மைத்ரேயர், விதுரருக்குக் கூறிய விளக்கங்கள் தொடர்ந்தன: (இதை சுகர் வாயிலாக பரீக்ஷித் கேட்டுக் கொண்டிருந்தான் என்பதை யும்; ஸுதர் என்றபௌராணிகர், நைமிசாரண்யம் என்ற இடத்தில் கூடியிருந்த பல ரிஷிகளுக்கு இதை விவரித்துச் சொன்னார் என்பதையும் – ஏற்கெனவே பார்த்தோம்.)
‘அத்ரி மஹரிஷியின் மனைவியாகிய அனஸூயை, தத்தர், துர்வாஸர், சந்திரன் – ஆகிய மூன்று மகன்களைப் பெற்றாள். தத்தர் (தத்தாத்ரேயர்) – மஹாவிஷ்ணுவின் அம்சம் உடையவர்; துர்வாஸர் –பரமசிவனின் அம்சம் உடையவர்; சந்திரன் – ப்ரும்மதேவனின் அம்சம் உடையவர்‘ என்று கூறிய மைத்ரேயரிடம், விதுரர் ‘மும் மூர்த்திகள் அத்ரியின் வீட்டில் அவதரித்த விவரத்தை அறிய விரும்புகிறேன்‘ என்று கேட்டுக் கொண்டார்.
மைத்ரேயர் விளக்கங்களை அளித்தார். ‘ப்ரும்மதேவன் மக் களை உண்டாக்குமாறு, அத்ரியைப் பணித்தார். அத்ரி மஹரிஷி, இதை நிறைவேற்றுவதற்காக கடும் தவத்தை மேற்கொண் டார். ‘உலகங்களுக்கு எல்லாம் எவர் தலைவரோ, அவர் தனக்கு நிகரான குழந்தையை எனக்கு அருளட்டும். அவரை நான் சரணம் எய்துகிறேன்‘ என்று மனதில் வேண்டியவாறே தவம் புரிந்து கொண்டிருந்த அவருடைய ஆசிரமத்திற்கு, மும்மூர்த்திகளாகிய ப்ரும்மதேவன், மஹாவிஷ்ணு, பரமசிவன் – ஆகியோர் சென்றனர். அத்ரி மஹரிஷி தனது தவத்தை நிறுத்தி, அவர்களை நமஸ்கரித்து, பூஜித்து விட்டு, பின்வருமாறு பேசினார்:
‘உலகங்களைப் படைப்பது, காப்பாற்றுவது, அழிப்பது என்ற முவ்வகைத் தொழில் புரிகிற உங்களை நான் வணங்குகிறேன். எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. நல்ல மகன் பிறக்க வேண்டும் என்பதற்காக, தேவர்களில் எல்லாம் சிறந்தவர் யாரோ, அவர் எனக்கு அருள்புரிய வேண்டும் என்றுதான் நான் வேண்டிக் கொண் டேன்.ஆனால் நீங்கள் மூவரும் இங்கே வந்திருக்கிறீர்கள். எனக்கு வியப்பாக இருக்கிறது. உலகிற்கெல்லாம் தலைவன் யாரோ, அவனை அல்லவா நான் வேண்டினேன்? அது உங்களில் யார்? பிரமித்து நிற்கும் எனக்கு விளக்கிச் சொல்லுங்கள்‘.
இவ்வாறு கேட்டுக் கொண்ட அத்ரியைப் பார்த்து மூவரும் புன்னகை புரிந்து பேசலுற்றனர். ‘நீர் எப்படி வேண்டிக் கொண் டீரோ, அப்படியே நடக்கட்டும். நீங்கள் யாரிடம் வேண்டிக் கொண்டீரோ, அது நாங்களே. எங்கள் மூவருக்குள் பேதங்கள் எதுவுமில்லை. முத்தொழிலைச் செய்வதால், மூன்றாகத் தெரி கிறோமே அன்றி, எங்களுக்குள் வேறுபாடு இல்லை. உமக்கு, எங்கள் அம்சங்களை உடைய மகன்கள் பிறப்பார்கள்‘ என்று கூறி அம்மூவரும் மறைந்தனர். இவ்வாறுதான் அனஸூயைக்கு, மஹாவிஷ்ணுவின் அவதாரமாகிய தத்தாத்ரேயர் என்கிற தத்தரும், பரமசிவனின் அம்சமாகிய துர்வாஸரும், ப்ரும்மதேவனின் அம்சமாகிய சந்திரனும் பிறந்தனர்‘.
