ஸ்ரீமத் பாகவதம் – 18

ஒருவன் மற்றவர்களால் நிந்திக்கப்பட்டாலும், அவமானப் படுத்தப்பட்டாலும், ஏமாற்றப்பட்டாலும், பொறாமை கொண்டு அடிக்கப்பட்டாலும், தனது மனதில் கோபத்திற்கு இடம் கொடுக்காமல்,ஆன்ம சிந்தனையிலேயே உறுதியாக இருக்க வேண் டும்என்று கிருஷ்ணர் கூறியபோது, உத்தவர் ஒரு சந்தேகத்தை எழுப்பினார்.

பிறரால் ஏற்படுத்தப்படுகிற அவமதிப்பு, அவமானம், ஹிம்சை போன்றவற்றை பொறுப்பது என்பது மிகவும் கடினமான காரியம். பண்டிதர்களும் கூட இப்படிப்பட்ட பொறுமையைக் காட்ட முடியாதவர்களே. உங்களுடைய பக்தர்களால்தான் இவ்வாறு நிதானத்தைக் கடைப்பிடிக்க முடியும் என்று எண்ணுகிறேன். இந்த சகிப்புத் தன்மையை எனக்கு மேலும் விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்என்றார் உத்தவர்.

கிருஷ்ணர் சொன்னார் : ‘துஷ்டர்களின் சுடுசொற்களைப் பொறுப்பது எளிதல்லதான். அம்புகளால் அடிக்கப்பட்டவர்கள் கூட பெறாத துன்பத்தை, தீயோரின் கடுமையான வார்த்தைகள் தோற்றுவித்து விடும். ஒரு ஸன்யாசி பிறரால் அவமதிக்கப்பட்ட போது, சில தத்துவங்களை எடுத்துரைத்தார். அதைச் சொல்கிறேன், கேளும். (இவ்வாறு கூறிவிட்டு, கிருஷ்ணர், உத்தவரிடம் விளக்கியவை, பிக்ஷு கீதை என்று அழைக்கப்படுகிறது. பிக்ஷ என்றால் ஸன்யாசி. அப்படிப்பட்ட ஒரு ஸன்யாசி உரைத்ததால் இது பிக்ஷு கீதை).

கிருஷ்ணர் அந்த விவரங்களைச் சொல்லத் தொடங்கினார்: அவந்தி தேசத்தில் ஒரு அந்தணன் வாழ்ந்து வந்தான். வியா பாரத்தின் மூலம் பெரும் பணம் ஈட்டிய அவன், பெரிய கஞ்சனாகத் திகழ்ந்தான். பொருட்களின் மீது பெரும் ஆசை கொண்ட அவன், மகா கோபியாகவும் திகழ்ந்தான். தர்ம காரியங்கள் எதையும் அவன் செய்யவில்லை; அதிதிகளை (விருந்தாளிகளை) உபசரிக்க வில்லை; தானும் சுகத்தை அனுபவிக்காமல், மற்றவர்களுக்கும் உதவாமல் வாழ்ந்து வந்த அவனிடம், அவனுடைய மனைவியோ, மக்களோ, மற்ற உறவினர்களோ, பணியாட்களோ, அன்பு கொள்ளாமல் இருந்ததில் வியப்பில்லை.

புண்யம் எதையும் செய்யாத அவனுக்கு, ஒரு சமயம் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. தவிர, அவன் செல்வத்தின் ஒரு பகுதியை திருடர்கள் கொள்ளை அடித்துச் சென்று விட்டனர். மீதியை பங் காளிகள் அபகரித்து விட்டனர். இவை போதாதென்று, அரசனும் அவனிடமிருந்த பொருளின் ஒரு பகுதியை வசூலித்து விட்டான். இதற்கிடையில் அவனுடைய வீட்டில் நெருப்பு பிடித்து, பெரும் நாசம் விளைந்தது.

இப்படி செல்வம் அனைத்தையும் இழந்தவனாகி விட்ட அவன், உறவினர்களால் அவமதிக்கப்பட்டு, துக்கத்தில் மூழ்கி னான். சொந்த மக்களோ அவனை ஒதுக்கித் தள்ளினார்கள். இந்த நிலையில்தான் அவனுக்கு வைராக்கியம் உண்டாயிற்று. சிந்திக்கத் தொடங்கினான்.

