பதினெட்டு புராணங்களில் ஒன்றாகிய பாகவத புராணம், ‘ஸ்ரீமத் பாகவதம்‘ என்றே குறிப்பிடப்படுகிறது; இது புராணங் களிலேயே மிகவும் விசேஷமானதாகவும் கருதப்படுகிறது. மற்ற புராணங்களைக் காட்டிலும், இப்புராணத்தில் பக்தி மார்க்கத்தின் மேன்மை மீண்டும் மீண்டும் பல நிகழ்ச்சிகளின் மூலமாக வலி யுறுத்தப்படுகிறது. ஞான மார்க்கம், கர்ம மார்க்கம் ஆகியவை பற்றி இப்புராணமும் கூறினாலும், பக்தி மார்க்கத்திற்கே இதில் சிறப்பிடம் தரப்படுகிறது. எல்லா தர்மங்களும் rணித்து, சிரத் தையும் மங்கி, ஞானிகளும் துர்லபமாகி விடுகிற கலியுகத்தில், பக்தி மார்க்கமே பலருக்கும் சாத்தியமானது; எளிதானது; அதுவே பல யாகங்கள் செய்வதினால் கிடைக்கிற புண்ணியத்தைத் தர வல்லது.
இதைத் தவிர ஸ்ரீ கிருஷ்ணரின் மகிமைகளை விஸ்தாரமாகக் கூறுகிறது பாகவத புராணம். விஷ்ணுவின் மற்ற அவதாரங்கள் பற்றிய விவரங்களோடு, கிருஷ்ணாவதார நிகழ்ச்சிகள் சிறப்பிடம் பெறுகின்றன. பக்தியின் மூலமாக மேன்மையுற்ற, பலருடைய சரித்திரங்களும் விவரிக்கப்படுகின்றன. உபநிஷத்துகளை உள் ளடக்கிய வேதங்கள், ஸ்ம்ருதிகள் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள தர்ம நியதிகளும், தத்துவ விளக்கங்களும், பாகவத புராணத்தில் எளிமையாக விளக்கப்படுகின்றன. இவற்றோடு, உத்தவர் என்ற முனிவருக்கு ஸ்ரீ கிருஷ்ணர் செய்த உபதேசம், இப்புராணத்தில் முழுமையாகக் கூறப்பட்டிருக்கிறது. நைமிசாரண்யம் என்ற புனித ஸ்தலத்தில் கூறப்பட்ட புராணம், ஸ்ரீமத் பாகவதம். நைமிசம் என்பது காரணப் பெயர். ‘நேமி‘ என்றால் முனை என்று பொருள். ப்ரும்ம தேவன் ஒரு முறை, பரமசிவனை மனதினால் தியானித்து, தனது சக்கரத்தை ஏவி, இதனுடைய முனை (நேமி) எங்கே விழுந்து மழுங்கிப் போகி றதோ, அதுவே தவங்களைச் செய்வதற்கு மிகவும் சிறந்த இ மாகும் என்று கூறினார். அவர் ஏவிய சக்கரம் விழுந்து முனை (நேமி) மழுங்கிய இடம், நைமிசம். அதையொட்டி இருந்த வனப் பிரதேசம், நைமிசாரண்யம். பல ரிஷிகள் தவம் செய்யவும், யாகங்கள் புரியவும் இந்த இடத்தை நாடினார்கள்.
L
ஒருமுறை, ஸுதர் அங்கே வந்து, அங்கு கூடியிருந்த ரிஷிகளைச் சந்தித்தார்.ஸுதர் என்று அவர் அழைக்கப்பட்டாலும், அது இயற்பெயர் அல்ல. அவருடைய பெயர் உக்கிரச்ரவஸ். அவர் புராணங்களைக் கூறுவதில் வல்லமை பெற்றார்; ஸுதர் என்றால் புராணங்களைக் கூறுபவர்– பௌராணிகர். ஸுதர்கள் என்பவர்கள், ப்ராம்மணர்கள் அல்ல. ப்ராம்மணனுக்கும், க்ஷத்ரியப் பெண்மணிக் கும், கலப்புத் திருமணம் நடந்து, அவர்களுக்குப் பிறந்தவர்களே ஸுதர்கள் ஆனார்கள். இவர்களில் உக்கிரச்ரவஸ் மிகவும் மேம் பட்டு விளங்கினார் என்பதால், அவர் ஸுதர் என்றே அழைக்கப் பட்டார்.
