மனுவின் நேரிடை வம்சத்தில் தோன்றியவர்களைப் பற்றி, மன்னன் பரீக்ஷித்திற்குக் கூறிக் கொண்டிருந்த சுகர், ப்ரியவ்ரதன் பற்றிய விவரங்களைச் சொல்லத் தொடங்கினார்.
ப்ரியவ்ரதன், மனுவின் இரண்டாவது மகன். நாரதர் மூலமாக உபதேசிக்கப் பெற்ற இவன், உண்மையான பக்தனாகத் திகழ்ந்தான். இந்த்ரியங்களை அடக்கியவனாக, ஸன்யாஸத்தை மேற்கொள்ள அவன் விரும்பியபோது, அவனுடைய தந்தையாகிய மனு, அவனுடைய அந்த முடிவை வரவேற்கவில்லை. ப்ரியவ்ரதன், பூமியை ஆள வேண்டும் என்றும், அதுவே அவனுடைய கடமை என்றும் அவர் நினைத்தார். ஆனால் இதற்கு ப்ரியவ்ரதன் சம்மதிக்க வில்லை.
ப்ரும்மதேவனும் கூட, ப்ரியரதன் முடிவை ஏற்காதவனாக, அவன் எண்ணத்தை மாற்றும் நோக்கத்துடன், அவன் முன் தோன்றினான். அப்போது, ப்ரியவ்ரதன், நாரதரிடம் பல விஷயங் களைக் கேட்டறிந்து கொண்டிருந்தான். ப்ரும்மதேவனை, ப்ரியவ்ரதனும், அவனுடைய குரு ஸ்தானத்தில் இருந்த நாரதரும் வணங்கி வரவேற்றனர்.
ப்ரும்மதேவன், ப்ரியவ்ரதனைப் பார்த்து பின்வருமாறு கூறி னான்: ‘உன்னுடைய முடிவு என்று எதுவுமில்லாமல், அதையும் கூட பகவானுக்கே சமர்ப்பணம் செய். அவனே உலகை இயக்கு கிறான். அவனுடைய இயக்கத்தை மறுதலிக்கும் சக்தி எவருக்கும் கிடையாது‘.
ப்ரும்மதேவன் தொடர்ந்தான்: ‘இன்பம், துன்பம்; அச்சம், ஏமாற்றம்; பிறப்பு, இறப்பு ஆகியவற்றிற்கு உட்பட்ட மனிதப் பிறவி, எதிலும் விடுதலை காண்பதில்லை. பார்வையற்ற ஒருவன், வெயிலையோ, நிழலையோ அடைவது போல – மனிதன் தனது கர்மங்களினால் வெவ்வேறு பிறவிகளை அடைகிறான். கனவில் தோன்றியது, மனிதனுக்கு நினைவு இருந்தாலும், அதனால் அவன் பாதிக்கப்படுவதில்லை. (கனவில் ஒருவன் கொலையுண்டால், அவன் உண்மையாக கொல்லப்பட்டு விடுவதில்லை என்பது போல) இதைப் போல, தான், தனது, என்கிற எண்ணம் இல்லாமல், தனது கர்மத்தை செய்து முடிப்பவன், மேலும் கர்ம பலனை அடையாமல் தப்பிக்கிறான்..
தன்னை அடக்காதவன், உலக வாழ்க்கையிலிருந்து விலகு வதாக நினைத்துக் கொண்டு, எங்கோ போய் தனிமையில் இருந்தாலும், அவனுடைய மனதிலிருந்தும், அதில் தோன்றும் எண்ணங்களிலிருந்தும் அவன் விடுபடுவதில்லை; இவை அவன் எங்கு சென்றாலும், எதை விட்டுச் சென்றாலும், அவனுடனேயே செல்கின்றன. ஆனால், இறைவனிடம் பக்தி செலுத்தி, தன்னை அடக்கியவன், உலக வாழ்க்கையிலேயே ஈடுபட்டிருந்தாலும் கூட, அதைச் சார்ந்தவனாகி விடுவதில்லை….
