வாயு புராணம்

வாயு புராணமும், நைமிசாரண்யத்தில் கூடியிருந்த ரிஷி களிடம் வரயு தேவனால் கூறப்பட்டு, பின்னர் த்ருஷத்வதி நதிக்கரையில் ஒரு யாகத்திற்காக வந்திருந்த ரிஷிகளுக்கு, லோம ஹர்ஷணரால் கூறப்பட்டது.

இதிலும், மற்ற பல புராணங்களில் உள்ள நிகழ்ச்சிகளும், விளக்கங்களும் இடம் பெறுகின்றன. படைப்பு; யுகங்களைப் பற்றிய விவரங்கள்; காலக் கணக்கு; யோகம் செய்வதற்கான வழி முறைகள்; அதன் எட்டு பிரிவுகள்; கனவுகள்; சகுனங்கள் ஆகியவை குறிக்கிற நிகழ்ச்சிகள்; ப்ரும்ம தேவனுக்கு, சிவனின் பெருமையை விஷ்ணு எடுத்துக் கூறியது; தக்ஷனின் யாகத்தை சிவன் அழித்தது; வடக்கே இமயமலையும், தெற்கே குமாரிகா (கன்னியாகுமரி) மற்றும் கடல், அவற்றை எல்லைகளாகக் கொண்ட பாரதவர்ஷம் பற்றிய விவரங்கள்; வான சாஸ்திரம்; பாற்கடல் கடையப் பட்டபோது அதில் தோன்றிய விஷத்தை சிவன் உட்கொண்டதுபோன்றவை எல்லாம், இப்புராணத்திலும் கூறப்படுகின்றன.

ஜனகன் ஒரு அச்வமேத யாகம் நடத்தியபோது, நடந்த நிகழ்ச்சியையும், வாயு புராணம் கூறுகிறது. பல மக்களும், ரிஷி களும் வந்திருந்த அந்த யாகத்தின்போது, கூடியிருந்த முனிவர்களில் யார் மற்றவர்களைக் காட்டிலும் ஞானத்தில் சிறந்தவர்என்று அறிந்து கொள்கிற ஆவல் ஜனக மன்னருக்கு ஏற்பட்டது.

அவர் இதைத் தெரிவித்து, பரிசும் அறிவித்தார். அரசன் அறிவித்த பரிசுக்கு உரியவர், தானே என்று யாக்ஞவல்கியர் கூற, மற்ற பல ரிஷிகள் அதற்கு ஆட்சேபம் எழுப்பினர். அப்போது யாக்ஞவல்கியர் கேட்ட கேள்விகளுக்கு மற்றவர்களால் பதில் அளிக்க முடியவில்லை; அவரோ மற்றவர்களின் எல்லா கேள்வி களுக்கும் சரியான பதிலைக் கூறினார்.

அதுவரை பேசாமல் இருந்த சகல்யர், யாக்ஞவல்கியரை கடுமையாகப் பேசி விவாதத்திற்கு அழைத்தார். சகல்யர் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் யாக்ஞவல்கியர் சரியான பதில்களைக் கூறிவிட்ட நிலையில், சகல்யரைப் பார்த்து, ‘இப்போது நான் உங்களை ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்என்றார் யாக்ஞவல்கியர்.

அந்தக் கேள்விக்கு, சகல்யர் பதில் கூறாவிட்டால், அவர் உயிரை விடுவார் என்று தீர்மானம் ஆகியது. அவரால் பதில் சொல்ல முடியாமற் போகவே, அவர் உயிர் நீத்தார். ஆனால் அவரால் ஏற்கெனவே வேத பாடங்கள் கற்பிக்கப்பட்டிருந்த சீடர்கள் அவற் றைப் பரப்பினார்கள். இவையும், வைசம்பாயனரால் வகுக்கப் பட்ட பகுதியும்வேதக் கல்வியில் நிரந்தர இடம் பெற்றன. யாக்ஞ வல்கியரும் கூட வைசம்பாயனரின் சீடரே. அவர் ஒருமுறை தான் என்ற அகந்தை வெளிப்படுகிற வகையில் குருவிடம் பேச, அவர், யாக்ஞவல்கியர் கற்றதை விடுமாறு ஆணையிட, யாக்ஞவல்கியர் கற்ற யஜுர் வேதப் பிரிவை, அவர் விட வேண்டியதாயிற்று. இப்படி அவர் செய்தது பின்னர் தைத்ரிய சம்ஹிதை ஆயிற்று. யாக்ஞவல்கியர் சூரியனைத் துதித்து, மீண்டும் யஜுர் வேதத்தை அவருடைய அருளால் பெற்று, அதை தனது சீடர்களுக்குக் கற்பித்தார். இதுவே, சுக்ல யஜுர் வேதம்.

இந்த நிகழ்ச்சிகளைக் கூறுகிற வாயு புராணத்தில், பிருது என்கிற மன்னன் பூமியை வளமாக்கிய வரலாறு; ஹிரண்யகசிபு, விஷ்ணு வினால் சம்ஹாரம் செய்யப்பட்டதுபோன்றவையும் இடம் பெறுகின்றன.