நைமிசாரண்யத்தில் யாகம் நடத்துவதற்காகக் கூடியிருந்த ரிஷிகள் ஸுதரை வரவேற்று, மரியாதை செய்து உபசரித்தனர். (கலப்புத் திருமணத்தில் பிறந்தவர்கள் என்பதால், ஸுதர்கள் மரியா தைக்கு உரியவர்களாக இல்லாமற் போய்விடவில்லை என்பது கவனிக்கத்தக்கது). ஸுதரை நோக்கி, அந்த ரிஷிகள் சொன்னார்கள்: பாவங்கள் அற்றவரே! புராணங்கள், இதிஹாஸங்கள், தர்ம சாஸ் திரங்கள் எல்லாவற்றையும் நன்கு அறிந்ததோடு, அவற்றை அனை வருக்கும் விளங்குமாறு எடுத்துச் சொல்லும் திறனும் பெற்றவர் நீங்கள். வியாசருக்குத் தெரிந்த வேத தத்துவங்களையும், பல மஹரிஷிகளுக்குத் தெரிந்தவற்றையும், அவர்களுடைய ஆசி பெற்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்‘. இவ்வாறு ஸுதரின் பெருமையை எடுத்துக் கூறி அவரை உபசரித்த ரிஷிகள் அவர் முன் ஒரு வேண்டுகோளை வைத்தனர். ‘கலியுகத்தில் மக்கள் சோம்பல் மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய அறிவும் சிறப்பாக இல்லை. வியாதிகள் போன்ற துன்பங்கள் அவர்களை வாட்டுகின்றன. இப்படிப்பட்ட நிலையில் இருப்பதால், முறையாக ஒரு குருவிடம் பயின்று, சாஸ்திரங்களை அறிந்து கொள்வதோ, அவற்றின் உட்பொருளை உணர்வதோ, பெரும்பாலான மக்களால் இயலவில்லை. ஆகையால், எதன் மூலமாக பரமாத்மாவின் அருள் கிட்டுமோ, அதை நீங்கள் உபதேசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். கடலைக் கடக்க விரும்பியவனுக்கு ஒரு படகு கிட்டியதுபோல, அதர்மம் மிகுந்த இந்தக் கலியைக் கடக்க விரும்புகிற எங்களுக்கு, நீங்கள் கிட்டியிருக்கிறீர்கள். ஆகையால் மனித குலத்திற்கே நன்மை அளிக்கக் கூடிய, உபதேசங்களை நீங்கள் எங்களுக்குச் சொல்ல வேண்டும். பல அவதாரங்களை எடுத்து நன்மை புரிந்த மஹா விஷ்ணுவின் பெருமைகளைக் கூறுங்கள். எவருடைய பெயரைச் சொல்வதினாலேயே, அறியாமையிலிருந்து மனிதன் விடுபடு வானோ, அந்த கிருஷ்ணனுடைய சரித்திரத்தைச் சொல்லுங்கள்‘.
இவ்வாறு கோரிய ரிஷிகளைப் பார்த்து ஸுதர், ‘மனிதனுக்கு மிகவும் மேம்பட்ட மதம், இறைவன் பால் பக்தி செலுத்துவதே. ஸ்வர்க்கத்தில் டம் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டிருப்பது அல்ல மதம்; உண்மையை உணர்வதற்காக இருப்பதே மதம். பரமாத்மாவின் மகிமைகளைப் பற்றி பேசுவதே தூய்மை அளிக்கும். அப்படிப்பட்ட புனிதமான காரியத்தைச் செய்யுமாறு என்னை நீங்கள் கேட்டுக் கொண்டது, எனக்கு நன்மையே.