(மைத்ரேயர் கூறிய இந்த விளக்கத்தில், மும்மூர்த்திகளிடையே பேதம் எதுவுமில்லை என்பது தெளிவாக்கப்படுகிறது. ஒவ்வொரு புராணம், ஒவ்வொரு தெய்வத்தை உயர்த்தி, அத்தெய்வத்திடம் மற்ற தெய்வங்கள் பணிவதாகக் காட்டுவதால், அவை பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. ஆனால், ‘அது ஒன்று தான்; பண்டிதர்கள் அதை பல விதமாகக் கூறுகிறார்கள்‘ என்கிற வேத வாக்கியத்தையே புராணங்களும் வலியுறுத்துகின்றன – என் பது மறக்கப்பட்டு விடுகிறது. எல்லா புராணங்களுமே,மும் மூர்த்திகளும் இறைவனின் தோற்றமே என்பதை வற்புறுத்துகின்றன. ஒரு தெய்வத்தின் சிறப்பைக் கூறி, அதனிடம் பக்தி செலுத்துவது மேன்மை தரும் என்று விளக்குவதற்காக, மற்ற தெய்வங்களும், அந்த தெய்வத்தைப் பணிவதாக ஒவ்வொரு புராணமும் காட்டுகிறது; ஆனால் அதே சமயத்தில், எல்லாம் ஒன்றே என்பதை எடுத்துக்காட்டவும் புராணங்கள் தவறவில்லை.
ஒரு தெய்வத்தின் சிறப்புகளைக் கூற முற்படுகிற ஒரு புராணம், மற்ற தெய்வங்களையும் போற்றுகிறது என்பதைக் காட்டுகிற மற்றொரு நிகழ்ச்சியை இப்போது பார்ப்போம்.
மைத்ரேயர், மனுவினால் உண்டாக்கப்பட்ட அம்சங்களை விவரித்துக் கொண்டு போகையில், தக்ஷ யாகத்தைப் பற்றிய நிகழ்ச்சியைக் கூறுகிறார். (இது பற்றி நாம் ஏற்கெனவே பார்த் திருந்தாலும், இப்போது சற்று விவரமாக இதை அணுகுவோம்.)
ப்ரும்மதேவரினால் படைக்கப்பட்ட தக்ஷன், மனுவின் மகளாகிய ப்ரஸூதியை மணந்தான். பல பெண்களைப் பெற்ற தக்ஷன், அவர்களில் ஸதி என்பவளை பரமசிவனுக்கு மணம் முடித் தான். பின்னர் ஒரு யாகம் நடக்கிறபோது, அதற்கு எல்லா தேவர்களும், ரிஷிகளும் வந்திருந்தார்கள். சபையில் தக்ஷன் பிரவேசித்தபோது, அவனுடைய ஒளி வீசுகிற முகம், அந்த சபையையே பிரகாசிக்கச் செய்தது. ப்ரும்ம புத்ரனாகிய அவனை கௌரவிக்க, தேவர்கள், ரிஷிகள் உட்பட எல்லோரும் எழுந்து நின்றனர் – ப்ரும்ம தேவனையும், பரமசிவனையும் தவிர.
தக்ஷனைப் படைத்தவனே ப்ரும்மதேவன்தான் என்பதால், தக்ஷன் ப்ரும்மாவை வணங்கினான். ஆனால் அவனுக்கு பரமசிவன் மீது கோபம் உண்டாயிற்று. ‘எது சம்பிரதாயமோ, அதை மீறு வதே, இவனது வழியாக இருக்கிறது. இவனுக்கு என் மகளை நான் கொடுத்திருக்கிறேன். ஆகையால் நான், இவனால் வணங்கத் தக்கவன். ஆனால் இவனோ அகங்காரம் கொண்டு, மரியாதைக் குறைவாக நடந்து கொண்டுள்ளான். மங்களகரமானது என்ற பொருளை உடைய சிவன் இவனது பெயரே தவிர, இவனது நடத்தையினால் இவன் அசிவன் (அமங்களமானது) ஆகிறான். மற்ற தேவர்களுக்கு சமமாக இவனும் யாகத்தில் ஒரு பாகத்தை அடைவது என்பது கூடாது‘ என்று பேசினான்கின்றன. ஒரு தெய்வத்தின் சிறப்பைக் கூறி, அதனிடம் பக்தி செலுத்துவது மேன்மை தரும் என்று விளக்குவதற்காக, மற்ற தெய்வங்களும், அந்த தெய்வத்தைப் பணிவதாக ஒவ்வொரு புராணமும் காட்டுகிறது; ஆனால் அதே சமயத்தில், எல்லாம் ஒன்றே என்பதை எடுத்துக்காட்டவும் புராணங்கள் தவறவில்லை.
