ஸ்ரீமத் பாகவதம் – 5

மைத்ரேயர், விதுரருக்கு அளித்த விளக்கங்கள் தொடர்ந்தன:

ஸ்வாயாம்புவ மனுவின் வம்சத்திலிருந்தே, மக்கள் இவ்வுல கில் தோன்றினர். அவருடைய மகன்களாகிய ப்ரியவிரதன், உத்தான பாதன் ஆகியோர், இவ்வுலகை ஆண்டு வந்தனர். மனுவின் மக ளும், ப்ரியவிரதன், உத்தானபாதன் ஆகியோருக்கு சகோதரியுமான தேவஹூதியை, மனு, ப்ரும்ம தேவனின் அருளால் தோன்றிய கர்த்தமர் என்ற ப்ரஜாபதிக்கு (மக்களுக்கு அதிபர்மக்களை தோற்றுவித்தவர்) மணம் செய்வித்தார்.

கர்த்தமர், தேவஹூதி! உன்னால் பூஜிக்கப்படுகிற பகவான் உனக்கே மகனாகப் பிறப்பார். அவரே உனக்கு ஞானத்தையும் அளிப்பார்என்று வாழ்த்தினார். அவர்களுக்கு கபிலர் என்ற மக னாக, பகவான் அவதரித்தார். சாங்கிய யோகத்தை, மக்களிடையே ஸ்தாபிப்பதற்காக, இவ்வாறு பகவான் அவதாரம் செய்தார். கபிலர் தவிர, கர்த்தமருக்கும் தேவஹுதிக்கும் மகள்களும் பிறந்தனர். அவர்களை சிறந்த மஹரிஷிகளுக்கு மணம் செய்விக்குமாறு ப்ரும்ம தேவன், கர்த்தமருக்கு கட்டளையிட்டார். அதன்படியே புலஸ் தியர், மரீசி, அத்ரி, அங்கீரஸ், க்ரது, புலஹர், ப்ருகு, வஸிஷ்டர், அதர்வா என்கிற மஹரிஷிகளுக்குமுறையே தன் மகள்களாகிய கலை, அனஸூயை, சிரத்தை, ஹவிர் பூ, க்ரியை, கதி, க்யாதி, அருந்ததி, சாந்திஆகியோரை கர்த்தமர் மணம் செய்வித்தார். பகவானாகிய மஹாவிஷ்ணுவே தன்னுடைய மகன் கபிலராக அவதரித்திருக்கிறார் என்பதை உணர்ந்த கர்த்தமர், அவரை வேண்டிக் கொண்டு, ஸன்யாஸ மார்க்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்கிற தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

அப்போது கபிலராக அவதரித்திருந்த மஹாவிஷ்ணு, ‘சரீரத்தில் உள்ள ஆசையை விட வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு, ஆத்ம ஞானத்தை உபதேசிக்கவே நான் அவதரித்தேன்.அந்த ஞான மார்க்கம் சூட்சுமம் நிறைந்தது. அதை உலகில் பரவச் செய்வதற் காகவே, நான் கபிலராக அவதரித்திருக்கிறேன். நீர் ஸன்யாஸ மார்க்கத்தை மேற்கொள்ள, நான் அனுமதி தருகிறேன். வெல்வ தற்கு மிகக் கடினமான ஸம்ஸார பந்தத்தை வென்று, மோக்ஷத்தை அடைவதற்காக என்னையே நினைப்பீராக! உம்முடைய மனைவி யும், என்னுடைய தாயாருமாகிய தேவஹூதிக்கும் நான் ஞானத்தை உபதேசிப்பேன். அதன் மூலம் அவள் மேன்மை பெறுவாள்என்று கூறினார். அவர் கூறியவாறே நடந்து கொண்டு கர்த்தமர் மோக்ஷத்தை அடைந்தார்.