‘பகவான் பல அவதாரங்களை எடுக்கிறார். அவதார காரியம் முடிந்த பிறகு, அவர் மேற்கொள்கிற அவதாரம், அவரிடமே சேர்கிறது. ப்ரம்மச்சர்ய விரதத்தை அனுஷ்டித்துக் காட்டிய அவ தாரம் – கௌமாரம்; பன்றியின் உருவத்தில் பூமியை மீட்டது. வராஹ அவதாரம்; பாஞ்சராத்ர சாத்திரத்தை உருவாக்கியது – நாரத ரிஷி அவதாரம்; நரன், நாராயணன் என்ற ரிஷிகளாக அவதரித்த போது, தவத்தின் மேன்மையை பஹவான் காட்டினார்; காலத்தின் கோலத்தினால் மறைந்து போன தத்துவங்களின் உண்மையை வெளியிட்டது கபிலர் அவதாரம்; ஆத்ம வித்தையை உபதேசித்தது தத்தாத்ரேய அவதாரம்; சில தேவர்களுடன் சேர்ந்து உலகத்தைக் காப்பாற்றியது யக்ஞர் அவதாரம்; பரமஹம்ஸ ஆசிரமத்தின் மஹிமையை யோகிகளுக்கு விளக்கியது – ரிஷபர் அவதாரம்; பூமியைச் செழிப்படையச் செய்தது – ப்ருது அவதாரம்; பூமி எனும் ஓடத்தில் மனுவையும் ஜீவராசிகளின் பிரதிநிதிகளையும் காப் பாற்றியது – மத்ஸ்ய அவதாரம்; பாற்கடலைக் கடைவதற்கான மத்தாகப் பயன்பட மேரு மலைக்கு மேடையாக அமைந்து உதவி யது – கூர்ம அவதாரம்; பாற்கடலிலிருந்து தோன்றி, மருத்துவத்தை தோற்றுவித்தது – தன்வந்திரி அவதாரம்; பாற்கடலிலிருந்து தோன்றி அஸுரர்களை மயக்கி, தேவர்களுக்கு அமிர்தத்தை அளித்தது – மோஹினி அவதாரம்; ஹிரண்யகசிபுவை அழித்தது – நரஸிம்ம அவதாரம்; மஹாபலியை அடக்கியது வாமன அவதாரம்; தர்மத்திற்கு மாறாக நடந்த க்ஷத்ரியர்களை அழித்தது பரசுராம அவதாரம்; வேதங்களைப் பிரித்து அளித்தது வியாசர் அவ தாரம்; ராவணனை வதம் செய்தது – ராமாவதாரம்; பூமியின் பாரத்தை குறைப்பதற்காக வந்தது பலராம், கிருஷ்ண அவ தாரங்கள்; இதன் பின்னர் கலியுகத்தில் – புத்த அவதாரம்; கலியுகம் முற்றி விடுகிற நிலையில் – தீயோரை அழிக்க கல்கி அவதாரம் நிகழும்…
–
–
(மேலே குறிப்பிடப்பட்டவை தவிர வேறு அவதாரங்களும் உண்டு என்று கூட சில நூல்கள் கூறுகின்றன. ஆனால் பலராலும் அறியப்பட்டு, பல நூல்களிலும் கூறப்படுகிறவை தசாவதாரங்கள் – என்கிற பத்து அவதாரங்கள். மத்ஸ்ய, கூர்ம, வராஹ, நரஸிம்ஹ, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண அவதாரங்கள்; மற்றும் நிகழப் போகிற கல்கி அவதாரம் ஆகியவையே பொதுவான தசாவதாரங்களாக குறிப்பிடப்படுகின்றன. ஆனால் புராணங்களில் மேலே சொல்லப்பட்ட மாதிரி வேறு பல அவதாரங்களும் விளக்கப்படுகின்றன.)
