மஹாவிஷ்ணுவின் த்வாரபாலகர்களான ஜயன், விஜயன் என்ற இருவரும் முனிவர்களால் சபிக்கப்பட்டு, ராவணன், கும்ப கர்ணனாகப் பிறந்தனர்; இவர்களே சிசுபாலன், தந்தவக்தரன் ஆகி யோராகப் பிறந்தனர்; இவர்களே ஹிரண்யாக்ஷகன், ஹிரண்யகசிபு ஆகிய சகோதரர்களாகவும் பிறந்தனர். இந்த விவரத்தை, தரும புத்திரருக்கு,நாரதர் விவரித்தார் – என்று பரீக்ஷித்திடம் கூறினார் சுகர்.
மேலும், ஹிரண்யாக்ஷகனின் வதத்திற்குப் பின்னர், ஹிரண்ய கசிபு பற்றிய விவரங்களை நாரதர் கூறினார். அவனுடைய மகன் பிரஹலாதனின் மேன்மையையும் எடுத்துரைத்தார் என்று சொன்ன சுகர், தருமபுத்திரருக்கு, நாரதர் கூறிய பிரஹலாதர் சரித்திரத்தை எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து, தருமபுத்திரருக்கு, நாரதர் அருளிய சில தத்துவ விளக்கங்களையும் சுகர், பரீக்ஷித்திடம் கூறினார்:
‘எல்லா மனிதர்களுக்கும் பொருந்துகிற மேலான தர்மம் முப்பது அம்சங்களை உடையது. ஸத்யம்; கருணை ; தவம் (விரதங்களை அனுஷ்டிப்பது); சரீரத் தூய்மை; பொறுமை; முறையானது, முறை யற்றது என்ற பாகுபாட்டை அறிவது; மனதை அலைய விடாமல் இருப்பது; இந்த்ரியங்களை அடக்குவது; அஹிம்ஸை; ப்ரம்மச் சர்யம்; தியாகம் (தானம் செய்வது); மந்த்ரங்களை ஓதுதல்; போதும் என்கிற மனம்; மஹான்களுக்கு பணிவிடை செய்வது; சாதாரண காரியங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுவது; மனிதர் களின் செயல்கள் பயனற்றவை என்று அறிவது; வீண் வார்த்தைகள் பேசாமல் இருப்பது; ஆன்மாவை அறிய முயற்சிப்பது; மனிதர் களுக்கும், பிராணிகளுக்கும் உணவு அளிப்பது; எல்லா ஜீவராசி களிடமும் ஒரே ஆன்மாதான் உறைகிறது என்பதை உணர முனைவது; மஹான்களின் புகலிடம் கிருஷ்ணர் என்பதை அறிவது; கிருஷ்ணருடைய குணம் பற்றி கேட்பது; அவருடைய பெயரைப் பாடுவது; அவரையே நினைப்பது; அவருடைய பாதத்தை சேவிப் பது; அவரை பூஜிப்பது; அவரை வணங்கி இருப்பது; அவருக்கு அடிமையாக வாழ்வது; அவரோடு சினேகம்; அவருக்கு தன்னையே அர்ப்பணிப்பது… என்கிற முப்பது அம்சங்களை உடைய இந்த தர்மம் அனைவருக்கும் பொதுவானது. இந்த வழிகளை கடைப் பிடிப்பவனிடம் பகவான் மகிழ்ச்சியுறுகிறார்‘.
இப்படிக் கூறிய நாரதர், ப்ரம்மச்சர்யம், கிருஹஸ்தாச்ரமம், வானப்பிரஸ்தம், ஸந்யாஸம் ஆகிய நான்கு நிலைகளில் ஒரு மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள் பற்றி விவரித்தார். ப்ரம்மச்சாரி, தனது குருவுடன் வசித்துக் கொண்டு, அவருக்கு பணிவிடை செய்து வர வேண்டும். உரிய நேரங்களில் காயத்ரி மந்த்ரத்தை ஜபிக்க வேண்டும். குரு அழைக்கிற போது, அவரிடம் சென்று வேதங்களை கற்க வேண்டும். காலையிலும், மாலையிலும் பிட்சை எடுத்து, அதை குருவிடம் தெரிவித்து, அவர் அனுமதித்தால், அதை சாப்பிடலாம்; குருவின் அனுமதி கிட்டாத வேளைகளில் அவன் உபவாஸம் இருக்க வேண்டும். அநாவசியமாக பெண் களுடன் பேசக் கூடாது. பெண்கள் பற்றிய கதைகளைக் கூட ப்ரம்மச்சாரிகள் கேட்கக் கூடாது. அழிக்கும் தன்மையை உடைய இந்த்ரியங்கள், தவ சீலர்களின் மனதைக் கூட கெடுக்கக் கூடியவை என்பதால், ப்ரம்மச்சாரிகள் இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும்.