கபிலரும், அவருடைய தாயாரான தேவஹூதியும் பிந்துசரஸ் என்ற நதிக்கரையில் வசித்து வந்தனர். ஒருநாள், தேவஹூதி, தன் மகனும், மஹாவிஷ்ணுவின் அவதாரமுமாகிய கபிலரை அணுகி, ஒரு வேண்டுகோளை அவர் முன் வைத்தாள். ‘மஹாவிஷ்ணுவே, உனக்கு மகனாக பிறப்பார்என்று ப்ரும்ம தேவன், முன்பே தேவ ஹுதிக்குச் சொல்லியிருந்தார்; அதை நினைவில் வைத்துக் கொண்டு, தேவஹூதி பேசினாள் : ‘நான், எனது என்ற எண் ணங்கள் உம்மால் தோற்றுவிக்கப்பட்டவையே; ஆகையால் அவற் றிலிருந்து விடுபடுவதும், உமது கருணையைப் பொறுத்ததே. பந்தம், பாசம் என்கிற பெரிய மரத்தை வெட்டக் கூடிய கோடாரி, உமது அருளே. நான் அவ்வித நிலையை எய்துவதற்காக, உமது கருணையை வேண்டி நிற்கிறேன்‘.

இவ்வாறு பேசிய தனது தாயாரை நோக்கி, கபிலர், எதன் மூலமாக, சுகம், துக்கம் எல்லாவற்றையும் கடந்த நிலையை அடைய முடியுமோ, அந்த ஞானத்தை, உனக்காக மட்டுமில்லாமல்,பகவானாகிய மஹாவிஷ்ணுவே தன்னுடைய மகன் கபிலராக அவதரித்திருக்கிறார் என்பதை உணர்ந்த கர்த்தமர், அவரை வேண்டிக் கொண்டு, ஸன்யாஸ மார்க்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்கிற தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

அப்போது கபிலராக அவதரித்திருந்த மஹாவிஷ்ணு, ‘சரீரத்தில் உள்ள ஆசையை விட வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு, ஆத்ம ஞானத்தை உபதேசிக்கவே நான் அவதரித்தேன்.அந்த ஞான மார்க்கம் சூட்சுமம் நிறைந்தது. அதை உலகில் பரவச் செய்வதற் காகவே, நான் கபிலராக அவதரித்திருக்கிறேன். நீர் ஸன்யாஸ மார்க்கத்தை மேற்கொள்ள, நான் அனுமதி தருகிறேன். வெல்வ தற்கு மிகக் கடினமான ஸம்ஸார பந்தத்தை வென்று, மோக்ஷத்தை அடைவதற்காக என்னையே நினைப்பீராக! உம்முடைய மனைவி யும், என்னுடைய தாயாருமாகிய தேவஹூதிக்கும் நான் ஞானத்தை உபதேசிப்பேன். அதன் மூலம் அவள் மேன்மை பெறுவாள்என்று கூறினார். அவர் கூறியவாறே நடந்து கொண்டு கர்த்தமர் மோக்ஷத்தை அடைந்தார்.

கபிலரும், அவருடைய தாயாரான தேவஹூதியும் பிந்துசரஸ் என்ற நதிக்கரையில் வசித்து வந்தனர். ஒருநாள், தேவஹூதி, தன் மகனும், மஹாவிஷ்ணுவின் அவதாரமுமாகிய கபிலரை அணுகி, ஒரு வேண்டுகோளை அவர் முன் வைத்தாள். ‘மஹாவிஷ்ணுவே, உனக்கு மகனாக பிறப்பார்என்று ப்ரும்ம தேவன், முன்பே தேவ ஹுதிக்குச் சொல்லியிருந்தார்; அதை நினைவில் வைத்துக் கொண்டு, தேவஹூதி பேசினாள் : ‘நான், எனது என்ற எண் ணங்கள் உம்மால் தோற்றுவிக்கப்பட்டவையே; ஆகையால் அவற் றிலிருந்து விடுபடுவதும், உமது கருணையைப் பொறுத்ததே. பந்தம், பாசம் என்கிற பெரிய மரத்தை வெட்டக் கூடிய கோடாரி, உமது அருளே. நான் அவ்வித நிலையை எய்துவதற்காக, உமது கருணையை வேண்டி நிற்கிறேன்‘.