நீயோ, பகவானின் பாதத்தையே சரண் எய்தியவன். இந்த்ரியங் களை வென்றவன். ஆசைகளைத் துறந்தவன். ஆகையால் நீ இவ் வுலக வாழ்க்கையில் தொடர்ந்து, உனக்கு விதிக்கப்பட்ட கடமை களைச் செய். அதனால் நீ உயர்வு பெறுவாய்‘. இறைவனின் பாத சேவையே தனது கடமை என்றிருந்த ப்ரியவ்ரதன், இவ்வாறு ப்ரும்மதேவன் கூறியதை இறைவனின் உத்திரவாக ஏற்று, பூமியை ஆள்வது தனக்கு விதிக்கப்பட்ட கடமை என்பதை உணர்ந்து கொண்டான்.
அவன் மணம் புரிந்து, மக்களையும் பெற்றான். பூமியின் ஆளுமை அவனுக்குக் கிட்டியது; பெரும் திறனுடன் அவன் ஆட்சி நடத்தினான். பூமியை ஏழு பாகங்களாகப் பிரித்தவன் அவனே. அவ்வாறு பிரித்து, ஏழு சாம்ராஜ்யங்களை நிறுவி, தனது மகன் களில் ஏழு பேரிடம் அவற்றின் நிர்வாகத்தை ப்ரியவ்ரதன் ஒப்புவித்தான். இப்படியே காலம் போய்க் கொண்டிருந்தபோது ஒரு நிலையில், இவ்வுலக வாழ்விலேயே மூழ்கி, விடுதலை‘ என்னும் வேட்கையையும் கூட மறந்து விடுகிற நிலையை அவன் அடைந்து விட்டான்.
அப்போது, இறை அருளால், அவனுடைய மயக்கம் கலைந்தது. எல்லாவற்றையும் துறந்து வாழ வேண்டும் என்கிற அவனுடைய முந்தைய எண்ணம், அவனை மீண்டும் வந்தடைந்தது. அவன் எல்லாவற்றையும் துறந்து, இறுதி உண்மையாகிய இறைவனை உணர்ந்து, பகவானுடன் ஐக்கியம் என்ற மேன்மையான நிலை யைப் பெற்றான்.
இந்த ப்ரியவ்ரதனுடைய பேரன் நாபி; அவனுடைய மகன் ரிஷபன். உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும் பெரும் வலிமை பெற்றவனாக விளங்கிய ரிஷபன், எல்லா வகைகளிலும் சிறந்த வனாகத் திகழ்ந்தான். இது மட்டுமின்றி, அனைத்து ஜீவராசிகளிட மும், இறைவனைக் காண்கிற பக்குவத்தையும் அவன் பெற்றிருந் தான். எல்லோரையும் அவன் சமமாகப் பாவித்து நடத்தியதால், அவனிடம் குடிமக்கள் யாவரும் பேரன்பு செலுத்தினர்.
ரிஷபன், உரிய வயதை அடைந்ததும், நாபி ஆட்சியை அவனிடம் ஒப்படைத்து விட்டு, இமய மலைப் பகுதியில் இருந்த பத்ரிகாச்ரமம் சென்று, தியானத்தில் ஈடுபட்டு, நற்கதி அடைந்தார். ரிஷபன், ஆன்மாவின் தன்மையை உணர்ந்தவனாகவும், இதயத் தூய்மையை அடைந்து விட்டவனாகவும் திகழ்ந்தாலும், மக்களின் நன்மைக்காக ஆட்சி புரிந்து, உலக வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தான். தன்னை அடக்கி, பிறரை மதித்து, அனைவரையும் சம மாகப் பாவித்து, அனைவரின் நன்மைகளையும் பாதுகாத்து ஆட்சி புரிந்த ரிஷபன், பல விதிமுறைகளை வகுத்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் பெரும் மனதிருப்தி கொண்டவர்களாக இருந்தார்கள். ஒருமுறை ரிஷபன், தன்னுடைய மகன்களுக்கு, சில உப தேசங்களைச் செய்தான்:
‘மனிதப் பிறவி, மேன்மையானது. இன்பங்கள் என்று நினைப்ப வற்றையே நாடி, அந்தப் பிறவியை வீணடிக்கக் கூடாது. இம்மாதிரி இன்பங்கள் எல்லாம், மிருகங்களுக்கு உரியவை. ஆகையால் மிருகப் பிறவியில் அவற்றை அனுபவித்து விட்டு, மேம்பட்ட பிறவியாகிய மனிதப் பிறவியை எய்தி விட்ட மனிதன், மீண்டும் அந்த மிருகப் பிறவிக்குடைய இன்பங்களை நாடி, தனது வாழ்க்கையை நாசம் செய்துவிடக் கூடாது…
‘மனிதனுக்கு மிகவும் சிறந்த செயல், தவம். தவம், இதயத்தை தூய்மையடையச் செய்கிறது. இதயத் தூய்மையை அடைந்தவன், மேன்மையுறுகிறான். பெரியவர்களுடன் சேர்க்கை, அவர்களுக்கு சேவை செய்வது ஆகியவை, இறைவனுடைய சாம்ராஜ்யத்தின் கதவுகளை நமக்காகத் திறந்து வைக்கிறது. தகுதியற்றவர்களுடன் நாம் கொள்கிற சேர்க்கை, நம்மை நாசம் செய்கிறது…
ஆசைகளை அறுத்து, உணர்ச்சிகளை வென்று, அமைதியைப் பெற்று, எல்லா ஜீவராசிகளையும் சமமாகப் பார்க்கிற நிலையை எய்தியவர்கள் மேன்மையானவர்கள். அவர்கள் எல்லோருக்கும் நண்பர்கள், இறைவனிடமே நாட்டம் கொண்ட அவர்கள், உலக விஷயங்களில் பற்று அற்றவர்கள், சரீரத்தை தாங்கிச் செல்வதற்காக எது தேவையோ, அதற்கு மேல் எதையும் ஏற்காதவர்கள்…
‘இவர்களுக்கு மாறாக, உலக விஷயங்களில் பெரும் பற்று உள்ளவனாகத் திகழ்கிற மனிதன், இன்பங்கள், சுகங்கள் என்று தன்னால் கருதப்படுகிற விஷயங்களைத் துரத்திச் செல்கிறான். அவற்றை அடைவதற்காக, பல தகாத காரியங்களைச் செய்கிறான். மனிதன் தெய்வீகமானவன்; இம்மாதிரி பாவச் செயல்கள், அவனை சரீரத்துடனேயே பிணைத்து விடுகின்றன. ஆகையால் இம்மாதிரி போக்குகளை, மனிதன் தவிர்க்க வேண்டும்…
‘நான், என்னுடையது, என்னால் நடப்பது, எனக்குக் கிடைத்தது, நான் அமைத்தது என்றெல்லாம் சிந்தனை செய்வதால்தான், துன்பம், சோதனை முதலியவற்றை மனிதன் அனுபவிக்கிறான். இவற்றை விடுத்து, இறுதி உண்மையை நாடினால், அப்போது துயரம் என்பது கிடையாது…
‘தனக்கு மகிழ்ச்சியைத் தருகிறவை என்று நினைத்து, எந்த இன்பங்களின் பின்னால் மனிதன் ஓடிக் கொண்டே இருக்கிறானோ, அவையே அவனுக்கு துன்பத்தைத் தருகின்றன. இம்மாதிரி ஆசைகளில் எல்லாம் காமம் மிகவும் வன்மை படைத்தது; இது. ஏமாற்றத்தை அளிப்பது; பந்தத்தைத் தோற்றுவிப்பது; தான் என்கிற எண்ணத்தை வளர்ப்பது. நற்செயல்களையே புரிபவன் இந்த நிலையிலிருந்து விடுபடுகிறான். அப்போது அவன் மேன்மை அடைவதற்குரிய வழிகளை சிந்திக்கிறான்…
‘தனது என்கிற சிந்தனையை விடு…
‘எல்லா ஜீவராசிகளையும் உன்னைப் போலவே நினை…
தீய செயல்களை அறவே விட்டு, இறைவனை மகிழ்விக்கும் செயல்களிலேயே ஈடுபடு…
‘பெரியவர்களை நாடி, அவர்களிடமிருந்து இறைவனின் தன்மையைப் பற்றி அறிந்து கொள்…
‘உன்னை உயர்வாக நினைத்துக் கொள்ளாதே…
‘பகை என்று எதுவும் உனக்குக் கிடையாது என்ற நிலையை அடைவதற்கு முயற்சி செய்…
அனைவரிடமும் நட்பு கொண்டாடு..