பணம் ஈட்டுவதிலேயே குறியாக இருப்பவனுக்கு, தர்ம காரியங்களிலோ, புண்யச் செயல்களிலோ நாட்டம் ஏற்படு வதில்லை. பல நற்குணங்கள் பொருந்தியவனிடம் கூட, கருமித் தனம் இருந்துவிட்டால், அது ஒன்றே அவனுடைய நற்குணங் களையெல்லாம் கெடுத்து விடுகிறது. பணத்தை சம்பாதிப்பது, கடினமான காரியம்; சம்பாதித்த பணத்தைக் காப்பாற்றுவதும்; அதை மேலும் வளர்ப்பதும், இன்னமும் கடினமான காரியங்கள். இந்த பணத்தில் கொஞ்சம் செலவு செய்ய நேர்ந்தால் மனம் கஷ்டப்படுகிறது. பணத்திற்கு என்ன நேரிடுமோ என்கிற கவலை மனிதனை வாட்டுகிறது; பயம் உண்டாகிறது.

பணம் சம்பாதிப்பதையே குறியாகக் கொண்டவனுக்கு, அந்த நாட்டத்தின் விளைவாக டாம்பீகம், காமம், கோபம், பொய் பேசுவது, ஏமாற்றுவது, மற்றவர்களை விரோதிப்பது என்கிற ஆறு தீய குணங்கள் வந்து சேர்கின்றன. இவை தவிர, கர்வம், வெறி, மற்றவர்களிடையே பேதம் தோற்றுவிப்பது, பகையை வளர்த்துக் கொள்வது, யாரிடமும் விசுவாசமில்லாமல் இருப்பது, மற்ற வர்களுடன் சண்டை பிடிப்பது, பெண்களின் சேர்க்கை, சூதாட் டத்தில் ஈடுபாடு, மது அருந்துவது என்கிற வேண்டாத ஒன்பது குணங்களும் அவனிடம் தோன்றி விடுகின்றன. ஆகையால் நன்மையை விரும்புகிறவர்கள், பணம் சம்பாதிப்பதையே லட்சிய மாகக் கொள்ளக் கூடாது.

ஒருவனுடைய தகப்பனார், மனைவி, மக்கள், நண்பர்கள் எல்லோருமே பணத்தில் பங்கு கிட்டவில்லையென்றால், உறவையே விட்டு விடுவார்கள். ஒரு சிறிது பணம் கொடுத்தால், பகைவன் கூட நண்பன் போல நடிப்பான். அது வேஷம். இந்தத் தன்மையை உடைய பணத்திற்காக சண்டையிட்டுக் கொண்டு பலர் நாசமடைகிறார்கள்.

இந்த மனிதப் பிறவியோ மிகவும் மேன்மையானது. ஸ்வர்க் கத்தை அடையவோ, மோட்சத்தை எய்தவோ, மற்ற ஜீவராசிகளுக்கு இல்லாத வாய்ப்பு, மனிதனுக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட மனித சரீரத்தை அடைந்தவன், அந்த வாய்ப்பையே நாசமாக்குகிற வழியாகிய பணம் ஈட்டுதல் என்பதை லட்சியமாகக் கொள்ள லாமா? நான் அப்படித்தான் வாழ்ந்து வீணாக காலத்தைக் கழித்தேன். பணமும் போயிற்று; இளமையும் போயிற்று; உடல் வலிமையும் போயிற்று.

பகவானைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் காலம் கழித்த எனக்கும் கூட பகவான் கருணை காட்டியிருக்கிறார். அதனால்தான் உண்மைகளைப் புரிந்து கொண்டு, அவரிடமே மனதை செலுத்த வேண்டும் என்கிற சிந்தனை இப்போதாவது எனக்குத் தோன்றி யிருக்கிறது.

இனி நான் வாழப் போவது கொஞ்ச காலமாகவே இருந்தாலும் சரி, அந்த நேரத்தை வீணடிக்காமல், பகவானையே மனதில் நினைத்து நற்கதி அடைவேன்‘.