இப்படி பல அவதாரங்களைப் பற்றிய விளக்கங்களைக் கூறிய ஸுதர், ‘வியாசரால் செய்யப்பட்டு, அவருடைய குமாரர் சுகரால் பரீக்ஷித்திற்கு ஸ்ரீமத் பாகவதம் கூறப்பட்ட போது, நானும் அங்கிருந்து அதைக் கேட்கிற வாய்ப்பு பெற்றேன். கலியுலகில், ஞானம் சற்றும் இல்லாமையால், அவதியுறுகிற மக்களுக்கு இந்த பாகவத புராணம், சூர்யன் போல தோன்றியிருக்கிறது. அந்த புராணத்தை, சுகர் கூற, நான் கேட்டவாறே உங்களுக்கு விளக்கு கிறேன்‘ என்று சொன்னார்.
இப்படித் தொடங்கி, ஸுதர் அந்த ரிஷிகளுக்கு கூறிய பாகவத புராணம் வியாசரால் எப்படிச் செய்யப்பட்டது என்பதைப் பார்ப்போம்.
கலியுகம் தொடங்கிய காலம். வியாசர் கவலையுற்றிருந்தார். வேதங்களை பிரித்து அளித்தும், பின்னர் அந்த வேதங்களின் ஸாரத்தை மஹாபாரதத்தின் மூலமாக அனைவரும் அறிந்து கொள்ள வசதி செய்து தந்தும் கூட, அவர் திருப்தியைக் காணவில்லை. இதைப் பற்றி சிந்தித்து, ‘என்ன செய்தால் எல்லா வகை மக்களுக்கும் நன்மை உண்டாகிற பாதை போடப்படும்?’ என்பது பற்றி அவர் யோசனையில் ஆழ்ந்தார்.
அப்போது வியாசர் அமர்ந்திருந்த ஸரஸ்வதி நதிக் கரையில் இருந்த அவருடைய ஆசிரமத்திற்கு, நாரத மஹரிஷி வந்து சேர்ந்தார். வியாசர் கவலையுற்றிருப்பதைப் பார்த்து ‘அறியப்பட வேண்டிய எல்லாவிதமான தர்மங்களையும், முழுமையாகக் காட்டுகிற அதிசயிக்கத்தக்க நூலாகிய மஹாபாரதத்தை இயற்றிய நீர், ப்ரும்மத்தை உணர்ந்தவர். அப்படிப்பட்ட மகிமை வாய்ந்த நீங்கள், ஒன்றையும் அறியாதவர் போல, சோகத்தில் சிக்கியிருப்பது ஏன்?’ என்று கேட்டார்.
‘எனக்கு ஏன் மனநிறைவு ஏற்படவில்லை என்பது கூட எனக்குப் புரியவில்லை‘ என்று தொடங்கிய வியாசர் மேலும் சொன்னார்:
வேதங்களைப் பயின்று, அவற்றின் பொருளை முழுமையாக அறிந்து, ப்ரும்ம தத்துவத்தை உணர்ந்தேன். ஆனாலும் என்னிடம்பரீக்ஷித்திற்கு ஸ்ரீமத் பாகவதம் கூறப்பட்ட போது, நானும் அங்கிருந்து அதைக் கேட்கிற வாய்ப்பு பெற்றேன். கலியுலகில், ஞானம் சற்றும் இல்லாமையால், அவதியுறுகிற மக்களுக்கு இந்த பாகவத புராணம், சூர்யன் போல தோன்றியிருக்கிறது. அந்த புராணத்தை, சுகர் கூற, நான் கேட்டவாறே உங்களுக்கு விளக்கு கிறேன்‘ என்று சொன்னார்.
இப்படித் தொடங்கி, ஸுதர் அந்த ரிஷிகளுக்கு கூறிய பாகவத புராணம் வியாசரால் எப்படிச் செய்யப்பட்டது என்பதைப் பார்ப்போம்.
