள்ளாமலேயே ஏற்கிறோம். ஆனால் மேலே கூறப்பட்டவை போன்ற புராண விஷயங்கள் நமக்குப் பிதற்றலாகத் தெரிகின்றன. நம்மை விட ஆராய்ச்சி, தத்துவ விசாரணை, தவம், புண்ணியம், கருட புராணத்தை, நைமிசாரண்யத்தில் கூடியிருந்த ரிஷிகளுக்கு, லோமஹர்ஷணர் கூறத் தொடங்கியபோது, முதலில் மஹாவிஷ்ணுவின் இருபத்தியிரண்டு அவதாரங்கள் பற்றிக் கூறி னார். சாதாரணமாக, பத்து அவதாரங்களே பலரும் அறிந்ததாக இருக்கின்றன; ஆனால் பாகவத புராணம் உட்பட, பல நூல்களும் மஹாவிஷ்ணு வின் வேறு
வர்ணிக்கின்றன.
பல அவதாரங்கள் பற்றியும்
குமாரன் அவதாரத்தில் மஹாவிஷ்ணு பிரம்மச்சாரியாக இருந்து, கடும் தவம் புரிந்தார்; வராஹ அவதாரத்தில் பூமியை மீட்டார்; தேவரிஷியாக அவதரித்து பலவகை தந்திர சாஸ்திரங் களைப் பரப்பினார்; நான்காவதாக நர நாராயணர்கள் என்ற இரு ரிஷிகளாக அவதரித்தார்; ஸாங்க்ய யோகத்தை கற்பித்த கபில முனிவராக அடுத்த அவதாரம் எடுத்தார்; ஆறாவது அவதாரத்தில் அத்ரி முனிவருக்கும் அவருடைய மனைவி அனசூயைக்கும் தத்தாத்ரேயன் என்ற மகனாகப் பிறந்தார்; ருசி என்ற முனிவரின் மக னாகப் பிறந்து பல யாகங்களைச் செய்தது – ஏழாவது அவதாரம்; நன்னெறிகளைப் போதித்தது, உருக்குமன் என்ற எட்டாவது அவதாரத்தில்; ஒன்பதாவதாக அவர் அவதரித்து ப்ருது என்ற மன்னனாக; மத்ஸ்யாவதாரம் பத்தாவது; அதையடுத்து கூர்மாவ தாரம்; தன்வந்த்ரியாகப் பிறந்து, மருத்துவ சாத்திரத்தை உருவாக்கியது –பன்னிரெண்டாவது அவதாரத்தில்; பதிமூன்றாவதாக மோகினி அவதாரம் எடுத்து, அஸுரர்களை மயக்கி தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்கச் செய்தார்; நரசிம்மாவதாரம் பதினான்காவது; பதினைந்து வாமனாவதாரம்; பதினாறாவது பரசுராம அவதாரம்; வேத வியாசராக தோன்றி வேதங்களை முறையாக வகுத்துக் கொடுத்தது – பதினேழாவது அவதாரம்; நாரதராக தோன்றியது – பதினெட் டாவது அவதாரம்; பத்தொன்பதாவதாக ராமனாக அவதரித்தார்; பின்னர் கிருஷ்ணாவதாரம் – இருபதாவது; புத்தராகத் தோன்றியது – இருபத்தியொன்று; வர இருப்பது இருபத்தி இரண்டாவது அவதாரமாகிய கல்கி அவதாரம்.
இந்தப் பட்டியலில், வேறு சில நூல்களில் ஒரு சில விடப் பட்டு, ஒரு சில சேர்க்கப்படுகின்றன. ஆக, முக்கியமான விஷயம் – விஷ்ணுவின் அவதாரங்கள் பத்து மட்டும் அல்ல; இருபதையும் கடந்தவை அவை. இவையேதான் முக்கியமான அவதாரங்கள் என்றும், இவை தவிர, வேறு சில முறைகளும் விஷ்ணு அவ தரித்தார் என்றும் லோமஹர்ஷணர் கூறினார்.