இந்த்ரியங்களை அடக்கி, தான், தனது என்கிற எண்ணங்களை அழித்து விட முற்படு…
‘மூச்சை அடக்கி, ஆசைகளை அறுத்து, தியானம் செய்… பெரியவர்களின் மேன்மையைப் போற்றி, அவர்களுடைய அடியொற்றி நடந்து கொள்…
பேச்சை நிதானப்படுத்தி, அதை கட்டுக்குள் வை…
இறைவனையே நினை….
பொறுமையுடனும், விடா முயற்சியுடனும் இவற்றை மனுவின் நேரிடை வம்சத்தில் தோன்றியவர்களைப் பற்றி, மன்னன் பரீக்ஷித்திற்குக் கூறிக் கொண்டிருந்த சுகர், ப்ரியவ்ரதன் பற்றிய விவரங்களைச் சொல்லத் தொடங்கினார்.
ப்ரியவ்ரதன், மனுவின் இரண்டாவது மகன். நாரதர் மூலமாக உபதேசிக்கப் பெற்ற இவன், உண்மையான பக்தனாகத் திகழ்ந்தான். இந்த்ரியங்களை அடக்கியவனாக, ஸன்யாஸத்தை மேற்கொள்ள அவன் விரும்பியபோது, அவனுடைய தந்தையாகிய மனு, அவனுடைய அந்த முடிவை வரவேற்கவில்லை. ப்ரியவ்ரதன், பூமியை ஆள வேண்டும் என்றும், அதுவே அவனுடைய கடமை என்றும் அவர் நினைத்தார். ஆனால் இதற்கு ப்ரியவ்ரதன் சம்மதிக்க வில்லை.
ப்ரும்மதேவனும் கூட, ப்ரியரதன் முடிவை ஏற்காதவனாக, அவன் எண்ணத்தை மாற்றும் நோக்கத்துடன், அவன் முன் தோன்றினான். அப்போது, ப்ரியவ்ரதன், நாரதரிடம் பல விஷயங் களைக் கேட்டறிந்து கொண்டிருந்தான். ப்ரும்மதேவனை, ப்ரியவ்ரதனும், அவனுடைய குரு ஸ்தானத்தில் இருந்த நாரதரும் வணங்கி வரவேற்றனர்.
ப்ரும்மதேவன், ப்ரியவ்ரதனைப் பார்த்து பின்வருமாறு கூறி னான்: ‘உன்னுடைய முடிவு என்று எதுவுமில்லாமல், அதையும் கூட பகவானுக்கே சமர்ப்பணம் செய். அவனே உலகை இயக்கு கிறான். அவனுடைய இயக்கத்தை மறுதலிக்கும் சக்தி எவருக்கும் கிடையாது’.
ப்ரும்மதேவன் தொடர்ந்தான்: ‘இன்பம், துன்பம்; அச்சம், ஏமாற்றம்; பிறப்பு, இறப்பு ஆகியவற்றிற்கு உட்பட்ட மனிதப் பிறவி, எதிலும் விடுதலை காண்பதில்லை. பார்வையற்ற ஒருவன், வெயிலையோ, நிழலையோ அடைவது போல – மனிதன் தனது கர்மங்களினால் வெவ்வேறு பிறவிகளை அடைகிறான். கனவில் தோன்றியது, மனிதனுக்கு நினைவு இருந்தாலும், அதனால் அவன் பாதிக்கப்படுவதில்லை. (கனவில் ஒருவன் கொலையுண்டால், அவன் உண்மையாக கொல்லப்பட்டு விடுவதில்லை என்பது போல) இதைப் போல, தான், தனது, என்கிற எண்ணம் இல்லாமல், தனது கர்மத்தை செய்து முடிப்பவன், மேலும் கர்ம பலனை அடையாமல் தப்பிக்கிறான்..