இப்படி சிந்தித்த அந்த அந்தணன், தனது அகங்காரத்தை விட்டொழித்து, ஸன்யாசத்தை மேற்கொண்டான். ஒவ்வொரு கிராமமாகச் சென்று, கிடைத்த பிக்ஷையைப் பெற்றுக் கொண்டு, பகவானைப் பற்றிய சிந்தனையிலேயே அவன் வாழ்ந்து வந்தான். அவனை சில தீயவர்கள் பல வகையில் அவமதித்தார்கள்; அவனிட மிருந்த ஜப மாலை, கமண்டலம் ஆகியவற்றை பிடுங்கி எறிந்தனர்; பிக்ஷையெடுத்ததை ஆற்றங்கரையில் அமர்ந்து அவன் உண்ணத் தொடங்கியபோது, அதில் சிறுநீர் கழித்தனர்; மௌனம் அனுஷ் டித்து வந்த அவனை வாய் திறந்து பேசுமாறு சாட்டையால் அடித் தார்கள். சிலர் அவனை திருடன் என்று துரத்தினார்கள்; சிலர் பைத்தியக்காரன் என்று விரட்டினார்கள். இன்னும் சிலர்இவன் செல்வந்தனாக இருந்தவன். இப்போது உறவினர்களால் விரட்டப் பட்ட நிலையில், பெரிய ஞானி போலவும், தர்மத்தையே நாடு பவன் போலவும் வேஷம் போடுகிறான்என்றும் நிந்தித்தார்கள்.

ஒரு நிலையில் அவன் மரத்தில் கட்டி அடிக்கப்பட்டான். சிறையிலும் அடைக்கப்பட்டான். அவனுக்கு ஜூரம் முதலிய உடல் உபாதைகளும் சில நேரங்களில் உண்டாயின.

அவனோ, எல்லாவற்றையும் பேசாமல் பொறுத்துக் கொண் டான். ஒவ்வொரு ஹிம்சையும், துன்பமும், அவமதிப்பும் நேரிட்ட போதெல்லாம் அவன், இது தனது கர்மங்களினால் தனக்கு ஏற்பட்டது என்பதை உணர்ந்து, அவற்றை அனுபவித்து விடுவதே சரி என்ற எண்ணத்துடன், அவற்றை ஏற்றுக் கொண்டான்.

அவன் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்: மனம் என்பது எல்லா பலசாலிகளைக் காட்டிலும், பலம் வாய்ந்தது. அதை தன் வசப்படுத்தியவன், தேவர்களுக்கு நிகரானவன். தாங்க முடியாத ஆசைகளும், துவேஷங்களும் மனதிற்கு வேதங்கள் போல ஆகி விடுகின்றன. அப்படிப்பட்ட மனதை வெல்லாமல், சிலரை பகைவர்கள் என்றும், சிலரை நண்பர்கள் என்றும் நினைப்பது அறிவீனம். மனதிற்கு அடிமையானதால்தான், நான், எனது என்கிற எண்ணங்கள் ஏற்படுகின்றன.

ஒருவனை மற்றொருவன் அடித்தால், இரண்டு சரீரங்கள் அடித்துக் கொள்வதும், தாங்கிக் கொள்வதுமாக இருக்கின்றனவே தவிர, அதற்கும் ஆன்மாவிற்கும் என்ன சம்பந்தம்? தன்னுடைய நாக்கை ஒருவன், தன்னுடைய பற்களாலேயே கடித்து விடும்போது, அவன் யார் மீது கோபம் கொள்வது? எந்த ஒரு மனிதனுக்கும் வேறொரு மனிதன் இன்பத்தையோ, துன்பத்தையோ உண்டு பண்ணுவதில்லை. அப்படி நினைப்பது மனதின் பிரமையே. இவன் வேண்டாதவன், இவன் வேண்டியவன், இவன் சம்பந்த மில்லாதவன் என்று நினைப்பதும் கூட இவ்வகையானதே.

மனதை அடக்கிக் கொண்டால், இந்த மாதிரி பாகுபாடுகளும், கோபதாபங்களும், இன்ப துன்பங்களும் ஏற்படாது. மனதை பகவானிடத்தில் செலுத்த வேண்டும். இதுதான் யோகங்களின் சூட்சுமம்‘.