மேலும் ப்ரம்மச்சாரி, உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் கொள் வது, உடலைப் பிடித்து விட்டுக் கொள்வது, பெண்களின் ஓவியங் களை வரைவது, மாமிசம் உண்பது, சந்தனம் பூசிக் கொள்வது, மாலை அணிந்து கொள்வது, அலங்காரம் செய்து கொள்வது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். வேதங்களைக் கற்று, அதன் அர்த்தத்தை நன்றாக உணர்ந்து, குருவிற்கு தன்னால் இயன்ற காணிக் கையை செலுத்தி, அவரால் அனுமதிக்கப்பட்டு, அவன் இல்லறத்தை மேற்கொள்ளலாம்; அல்லது வானப்ரஸ்தம், ஸந் யாஸம் ஆகிய நிலைகளையும் மேற்கொள்ளலாம்.
இல்லறம் (கிருஹஸ்தாச்ரமம்) மேற்கொண்டுள்ளவன், தான் செய்யும் செயல்களை எல்லாம் நாராயணனுக்கே அர்ப்பணம் செய்து, தனது காரியங்களில் முனைய வேண்டும். பகவானின் அவதார சரித்திரங்களைக் கேட்க வேண்டும். தானாக விட்டுப் பிரிகிற மனைவி மக்களின் சேர்க்கையை, கனவில் காண்பனவற்றை கொஞ்சம் கொஞ்சமாக மறப்பது போல, சிறிது சிறிதாக மனதில் இருந்து அகற்ற வேண்டும். வீட்டில் உள்ள வரையில், தேவைக்கு ஏற்ப, எல்லாவற்றிலும் ஈடுபட்டுக் கொண்டு, தோற்றத்தில் பற் றுள்ளவனாக இருந்து, தன் உள் மனதில் பற்றை நீக்க வேண்டும். தன் மக்களும், உறவினர்களும் கூறுவதை, மமதை அற்று ஏற்க வேண்டும். தனக்குக் கிட்டுகிற பொருளைக் கொண்டு, மற்றவர்களு டைய தேவையை பூர்த்தி செய்தும், நித்திய கர்மாக்களை செய்து கொண்டும் இருக்க வேண்டும். ஒருவன் வயிறு நிரம்ப என்ன தேவையோ, அதுவே அவனுக்கு உரியது; அதைவிட அதிக மாக உள்ளதை, தனது என்று நினைப்பவன், திருடனுக்கு சமமானவன். நாயாக இருந்தாலும் சரி, பாவியாக இருந்தாலும் சரி, தனது உணவை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். எவள் காரணமாக, ஒருவன் உயிரையும் விடத் தயாராக இருப்பானோ, குருவையும் கூட கொல்லத் துணிவானோ, அப்படிப்பட்ட பெண்ணை (மனைவியை), ‘தன்னுடையவள்‘ என்று எண்ணும் நிலையிலிருந்து அவன் விடுபட முயல வேண்டும். சாம்பலாகப் போகிற இந்த உ உடல் எங்கே? அந்த உடலின் திருப்திக்காக கொள்கிற பெண்ணின் சேர்க்கை எங்கே? அனைத்திலும் வியாபிக்கக் கூடிய ஆன்மாவைப் பற்றி சிந்தித்தால், இந்த பந்தம் அகலுமல்லவா! அந்த நிலையை அடைய இல்லறத்தான் முயற்சிக்க வேண்டும்!
அடுத்து வானப்பிரஸ்தம் என்கிற, காட்டில் வாழ்கிற நிலையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய தர்மங்களை நாரதர் எடுத்துச் சொன்னார்: ‘வானப்பிரஸ்தன், பயிரிட்டு விளைந்த எதையும் சாப்பிடக் கூடாது; சமைக்கப்பட்டு பக்குவமாக்கப்பட்ட எதையும் உண்ணக் கூடாது. இயல்பாக விளைந்து, சூரியனால் பக்குவமான காய் கனிகளை உண்ணலாம். பனி, காற்று, உஷ்ணம், மழை போன்ற இயற்கையின் மாற்றங்களை எல்லாம் அப்படியே ஏற்று, அவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். மான்தோல், மரவுரி தரிக்கலாம். தன்னுடைய உடல் என்கிற எண்ணத்தை விட வேண் டும். சித்தத்தை பகவானிடம் ஐக்கியப்படுத்த வேண்டும். தான் வேறு, ஆன்மா வேறு என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு, இரண்டற்ற நிலையை எய்த வேண்டும்‘.