ஒரு தெய்வத்தின் சிறப்புகளைக் கூற முற்படுகிற ஒரு புராணம், மற்ற தெய்வங்களையும் போற்றுகிறது என்பதைக் காட்டுகிற மற்றொரு நிகழ்ச்சியை இப்போது பார்ப்போம்.
மைத்ரேயர், மனுவினால் உண்டாக்கப்பட்ட அம்சங்களை விவரித்துக் கொண்டு போகையில், தக்ஷ யாகத்தைப் பற்றிய நிகழ்ச்சியைக் கூறுகிறார். (இது பற்றி நாம் ஏற்கெனவே பார்த் திருந்தாலும், இப்போது சற்று விவரமாக இதை அணுகுவோம்.)
ப்ரும்மதேவரினால் படைக்கப்பட்ட தக்ஷன், மனுவின் மகளாகிய ப்ரஸூதியை மணந்தான். பல பெண்களைப் பெற்ற தக்ஷன், அவர்களில் ஸதி என்பவளை பரமசிவனுக்கு மணம் முடித் தான். பின்னர் ஒரு யாகம் நடக்கிறபோது, அதற்கு எல்லா தேவர்களும், ரிஷிகளும் வந்திருந்தார்கள். சபையில் தக்ஷன் பிரவேசித்தபோது, அவனுடைய ஒளி வீசுகிற முகம், அந்த சபையையே பிரகாசிக்கச் செய்தது. ப்ரும்ம புத்ரனாகிய அவனை கௌரவிக்க, தேவர்கள், ரிஷிகள் உட்பட எல்லோரும் எழுந்து நின்றனர் – ப்ரும்ம தேவனையும், பரமசிவனையும் தவிர.
தக்ஷனைப் படைத்தவனே ப்ரும்மதேவன்தான் என்பதால், தக்ஷன் ப்ரும்மாவை வணங்கினான். ஆனால் அவனுக்கு பரமசிவன் மீது கோபம் உண்டாயிற்று. ‘எது சம்பிரதாயமோ, அதை மீறு வதே, இவனது வழியாக இருக்கிறது. இவனுக்கு என் மகளை நான் கொடுத்திருக்கிறேன். ஆகையால் நான், இவனால் வணங்கத் தக்கவன். ஆனால் இவனோ அகங்காரம் கொண்டு, மரியாதைக் குறைவாக நடந்து கொண்டுள்ளான். மங்களகரமானது என்ற பொருளை உடைய சிவன் இவனது பெயரே தவிர, இவனது நடத்தையினால் இவன் அசிவன் (அமங்களமானது) ஆகிறான். மற்ற தேவர்களுக்கு சமமாக இவனும் யாகத்தில் ஒரு பாகத்தை அடைவது என்பது கூடாது‘ என்று பேசினான் இதைக் கேட்ட நந்திதேவருக்கு கடும் கோபம் உண்டாகியது. ‘இந்த தக்ஷன், பகவானை நிந்தித்ததால், இவன் தத்துவம் அறியாதவனாகத் திகழட்டும். ஸம்ஸாரத்தில் சிக்கி உழலட்டும். இவனுக்கு விரைவிலேயே ஆடு முகத்தை நிகர்த்த முகம் தோன்றட் டும். இவனை இம்மாதிரி பேச அனுமதித்த ப்ராம்மணர்கள், எல்லாவிதமான உணவுகளையும் உட்கொண்டு, தங்களுடைய அறிவையும், கல்வியையும் பிழைப்பதற்காகவே பயன்படுத்துகிற கீழ்மையை எய்தி, பணமே குறியாக வாழ்ந்து, யாசகர்களாகத் திரியட்டும்‘ – என்று அவர் தக்ஷனையும், அவனை ஏற்றவர்களை யும் சபித்தார்.