இவ்வாறு அந்த ஸன்யாசி கூறியதை உத்தவருக்கு கிருஷ்ணர் விளக்கினார். அடுத்து ஸத்வம், ரஜஸ், தமஸ் என்கிற குணங் களினால் ஏற்படுகிற விளைவுகளை கிருஷ்ணர், உத்தவருக்குச்

சொன்னார்:

மனதை வெல்ல முனைவது; பொறுமையைக் கடைப் பிடிப்பது; விவேகத்தை கொண்டவனாகத் திகழ்வது; தர்மத்தை தவற விடாமல் இருப்பது; உண்மையே பேசுவது; தயை கொண்ட வனாக இருப்பது; கிடைத்ததைக் கொண்டு இன்புறுவது; நல்ல காரியங்களுக்காக செலவிடுவது; தீச்செயல்கள் செய்யக் கூசுவது: தாராளமாகக் கொடுப்பது; எல்லோரிடமும் பணிவாக இருப்பது; ஆத்திக புத்தியுடன் இருப்பது…. போன்றவை ஸத்வ குணத்தின் அடையாளங்கள்.

ஆசையை வளர்த்துக் கொள்வது; ஆசைப்பட்டது கிட்டியும்ஒருவன் மற்றவர்களால் நிந்திக்கப்பட்டாலும், அவமானப் படுத்தப்பட்டாலும், ஏமாற்றப்பட்டாலும், பொறாமை கொண்டு அடிக்கப்பட்டாலும், தனது மனதில் கோபத்திற்கு இடம் கொடுக்காமல்,ஆன்ம சிந்தனையிலேயே உறுதியாக இருக்க வேண் டும்’ என்று கிருஷ்ணர் கூறியபோது, உத்தவர் ஒரு சந்தேகத்தை எழுப்பினார்.

பிறரால் ஏற்படுத்தப்படுகிற அவமதிப்பு, அவமானம், ஹிம்சை போன்றவற்றை பொறுப்பது என்பது மிகவும் கடினமான காரியம். பண்டிதர்களும் கூட இப்படிப்பட்ட பொறுமையைக் காட்ட முடியாதவர்களே. உங்களுடைய பக்தர்களால்தான் இவ்வாறு நிதானத்தைக் கடைப்பிடிக்க முடியும் என்று எண்ணுகிறேன். இந்த சகிப்புத் தன்மையை எனக்கு மேலும் விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்றார் உத்தவர்.

கிருஷ்ணர் சொன்னார் : ‘துஷ்டர்களின் சுடுசொற்களைப் பொறுப்பது எளிதல்லதான். அம்புகளால் அடிக்கப்பட்டவர்கள் கூட பெறாத துன்பத்தை, தீயோரின் கடுமையான வார்த்தைகள் தோற்றுவித்து விடும். ஒரு ஸன்யாசி பிறரால் அவமதிக்கப்பட்ட போது, சில தத்துவங்களை எடுத்துரைத்தார். அதைச் சொல்கிறேன், கேளும். (இவ்வாறு கூறிவிட்டு, கிருஷ்ணர், உத்தவரிடம் விளக்கியவை, பிக்ஷு கீதை என்று அழைக்கப்படுகிறது. பிக்ஷ என்றால் ஸன்யாசி. அப்படிப்பட்ட ஒரு ஸன்யாசி உரைத்ததால் இது பிக்ஷு கீதை).

கிருஷ்ணர் அந்த விவரங்களைச் சொல்லத் தொடங்கினார்: அவந்தி தேசத்தில் ஒரு அந்தணன் வாழ்ந்து வந்தான். வியா பாரத்தின் மூலம் பெரும் பணம் ஈட்டிய அவன், பெரிய கஞ்சனாகத் திகழ்ந்தான். பொருட்களின் மீது பெரும் ஆசை கொண்ட அவன், மகா கோபியாகவும் திகழ்ந்தான். தர்ம காரியங்கள் எதையும் அவன் செய்யவில்லை; அதிதிகளை (விருந்தாளிகளை) உபசரிக்க வில்லை; தானும் சுகத்தை அனுபவிக்காமல், மற்றவர்களுக்கும் உதவாமல் வாழ்ந்து வந்த அவனிடம், அவனுடைய மனைவியோ, மக்களோ, மற்ற உறவினர்களோ, பணியாட்களோ, அன்பு கொள்ளாமல் இருந்ததில் வியப்பில்லை.

