ஸ்ரீமத் பாகவதம் – 7

உத்தானபாதர் மனுவின் மகன்; அந்த அரசனின் முதல் மனைவிக்குப் பிறந்தவன் துருவன்என்று துருவ சரித்திரத்தை, விதுரருக்கு எடுத்துச் சொல்ல தொடங்கிய மைத்ரேயர், மேலும் தொடர்ந்தார்:

உத்தானபாதரின்

ரண்டாவது மனைவி, துருவனைக் கொடுமைப்படுத்தினாள்; அவன் இது பற்றி தனது தாயாரிடம் முறையிட, அவள்துருவா! மனதை வேறு எந்த திசையிலும் அலைய விடாமல், ஒருமுகப்படுத்தி, பரமபுருஷனை நினைத்து தியானம் செய்வாயாக. நாம் சரண் அடைவதற்கு வேறு எவரும் இல்லைஎன்று கூறினாள்.

துருவன், நகரை விட்டு வெளியேறி, தனிமையான இடத்தில் அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கினான். அந்தச் சிறுவயதில் அவன் தியானம் செய்தது, நாரதரைக் கவர்ந்தது. அவர் அவனைப் பார்த்து, ‘க்ஷத்திரியர்களின் தேஜஸ் (ஒளி) வியக்கத்தக்கதுஎன்று மனதில் நினைத்துக் கொண்டார்.

இப்படி வியந்து, துருவனை அணுகிய நாரதர், ‘சிறுவனே! உன் மனதில் உள்ளதை நான் அறிகிறேன். அவமானம் ஆனாலும் சரி, மதிப்பானாலும் சரி, நமது செயல்களினால்தான் விளைகின்றன; அவற்றிற்கு மற்றவர்களை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை. தெய்வத்திடம் நாம் சேராத வரை, நமது முயற்சிகள் இவ்விஷயத் தில் எந்தப் பலனையும் தராது. கிடைத்ததைப் பெற்று மகிழ்ச்சியுற மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்பம், துன்பம் இரண்டுமே தெய்வ சங்கல்பத்தில் விளைபவை; சுகத்தை அனு பவிக்கும்போது, நமது புண்ணியம் குறைகிறது; அதேபோல துன்பத்தை அனுபவிக்கிற போது பாவம் குறைகிறது.

நமக்கு மேலான வாய்ப்புகள் பெற்றவர்களைப் பார்த்து நாம் மகிழ வேண்டும்; நம்மைவிட தாழ்ந்தவர்களைப் பார்த்து மனதில் கருணை கொள்ள வேண்டும்; நமக்கு நிகராக உள்ளவர்களைப் பார்த்து, அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். இப்படி காலத்தை கழித்தால், சோகத்தைத் தவிர்க்கலாம்

உன்னுடைய தாயார் கூறியது போல பரமபுருஷனாகிய வாசுதேவரை சரண் எய்துவாயாக! அவருடைய பாத சேவையே சரணம் எனப்படுகிறது. யமுனை நதியின் கரையில் உள்ள மது வனம் என்ற புண்ணிய பூமிக்குச் சென்று, மூன்றுவேளை நீராடி தர்ப்பத்தின் மீது அமர்ந்து, மனதில் உள்ள மாசுகளை நீக்குகிற ப்ராணாயாமம் செய்து, நாராயணனைக் குறித்து தியானம் செய். வரத்தை அளிப்பவர்களில் மேலானவராகிய அவரை, வேறு சிந்தனையின்றி மனதில் நினை.

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய (பகவானாகிய வாஸு தேவருக்கு நமஸ்காரம்) என்கிற உயர்ந்த மந்த்ரத்தை நான் உனக்கு உபதேசிக்கிறேன். அதைத் தொடர்ந்து ஜபித்து வருவாயாக. காட்டில் கிடைப்பவற்றை உட்கொண்டு, இந்த தியானத்திலும், ஜபத்திலும் ஈடுபடுவாயாக.

இதன் பின், நாரதரால் உபதேசிக்கப் பெற்ற துருவன், மதுவனத்தை அடைந்து, அவர் கூறியதையும் விட கடுமையான தவத்தில் ஈடுபட்டான். அவனுடைய பக்தியையும், சிரத்தையை யும் மெச்சி, நாராயணன் அவன் முன் காட்சியளித்தார். அவன் மெய்சிலிர்த்துப் போய் அவரை துதித்து, வணங்கினான்.