தன்னை அடக்காதவன், உலக வாழ்க்கையிலிருந்து விலகு வதாக நினைத்துக் கொண்டு, எங்கோ போய் தனிமையில் இருந்தாலும், அவனுடைய மனதிலிருந்தும், அதில் தோன்றும் எண்ணங்களிலிருந்தும் அவன் விடுபடுவதில்லை; இவை அவன் எங்கு சென்றாலும், எதை விட்டுச் சென்றாலும், அவனுடனேயே செல்கின்றன. ஆனால், இறைவனிடம் பக்தி செலுத்தி, தன்னை அடக்கியவன், உலக வாழ்க்கையிலேயே ஈடுபட்டிருந்தாலும் கூட, அதைச் சார்ந்தவனாகி விடுவதில்லை….
நீயோ, பகவானின் பாதத்தையே சரண் எய்தியவன். இந்த்ரியங் களை வென்றவன். ஆசைகளைத் துறந்தவன். ஆகையால் நீ இவ் வுலக வாழ்க்கையில் தொடர்ந்து, உனக்கு விதிக்கப்பட்ட கடமை களைச் செய். அதனால் நீ உயர்வு பெறுவாய்’. இறைவனின் பாத சேவையே தனது கடமை என்றிருந்த ப்ரியவ்ரதன், இவ்வாறு ப்ரும்மதேவன் கூறியதை இறைவனின் உத்திரவாக ஏற்று, பூமியை ஆள்வது தனக்கு விதிக்கப்பட்ட கடமை என்பதை உணர்ந்து கொண்டான்.
அவன் மணம் புரிந்து, மக்களையும் பெற்றான். பூமியின் ஆளுமை அவனுக்குக் கிட்டியது; பெரும் திறனுடன் அவன் ஆட்சி நடத்தினான். பூமியை ஏழு பாகங்களாகப் பிரித்தவன் அவனே. அவ்வாறு பிரித்து, ஏழு சாம்ராஜ்யங்களை நிறுவி, தனது மகன் களில் ஏழு பேரிடம் அவற்றின் நிர்வாகத்தை ப்ரியவ்ரதன் ஒப்புவித்தான். இப்படியே காலம் போய்க் கொண்டிருந்தபோது ஒரு நிலையில், இவ்வுலக வாழ்விலேயே மூழ்கி, விடுதலை’ என்னும் வேட்கையையும் கூட மறந்து விடுகிற நிலையை அவன் அடைந்து விட்டான்.
அப்போது, இறை அருளால், அவனுடைய மயக்கம் கலைந்தது. எல்லாவற்றையும் துறந்து வாழ வேண்டும் என்கிற அவனுடைய முந்தைய எண்ணம், அவனை மீண்டும் வந்தடைந்தது. அவன் எல்லாவற்றையும் துறந்து, இறுதி உண்மையாகிய இறைவனை உணர்ந்து, பகவானுடன் ஐக்கியம் என்ற மேன்மையான நிலை யைப் பெற்றான்.
இந்த ப்ரியவ்ரதனுடைய பேரன் நாபி; அவனுடைய மகன் ரிஷபன். உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும் பெரும் வலிமை பெற்றவனாக விளங்கிய ரிஷபன், எல்லா வகைகளிலும் சிறந்த வனாகத் திகழ்ந்தான். இது மட்டுமின்றி, அனைத்து ஜீவராசிகளிட மும், இறைவனைக் காண்கிற பக்குவத்தையும் அவன் பெற்றிருந் தான். எல்லோரையும் அவன் சமமாகப் பாவித்து நடத்தியதால், அவனிடம் குடிமக்கள் யாவரும் பேரன்பு செலுத்தினர்.