நாரதர் தொடர்ந்தார்: ‘ஸன்யாஸி எதிலும் பற்று அற்றவனாகத் திகழ்ந்து, ஓரிடத்திலும் ஒரு இரவிற்கு மேல் தங்காமல், பூமியில் ஸஞ்சாரம் செய்ய வேண்டும். கோவணம் மட்டுமே ஆடை என கொள்ள வேண்டும். எல்லா ஜீவராசிகளிடத்திலும் கருணை காட்டி, சாந்தம் உடையவனாகத் திகழ வேண்டும். உயிர் வாழ்வதை நினைத்தும் மகிழக் கூடாது; அந்த உயிர் பிரிய வேண்டும் என்று நினைத்து, அதிலும் மகிழ்ச்சி காணக் கூடாது. நட்சத்திரங்களைக் கொண்டு பலன் கூறுவது போன்ற சாத்திரங்களை அறிந்து, அவற் றைக் கொண்டு வாழ நினைக்கக் கூடாது. அநாவசியமான தர்க் கங்கள், விதண்டாவாதங்கள் போன்றவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். ஒரு விஷயம் பற்றி இருவர் விவாதித்துக் கொண்டிருந்தால், அதில் ஒருவர் பக்கம் சேர்ந்து, விவாதத்தில் பங்கு கொள்ளக் கூடாது….
ஆசை காட்டியோ, வேறு விதத்திலோ சீடர்களை சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யக் கூடாது. வேதாந்தம் தவிர, மற்ற விஷயங்களைக் கூறுகிற நூல்களைப் படிக்கக் கூடாது. மடம் கட்டுவது போன்ற செயல்பாடுகளில் இறங்கக் கூடாது. பண்டித னாகவும், பலவற்றையும் அறிந்தவனாகவும் இருந்தாலும் கூட, தனது அறிவை வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது. பித்தன் என்று மற்றவர் நினைத்தாலும், அது பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும். இவ்வாறு கூறிய நாரதர், ஒருமுறை பிரஹலாதர், காவிரி ஆற்றின் கரையில் இருந்த ஒரு முனிவரை சந்தித்ததைப் பற்றியும், பிரஹலாதரின் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த முனிவர் கூறிய சில விளக்கங்களையும் பற்றி விவரித்தார். ‘அந்த முனிவர் சொன்னார்: ஓரிடத்தில் நீர் இருக்கிறது; ஆனால் அது தழை களினாலும், பாசியினாலும் மூடப்பட்டு இருப்பதால், பார்வையில் படுவதில்லை. நீரைத் தேடி அலைகிற மனிதன் இதை உணராமல், எங்கெங்கோ அலைந்து, கானல் நீரையும் கூட தண்ணீர் என்று நினைத்து, அதை நோக்கி ஓடி, ஏமாற்றமடைகிறான்.
அதேபோல, ஆன்ம அறிவை விட்டுவிட்டு, மற்ற பல விஷயங்களில் இன்பம் இருப்பதாக நினைத்து, மனிதன் அவற்றைத் துரத்திக் கொண்டு ஓடி, இறுதியில் ஏமாற்றம் அடைகிறான். நிறைய பொருள் சேர்ப்பவன், பலரைக் கண்டு அஞ்ச வேண்டியதாக இருக்கிறது. அரசன், திருடன், பகைவன், உறவினர்கள், யாசகர்கள், காலம் –ஆகியவற்றை நினைத்து அவன் எப்போதும் கவலை யுற்றவனாகவே காணப்படுகிறான். இப்படி கவலையையே தரக் கூடிய பொருளாசையை மனிதன் விட வேண்டும். இவ்விஷயத் தில் தேனீயும், மலைப்பாம்பும் நமக்கு பாடம் போதிக்கின்றன….
“மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து, இடைவிடாமல் செய லாற்றி, தேனீ, தேனை சேகரிக்கிறது; அப்படி கஷ்டப்பட்டு தேனீ சேகரித்த தேனை, மனிதன் திருடிக் கொண்டு விடுகிறான்! தேனீ உயிரை இழக்கவும் நேர்கிறது! பொருள் ஆசையும், அதற்காக கடுமையாக உழைப்பதும், இம்மாதிரி பலனை உடையதே. என்பதை தேனீ நமக்கு உணர்த்துகிறது….