நாராயணன் அவனுக்கு அருள்புரிந்தார்: ‘உன்னுடைய தந்தை, உன்னிடம் ராஜ்யபாரத்தை ஒப்படைத்து விட்டு, கானகம் செல்வார்.தெய்வத்திடம் நாம் சேராத வரை, நமது முயற்சிகள் இவ்விஷயத் தில் எந்தப் பலனையும் தராது. கிடைத்ததைப் பெற்று மகிழ்ச்சியுற மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்பம், துன்பம் இரண்டுமே தெய்வ சங்கல்பத்தில் விளைபவை; சுகத்தை அனு பவிக்கும்போது, நமது புண்ணியம் குறைகிறது; அதேபோல துன்பத்தை அனுபவிக்கிற போது பாவம் குறைகிறது.

நமக்கு மேலான வாய்ப்புகள் பெற்றவர்களைப் பார்த்து நாம் மகிழ வேண்டும்; நம்மைவிட தாழ்ந்தவர்களைப் பார்த்து மனதில் கருணை கொள்ள வேண்டும்; நமக்கு நிகராக உள்ளவர்களைப் பார்த்து, அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். இப்படி காலத்தை கழித்தால், சோகத்தைத் தவிர்க்கலாம்

உன்னுடைய தாயார் கூறியது போல பரமபுருஷனாகிய வாசுதேவரை சரண் எய்துவாயாக! அவருடைய பாத சேவையே சரணம் எனப்படுகிறது. யமுனை நதியின் கரையில் உள்ள மது வனம் என்ற புண்ணிய பூமிக்குச் சென்று, மூன்றுவேளை நீராடி தர்ப்பத்தின் மீது அமர்ந்து, மனதில் உள்ள மாசுகளை நீக்குகிற ப்ராணாயாமம் செய்து, நாராயணனைக் குறித்து தியானம் செய். வரத்தை அளிப்பவர்களில் மேலானவராகிய அவரை, வேறு சிந்தனையின்றி மனதில் நினை.

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய (பகவானாகிய வாஸு தேவருக்கு நமஸ்காரம்) என்கிற உயர்ந்த மந்த்ரத்தை நான் உனக்கு உபதேசிக்கிறேன். அதைத் தொடர்ந்து ஜபித்து வருவாயாக. காட்டில் கிடைப்பவற்றை உட்கொண்டு, இந்த தியானத்திலும், ஜபத்திலும் ஈடுபடுவாயாக.

இதன் பின், நாரதரால் உபதேசிக்கப் பெற்ற துருவன், மதுவனத்தை அடைந்து, அவர் கூறியதையும் விட கடுமையான தவத்தில் ஈடுபட்டான். அவனுடைய பக்தியையும், சிரத்தையை யும் மெச்சி, நாராயணன் அவன் முன் காட்சியளித்தார். அவன் மெய்சிலிர்த்துப் போய் அவரை துதித்து, வணங்கினான்.

நாராயணன் அவனுக்கு அருள்புரிந்தார்: ‘உன்னுடைய தந்தை, உன்னிடம் ராஜ்யபாரத்தை ஒப்படைத்து விட்டு, கானகம் செல்வார். நீ நீண்ட காலம் நல்லாட்சி புரிவாய். பின்னர், மூவுலகங்கள் நாசமடைந்தாலும், அழியாமல் இருக்கக் கூடிய துருவ நட்சத்திர மாக நீ விளங்குவாய். அதற்கு அழிவு என்பதில்லை‘.

பின்னர் துருவன் நகரத்திற்குத் திரும்ப, ஏற்கெனவே நாரதர் மூலமாக அவனுடைய மேன்மையைப் பற்றி அறிந்து கொண்ட அவனுடைய தந்தை, அவனை சிறப்பாக வரவேற்றார். உரிய வயதில் ராஜ்யபாரத்தை ஏற்று சிறப்பான ஆட்சி புரிந்து, இறுதியில் அவன் விஷ்ணுபாதத்தை அடைந்து, துருவ பதம் என்பதை எய்தி, கீர்த்தி பெற்றான்.