இவ்வாறு பேசிய தனது தாயாரை நோக்கி, கபிலர், எதன் மூலமாக, சுகம், துக்கம் எல்லாவற்றையும் கடந்த நிலையை அடைய முடியுமோ, அந்த ஞானத்தை, உனக்காக மட்டுமில்லாமல், பொதுவாகவே மக்களின் நன்மைக்காகவும் நான் விளக்குகிறேன். சம்சார பந்தத்தில் சிக்குவதற்கும் சரி, முக்தியை அடைவதற்கும் சரி, மனமே காரணம். பல விஷயங்களைப் பற்றி, மனதில் பற்று தோன்றுகிறபோது, மனம் பந்தத்திற்குக் காரணமாகிறது; அதே மனதில் இவை பற்றி எல்லாம் ஒரு வைராக்கியம் தோன்று கிறபோது, மனம் மோக்ஷத்தை அடைய வழி செய்கிறது. நான், என்னுடையது என்ற சிந்தனைகள் மனதை விட்டு விலகினால், அப்போது மனம் தூய்மை அடைகிறது‘.

கபிலர் தொடர்ந்து சொன்னார்: ‘ஏற்கெனவே மேன்மை பெற்றுள்ள ஸாதுக்களிடம் நெருக்கம் ஏற்பட்டால், அதுவே மோக்ஷ மார்க்கத்திற்கு வழி தேடித் தரும். பொறுமை, கருணை, எல்லா ஜீவராசிகளிடத்திலும் அன்பு, யாரிடமும் பகை இல்லாத தன்மை, நிலையான சிந்தனை, தயை, போன்ற குணங்களை உடையவர்களே ஸாதுக்கள். அவர்கள் எல்லா ஆசைகளையும் அறுத்தவர்கள். என்னிடம் மாறாத பக்தி செலுத்துபவர்கள். அவர் களுடைய சகவாசம், எல்லா பாவங்களையும் போக்கும். அவர் களிடமிருந்து என்னுடைய சரிதத்தைக் கேட்பதினால், பக்தி பெரு கும். அதுவே மோக்ஷத்தைத் தரும்

தேவஹுதி, பக்தியின் தன்மை பற்றி விளக்கம் கோருகிற கேள்விகளை கபிலர் முன் வைத்தாள்.

கபிலரின் உபதேசம் தொடர்ந்தது: ‘எல்லா இந்த்ரியங்களும் பகவானிடமே ஐக்கியமானால், அதுவே பக்தி. (அதாவது, மனம்அதில் தோன்றுகிற எண்ணங்கள், பல இந்திரியங்களைப் பயன் படுத்தி செய்கிற செயல்கள், அனுபவிக்கும் ருசிகள், காணும் காட்சி கள், நுகரும் வாசனைகள் எல்லாமே இறைவனை பற்றித்தான் என்ற நிலையை அடைந்தால், அதுவே முழுமையான பக்தி). யார் என்னையே, தனது ஆத்மாவாகவும், மகனாகவும், அன்புக்குரிய வனுமாகவும், நண்பனாகவும், இஷ்ட தெய்வமாகவும் நினைக் கிறார்களோ, அவர்களை காலமானது தொல்லைப்படுத்துவ தில்லை. செல்வம், உறவினர், சொத்துக்கள் என்பன போன்றவற் றின் மீது ஏற்படுகிற பிணைப்பை விட்டுவிட்டு, எவன் என்னிடம் பக்தி செலுத்துகிறானோ, அவனை சம்சாரக் கடலிலிருந்து நான் மீட்கிறேன்.

பிறப்பும், இறப்பும் சரீரத்திற்கே; ஆத்மாவிற்கல்ல. கனவில் காணப்படுகிற பொருட்கள் நாசமடைகின்றன; ஆனால் அந்தக் கனவை காண்பவனுக்கு அவை நஷ்டமல்ல. அதேபோலத்தான்கனவுக் காட்சிகளில் ஏற்படுகிற அழிவு போலத்தான்சரீரத்தின் முடிவும். தன் தலை வெட்டப்படுவது போல ஒருவன் கனவு கண்டால், உண்மையிலேயே தலை வெட்டுண்டு போவதில்லை அல்லவா?

மேலும் தேவஹூதியின் சந்தேகங்களுக்கு கபிலர் விளக்க மளித்தார்: ‘கிடைத்ததை வைத்துக் கொண்டு மகிழ்ச்சி;மிதமான உணவு; எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு; மனதில் உறுதி; சஞ்சலமில்லாமை; இயன்றவரை மௌனம்என்று தன்னை பக்குவப்படுத்திக் கொண்டு, ‘என்னுடையது, என்னைச் சார்ந்த வர்கள்என்ற எண்ணங்களை அகற்றி, என்னிடம் பக்தி செலுத்து கிறவன், ஆத்மாவைக் காண்பான். ப்ரம்ஹத்தையும் எய்துவான்.

