சுகர், பரீக்ஷித் மன்னனுக்குக் கூறியதை, ஸுதர், ரிஷிகளுக்கு விளக்கிச் சொன்னார் :
‘அரசனே! ப்ரும்மதேஜஸை அடைய விரும்புகிறவன், ப்ரும்மதேவனை பூஜிக்கிறான். இந்திரியங்களின் வல்லமையை விரும்புகிறவன், இந்திரனை வேண்டுகிறான். மக்கட் செல்வத்தை விரும்புகிறவன், தக்ஷன் முதலிய பிரஜாபதிகளை வேண்டுகிறான். சுகவாசத்தை விரும்புகிறவன், அதிதி தேவியையும்; ஸ்வர்க்கத்தை நாடுகிறவன் விச்வே தேவர்களையும்; மற்றவர்களை தன் வசப்படுத்த முனைகிறவன் ஸாத்யர்களையும்; செழிப்பை விரும்புகிறவன் அக்னி பகவானையும்; பணத்தை நாடுகிறவன் ருத்ரர்களையும்; நீண்ட ஆயுளை விரும்புகிறவன் அச்வினி தேவர் களையும்; ஆரோக்யத்தை விரும்புகிறவன் பூமா தேவியையும்; தனது அந்தஸ்தை இழக்காமலிருக்கிற வாய்ப்பை நாடுபவன் ஆகாசம், பூமி ஆகியவற்றையும் பூஜிக்கிறார்கள்.
‘அழகை நாடுகிறவன் கந்தர்வர்களையும்; பெண்ணை விரும்பு கிறவன் ஊர்வசியையும்; பலருக்கு எஜமானனாகத் திகழ ஆசைப்படுகிறவன் மகாவிஷ்ணுவையும்; பெரும் நிதியை விரும்புகிறவன் வருணனையும்; சிறப்பை விரும்புகிறவன் பரம சிவனையும்; தம்பதிகளாக இருந்து, பிரியாமல் இருக்க விரும்பு கிறவர்கள் உமா தேவியையும், தர்மத்தை விரும்புகிறவன் மஹா விஷ்ணுவையும்; தனது வம்சம் தொடர்ந்திருக்க புத்திரனை வேண்டுபவர்கள் பித்ருக்களையும் பூஜிக்கிறார்கள். தொல்லையிலிருந்து விடுபட விரும்புகிறவன் யக்ஷர்களைப் பூஜிக்கிறான். பலத்தை நாடுகிறவன் மருத்துக்களை பூஜிக்கிறான். ராஜ்யத்தை விரும்புகிறவன் தேவர்களை பூஜிக்கிறான். பகைவனை அழிக்க விரும்புகிறவன் நிருருதியை பூஜிக்கிறான். போகத்தை விரும்புகிறவன் ஸோமனை பூஜிக்கிறான்.