சில காலம் கழித்து, தக்ஷன் ஒரு மாபெரும் யாகம் நடத்தி, பல தேவர்களையும் ரிஷிகளையும் வணங்கினான். அந்த யாகத்திற்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை ஸதி, பரமசிவனிடம் தெரிவித்தாள். பரமசிவன், ‘உறவினர்களின் வீட்டிற்கு அழைப்பு இல்லாமலே கூட போகலாம். ஆனால் அவர்கள் நம் மீது விரோதம் கொள்ளாதவர்களாக இருக்க வேண்டும். தான் என்கிற கர்வம் கொண்டு, விவேகமற்று, பெரியவர்களை மதிக்காமல் இருக்கிறவர் கள், உறவினர்கள் ஆனாலும், அவர்கள் வீட்டிற்கு போகக் கூடாது. அவர்கள் பார்க்கிற பார்வையாலும், பேசுகிற வார்த்தைகளினாலும் உண்டாகிற மனத் துயரம், பகைவர்களாலும், அம்புகளினாலும் கூட தோற்றுவிக்கப்படுவதில்லை. தக்ஷனுக்கு என் மீது விரோதம் வளர்ந்திருப்பதால், அவன் உன்னை மதித்து நடத்த மாட்டான். மேன்மையானவர்களின் பெருமைகளைப் பார்த்து, அவற்றை தாங்கள் அடைய முடியாததால், தீயவர்கள் பெரும் பகை கொண்டு, அந்த மேன்மையானவர்களை வெறுக்கிறார்கள். ஸாதுக்கள் ஒருவரை ஒருவர் வணங்குதல் என்பது வழக்கில் இருந்தாலும், அது அறியாமையினால் செய்யப்படுவது; ஞானமுடையவர்களோ, தங் கள் மனதிலேயே வணங்குவார்கள்; ஏனென்றால் அந்த வணக்க மானது, சரீரத்தைக் கருதி செய்யப்படுகிற ஒன்றல்ல‘ – என்று கூறி, தக்ஷனுக்கு முன் தான் எழுந்து நின்று வணக்கம் செலுத்தாமல் இருந்ததற்கான காரணத்தையும் மேற்கண்டவாறு விளக்கி, தனது மனைவியாகிய ஸதி, தக்ஷனின் யாகத்திற்குச் செல்வது,இதைக் கேட்ட நந்திதேவருக்கு கடும் கோபம் உண்டாகியது. ‘இந்த தக்ஷன், பகவானை நிந்தித்ததால், இவன் தத்துவம் அறியாதவனாகத் திகழட்டும். ஸம்ஸாரத்தில் சிக்கி உழலட்டும். இவனுக்கு விரைவிலேயே ஆடு முகத்தை நிகர்த்த முகம் தோன்றட் டும். இவனை இம்மாதிரி பேச அனுமதித்த ப்ராம்மணர்கள், எல்லாவிதமான உணவுகளையும் உட்கொண்டு, தங்களுடைய அறிவையும், கல்வியையும் பிழைப்பதற்காகவே பயன்படுத்துகிற கீழ்மையை எய்தி, பணமே குறியாக வாழ்ந்து, யாசகர்களாகத் திரியட்டும்‘ – என்று அவர் தக்ஷனையும், அவனை ஏற்றவர்களை யும் சபித்தார்.
சில காலம் கழித்து, தக்ஷன் ஒரு மாபெரும் யாகம் நடத்தி, பல தேவர்களையும் ரிஷிகளையும் வணங்கினான். அந்த யாகத்திற்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை ஸதி, பரமசிவனிடம் தெரிவித்தாள். பரமசிவன், ‘உறவினர்களின் வீட்டிற்கு அழைப்பு இல்லாமலே கூட போகலாம். ஆனால் அவர்கள் நம் மீது விரோதம் கொள்ளாதவர்களாக இருக்க வேண்டும். தான் என்கிற கர்வம் கொண்டு, விவேகமற்று, பெரியவர்களை மதிக்காமல் இருக்கிறவர் கள், உறவினர்கள் ஆனாலும், அவர்கள் வீட்டிற்கு போகக் கூடாது. அவர்கள் பார்க்கிற பார்வையாலும், பேசுகிற வார்த்தைகளினாலும் உண்டாகிற மனத் துயரம், பகைவர்களாலும், அம்புகளினாலும் கூட தோற்றுவிக்கப்படுவதில்லை. தக்ஷனுக்கு என் மீது விரோதம் வளர்ந்திருப்பதால், அவன் உன்னை மதித்து நடத்த மாட்டான். மேன்மையானவர்களின் பெருமைகளைப் பார்த்து, அவற்றை தாங்கள் அடைய முடியாததால், தீயவர்கள் பெரும் பகை கொண்டு, அந்த மேன்மையானவர்களை வெறுக்கிறார்கள். ஸாதுக்கள் ஒருவரை ஒருவர் வணங்குதல் என்பது வழக்கில் இருந்தாலும், அது அறியாமையினால் செய்யப்படுவது; ஞானமுடையவர்களோ, தங் கள் மனதிலேயே வணங்குவார்கள்; ஏனென்றால் அந்த வணக்க மானது, சரீரத்தைக் கருதி செய்யப்படுகிற ஒன்றல்ல‘ – என்று கூறி, தக்ஷனுக்கு முன் தான் எழுந்து நின்று வணக்கம் செலுத்தாமல் இருந்ததற்கான காரணத்தையும் மேற்கண்டவாறு விளக்கி, தனது மனைவியாகிய ஸதி, தக்ஷனின் யாகத்திற்குச் செல்வது,அவமதிப்பையே தேடித் தரும் என்பதையும், எடுத்துச் சொன்னார். இறுதியில் பலரால் கௌரவிக்கப்படுகிறவனுக்கு, நெருங்கிய உறவினர்களால் அவமானம் நேரிடுமானால், அவனுக்கு அது மரணத்தை சமீபத்தில் கொண்டு வந்து சேர்க்கும். தக்ஷனின் யாகத்திற்கு நீ செல்வது, உனக்கு நன்மை பயக்காது‘ என்று கூறிவிட்டு, மெளனம் ஆனார்.