“மலைப்பாம்பு, இரை தேடி அலைவதில்லை. தன்னருகில் வருவதையே அது உணவாகக் கொள்கிறது. அவ்வகையில் பல தினங்கள் உணவு கிட்டவில்லை என்றால், அது பட்டினி கிடக் கிறது. இது போலவே ஞானியானவன், தன்னைத் தேடி வந்ததை மட்டுமே உட்கொள்கிறான். அப்படி எதுவும் வந்து சேரவில்லை என்றால், அது பற்றி அவன் கவலைப்படுவதும் இல்லை.” மஹாவிஷ்ணுவின் த்வாரபாலகர்களான ஜயன், விஜயன் என்ற இருவரும் முனிவர்களால் சபிக்கப்பட்டு, ராவணன், கும்ப கர்ணனாகப் பிறந்தனர்; இவர்களே சிசுபாலன், தந்தவக்தரன் ஆகி யோராகப் பிறந்தனர்; இவர்களே ஹிரண்யாக்ஷகன், ஹிரண்யகசிபு ஆகிய சகோதரர்களாகவும் பிறந்தனர். இந்த விவரத்தை, தரும புத்திரருக்கு,நாரதர் விவரித்தார் – என்று பரீக்ஷித்திடம் கூறினார் சுகர்.

“மலைப்பாம்பு, இரை தேடி அலைவதில்லை. தன்னருகில் வருவதையே அது உணவாகக் கொள்கிறது. அவ்வகையில் பல தினங்கள் உணவு கிட்டவில்லை என்றால், அது பட்டினி கிடக் கிறது. இது போலவே ஞானியானவன், தன்னைத் தேடி வந்ததை மட்டுமே உட்கொள்கிறான். அப்படி எதுவும் வந்து சேரவில்லை என்றால், அது பற்றி அவன் கவலைப்படுவதும் இல்லை.” (இவ்விடத்தில் பட்டினத்தாரின் பாடல் ஒன்று நினைவில் கொள்ளத்தக்கது. ஒருமுறை அவர் பிட்சைக்காக சென்ற இடத்தில், அவரை திருடன் என்று தவறாக நினைத்து, பலர் அடித்து விட, அவர் ‘இன்னமும் அடியுங்கள். எனக்கு இது சரியான தண்ட னையே. என் கண்களை திறந்த நிகழ்ச்சி இது. மேலும் அடியுங்கள்‘ என்று கூறிவிட்டு, இவ்வாறு பாடினார்.
இருக்குமிடம் தேடி என் பசிக்கே அன்னம் உருக்கமுடன் கொண்டுவந்தால் உண்பேன் –
பெருக்க
அழைத்தாலும் போகேன்! அரனே! என் தேகம் இளைத்தாலும் போகேன் இனி!
அதாவது, ஒரு பிடி சோற்றைக் கூட, தேடிச் செல்வதில்லை என்ற வைராக்கியத்தை அவர் வெளிப்படுத்தினார். பிரஹலாதருக்கு விளக்கம் கூறுகிற முனிவரும் இதையேதான் சொன்னார்.)
முனிவர் மேலும் சொன்னார்: ‘எது தரப்படுகிறதோ, அதை உண்கிறேன்.எதுவும் தரப்படாதபோது, சாப்பிடாமல் இருக்கிறேன். கிடைத்ததை உடுக்கிறேன். மற்றவர்கள் கூறுகிற இடம் – உயர்ந் ததோ,தாழ்ந்ததோ, எதுவோ–அந்த இடத்தில் உறங்குகிறேன். நான் யாரையும் நிந்திப்பதில்லை, பாராட்டுவதுமில்லை. தன்னை அர்ப்பணம் செய்து, மனிதன் ஆன்மாவை உணர்ந்தால், அதுவே மோட்சத்திற்கு வழி‘.
இவ்வாறு முனிவர் கூறிய விவரத்தை, தருமபுத்திரருக்கு எடுத்துரைத்த நாரதர் முடிவாக, ‘காலணி அணிந்து நடந்து செல் பவனுக்கு, பாதையில் உள்ள முட்கள் ஒரு பொருட்டல்ல; அதைப் போல, கிடைத்ததை நினைத்து திருப்தி அடைகிறவனுக்கு, வாழ்க்கைப் பாதை ஒரு சோதனை அல்ல. உணவின் ருசியை ரஸிப்பதும், காம இன்பத்தை அனுபவிப்பதும், நாயும் கூட செய் கிற காரியம்; அப்படிப்பட்ட இன்பத்தை, நாய்க்கு நிகராக, அனுபவிக்க முனைகிற மனிதனின் ஞானம் சிதறிப் போகிறது. திருப்தி இல்லையெனில், தாழ்வுதான்; ஒரு சபைக்குத் தலை மையைப் பெற்றிருந்தாலும், பெரிய பண்டிதனாக இருந்தாலும்,