‘புண்யம் எதையும் செய்யாத அவனுக்கு, ஒரு சமயம் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. தவிர, அவன் செல்வத்தின் ஒரு பகுதியை திருடர்கள் கொள்ளை அடித்துச் சென்று விட்டனர். மீதியை பங் காளிகள் அபகரித்து விட்டனர். இவை போதாதென்று, அரசனும் அவனிடமிருந்த பொருளின் ஒரு பகுதியை வசூலித்து விட்டான். இதற்கிடையில் அவனுடைய வீட்டில் நெருப்பு பிடித்து, பெரும் நாசம் விளைந்தது.

இப்படி செல்வம் அனைத்தையும் இழந்தவனாகி விட்ட அவன், உறவினர்களால் அவமதிக்கப்பட்டு, துக்கத்தில் மூழ்கி னான். சொந்த மக்களோ அவனை ஒதுக்கித் தள்ளினார்கள். இந்த நிலையில்தான் அவனுக்கு வைராக்கியம் உண்டாயிற்று. சிந்திக்கத் தொடங்கினான்.

பணம் ஈட்டுவதிலேயே குறியாக இருப்பவனுக்கு, தர்ம காரியங்களிலோ, புண்யச் செயல்களிலோ நாட்டம் ஏற்படு வதில்லை. பல நற்குணங்கள் பொருந்தியவனிடம் கூட, கருமித் தனம் இருந்துவிட்டால், அது ஒன்றே அவனுடைய நற்குணங் களையெல்லாம் கெடுத்து விடுகிறது. பணத்தை சம்பாதிப்பது, கடினமான காரியம்; சம்பாதித்த பணத்தைக் காப்பாற்றுவதும்; அதை மேலும் வளர்ப்பதும், இன்னமும் கடினமான காரியங்கள். இந்த பணத்தில் கொஞ்சம் செலவு செய்ய நேர்ந்தால் மனம் கஷ்டப்படுகிறது. பணத்திற்கு என்ன நேரிடுமோ என்கிற கவலை மனிதனை வாட்டுகிறது; பயம் உண்டாகிறது.

‘பணம் சம்பாதிப்பதையே குறியாகக் கொண்டவனுக்கு, அந்த நாட்டத்தின் விளைவாக டாம்பீகம், காமம், கோபம், பொய் பேசுவது, ஏமாற்றுவது, மற்றவர்களை விரோதிப்பது என்கிற ஆறு தீய குணங்கள் வந்து சேர்கின்றன. இவை தவிர, கர்வம், வெறி, மற்றவர்களிடையே பேதம் தோற்றுவிப்பது, பகையை வளர்த்துக் கொள்வது, யாரிடமும் விசுவாசமில்லாமல் இருப்பது, மற்ற வர்களுடன் சண்டை பிடிப்பது, பெண்களின் சேர்க்கை, சூதாட் டத்தில் ஈடுபாடு, மது அருந்துவது என்கிற வேண்டாத ஒன்பது குணங்களும் அவனிடம் தோன்றி விடுகின்றன. ஆகையால் நன்மையை விரும்புகிறவர்கள், பணம் சம்பாதிப்பதையே லட்சிய மாகக் கொள்ளக் கூடாது.

‘ஒருவனுடைய தகப்பனார், மனைவி, மக்கள், நண்பர்கள் எல்லோருமே பணத்தில் பங்கு கிட்டவில்லையென்றால், உறவையே விட்டு விடுவார்கள். ஒரு சிறிது பணம் கொடுத்தால், பகைவன் கூட நண்பன் போல நடிப்பான். அது வேஷம். இந்தத் தன்மையை உடைய பணத்திற்காக சண்டையிட்டுக் கொண்டு பலர் நாசமடைகிறார்கள்.