‘வைராக்கியத்தை விரும்புகிறவனோ, பரம புருஷனையே பூஜிக்க வேண்டும். பல தேவர்களை பூஜிப்போருக்கும், பக்தர் களுடைய சேர்க்கையினால், பகவானிடத்திலேயே இறுதியில் மனம் லயிக்கிறது. அதுவே மனித ஜன்மத்திற்கு கிட்டக் கூடிய பெரும் பலன். அந்த பகவானின் சரிதத்தைக் கேட்பதே ஆசை, துவேஷம் போன்றவற்றை அகற்றி, ஞானத்தைத் தருகிறது; மன தைத் தூய்மையாக்குகிறது; வைராக்யத்தை அளித்து, மோக்ஷத்தை அடைகிற வழியாகிய பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்துகிறது‘
சுகர் கூறியதை இப்படி விவரித்த ஸுதரிடம், அங்கு கூடி யிருந்த ரிஷிகளில் ஒருவராகிய சௌனகர் சொன்னார்: ‘ஒவ்வொரு தினமும் உதயமாகி, பின்னர் அஸ்தமனம் அடைகிற சூரி யன், வீணாகக் காலம் கழிக்கிற மனிதர்களின் ஆயுளைக் குறைக்கிறான். அந்த மனிதர்கள், உயிர் பிழைத்திருப்பதைத் தவிர, வேறு எதையும் அடைவதில்லை; இந்த தங்கள் நிலையை அவர்கள் உணர்வதும் இல்லை. அவர்களுக்கும் மிருகங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மிருகங்கள் உணவு உட்கொள்ள வில்லையா? அலைந்து திரியவில்லையா? உறக்கம் கொள்வ தில்லையா? காம சுகம் காண்பதில்லையா? பகவானின் சரித் திரத்தை எவன் கேட்பதில்லையோ, அவன் இந்த மிருகங்களைப் போன்றவன்தான்…
‘எந்த மனிதனின் காதுகள், பகவானின் மேன்மையைப் பற்றி கேட்கவில்லையோ, அந்தக் காதுகள், பாம்புகள் புகுந்துகொள்ள வேண்டிய புற்றுக்கள். எவனுடைய தலை, பகவானை வணங்க வில்லையோ, அந்தத் தலையானது ஒரு சுமை. எவனுடைய கண்கள், பகவானின் திவ்ய குணத்தைக் காட்டுகிற விக்ரஹங் களை தரிசிக்கவில்லையோ, அந்தக் கண்கள், மயில்தோகையில் காணப்படுகிற கண்கள் போல வெற்றுச் சித்திரங்களே. எவன் பகவானின் பக்தர்களின் பாதங்களில் ஒட்டிய தூசியைக் கூடப் பார்க்கவில்லையோ, அவன் நடந்து கொண்டிருக்கும் ஒரு பிணம்.
ஆகையால் ஸுதரே! பகவானுடைய சரிதத்தைச் சொல்லவும், கேட்டும் கழிக்கப்படும் காலமே மேலானது. ஆத்ம வித்தையை அறிந்த வியாசர் மகனாகிய சுகர், பரீக்ஷித் மன்னனுக்குக் கூறி யதையெல்லாம் எங்களுக்கு விவரித்துச் சொல்லுங்கள். நாங்கள் அதைக் கேட்க ஆவலுடன் இருக்கிறோம்‘.
இவ்வாறு சௌனகர் கேட்டுக் கொண்ட பிறகு, பரீக்ஷித் மன்னனுக்கு படைப்பை பற்றி சுகர் கூறிய விளக்கங்களை, ஸுதர் சொன்னார். ப்ரும்ம தேவன், நாரதருக்கு, இது தொடர்பாக விளக்கிச் சொன்ன விவரங்களை எல்லாம் சுகரின் வாயிலாக, பரீக்ஷித் அறிந்து கொண்டான். மேலும் பல தத்துவங்களைப் புரிந்து கொள்ள விரும்பிய பரீக்ஷித் மன்னனுக்கு, சுகர் கூறிய பதிலை, ஸுதர் சொல்லத் தொடங்கினார்.
முன்பு விதுரர், பாரத யுத்தம் முடிந்த பிறகு, மைத்ரேயர் என்ற மஹரிஷியைச் சந்தித்தார். அப்போது மைத்ரேயர், விதுரருக்கு இது தொடர்பாக பல விளக்கங்களை அளித்தார். அதைச் சொல்கிறேன்‘.
இவ்வாறு சுகர் கூறியபோது பரீக்ஷித், விதுரரும் மைத்ரேயரும் சந்தித்துக் கொண்டது எப்படி என்பதைப் பற்றிக் கேட்டார். பாரத யுத்தம் முடிந்து, யமுனை நதிக்கரையில், விதுரர், ஒருமுறை உத்தவர் என்ற முனிவரைச் சந்தித்தார். மற்றவர்களை விட்டு தனியே சஞ்சரித்துக் கொண்டிருந்த விதுரர், அப்போது உத்தவரிடம், எல் லோருடைய நலன் பற்றியும் விசாரித்து விட்டு, கிருஷ்ணரைப் பற்றியும் கேட்டார்.