ரிஷபன், உரிய வயதை அடைந்ததும், நாபி ஆட்சியை அவனிடம் ஒப்படைத்து விட்டு, இமய மலைப் பகுதியில் இருந்த பத்ரிகாச்ரமம் சென்று, தியானத்தில் ஈடுபட்டு, நற்கதி அடைந்தார். ரிஷபன், ஆன்மாவின் தன்மையை உணர்ந்தவனாகவும், இதயத் தூய்மையை அடைந்து விட்டவனாகவும் திகழ்ந்தாலும், மக்களின் நன்மைக்காக ஆட்சி புரிந்து, உலக வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தான். தன்னை அடக்கி, பிறரை மதித்து, அனைவரையும் சம மாகப் பாவித்து, அனைவரின் நன்மைகளையும் பாதுகாத்து ஆட்சி புரிந்த ரிஷபன், பல விதிமுறைகளை வகுத்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் பெரும் மனதிருப்தி கொண்டவர்களாக இருந்தார்கள். ஒருமுறை ரிஷபன், தன்னுடைய மகன்களுக்கு, சில உப தேசங்களைச் செய்தான்:
‘மனிதப் பிறவி, மேன்மையானது. இன்பங்கள் என்று நினைப்ப வற்றையே நாடி, அந்தப் பிறவியை வீணடிக்கக் கூடாது. இம்மாதிரி இன்பங்கள் எல்லாம், மிருகங்களுக்கு உரியவை. ஆகையால் மிருகப் பிறவியில் அவற்றை அனுபவித்து விட்டு, மேம்பட்ட பிறவியாகிய மனிதப் பிறவியை எய்தி விட்ட மனிதன், மீண்டும் அந்த மிருகப் பிறவிக்குடைய இன்பங்களை நாடி, தனது வாழ்க்கையை நாசம் செய்துவிடக் கூடாது…
‘மனிதனுக்கு மிகவும் சிறந்த செயல், தவம். தவம், இதயத்தை தூய்மையடையச் செய்கிறது. இதயத் தூய்மையை அடைந்தவன், மேன்மையுறுகிறான். பெரியவர்களுடன் சேர்க்கை, அவர்களுக்கு சேவை செய்வது ஆகியவை, இறைவனுடைய சாம்ராஜ்யத்தின் கதவுகளை நமக்காகத் திறந்து வைக்கிறது. தகுதியற்றவர்களுடன் நாம் கொள்கிற சேர்க்கை, நம்மை நாசம் செய்கிறது…
ஆசைகளை அறுத்து, உணர்ச்சிகளை வென்று, அமைதியைப் பெற்று, எல்லா ஜீவராசிகளையும் சமமாகப் பார்க்கிற நிலையை எய்தியவர்கள் மேன்மையானவர்கள். அவர்கள் எல்லோருக்கும் நண்பர்கள், இறைவனிடமே நாட்டம் கொண்ட அவர்கள், உலக விஷயங்களில் பற்று அற்றவர்கள், சரீரத்தை தாங்கிச் செல்வதற்காக எது தேவையோ, அதற்கு மேல் எதையும் ஏற்காதவர்கள்…
‘இவர்களுக்கு மாறாக, உலக விஷயங்களில் பெரும் பற்று உள்ளவனாகத் திகழ்கிற மனிதன், இன்பங்கள், சுகங்கள் என்று தன்னால் கருதப்படுகிற விஷயங்களைத் துரத்திச் செல்கிறான். அவற்றை அடைவதற்காக, பல தகாத காரியங்களைச் செய்கிறான். மனிதன் தெய்வீகமானவன்; இம்மாதிரி பாவச் செயல்கள், அவனை சரீரத்துடனேயே பிணைத்து விடுகின்றன. ஆகையால் இம்மாதிரி போக்குகளை, மனிதன் தவிர்க்க வேண்டும்…
‘நான், என்னுடையது, என்னால் நடப்பது, எனக்குக் கிடைத்தது, நான் அமைத்தது என்றெல்லாம் சிந்தனை செய்வதால்தான், துன்பம், சோதனை முதலியவற்றை மனிதன் அனுபவிக்கிறான். இவற்றை விடுத்து, இறுதி உண்மையை நாடினால், அப்போது துயரம் என்பது கிடையாது…
‘தனக்கு மகிழ்ச்சியைத் தருகிறவை என்று நினைத்து, எந்த இன்பங்களின் பின்னால் மனிதன் ஓடிக் கொண்டே இருக்கிறானோ, அவையே அவனுக்கு துன்பத்தைத் தருகின்றன. இம்மாதிரி ஆசைகளில் எல்லாம் காமம் மிகவும் வன்மை படைத்தது; இது. ஏமாற்றத்தை அளிப்பது; பந்தத்தைத் தோற்றுவிப்பது; தான் என்கிற எண்ணத்தை வளர்ப்பது. நற்செயல்களையே புரிபவன் இந்த நிலையிலிருந்து விடுபடுகிறான். அப்போது அவன் மேன்மை அடைவதற்குரிய வழிகளை சிந்திக்கிறான்…
‘தனது என்கிற சிந்தனையை விடு…
‘எல்லா ஜீவராசிகளையும் உன்னைப் போலவே நினை…
தீய செயல்களை அறவே விட்டு, இறைவனை மகிழ்விக்கும் செயல்களிலேயே ஈடுபடு…
‘பெரியவர்களை நாடி, அவர்களிடமிருந்து இறைவனின் தன்மையைப் பற்றி அறிந்து கொள்…
‘உன்னை உயர்வாக நினைத்துக் கொள்ளாதே…
‘பகை என்று எதுவும் உனக்குக் கிடையாது என்ற நிலையை அடைவதற்கு முயற்சி செய்…
அனைவரிடமும் நட்பு கொண்டாடு..