‘இந்த மனிதப் பிறவியோ மிகவும் மேன்மையானது. ஸ்வர்க் கத்தை அடையவோ, மோட்சத்தை எய்தவோ, மற்ற ஜீவராசிகளுக்கு இல்லாத வாய்ப்பு, மனிதனுக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட மனித சரீரத்தை அடைந்தவன், அந்த வாய்ப்பையே நாசமாக்குகிற வழியாகிய பணம் ஈட்டுதல் என்பதை லட்சியமாகக் கொள்ள லாமா? நான் அப்படித்தான் வாழ்ந்து வீணாக காலத்தைக் கழித்தேன். பணமும் போயிற்று; இளமையும் போயிற்று; உடல் வலிமையும் போயிற்று.

‘பகவானைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் காலம் கழித்த எனக்கும் கூட பகவான் கருணை காட்டியிருக்கிறார். அதனால்தான் உண்மைகளைப் புரிந்து கொண்டு, அவரிடமே மனதை செலுத்த வேண்டும் என்கிற சிந்தனை இப்போதாவது எனக்குத் தோன்றி யிருக்கிறது.

இனி நான் வாழப் போவது கொஞ்ச காலமாகவே இருந்தாலும் சரி, அந்த நேரத்தை வீணடிக்காமல், பகவானையே மனதில் நினைத்து நற்கதி அடைவேன்’.

இப்படி சிந்தித்த அந்த அந்தணன், தனது அகங்காரத்தை விட்டொழித்து, ஸன்யாசத்தை மேற்கொண்டான். ஒவ்வொரு கிராமமாகச் சென்று, கிடைத்த பிக்ஷையைப் பெற்றுக் கொண்டு, பகவானைப் பற்றிய சிந்தனையிலேயே அவன் வாழ்ந்து வந்தான். அவனை சில தீயவர்கள் பல வகையில் அவமதித்தார்கள்; அவனிட மிருந்த ஜப மாலை, கமண்டலம் ஆகியவற்றை பிடுங்கி எறிந்தனர்; பிக்ஷையெடுத்ததை ஆற்றங்கரையில் அமர்ந்து அவன் உண்ணத் தொடங்கியபோது, அதில் சிறுநீர் கழித்தனர்; மௌனம் அனுஷ் டித்து வந்த அவனை வாய் திறந்து பேசுமாறு சாட்டையால் அடித் தார்கள். சிலர் அவனை திருடன் என்று துரத்தினார்கள்; சிலர் பைத்தியக்காரன் என்று விரட்டினார்கள். இன்னும் சிலர் “இவன் செல்வந்தனாக இருந்தவன். இப்போது உறவினர்களால் விரட்டப் பட்ட நிலையில், பெரிய ஞானி போலவும், தர்மத்தையே நாடு பவன் போலவும் வேஷம் போடுகிறான்” என்றும் நிந்தித்தார்கள்.

ஒரு நிலையில் அவன் மரத்தில் கட்டி அடிக்கப்பட்டான். சிறையிலும் அடைக்கப்பட்டான். அவனுக்கு ஜூரம் முதலிய உடல் உபாதைகளும் சில நேரங்களில் உண்டாயின.

‘அவனோ, எல்லாவற்றையும் பேசாமல் பொறுத்துக் கொண் டான். ஒவ்வொரு ஹிம்சையும், துன்பமும், அவமதிப்பும் நேரிட்ட போதெல்லாம் அவன், இது தனது கர்மங்களினால் தனக்கு ஏற்பட்டது என்பதை உணர்ந்து, அவற்றை அனுபவித்து விடுவதே சரி என்ற எண்ணத்துடன், அவற்றை ஏற்றுக் கொண்டான்.

‘அவன் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்: மனம் என்பது எல்லா பலசாலிகளைக் காட்டிலும், பலம் வாய்ந்தது. அதை தன் வசப்படுத்தியவன், தேவர்களுக்கு நிகரானவன். தாங்க முடியாத ஆசைகளும், துவேஷங்களும் மனதிற்கு வேதங்கள் போல ஆகி விடுகின்றன. அப்படிப்பட்ட மனதை வெல்லாமல், சிலரை பகைவர்கள் என்றும், சிலரை நண்பர்கள் என்றும் நினைப்பது அறிவீனம். மனதிற்கு அடிமையானதால்தான், நான், எனது என்கிற எண்ணங்கள் ஏற்படுகின்றன.