சோகத்தினால், உத்தவரின் கண்களில் கண்ணீர் பெருகியது. ‘காலம் என்கிற பாம்பு, நம்முடைய வாழ்க்கைகளை எல்லாம் கவ்விக் கொண்டு விட்டது; கிருஷ்ணர் என்கிற சூரியன் அஸ்தமன மாகியது. இவ்வுலகம் பாக்கியத்தை இழந்தது. கிருஷ்ணர் மறைந்து, வைகுண்டம் திரும்பினார்.
‘விதுரா! யாதவர்கள் விவரமறிந்தவர்கள்; சாமர்த்தியசாலிகள். ஆனால் அவர்களே கூட, கிருஷ்ணரை தங்களிலேயே சிறந்தவர் என்று கருதினார்களே தவிர, அவரே மஹாவிஷ்ணு என்பதை அவர்கள் உணரவில்லை. பாற்கடலில் கிடந்த மீன்கள், தங்க ளிடையே நீரில் இருந்த சந்திரனையும் கூட ஒரு மீன் போலவே நினைத்தனவே தவிர, அமிர்த ஸ்வரூபம் கொண்டவன் அவன் என்பதை தெரிந்து கொள்ளவில்லை. அதுபோல யாதவர்கள், பகவானை தங்களிடையே பிறந்த, தங்களுடைய உறவினனாகவே நினைத்தார்கள்; பரமபுருஷன் என்று புரிந்து கொள்ளவில்லை. சிசுபாலன் போன்ற சிலரோ, பகவானை நிந்திக்கவும் செய்தார்கள்.
ஆனால், இப்படிப்பட்டவர்களுடைய நடத்தையினாலோ, அல்லது பேச்சினாலோ பகவானிடமே மனதை வைத்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
அவர் வைகுண்டம் திரும்புவதற்கு முன்பாக அவரை பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. பூபாரத்தைக் குறைப்பதற்காக அவதரித்து, பல வகைகளில் அக்காரியத்தைச் செய்து, இறுதியில் பாரதப் போரில் அக்காரியத்தின் பெரும் பகுதி முடிந்ததையும் பகவான் கண்டார். ஆனால் அவருடைய அம்சம் கொண்ட ப்ரத்யும்னன் போன்றவர்களால் காப்பாற்றப்பட்ட யாதவர்கள் நாசமடையவில்லை. அவர்களே ஒருவருக்கொருவர் மோதி, பெரும் அழிவைத் தேடிக் கொண்டால்தான், பூபாரம் நன்றாகக் குறையும் எண்றெண்ணிய பகவான், யாதவர்களிடையே பெரும் கலகத்திற்கு வழி செய்தார். அந்த அழிவும் ஏற்பட்டது.
அப்படிப்பட்டவரை நான் சந்தித்தபோது, என் மீது கருணை கொண்டு, ‘இதுவே உனது கடைசி ஜன்மம்‘ என்று கூறி அருளினார். அப்போது நான் ‘நீங்கள் ப்ரும்ம தேவருக்கு எந்த மேலான ஞானத்தை உபதேசம் செய்தீர்களோ, அதை நானும் தெரிந்து கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்தால், அதை எனக்கும் உபதேசம் செய்யுங்கள்‘ என்று கேட்டுக் கொண்டேன்.
ஸ்ரீ கிருஷ்ணர் மனமுவந்து, என்பால் தயை வைத்து, எனக்கு உபதேசம் செய்தார். நான் ஆத்மஞானம் கிடைக்கப் பெற்றேன்‘.