யோகத்தை முறையாகக் கடைப்பிடிக்க விரும்புகிறவன், ஒரு அமைதியான, ஜனநடமாட்டம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அங்கு அமர்ந்து, ப்ரணவமாகியஓம்என்பதி லேயே சிந்தையைச் செலுத்த வேண்டும். மனதை ஸ்திரப்படுத்தி, ப்ராணாயாமம் செய்து, தியானத்தில் அமர்வதால், மூச்சுக்காற்று தூய்மை அடைகிறது; மனம் ஒருமுகப்படுத்தப்படுகிறது.

பகவானின் அவயவங்களை ஒவ்வொன்றாக மனதின் முன் நிறுத்தி, தியானம் செய்ய வேண்டும். இதற்கு ஆரம்பம் பகவானின் பாதங்களையே நினைத்து தியானிப்பதாகும். இவ்வாறு ஒருவன் மனம், தனது பற்றையெல்லாம் மறந்து பகவானிடத்திலேயே லயிக்கும்போது, தன்னை ப்ரும்மமாக அவன் பார்க்கிறான். ஒரு விளக்கு, தான் சார்ந்திருந்த திரி முழுமையாகத் தீர்ந்து போகும் போது, சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது; அது போல, தான் பிணைக்கப் பட்டிருந்த பற்றுகளை நீக்கி பகவானையே நினைக்கும்போது, மனிதன் பேரொளி படைத்தவனாகிறான்.பக்தி செலுத்துகிறானோ, அவனை சம்சாரக் கடலிலிருந்து நான் மீட்கிறேன்.

பிறப்பும், இறப்பும் சரீரத்திற்கே; ஆத்மாவிற்கல்ல. கனவில் காணப்படுகிற பொருட்கள் நாசமடைகின்றன; ஆனால் அந்தக் கனவை காண்பவனுக்கு அவை நஷ்டமல்ல. அதேபோலத்தான்கனவுக் காட்சிகளில் ஏற்படுகிற அழிவு போலத்தான்சரீரத்தின் முடிவும். தன் தலை வெட்டப்படுவது போல ஒருவன் கனவு கண்டால், உண்மையிலேயே தலை வெட்டுண்டு போவதில்லை அல்லவா?

மேலும் தேவஹூதியின் சந்தேகங்களுக்கு கபிலர் விளக்க மளித்தார்: ‘கிடைத்ததை வைத்துக் கொண்டு மகிழ்ச்சி;மிதமான உணவு; எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு; மனதில் உறுதி; சஞ்சலமில்லாமை; இயன்றவரை மௌனம்என்று தன்னை பக்குவப்படுத்திக் கொண்டு, ‘என்னுடையது, என்னைச் சார்ந்த வர்கள்என்ற எண்ணங்களை அகற்றி, என்னிடம் பக்தி செலுத்து கிறவன், ஆத்மாவைக் காண்பான். ப்ரம்ஹத்தையும் எய்துவான்.

யோகத்தை முறையாகக் கடைப்பிடிக்க விரும்புகிறவன், ஒரு அமைதியான, ஜனநடமாட்டம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அங்கு அமர்ந்து, ப்ரணவமாகியஓம்என்பதி லேயே சிந்தையைச் செலுத்த வேண்டும். மனதை ஸ்திரப்படுத்தி, ப்ராணாயாமம் செய்து, தியானத்தில் அமர்வதால், மூச்சுக்காற்று தூய்மை அடைகிறது; மனம் ஒருமுகப்படுத்தப்படுகிறது.