அவர் தீர்மானமாக போகக் கூடாது என்று சொல்லாததாலும், பிறந்த வீட்டுப் பாசத்தினால் உந்தப்பட்டதாலும், தக்ஷனின் யாகத்திற்கு ஸதி சென்றாள். தக்ஷனும், அவனுக்கு பயந்து மற்ற பலரும், அவளை ஒரு பொருட்டாக மதிக்காமல் நடந்து கொள்ள, அவளுடைய சகோதரிகளும் தாயாரும் மட்டும் அன்பைப் பொழிந்தார்கள்.பரமசிவனுக்கு பாகம் கொடுக்காமலேயே யாகம் நடப்பதைப் பார்த்து, ஸதிக்கு கோபம் பொங்கியது. இதைக் கண்ட சிவகணங்கள், தக்ஷனை கொல்வதற்கு முன்னேறியபோது, ஸதி அவர்களைத் தடுத்துவிட்டு, தக்ஷனைப் பார்த்து, ‘பரமசிவனை அவமதித்த உன்னால் உண்டான இந்த உடல் நிந்தனைக்குரியது. தக்ஷனாகிய உன் மகள் என்பதால் என்னை ‘தாக்ஷாயணி என்று அவர் அழைக்கும்போது, எனக்கு துக்கம்தான் ஏற்படும். உன் சரீரத்திலிருந்து பிறந்த இந்த என்னுடைய சரீரத்தை நான் துறப்பது தான் சிறந்தது‘ என்று கூறிவிட்டு, தன் உடலிலேயே அக்னியை உண்டாக்கி, அதிலேயே எரிக்கப்பட்டு, சரீரத்தை விட்டாள்.
செய்தி அறிந்த பரமசிவன், பெரும் கோபம் கொண்டு, பயங்கர மான உருவம் படைத்த வீரபத்திரனை தோற்றுவித்து, தக்ஷனையும் அவனுடைய யாகத்தையும் நாசம் செய்யுமாறு கட்டளையிட் டார். வீரபத்திரன் தக்ஷனைத் தாக்கினான்; யாகத்தில் பெரும் நாசம் விளைவித்தான்; வீரபத்திரனுடன் சென்ற சிவகணங்கள், யாகத்தில் பலரைத் துன்புறுத்தினார்கள். தக்ஷனுடைய தலை வீரபத்திரனால் திருகப்பட்டு,தூக்கி எறியப்பட்டது.
தேவர்களும் ரிஷிகளும், ப்ரும்மதேவனை சரணடைந்து (ப்ரும்மதேவனும், மஹாவிஷ்ணுவும் தக்ஷனின் யாகத்திற்குச் செல்லவில்லை) நடந்ததைக் கூறி, எல்லோரையும் காப்பாற்று மாறு வேண்டினார்கள். ப்ரும்மதேவன், ‘பரமசிவன் கோபம் கொண்டால், எல்லா உலகங்களும் நாசமடையும். அவருடைய மஹிமைகள் பற்றி முழுமையாகத் தெரிந்தவர் யாருமில்லை; நானும் முழுமையாக அறியேன்; யஞரும் (மஹாவிஷ்ணுவும்) அறியார். அப்படியிருக்க, நீங்கள் எல்லாம் அதை அறியாமற் போனதில் வியப்பில்லை. அவருடைய கோபத்தைத் தீர்க்கும் வழியை யார் சொல்வது? அவரையே வேண்டிக் கொள்ள வேண்டியதுதான்’ என்று கூறி, பல தேவர்களும், ரிஷிகளும் பின் தொடர, பரமசிவனைச் சென்று தரிசித்தார்.