இவ்வாறு உத்தவர் கூறியபோது, விதுரர் பாரதப் போர் முடிந்து, யாதவர்களிடையே கலகம் உண்டாகி, இக்காரணங்களினால் பெரும் அழிவும் ஏற்பட்டதையெல்லாம் விவரமாக அறிந்து, அதனால் தனக்கு ஏற்பட்ட துக்கத்தை, தன்னுடைய இயல்பான விவேகத்தின் மூலமாக அடக்கிக் கொண்டார். பின்னர் அவர், உத்தவரைப் பார்த்து, ‘எந்த மேலான ஞானத்தை ஸ்ரீ கிருஷ்ணர் உங்களுக்கு உபதேசித்தாரோ அதை நீங்கள் எனக்கு உபதேசிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார்.
உத்தவர், ‘விதுரா! பகவான் பூலோகத்தை விட்டு, வைகுண்டம் செல்வதற்கு முன்பாக, உனது நன்மையைக் கருதி, உனக்கு உபதேசம் செய்யுமாறு மைத்ரேய மஹரிஷிக்கு உத்திரவிட்டார். ஆகையால், நீ சென்று மைத்ரேயரை சந்திப்பாயாக!’ என்று கூறினார்.
விதுரர், உத்தவரிடமிருந்து விடைபெற்று, மைத்ரேயரை சந்திப்பதற்காகப் புறப்பட்டுச் சென்றார். கங்கைக் கரையில் மைத்ரேயரைச் சந்தித்த விதுரர், அவரை வணங்கி, மஹாவிஷ்ணு வின் மகிமையை தனக்கு எடுத்துரைக்குமாறு கேட்டுக் கொண்டார். ‘சுகத்தைப் பெறுவதற்காக, மனிதர்கள் பல கர்மங்களைச் செய் கிறார்கள். ஆனால் அக்காரணங்களினால் துக்கமும் குறைவ தில்லை; சுகமும் கிட்டுவதில்லை. சாதுக்களில் சிறந்தவரே! பகவானை எப்படி துதித்தால், ஒருவனுக்கு இதயத் தூய்மை உண்டாகும்? மஹாவிஷ்ணுவின் சரித்திரத்தையும், அதன் பொருளை யும் முழுமையாக அறிந்தவர் நீங்கள். எனக்கு உபதேசம் செய் யுங்கள்‘.
இவ்வாறு கூறிய விதுரரைப் பார்த்து மைத்ரேயர் சொன்னார்: ‘விதுரா! நீ வியாசரின் மகன் என்பதால், பகவானின் சரிதத்தைக் கேட்பதில் உனக்கிருக்கிற ஆவல், எனக்கு வியப்பைத் தர வில்லை. அதுவுமின்றி விஷ்ணுவிடத்தில் மாறாத பக்தி வைத்து, அவரை தன் வசமாகச் செய்து கொண்டவன் அல்லவா நீ! அத னால்தான், வைகுண்டம் செல்லும்போது கூட, ஸ்ரீ கிருஷ்ண பகவான், உன்னை தனது நினைவில் நிறுத்திக் கொண்டு, உனக்கு உபதேசம் செய்விக்குமாறு, எனக்குக் கட்டளை பிறப்பித்தார். ஆகையால் நீ கேட்டுக் கொண்டபடியே, நான் அறிந்ததை உனக்குச் சொல்கிறேன்‘.
இவ்வாறு சொல்லி விட்டு, மைத்ரேயர் தனது உபதேசத்தைத் தொடங்கினார் என்று சுகர், பரீக்ஷித்திடம் கூறினார். சுகர், பரீக்ஷித் மன்னனுக்குக் கூறியதை, ஸுதர், ரிஷிகளுக்கு விளக்கிச் சொன்னார் :

இவ்வாறு சொல்லி விட்டு, மைத்ரேயர் தனது உபதேசத்தைத் தொடங்கினார் என்று சுகர், பரீக்ஷித்திடம் கூறினார்.