‘ஒருவனை மற்றொருவன் அடித்தால், இரண்டு சரீரங்கள் அடித்துக் கொள்வதும், தாங்கிக் கொள்வதுமாக இருக்கின்றனவே தவிர, அதற்கும் ஆன்மாவிற்கும் என்ன சம்பந்தம்? தன்னுடைய நாக்கை ஒருவன், தன்னுடைய பற்களாலேயே கடித்து விடும்போது, அவன் யார் மீது கோபம் கொள்வது? எந்த ஒரு மனிதனுக்கும் வேறொரு மனிதன் இன்பத்தையோ, துன்பத்தையோ உண்டு பண்ணுவதில்லை. அப்படி நினைப்பது மனதின் பிரமையே. இவன் வேண்டாதவன், இவன் வேண்டியவன், இவன் சம்பந்த மில்லாதவன் என்று நினைப்பதும் கூட இவ்வகையானதே.

மனதை அடக்கிக் கொண்டால், இந்த மாதிரி பாகுபாடுகளும், கோபதாபங்களும், இன்ப துன்பங்களும் ஏற்படாது. மனதை பகவானிடத்தில் செலுத்த வேண்டும். இதுதான் யோகங்களின் சூட்சுமம்’.

இவ்வாறு அந்த ஸன்யாசி கூறியதை உத்தவருக்கு கிருஷ்ணர் விளக்கினார். அடுத்து ஸத்வம், ரஜஸ், தமஸ் என்கிற குணங் களினால் ஏற்படுகிற விளைவுகளை கிருஷ்ணர், உத்தவருக்குச்

சொன்னார்:

மனதை வெல்ல முனைவது; பொறுமையைக் கடைப் பிடிப்பது; விவேகத்தை கொண்டவனாகத் திகழ்வது; தர்மத்தை தவற விடாமல் இருப்பது; உண்மையே பேசுவது; தயை கொண்ட வனாக இருப்பது; கிடைத்ததைக் கொண்டு இன்புறுவது; நல்ல காரியங்களுக்காக செலவிடுவது; தீச்செயல்கள் செய்யக் கூசுவது: தாராளமாகக் கொடுப்பது; எல்லோரிடமும் பணிவாக இருப்பது; ஆத்திக புத்தியுடன் இருப்பது…. போன்றவை ஸத்வ குணத்தின் அடையாளங்கள்.

‘ஆசையை வளர்த்துக் கொள்வது; ஆசைப்பட்டது கிட்டியும் கூட திருப்தியுறாமல் இருப்பது; காமத்தில் நாட்டம் கொண் டிருப்பது; கர்வத்தினாலும் ஆசையினாலும் தோன்றுகிற விருப் பங்கள் நிறைவேறுவதற்காக தேவதைகளை வேண்டுவது; பிறர் கூறும் புகழ்ச்சியை விரும்புவது; தன்னைத் தானே போற்றிக் கொள்வது; பணத்தைப் பயன்படுத்திக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள முனைவது… போன்றவை ரஜோ குணமுடையவனின் தன்மைகள்.

‘பயம்,ஆசை,சோகம், துக்கப்படுவது, பிறரிடம் கையேந்துகிற வழக்கம், போன்றவற்றைக் கொண்டவனாக இருப்பது; பிறருக்கு துரோகம் செய்வது; பொய் பேசுவது; ஒரு நோக்கமே இல் லாமல் செலவு செய்வது; சோம்பல் போன்றவை தாமஸ் குணமுள்ளவனிடம் காணப்படும்.

‘தர்மம், அர்த்தம்,காமம் (அறம்,பொருள், இன்பம்) ஆகிய மூன்றிலும் ஒருவனுக்கு ஈடுபாடு உண்டாகிறது என்றால், அவனிடம் ஸத்வம், ரஜஸ், தமஸ் மூன்றுமே காணப்படுகின்றன என்று பொருள்.

பயனைக் கருதாமல், தனக்குரியவற்றைச் செய்து கொண்டு, என்னை பூஜித்து வருபவர்கள் ஸத்வ குணம் உடையவர்கள்.

‘இது எனக்கு பகவானின் அருளினால் கிட்டட்டும் என்று வேண்டிக் கொண்டு என்னை பூஜிப்பவர்கள் – ரஜோ குணம் உடையவர்கள்.