இந்தப் புராணம் விஷ்ணுவிடமிருந்து வரம் பெற்று, கருடன் இயற்றியது, விஷ்ணுவே பின்னர் இதை சிவனுக்கும், பிரும்ம தேவனுக்கும் எடுத்துரைத்தார். இதை வியாசரிடமிருந்து கற்ற லோமஹர்ஷணர் நைமிசாரண்யத்தில் இருந்த ரிஷிகளுக்கு விவரித்தார்.
படைப்பு; விஷ்ணுவைக் குறித்து துதிக்க வேண்டிய விதம்; மனிதப் பிறவியின் சிறப்பு; பக்தி முறையின் மேன்மை… போன்ற பல விஷயங்களைக் கூறிவிட்டு, இப்புராணம் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை குறிப்பிடுகிறது. மஹாபாரதத்தில் இடம் பெற்று, பலருக்கும் தெரிந்துள்ள விஷ்ணு சஹஸ்ர நாமமும், இந்த ஆயிரம் நாமங்களும் மாறுபடுகிறவை. இது எல்லா விதமான துதிகளையும் விட, மேம்பட்டது என்றும் இப்புராணம் கூறுகிறது.
விஷ்ணுவை வேண்டுவதற்கு வேறு ஒரு மந்திரத்தையும் இப்புராணம் விவரிக்கிறது :
‘விஷ்ணுவே உன்னை நான் துதிக்கிறேன். உன்னுடைய சுதர்ஸன சக்ரத்தினால், என்னுடைய கிழக்குப் பகுதியை பாது காப்பாயாக! கௌமோதகி என்கிற உன்னுடைய கதாயுதத்தினால் என்னுடைய தெற்குப் பகுதியை பாதுகாப்பாயாக! ஸௌனந்தம் என்கிற உன்னுடைய கலப்பையினால் என்னுடைய மேற்குப் பகுதியை பாதுகாப்பாயாக! தாமரைக் கண்ணனே, நீயே எனக்குக் கதி. உன்னையே நான் சரண் அடைந்தேன். உன்னுடைய சதானமுலசத்தினால் என்னுடைய வடக்குப் பகுதியை பாது காப்பாயாக! பிரபுவே, விஷ்ணுவே, உன்னை துதிக்கிறேன். உன் னுடைய வாள் மற்றும் கேடயத்தைக் கொண்டு, என்னுடைய வடகிழக்குப் பகுதியை பாதுகாப்பாயாக! பாஞ்சஜன்யம் என்கிற உன் சங்கு கொண்டும், அனுத்வேதம் என்கிற தாமரை மலராலும் என்னுடைய வடமேற்குப் பகுதியை பாதுகாப்பாயாக! சந்திர ஹாஸம் என்கிற உன்னுடைய வாளினால் என்னுடைய தென் கிழக்குப் பகுதியை பாதுகாப்பாயாக! ஸ்ரீவத்ஸம் என்கிற உன்னுடைய ஆபரணத்தினால் என் தென்மேற்குப் பகுதியை பாதுகாப்பாயாக! கருடன் மீதேறி, மேல்புறமிருந்து என்னை பாதுகாத்திடு! உன்னை நான் வணங்குகிறேன். கீழ் உலகங்களிலிருந் தும் என்னை பாதுகாப்பாயாக! நான் உன்னை சரணம் எய்தினேன்‘.
இந்தப் பொருள் கொண்ட துதியைக் கூறி விஷ்ணுவை பிரார்த்திப்பது விசேஷமானது; இதனினும் சிறப்பு வாய்ந்தது, விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைக் கூறித் துதிப்பது.
வீடு கட்டுவது; தான தர்மங்களின் வகைகள்; பாவத்திற்காகச் செய்யப்பட வேண்டிய பிராயச்சித்தங்கள்; பூகோள விவரங்கள் போன்ற பலவற்றைப் பற்றிப் பேசிவிட்டு, இந்தப் புராணம் வான சாத்திரம் பற்றியும் சில விவரங்களைக் கூறி, பின் ஜோதிடம் தொடர்பான சில விஷயங்களையும் சொல்கிறது.