திரிசங்குவிற்கு தனியாக ஒரு ஸ்வர்க்க லோகத்தை விச்வா மித்திரர் சிருஷ்டி செய்தது; சூரிய, சந்திர வம்சங்களின் பட்டியல் கள்; யயாதி, கார்த்தவீர்யார்ஜுனன் ஆகியோரின் சரித்திரங்கள்; தேவ குருவான பிருஹஸ்பதி, அஸுர குருவான சுக்ராச்சாரியார் போலத் தோன்றி, அஸுரர்களை திசை திருப்பியது போன்ற வற்றையும் சொல்லி முற்றுப் பெறுகிறது வாயு புராணம்.

————————————

புராணங்களைப் பற்றி

ஒவ்வொரு சமயத்தில், எப்படி நடந்து கொள்ள வேண்டும்‘; எது சரி, எது தவறு?…’ என்கிற நிச்சயங்களை ஏற்படுத்திக் கொள்ள வேதங்கள்; புராணங்கள்; காவியங்கள் ஆகியவை உதவுகின்றன. இவற்றில் வேதங்கள், ‘பிரபுஸம்ஹிதம்‘ – அதாவது ஒரு மேலான பிரபு இடும் உத்திரவு போன்றது; புராணங்கள்ஸுஹ்ருத்ஸம் ஹிதம்‘ – நமக்கு நல்லது நினைக்கிற நண்பன் கூறுகிற யோசனை போன்றவை; காவியங்கள் – ‘காந்தாஸம்ஹிதம்‘ – அன்பான மனைவி, மனதுக்கு இதமான வழியில் பேசி, கூறுகிற யோசனை மாதிரி.

ஸுஹ்ருத்ஸம்ஹிதம் என்ற வர்ணனையைப் பெற்றிருக்கிற புராணங்கள், நமது நன்மையை உத்தேசித்து, வேதத்தில் கூறப் பட்டிருக்கிற உபதேசங்களை எளிமையாக்கி, சில உதாரண நிகழ்ச்சி களுடன் நமக்குத் தருபவை. ‘இன்று நடக்க முடியாத காரியங்கள் அன்றும் நடந்திருக்க முடியாதுஎன்ற பிடிவாதமான முடிவிற்கு வராமல் இவற்றை அணுகினால், பல நல்ல அறிவுரைகளை அறிந்து கொள்ளலாம்.

மஹா புராணங்கள் பதினெட்டு. இதில் வாயு புராணம் சேர்க்கப் படுகிறபோது, இது பத்தொன்பது ஆகிறது.

இந்த புராணங்கள் தவிர, உப புராணங்கள் என்று கூறப்படுகிற புராணங்களும், ஸ்தல புராணங்களும் பல இருக்கின்றன.

பதினெட்டு புராணங்களில் மிகவும் பெரியது ஸ்கந்த புராணம்; மிகவும் சிறியவை மார்க்கண்டேய புராணம் மற்றும் ப்ரும்ம புராணம். இவை எல்லாமே வழி வழியாக வந்திருந்தாலும், இவை இயற்றப்பட்ட காலம் கி.பி. 300-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் என்பது, ஆய்வாளர்கள் சிலரின் கருத்து. ஆனால் 5000 ஆண்டு களுக்கு முந்தையதாகக் கருதப்படுகிற இதிஹாசங்களில் கூட, புராணங்கள் பற்றிய குறிப்புகள் வருவதால், இவை மிகவும் பழமையானவை என்பது நம்பிக்கையுள்ளவர்களின் கருத்து. ப்ரும்ம புராணம்; பத்ம புராணம்; விஷ்ணு புராணம்; சிவ புராணம்; பாகவத புராணம்; நாரத புராணம்; மார்க்கண்டேய புராணம்; அக்னி புராணம்; பவிஷ்ய புராணம்; ப்ரம்மவைவர்த்த புராணம்; லிங்க புராணம்; வராஹ புராணம்; ஸ்கந்த புராணம்; வாமன புராணம்; கூர்ம புராணம்; மத்ஸ்ய புராணம்; கருட புராணம்; ப்ரும்மாண்ட புராணம்ஆகியவை பதினெட்டு; இதில் வாயு புராணமும் பலரால் சேர்க்கப்பட்டே பேசப்படுகிறது. அதுவும் சேர்த்து பத்தொன்பது மஹா புராணங்கள்.

இவற்றில், பாகவத புராணம், வேதத்திற்கு சமமாகப் பேசப்படுவதுகிருஷ்ணரின் சரித்திரத்தையும், மஹாத்மியத்தை யும் விவரமாகக் கூறி, பக்தி மார்க்கத்திற்கு பெரும் அஸ்திவார மாக விளங்குவது பாகவத புராணம். இதுஸ்ரீமத் பாகவதம்என்றே குறிப்பிடப்படுகிறது. இதன் முக்கியத்துவம் கருதி, மற்ற புராணங் களை விட சற்று விரிவாக இதைப் பார்ப்போம்.

ஸ்ரீமத் பாகவதம் பற்றிய நமது பார்வையை அடுத்த அத்தி யாயத்தில் தொடங்குவோம். புராணங்களைப் பற்றி

ஸ்ரீமத் பாகவதம் பற்றிய நமது பார்வையை அடுத்த அத்தி யாயத்தில் தொடங்குவோம்.