இந்த்ரியங்களை அடக்கி, தான், தனது என்கிற எண்ணங்களை அழித்து விட முற்படு…
‘மூச்சை அடக்கி, ஆசைகளை அறுத்து, தியானம் செய்… பெரியவர்களின் மேன்மையைப் போற்றி, அவர்களுடைய அடியொற்றி நடந்து கொள்…
பேச்சை நிதானப்படுத்தி, அதை கட்டுக்குள் வை…
இறைவனையே நினை….
பொறுமையுடனும், விடா முயற்சியுடனும் இவற்றை எல்லாம் கடைப்பிடித்து, செயல்படுத்தப் பழகிக் கொள். இது இறைவனை உணர்வதற்கு உனக்கு பாதை அமைத்துக் கொடுக்கும்.’
இவ்வாறு தன்னுடைய மகன்களுக்கு உபதேசம் செய்த ரிஷபன், தன் மகன்களில் மூத்தவனாகிய பரதனிடம் ராஜ்யத்தை ஒப்புவித்து, ஸன்யாஸம் மேற்கொண்டான். பல இடங்களில் அவன் சுற்றித் திரிந்தான். சிலர் அவனை போற்றினர்; சிலர் பரிகசித்தனர். இரண்டுமே, ரிஷபனிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
இறைவனைப் பற்றியே தியானம் செய்து வந்த ரிஷபனுக்கு, யோக சித்திகள் கிட்டின. ஆனால் அந்த அற்புதமான சித்திகளைக் கூட அவன் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. அவற்றை அவன் அலட்சியம் செய்தான். மனதை நம்ப முடியாது; சபலத்திற்கு அடிமைப்பட்டு விடுகிற நிலையை, யோகிகளிடமும், முனிவர் களிடமும் கூட, மனம் தோற்றுவித்து விடும். சித்திகளோ, சக்தி படைத்தவை என்பதால், எந்த மனதையும் கவரக் கூடியவை. அவற்றைப் பெறவோ, பெற்று விட்டால் பயன்படுத்தவோ, ஆசை கொள்ளக் கூடிய நிலையை, மனம் தோற்றுவித்து விடும். இதை உணர்ந்திருந்த ரிஷபன், தன்னை வந்தடைந்த சித்தி சக்திகளை ஒரு சாதனையாக நினைக்காமல், அவற்றைப் புறக்கணித்தான்.
வாழ்கிற போதே, அவனுடைய பிறவி விடுதலை பெற்றது. குயவன் சுற்றி விடுகிற சக்கரம், அதன் பிறகு, தானாகவே சில சுற்றுக்களைப் பூர்த்தி செய்வது போல, அவனுடைய முந்தைய கர்மங்களின் விளைவாக, அவனுடைய உடல் இயங்கிக் கொண் டிருந்தது. அதுவும் முடிந்த நிலையில், ரிஷபன் முக்தி பெற்று, இறைவனுடன் ஒன்றினான்.
அவனுடைய மகன் பரதன்தான், மற்றொரு பிறவியில் ஜட பரதன் என்ற ஞானியாகத் திகழ்ந்தான் (அந்த விவரத்தை விஷ்ணு புராணத்தின் சுருக்கத்தில், நாம் பார்த்தோம்.)
பரீக்ஷித்திற்கு, சுகர் கூறிய விவரங்களை, ஸுதர், பல ரிஷி களுக்கு மேலும் எடுத்துரைத்தார்.