இவ்வாறு கூறிய மைத்ரேயரிடம், விதுரர் மேலும் விவரங் களைக் கேட்க, மைத்ரேயர் துருவனைத் தொடர்ந்து, அந்த வம்சத்தில் உதித்தவர்களைப் பற்றிக் கூறினார். அவர்களில் ஒருவர் ப்ராசீனபர்ஹிஸ் என்ற அரசன். இவ்வுலக விஷயங்களிலேயே ஆர்வம் உடையவராக இருந்த அந்த அரசரை ஒருமுறை நாரதர் சந்தித்து, ‘அரசனே! இவ்வுலக விஷயங்களிலேயே கவனம் செலுத்துகிற கர்ம மார்க்கம், மோக்ஷத்தை அடைய உதவாதே! அதற்குரிய பாதையை நீ மேற்கொள்வதில் உமக்கு நாட்டமில் லையா?’ என்று கேட்டார்.

ப்ராசீனபர்ஹிஸ் என்ற அந்த அரசன், ‘என்னுடைய புத்தி இவ்வுலக விஷயங்களில்தான் செல்கிறது. என் குடும்பம், செல்வம் என்றே மனதின் எண்ணங்கள் ஓடுகின்றன. எதனால் இந்தப் பாதையிலிருந்து நான் விடுபடுவேனோ, அதை எனக்கு உபதேசிக்க வேண்டும் என்று நாரதரைக் கேட்டுக் கொண்டான்.

நாரதர், ‘புரஞ்ஜனன் என்பவனுடைய கதையை, ஒரு உதாரண மாகச் சொல்கிறேன். அதுவே உமது சந்தேகத்திற்கு விடையளிக் கும்என்று சொல்லி விட்டு தொடர்ந்தார்: ‘புரஞ்ஜனன் என்ற அரசன் மிகவும் புகழ் பெற்றவனாக இருந்தான். அவனுக்கு அவிஞாதன் என்ற ஒரு நண்பன் இருந்தான்; அவனைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. புரஞ்ஜனன் ஒரு அழகான நகரத்தைத் தேர்ந்தெடுக்க விரும்பி, பல இடங்களைச் சுற்றி, இறுதியில் இமயமலைப் பகுதியில் ஒரு பட்டணத்தைத் தேர்ந்தெடுத்தான். அந்த நகரம், ஒன்பது வாயில்களை உடையது. மண்டபங்கள், ராஜ வீதிகள், நந்தவனங்கள் பலவித உயர்ந்த ரக ரத்தினங்களினால் அலங்கரிக்கப்பட்ட மாளிகைகள் போன்றவை கொண்ட எழில் நகரம் அது. அந்த நகரத்தின் எல்லையில் இருந்த தோட்டத்தில் பலவகை மரங்களும், ஒரு அழகிய குளமும் இருந்தன.

அங்கே பேரழகு வாய்ந்த ஒரு பெண்ணைக் கண்டு, புரஞ்ஜன னின் மனம் பேதலித்தது. அவளோடு பத்து வேலையாட்கள் இருந்தனர். ஐந்து தலையுடைய நாகசர்ப்பம் அவளுக்கு பாதுகாப் பாக நின்றது. அவளைப் பார்த்து புரஞ்ஜனன், அவளைப் பற்றிய விவரங்களைக் கூறுமாறு கேட்க, அவள்என்னைப் படைத்த வனையோ, இந்த நகரத்தை சிருஷ்டி செய்தவனையோ நான் அறியவில்லை. உம்மைப் பார்த்தவுடன், என் மனதில் உம்மை என் கணவனாக அடைய வேண்டும் என்கிற தணியாத ஆவல் ஏற்பட்டு விட்டது. என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்என்று வேண்டினாள்.

புரஞ்ஜனன் மனம் மகிழ்ந்து, அவளை மணந்தான். பல வருட காலம் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். அவள் சிரித்தால், அவன் சிரித்தான்; அவள் நின்றால், அவன் நின் றான்; அவள் அழுதால், அவன் அழுதான். இப்படி முழுவதுமாக அவள் வசப்பட்டு நின்றான் புரஞ்ஜனன். பல மகன்களையும், மகள்களையும் பெற்ற புரஞ்ஜனனுடைய இள வயது கழிந்தது.