கலியுகம் தொடங்கிய காலம். வியாசர் கவலையுற்றிருந்தார். வேதங்களை பிரித்து அளித்தும், பின்னர் அந்த வேதங்களின் ஸாரத்தை மஹாபாரதத்தின் மூலமாக அனைவரும் அறிந்து கொள்ள வசதி செய்து தந்தும் கூட, அவர் திருப்தியைக் காணவில்லை. இதைப் பற்றி சிந்தித்து, ‘என்ன செய்தால் எல்லா வகை மக்களுக்கும் நன்மை உண்டாகிற பாதை போடப்படும்?’ என்பது பற்றி அவர் யோசனையில் ஆழ்ந்தார்.
அப்போது வியாசர் அமர்ந்திருந்த ஸரஸ்வதி நதிக் கரையில் இருந்த அவருடைய ஆசிரமத்திற்கு, நாரத மஹரிஷி வந்து சேர்ந்தார். வியாசர் கவலையுற்றிருப்பதைப் பார்த்து ‘அறியப்பட வேண்டிய எல்லாவிதமான தர்மங்களையும், முழுமையாகக் காட்டுகிற அதிசயிக்கத்தக்க நூலாகிய மஹாபாரதத்தை இயற்றிய நீர், ப்ரும்மத்தை உணர்ந்தவர். அப்படிப்பட்ட மகிமை வாய்ந்த நீங்கள், ஒன்றையும் அறியாதவர் போல, சோகத்தில் சிக்கியிருப்பது ஏன்?’ என்று கேட்டார்.
‘எனக்கு ஏன் மனநிறைவு ஏற்படவில்லை என்பது கூட எனக்குப் புரியவில்லை‘ என்று தொடங்கிய வியாசர் மேலும் சொன்னார்:
வேதங்களைப் பயின்று, அவற்றின் பொருளை முழுமையாக அறிந்து, ப்ரும்ம தத்துவத்தை உணர்ந்தேன். ஆனாலும் என்னிடம் ஏதோ குறையிருப்பதாகவே தோன்றுகிறது. நீரோ, மூவுலகத் திலும் ஸஞ்சரிப்பவர். ஸகல பிராணிகளின் புத்தியையும் புரிந்து கொண்டவர். நான் ஏன் இப்படி ஏதோ குறைவது போல உணர்கிறேன் என்பதை, நீங்கள்தான் விளக்க வேண்டும்’ என்றார் வியாசர்.
நாரதர் சொன்னார் : ‘ஸ்ம்ருதிகளில் கூறப்பட்டிருப்பது போல பல தர்மங்களை மஹாபாரதத்தில் எடுத்துச் சொன்னீர். பகவானின் குணங்களையும் ஓரளவு வர்ணித்தீர்; ஆனால் முழுமையாக அதைச் செய்யவில்லை. பகவானின் மகிமையை முக்கியமாக வைத்து நீர் ஒரு நூல் இயற்றவில்லை. எந்த நூலில் பகவானின் திரு நாமமும், அவருடைய மகிமையைப் பற்றிய வர்ணனைகளும் கொட்டிக் கிடக்கின்றனவோ, அந்த நூல் மக்களின் பாபங்களைப் போக்கும்.
‘சாத்திரங்களை அறிவது, யாகங்களைச் செய்வது, தானங்கள் புரிவது, அன்பான வார்த்தைகளையே பேசுவது போன்ற எல்லா வற்றையும் விட, பகவானிடம் பக்தி செலுத்துவதே உயர்வானது என்ற உண்மையை சிறப்பாகக் காட்டுகிற பரம புருஷனின் சரித்திரத்தை எழுதுவீராக! துக்கத்தினால் பீடிக்கப்பட்டவர்களுக் கெல்லாம், அருமருந்தாக விளங்கக் கூடியது அதுவே…’
இப்படிக் கூறிய நாரதர், தான் பக்தியினால் சிறப்பு பெற்ற தையும் வியாசருக்கு எடுத்துச் சொல்லிவிட்டு, அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.
வியாசர் மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில் ஆழ்ந்தார். பக்தி யோகத்தை முழுமையாக உணர்ந்து, உலகை சூழ்ந்திருக்கும் அஞ்ஞானம் விலகுவதற்காக, ஸ்ரீமத் பாகவதம் என்கிற புராணத்தை இயற்றினார்.