அச்வினி, மூலம், மிருகசீர்ஷம், புனர்வஸு, ரேவதி, ஹஸ்தம், கேட்டை போன்ற நட்சத்திரங்கள் வானில் தெரிகிறபோது ஒரு பயணத்தை மேற்கொண்டால், அப்பயணம் நன்மை பயக்கும். ஹஸ்தம், சித்திரை, ஸ்வாதி, விசாகம், உத்திரபல்குணி ஆகிய நட்சத்திரங்கள் – புத்தாடை உடுத்த உகந்தவை. பரணி, கிருத்திகை; விசாகம், மூலம் போன்ற நட்சத்திரங்கள் கிணறுகளை தோண்டவும்; ரேவதி, அஸ்வினி, சித்திரை, ஸ்வாதி, ஹஸ்தம், புனர்வஸு, கேட்டை ஆகியவை விதைகளை விதைக்கவும், சிறந்தவை. இந்த விவரங்களுடன் வேறு சில ஜாதக பலன்களையும் இப்புராணம் சொல்கிறது.
சஷ்டி, அஷ்டமி, நவமி, த்வாதசி, சதுர்தசி, அமாவாஸ்யை, பௌர்ணமி ஆகிய தினங்களில் எந்தக் காரியத்தையும் தொடங்கக் கூடாது. இது தவிர, அங்க அமைப்புகள் பற்றியும், அவை ஒரு மனிதனைப் பற்றி கூறுகிற தகவல்களையும் கருட புராணம் விவரிக்கிறது. ரத்தினங்களின் வகைகள்; திருமண வகைகள் போன்றவற்றையும் கூறிவிட்டு, இந்தப் புராணம், மிகவும் விவரமாக இறப்பு, அதையொட்டிய சடங்குகள், இறந்தபின் மனித னின் பயணம், சிராத்தம்… மறுபிறப்பு போன்ற விஷயங்களைப் பற்றி கூறுகிறது.
ஒரு மனிதன் மரணமெய்தி, அவனுடைய உடல் எரிக்கப்பட்ட பிறகு, பத்து தினங்கள் அவனுடைய மகன்கள் தினமும் மூன்று முறை நீராட வேண்டும்; தரையில்தான் படுத்துறங்க வேண்டும்; தலைமுடியை வாரிக் கொள்வது போன்றவற்றைச் செய்யக் கூடாது; மண்பாண்டங்கள் அல்லது இலைகளில்தான் உணவை உட்கொள்ள வேண்டும்; இந்த பத்து தினங்களில், ஒருநாளாவது அந்த தினம் முழுவதும் எந்த ஆகாரமுமே உட்கொள்ளக் கூடாது.
இந்த பத்து தினங்களில் ஒவ்வொரு தினமும், இறந்தவருக்கான ‘பிண்டம்‘ வைக்க வேண்டும்; எல்லா தினங்களும் ஒரே மாதிரி
யாக
அது இருக்க வேண்டும்; பிண்டத்துடன் தண்ணீரும் வைக்கப்பட வேண்டும். பத்தாவது தினத்தில் பிண்டம் வைக்கப் பட்ட பின், மகன்கள் தங்கள் ஊரை விட்டு வெளியே சென்று முடிவெட்டிக் கொள்ள வேண்டும். பிண்டம் வைக்கப்படுகிற போது, அது நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒரு பாகம் யமதூதர்களுக்கும்; இரண்டாவது, பிரேத வாழ்க்கைக்கும் போகி றது. மூன்றாவது, நான்காவது பாகங்கள், யமனுலகு செல்ல உதவுகிற உருவத்தை ஏற்படுத்திக் கொள்ள உதவுகின்றன. ஒவ்வொரு நாள் அந்த உருவத்தின் ஒவ்வொரு அங்கம் அமை வதற்கு, பிண்டம் உதவுகிறது.
பதினோறாவது தினம் சிராத்தம் நடைபெறுகிறது. முதல் ஒரு வருடத்திற்கு, ஒவ்வொரு மாதமும், ஒரு சிராத்தம் நடக்கிறது. பிரேதத்தை எடுத்துச் செல்ல யமதூதர்கள் பதிமூன்றாவது தினத்தில் வருகிறார்கள். பிரேத சரீரம் அன்று விலகி, பிண்டங்களினால் உருவாக்கப்பட்ட, மனிதர் கண்களுக்கு தெரியாத சரீரமாக இருக்க, அது அவர்களால் எடுத்துச் செல்லப்படுகிறது. இது யமனுலகை அடைய ஒரு வருட காலம் ஆகும்.