அந்த சமயத்தில் சண்டவேகன் என்ற ஒரு கந்தர்வ ராஜனுக்கு, பலம் வாய்ந்த முன்னூற்று அறுபது வேலையாட்கள் இருந்தனர்; முன்னூற்று அறுபது பணிப் பெண்களும் இருந்தனர். அந்த வேலையாட்கள் புரஞ்ஜனனின் நகரத்தை ஆக்ரமித்துக் கொண்டு விட்டனர். புரஞ்ஜனனோ, இதைக் கூட அறியாமல், குடும்பத் துடனும் மனைவியுடனும் களித்திருந்தான்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், காலனுடைய பெண்ணாகிய துர்பகா என்ற பெயருடையவள், ‘பயன்என்பவனின் உதவி பெற்று, அவனுடைய படைகளைக் கொண்டு, புரஞ்ஜனனின் நகரத்தை முற்றுகையிட்டு, அதை பலாத்காரமாக அனுபவிக்கத் தொடங்கினாள். அந்த நகரம் நாசமாயிற்றுபுரஞ்ஜனனின் மனைவியும், மக்களும், அவனைப் பயனற்றவ னாகக் கருதி, அவன் மீது விரோதம் பூண்டனர். அவனை துர்பகா என்ற அந்தப் பெண்ணின் ஆட்கள் இழுத்துக் கொண்டு போக, அவன் துக்கமடைந்து, இறுதியில் நரகத்தில் மூழ்கிய போதும், தன் அழகான மனைவியின் நினைவாகவே இருந்தான். இதனால் அவன் பெண்ணுருவம் எய்தி, விதர்ப்ப தேசத்து அரசனுக்கு மகளாகப் பிறந்தான்.

அவள் தக்க வயதை அடைந்ததும், பாண்டிய தேசத்து அரச னாகிய மலையத்துவஜ பாண்டியன், அவளை மணந்தான்; (அவனுடைய மகள் அகஸ்தியரை மணந்தாள்.) ஒரு கட்டத்தில் மலையத்துவஜ பாண்டியன், தன் மகனிடம், ராஜ்யத்தை ஒப்ப டைத்து விட்டு, குலபர்வதம் என்ற இடத்திற்குச் சென்று, தவம் செய்து, ஸம்ஸாரக் கடலிலிருந்து விடுதலை பெற்றான்.

கணவன் உயிரிழந்தான் என்பதை ஏற்க மனமில்லாத வைதர்ப்பி (விதர்ப்ப தேசத்து அரசனின் மகள் என்பதால், வைதர்ப்பிஅதற்கு முன் புரஞ்ஜனனாக இருந்தவன்) அவனுடன் தானும் உடன்கட்டை ஏற முயன்றாள்.

அப்போது புரஞ்ஜனனின் நண்பனாகிய அவிஞாதன் அங்கே வந்து, அவளைப் பார்த்துப் பேசினான்: ‘நீ யார்? இதோ சிதையில் படுத்திருக்கிறானே, இவன் யார்? நீ ஏன் துக்கமடைய வேண்டும்? நான் யாரென்று புரிந்து கொள்ளாமல் நிற்கிறாயே! அவிஞாதன் என்ற பெயருடன் உனக்கு ஒரு நண்பன் இருந்ததே மறந்து விட் டதா? என்னை மறந்து, நீ, ஒரு எழில் நகரத்தை அடைந்தாய். அங்கே இன்பத்தை நுகர்வதிலேயே நாட்டமுடையவனாக நீ விளங்கிய தால், இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறாய். ஒன்றைப் புரிந்து கொள். நான்தான் ஆத்மா. நான்தான் நீ. எனக்கும் உனக்கும் பேதம் கிடையாது. இதை உணர்ந்தவர்களே ஞானிகள்என்று அவிஞாதன் (யாராலும் அறியப்படாதவன்ஆன்மா) விளக்க, வைதர்ப்பியாக இருந்த புரஞ்ஜனன், ஆன்ம ஞானம் எய்தி நற்கதி அடைந்தான்.