பகவானின் அவயவங்களை ஒவ்வொன்றாக மனதின் முன் நிறுத்தி, தியானம் செய்ய வேண்டும். இதற்கு ஆரம்பம் பகவானின் பாதங்களையே நினைத்து தியானிப்பதாகும். இவ்வாறு ஒருவன் மனம், தனது பற்றையெல்லாம் மறந்து பகவானிடத்திலேயே லயிக்கும்போது, தன்னை ப்ரும்மமாக அவன் பார்க்கிறான். ஒரு விளக்கு, தான் சார்ந்திருந்த திரி முழுமையாகத் தீர்ந்து போகும் போது, சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது; அது போல, தான் பிணைக்கப் பட்டிருந்த பற்றுகளை நீக்கி பகவானையே நினைக்கும்போது, மனிதன் பேரொளி படைத்தவனாகிறான்இப்படிப்பட்ட பக்தியும் கூட, பல வகைப்பட்டு விளங்கு கிறது; இதற்குக் காரணம் அவரவர்களுடைய குணாதிசயங்கள். ஹிம்சை, கோபம், இறுமாப்பு போன்ற குணங்கள் உடையவ னுடைய பக்தி, தாமஸ பக்தி; பெரும் புகழ், செல்வம் ஆகிய வற்றை அடைய விரும்பி பகவானை துதிப்பவனுடைய பக்தி ராஜஸ பக்தி; தன்னுடைய கர்மங்களைச் செய்து, யாகங்களை நடத்தி, அவற்றை பரமாத்மாவிடம் அர்ப்பணிக்க வேண்டும் என்று நினைப்பவனின் பக்திஸாத்வீக பக்தி. இவை எல்லாவற்றையும் விட மேம்பட்டது, நிர்குண பக்தி. சமுத்திரத்தில், நதியின் நீர் கலந்து விடுவது போல, என்னிடம் கலந்து, ஆசைகள், விருப்பங்கள், பேதங்கள் ஆகியவற்றை ஒழித்து நிற்பவன் செலுத்துகிற பக்தியே நிர்குண பக்தி; குணங்களைக் கடந்தது அது. மூன்று குணங்களாகிய ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகியவற்றைக் கடந்தவன் பரமாத்மா என்பதால், அவனிடம் செலுத்துகிற பக்தியில் இம்மாதிரி நிர்குண பக்தியே சிறப்பானது. அப்படிப்பட்ட பக்தன், என்னோடு கலந்து விடுகிறான்.

இந்த நிலையை அடையாதவன் கூட, தனது மனதை தூய்மையாக்கிக் கொண்டு, ஆத்மாவை உணர முடியும். பலனை எதிர்பாராமல் பகவானை துதிப்பது; மற்றவர்களுக்கு எவ்வித துன்பமும் இழைக்காமல் இருப்பது; பகவானின் விக்ரஹங்களை தரிசிப்பது; அவற்றை பூஜிப்பது; எல்லா ஜீவராசிகளிடத்திலும் பகவானையே காண்பது; பெரியோர்களை வணங்குவது; குருவின் வழியாக ஆத்ம போதனை பெறுவது; கபடம் சற்றுமில்லாமல் திகழ்வது; தான் என்ற கர்வத்தை ஒடுக்குவதுபோன்றவற்றினால், ஒருவனுடைய மனம் தூய்மையடையும்.

நான் எல்லா ஜீவராசிகளிடமும் இருக்கிறேன். இதை உணரா மல், வெறும் விக்ரஹ பூஜை செய்பவன், சாம்பலை வைத்துக் கொண்டு ஹோமத்தீ வளர்க்க முற்படுகிறவன் போல ஆகிறான். எல்லா ஜீவராசிகளையும் மதிக்க வேண்டும்; இப்படிப்பட்ட பக்தி யோகத்தினால் பரமாத்மாவை அடையலாம்.