அந்த காலகட்டத்தில், அந்த உயிருக்கு சமர்ப்பணமாக அளிக்கப்படுவதுதான் பிண்டமும், தண்ணீரும். யமனுலகை பிண்ட சரீரம் அடைந்த பிறகு, இறந்த மனிதன் அங்கே ‘பித்ரு ஸ்தானத்தை அடைகிறான். அவனுடைய கர்மங்களுக்கு ஏற்ப, அவனுடைய நிலையை யமன் நிர்ணயிக்கிறான். இதற்கு சித்ரகுப்தனின் பதிவுகள் உதவுகின்றன. பிண்டம் வைப்பது, சிராத்தம் நடத்துவது போன்ற வற்றைச் செய்யாவிட்டால், இறந்த மனிதனின் பிரேத சரீரம், இரவு பகலாகத் திரிந்து, அல்லல்பட்டு, பசி, தாகத்தால் திணறி, பின்னர் நரகம் சென்று, மறுபிறவி எடுத்துத் துன்புறும். இப்படியெல்லாம் நடக்காமல் இருப்பதற்காகத்தான், இறந்தவருக்குரிய சடங்குகள்
விதிக்கப்பட்டிருக்கின்றன.
(இது முழுக்க முழுக்க நம்பிக்கையின்பாற்பட்டது. இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, இவை எல்லாம் பிதற்றலாகத்தான் தெரியும். விஞ்ஞானம் என்கிற முத்திரையைப் பெற்றால், நமக்குப் புரியாத விஷயங்களையும் நாம் அப்படியே ஏற்கிறோம்; அப்படிக் கூறப்பட்டது தவறு என்று மற்றொரு விஞ்ஞான ஆராய்ச்சி கூறினால், அதையும் புரிந்து கொள்ளா மலே ஏற்கிறோம்; பின்னர் அதே விஷயம் பற்றி ‘இதுதான் சரி‘ என்று ஒரு புதிய ஆய்வு எதைக் கூறுகிறதோ, அதையும் புரிந்து கொள்ளாமலேயே ஏற்கிறோம். ஆனால் மேலே கூறப்பட்டவை போன்ற புராண விஷயங்கள் நமக்குப் பிதற்றலாகத் தெரிகின்றன. நம்மை விட ஆராய்ச்சி, தத்துவ விசாரணை, தவம், புண்ணியம், இறை அருள், வாழ்க்கை பற்றிய அறிவு – போன்ற எல்லாவற்றி லும் மேம்பட்டவர்கள் கூறியுள்ள விஷயங்கள் இவை என்பதையாவது நினைத்துப் பார்த்து, இந்த மாதிரி விஷயங் களில் நம்பிக்கை கொள்வது நல்லது.)
மோட்சம் எய்தியவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு எல்லாம் மறு பிறவி உண்டு. கர்ம பலன் தீர்கிற வரையில் ஒருவர் பிறவி எடுத்துக் கொண்டேதான் இருப்பார். பக்தி, தான தர்மங்கள், எவரிடமும் துவேஷம் இல்லாத மனப்பாங்கு, சத்தியத்தையே பேசுதல், தீயனவற்றை மனதாலும் நினைக்காத குணம், ஆன்ம உண்மையை உணர்வது – போன்றவைதான், மறு பிறவி அற்ற தன்மையை எய்துகிற வழி.
ஆயுர்வேதம் தன்வந்திரியிடமிருந்து தொடங்குகிறது. எந்த சிகிச்சைக்கும், ஆறு கட்டங்கள் இருக்கின்றன. அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் கூட, நோய் இருப்பதை அறிவது; ஆரம்ப அறிகுறிகள் தெரிகிறபோது நோயின் தன்மையை அறிவது; அறிகுறிகள் தெளிவாகத் தெரிகிறபோது நோயை அறிவது; மருந்துகள், பத்தியம் போன்றவற்றின் மூலம் நோயைக் குணப் படுத்துகிற சிகிச்சை; சிகிச்சைகள் மூலம் நோய் குணமாவது.