தன்னை உபசரிப்புடன் வரவேற்ற பரமசிவனைப் பார்த்து ப்ரும்மதேவன் விண்ணப்பம் செய்தான் : ‘எல்லாவற்றையும் விட எது மேலானதோ, எது பேதங்கள் அற்றதோ, அந்த ப்ரும்மம் நீங் கள்தான். நீங்கள் உலகைப் படைக்கிறீர்கள்; காப்பாற்றுகிறீர்கள்; அழிக்கிறீர்கள். நல்ல செயல்களையே புரிபவர்களுக்கு மோக்ஷத் தையும், தீச்செயல்களைப் புரிபவர்களுக்கு நரகவாசமும் அளிப் பவர் தாங்களே. எல்லா ஜீவராசிகளிடமும் நீங்கள் வசிப்பதை உணர்ந்து, எல்லா ஜீவராசிகளும் ஆத்மாவிடத்திலேயே உரை கின்றன என்பதை அறிந்து, உங்களை சரணம் அடைகிற ஸாதுக்கள் மேன்மையானவர்கள். மாயையினால் கட்டுண்டு, புத்தி மயக்கத் திற்கு உட்பட்டு, உங்களை அவமதித்து விட்டவர்களை, எல்லா வற்றையும் அறிந்த, எல்லாவற்றிற்கும் காரணமான, நீங்கள் மன்னித்து அருள வேண்டும். உங்களால் நாசம் செய்யப்பட்ட யாகம், உங்களால் பல அங்கங்களை இழந்த தேவர்கள், ரிஷிகள், உங்களால் மாய்க்கப்பட்ட தக்ஷன் ஆகியோரை எல்லாம் நீங்கள் காப்பாற்ற வேண்டும். நடக்கிற யாகத்தில், உங்கள் பாகத்தினால் யாகம் முடிக்கப்படும்’ என்று ப்ரும்மதேவன் கேட்டுக் கொண்டார்.
பரமசிவனும், அவ்வாறே அருளினார். யாகம் நடந்து முடிந்தது. தக்ஷன் யாகத்தை முடித்தான். ஆனால் நந்திதேவர் சாபம் ஈடேறும் வகையில், அவனுக்கு ஆட்டுத் தலை போன்ற தலை உண் டாயிற்று. ஸதி, பின்னர் ஹிமவான் மகள் பார்வதியாகப் பிறந்து, தவம் செய்து, பரமசிவனை மீண்டும் அடைந்தாள். (இதில், பரமசிவனை, ப்ரும்மம் -அதாவது இறுதித் தத்துவம்- என்று ப்ரும்மதேவனே கூறுகிறார். ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றுமே பரமசிவனால்தான் நடத்தப்படுகின்றன என்றும் அவர் கூறுகிறார். ஸ்ரீமத் பாகவதமோ, விஷ்ணுவைப் போற்றி, அவரிடம் பக்தி செலுத்துவதே மேன்மை தரும் என்று கூறி, பக்தி மார்க்கத்தை வளர்க்கிற புராணம். அந்தப் புராணத்தில் பரமசிவனின் மேன்மை இப்படி வற்புறுத்தப்படுகிறது; ப்ரும்மா, விஷ்ணு, சிவன் மூவருமே ஒன்றுதான் என்பதும் வர்ணிக்கப்படுகிறது. ஆகை யால் புராணங்கள், ஒரு தெய்வத்தைப் புகழ்வதற்காக, மற்ற தெய்வங்களை இகழ்கின்றன என்ற கருத்து சரியானதல்ல. அம் மாதிரி பகுதிகள், ஒரு தெய்வத்தின்பால் மாறாத மனம் கொள்வதே பக்தியை வளர்த்துக் கொள்கிற வழி என்று காட்டி, அதற்காக ஒன்றைப் புகழ்கிற பகுதிகளே தவிர, எதையும் இகழ்கிற நோக்கம் கொண்டவை அல்ல.)
மைத்ரேயர், விதுரருக்குச் செய்த உபதேசம் தொடர்ந்தது.