இவ்வாறு ப்ராசீனபர்ஹிஸிடம் கூறிய நாரதர், மேலும் விளக்கம் அளித்தார். இப்போது நான் கூறிய புரஞ்ஜனனின் வரலாறு, ஒரு உருவகக் கதையே. இதில் புரஞ்ஜனன் என்பவன் ஜீவன்; அவி ஞாதன் என்பவன் ஆத்மா. தன்னுடைய கர்மங்களின் காரணமாக ‘சரீரம்’ என்கிற பட்டணத்தை அடைவதால், புரஞ்ஜனன் என பெயர் குறிப்பு வந்தது. அவன் தேர்ந்தெடுத்த பட்டணம் ஒன்பது வாயில்கள் உடையது – அதாவது சரீரமானது, கண்கள், காதுகள், நாசித் துவாரங்கள்,வாய்… போன்ற ஒன்பது துவாரங்களைக் கொண்டது; அந்தப் பட்டணத்தின் எல்லையில் இருந்த தோட்டம் – ஐந்து இந்த்ரியங்கள்; ஐந்து விதமாக விளங்கும் பிராணன் – ஐந்து தலை நாகம்; நான், என்னுடையது என்ற புத்தியே – நீ மணந்த புரஞ்ஜனி என்ற பெண்.

சண்டவேகன் என்ற பெயரில் பட்டணத்தை ஆக்ரமித்தவனின் முன்னூற்று அறுபது வேலைக்காரர்கள் – பகல்கள்; முன்னூற்று அறுபது பணிப்பெண்கள் – இரவுகள். முற்றுகையிட்ட கால கன்னிகையான துர்பகா கிழத்தனம், மூப்பு. அவளால் பீடிக்கப்படுகிறபோது மனிதனுக்கு அழிவு ஏற்படுகிறது.

நாரதர் தொடர்ந்தார்: ‘இவை போன்ற உருவகங்களை வைத்து, உனக்கு புரஞ்ஜனனின் கதையைச் சொன்னேன். பகவானின் தன்மையை அறியாமல், ‘நான், எனது’ என்கிற அபிமானங்களைக் கொண்டு அலைபவன், தான் செய்யும் கர்மங்களின் காரணமாக, சுகம், துக்கம் நிறைந்த உலகை மீண்டும் மீண்டும் அடைகிறான்.

‘ஒரு நாய் தனது அதிர்ஷ்டத்திற்கேற்ப, உணவையோ, கல்லடி யையோ பெறுகிறது; அதே போல உலக விவகாரங்களில் ஈடு பட்டவன், இன்ப துன்பத்தை அடைகிறான். அந்த நிலையிலிருந்து விடுபட அவன் மேலும் ஏதாவது கர்மத்தையே செய்கிறான். இது பயனற்றது. பெரும் பாரத்தை தலையில் சுமந்து செல்கிறவன், அதனால் ஏற்படுகிற சிரமத்தைத் தணிப்பதற்காக, அந்த சுமையை தலையிலிருந்து எடுத்து, தனது தோள் மீது வைக்கிறான்; இது பாரத்தை இடம் மாற்றுகிற வழியே அல்லாமல், சிரமத்தைப் போக்குகிற வழி அல்ல. அதேபோலத்தான் – கர்மங்களினால் ஏற் படுகிற வினைகளைப் போக்க, மீண்டும் கர்மத்தையே செய்வது என்பதும். ஆகையால்,ப்ராசீனபர்ஹிஸே! பகவானிடம் பக்தி செலுத்து வது ஒன்றுதான், இந்த துக்கங்களிலிருந்து மீள்கிற வழி. கற்றறிந்தவர்கள் வெவ்வேறு உபாயங்களினால் பகவானை அறிந்து கொண்டு விட முயற்சிக்கிறார்களே தவிர, அவரை அணுகி விடுவதில்லை; அப்படி அணுகுவதற்கு அவரிடம் மாறாத பக்தி கொள்ள வேண்டும். மஹாவிஷ்ணுவை சரணம் எய்தினால் க்ஷேமம் உண்டாகும்’.

நாரதர் செய்த உபதேசத்தைக் கேட்டுக் கொண்ட ப்ராசீன பர்ஹிஸ், தவம் செய்து, நற்கதி அடைந்தார். இவ்வாறு மைத்ரேயர், விதுரருக்குக் கூறியதை, மஹரிஷிகளிடம் எடுத்துரைத்த ஸுதர் மேலும் தொடர்ந்தார்.