ஜுரங்கள் பலவகைப்பட்டவை. சருமத்தில் பிரச்னைகள், வாந்தி, பசியின்மை, சோம்பல் போன்றவற்றுடன் வருகிற ஜுரம் ஒரு வகையானது. இதுபோல தலைவலியுடன் வருவது, உடல் வலியுடன் வருவது, தூக்கமின்மையுடன் வருவது, மிகுந்த வியர்வையுடன் வருவது… என்று பலவகையான ஜுரங்கள் உண்டு. இவற்றையெல்லாம் விளக்குகிற கருட புராணம், க்ஷய ரோகம், மூல வியாதி, குஷ்டம், பக்கவாதம் போன்ற பல கடுமையான வியாதிகளைப் பற்றியும் விவரிக்கிறது.
வியாதிகளுக்குத் தரப்பட வேண்டிய மருந்துகளைத் தயாரிக்க என்னென்ன பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற விவரமும் தரப்பட்டிருக்கிறது. நமது நாட்டில் மருத்துவம் எவ் வளவு முன்னேறி இருந்தது என்பதற்கு இந்த குறிப்புகள் சான்றாக விளங்குகின்றன. தாயத்துகள் அல்லது கவசங்கள் பற்றியும், அவற்றின் பலன் பற்றியும் கருட புராணத்தில் குறிப்புகள் இருக்கின்றன. விஷ்ணு கவசம் என்பதைப் பற்றி கூறிவிட்டு அதை அணிகிறபோது இப்படி துதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது:
எல்லா விதமான நோய்களிலிருந்தும் என்னைக் காக்க வேண்டும் என்று ஜனார்த்தனனை பிரார்த்தித்துக் கொண்டு, இதை நான் அணிகிறேன். என்னுடைய முன் பாகத்தை விஷ்ணு காக்க; என்னுடைய பின் பாகத்தை கிருஷ்ணர் காக்க; என்னுடைய தலையை ஹரி காக்க; என்னுடைய இதயத்தை ஜனார்த்தனன் காக்க; என்னுடைய மனதை ரிஷிகேசன் காக்க; எனது நாக்கை கேசவன் காக்க; என்னுடைய கண்களை வாஸுதேவன் காக்க; என்னுடைய காதுகளை ஸங்கர்ஷணன் காக்க; என்னுடைய மூக்கை ப்ரத்யும்னன் காக்க; என்னுடைய சருமத்தை அனிருத்தன் காக்க; என்னுடைய தாடைகளை வனமாலி காக்க; எனது இடுப்புக்கு கீழே ஸ்ரீவத்ஸன் காக்க; என்னுடைய இடப்பக்கத்தை விஷ்ணுவின் சக்கரம் காக்க; என்னுடைய வல பாகத்தை விஷ்ணுவின் கதாயுதம் காக்க; என் னுடைய முயற்சிகளை எல்லாம் கருடன் காக்க ; தண்ணீரில் என்னை வராஹன் காக்க; ஆபத்துக் காலத்தில் என்னை வாமனன் காக்க; காடுகளில் என்னை நரசிம்மர் காக்க; எல்லா இடங்களிலும் என்னை கேசவர் காக்க…
‘ஹிரண்யகர்ப்பர் பொன்னையும், கபிலர் பல உலோகப் பொருட்களையும், எனக்கு அருள்வார்களாக! என் பாவங்களை எல்லாம் விஷ்ணு அழிப்பாராக! விஷ்ணு என் மனதில் குடி கொண்டு, எனக்கு ஞானத்தை அருள்வாராக! விஷ்ணுவை துதித்து இந்தக் கவசத்தை நான் அணிகிறேன். இனி இந்த பூமியில் நான் பயமின்றி எங்கும் செல்லலாம். பஞ்சபூதங்கள் என்னை ஒன்றும் செய்யாது. ராக்ஷஸர்கள், பிசாசுகள், காடுகள், தண்ணீர், ஆகியவற்றி லிருந்தும், திருட்டு, நோய் நொடி முதலியவற்றிலிருந்தும் நான் பாதுகாக்கப்பட்டவனாகிறேன். தெய்வங்கள் எனக்கு துணை நிற்கின்றன.
இது போன்ற விவரங்களுடன்,ஆன்ம ஞானம், யோகம் ஆகியவற்றையும் குறிப்பிட்டு முடிவடைகிறது கருட புராணம்.