வாயுவினால் கலைக்கப்படுகிற மேகம், வாயுவின் தன்மையை உணர்வதில்லை; அது போல, காலத்தினால் இயக்கப்படுகிற மனிதன், காலத்தின் தன்மையை உணர்வதில்லை. ஒரு மனிதன் தன்னுடைய இன்பத்திற்காகவும், வசதிக்காகவும், சம்பாதிக்கிற பொருட்களை காலம் அழிக்கிறது; அதனால் அவன் துன்பமுறு கிறான். இப்படி தன்னுடைய உடலுக்காகவும், மனைவி, மக்களுக் காகவும் வீடு, நிலம், நிதி என்றெல்லாம் சேர்ப்பவன் துன்பத் திலிருந்து விடுபடுவதில்லை. இவையெல்லாம் கிட்டுகிறபோது, அவன் பெரும் மகிழ்வெய்தி, அவற்றை பாதுகாத்துக் கொள்வ தற்காக, பலவிதமான கவலைகளில் சிக்கி, பல பாவ காரியங்களை யும் செய்கிறான். துன்பத்தை விலைக்கு வாங்குகிற காரியங் களையே செய்து கொண்டு, தான் மகிழ்வோடு இருப்பதாகத் தன் னைத் தானே அவன் ஏமாற்றிக் கொள்கிறான்; ஹிம்சை பூர்வமான பல செயல்களைப் புரிந்து, தனது குடும்பத்தைக் காப்பாற்ற முனைகிறான். பொருள் ஈட்டியவன் இப்படியென்றால்-பொருள் ஈட்ட முடியாதவன், பிறர் பொருளை விரும்புகிறான்; பொறாமை யுள்ளவனாகிறான்; சம்பாதிக்க முடியவில்லையே என்ற வருத்தத் தில் மூழ்குகிறான். வயதான காளை மாட்டை, விவசாயிகள் வைத் துக் காப்பாற்றுவதில்லை; அது போல சம்பாதிக்க இயலாதவனை உறவினர்கள் கூட மதிப்பதில்லை. அப்போதும் ஒருவனுக்கு வைராக்யம் தோன்றுவதில்லை. நாய்க்கு சோறு போடுவதைப் போல, வீட்டிலுள்ளவர்கள் அவனுக்கு உணவளிக்கிறார்கள்; அதை யும் உண்டு அவன், ஜீவிக்க விரும்புகிறான்; வியாதிக்குள்ளாகி, உயிரை விடுகிறான்; அப்போது அவன் தான் ஒருவனாகத்தான், தனியாளாகத்தான், எமலோகம் செல்ல நேரிடுகிறது. பின்னர் தாழ்ந்த பிறவிகளை எய்தி, தான் செய்த கர்மத்தின் பலனை அனு பவிக்கிறான்.

கர்ப்பவாசமே கூட செய்த கர்மத்தின் பலன்தான். தாயார் உண் கிற உணவினால் வளர்க்கப்படுகிற ஜீவன், பல அசுத்தங்களுக் கிடையே கர்ப்பத்தில் வளர்கிறது. தாயார் உண்கிற உணவு களில் உள்ள காரம்,உப்பு போன்றவை, அதை ஹிம்சிக்கின்றன. அது வேதனையை அனுபவிக்கிறது. கூண்டுப் பறவையைப் போல சிறைப்பட்டு, அது துன்பமுறுகிறது. அப்போது ‘முன்ஜென்மங்களில் தன்னால் செய்யப்பட்ட கர்மங்களின் பலன் இது’ என்பது அதற்கு தெரிகிறது. அப்போது அந்த மனிதன் இறைவனை நினைக் கிறான். மாயையே நிஜமென நம்பி, முன் பிறவிகளில் செய்த வினையின் பயனாகத்தான், இன்று தனக்கு இந்த கர்ப்பவாசம் கிட்டியது என்பதை நினைத்து வருந்தி, பகவானைத் துதிக்கிறான். ஆனால், பாழுங்கிணறு போன்ற இந்த பூமியை அந்த கர்ப்பம் அடைகிறபோது (பிரசவத்திற்குப் பின்) மாயை, அவனை மீண்டும் பீடிக்கிறது. நான், எனது, எனது ஆசை, எனது விருப்பம், எனது உறவினர்கள்… என்ற எண்ணமெல்லாம் வந்து சேர்கின்றன. பெண் களின் சேர்க்கையால், பெரும் துன்பம் அவனை வந்தடைகிறது.

‘ஆகையால், நான், எனது என்ற எண்ணங்களை அகற்றி பகவானிடம் பக்தி செலுத்த வேண்டும். மோக்ஷத்திற்கு அதுவே வழி

இவ்வாறு தன் மகனும், மஹாவிஷ்ணுவின் அவதாரமுமாகிய கபிலர் செய்த உபதேசத்தைக் கேட்டுக் கொண்டு, தேவஹுதி பரமாத்வைத் துதித்து, ப்ரும்மத்தை எய்தினாள் என்பதை மைத்ரேயர், விதுரருக்கு விவரமாக எடுத்துச் சொன்னார்.