பிறரைக் கொல்லவோ, ஹிம்சிக்கவோ எண்ணம் கொண்டு, அந்த எண்ணம் ஈடேறும் என்று நினைத்துக் கொண்டு, அதற்காக என்னை பூஜிப்பவர்கள் – தமோ குணம் உடையவர்கள்.

‘விவேகமின்மையை தரக் கூடியதும், சோம்பலை உண்டாக்கக் கூடியதுமான தமோகுணமானது ஒருவனிடம் மேலாக இருந்தால், அப்போது அவன் பிறரை ஹிம்சிப்பவனாகவும், பேராசை கொண்டவனாகவும் திகழ்ந்து துக்கத்தில் வீழ்கிறான்.

‘ஒருவனிடம் ரஜோ குணமானது மேலாக இருந்தால், அப்படிப் பட்டவனின் மனம் ஒரு கட்டுக்குள் அடங்காமல் அலைபாய, இன்பங்களிலேயே ஈடுபட்டு, அதற்காகவே அவன் முனைகிறான்.

ஒருவனிடம், ஸத்வ குணம் மேலோங்கி இருந்தால், யாரிடத் திலும் பயமின்றி, எவரிடத்திலும் பகையின்றி, ஆசைகளை வளர்த்துக் கொள்ளாமல், பகவானிடம் சரணடைகிற தன்மை அவனிடம் இருக்கும்.

‘பயனை எதிர்பார்த்து செய்யப்படுகிற காரியம்

ராஜஸம்; பிறரை ஹிம்ஸிப்பதைக் குறியாகக் கொண்ட காரியம் தாமஸம்; பயனை எதிர்பாராமல் பகவானுக்கு அர்ப்பணம் செய்து மேற் கொள்ளப்படுகிற காரியம் – ஸாத்வீகம்.

உணவுகளை எடுத்துக் கொண்டால், அசுத்தமானது தாமஸம்; ருசிக்கு ஏற்றதாக இருப்பது – ராஜஸம்; எளிதாகக் கிட்டுவது (இயற்கையானது) – ஸாத்வீகம்.

‘ஆசையை வளர்த்துக் கொள்ளாமல், என்னையே வழிபட்டு வந்தால் ஸத்வ குணம் ஓங்கி, சாந்தமான மனம் கிட்டி, சித்தம் பிரகாசிக்கும்’.

இவ்வாறு கூறிய கிருஷ்ணர் மேலும் தொடர்ந்தார். கூட திருப்தியுறாமல் இருப்பது; காமத்தில் நாட்டம் கொண் டிருப்பது; கர்வத்தினாலும் ஆசையினாலும் தோன்றுகிற விருப் பங்கள் நிறைவேறுவதற்காக தேவதைகளை வேண்டுவது; பிறர் கூறும் புகழ்ச்சியை விரும்புவது; தன்னைத் தானே போற்றிக் கொள்வது; பணத்தைப் பயன்படுத்திக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள முனைவது… போன்றவை ரஜோ குணமுடையவனின் தன்மைகள்.

‘பயம்,ஆசை,சோகம், துக்கப்படுவது, பிறரிடம் கையேந்துகிற வழக்கம், போன்றவற்றைக் கொண்டவனாக இருப்பது; பிறருக்கு துரோகம் செய்வது; பொய் பேசுவது; ஒரு நோக்கமே இல் லாமல் செலவு செய்வது; சோம்பல் போன்றவை தாமஸ் குணமுள்ளவனிடம் காணப்படும்.

‘தர்மம், அர்த்தம்,காமம் (அறம்,பொருள், இன்பம்) ஆகிய மூன்றிலும் ஒருவனுக்கு ஈடுபாடு உண்டாகிறது என்றால், அவனிடம் ஸத்வம், ரஜஸ், தமஸ் மூன்றுமே காணப்படுகின்றன என்று பொருள்.

பயனைக் கருதாமல், தனக்குரியவற்றைச் செய்து கொண்டு, என்னை பூஜித்து வருபவர்கள் ஸத்வ குணம் உடையவர்கள்.

‘இது எனக்கு பகவானின் அருளினால் கிட்டட்டும் என்று வேண்டிக் கொண்டு என்னை பூஜிப்பவர்கள் – ரஜோ குணம் உடையவர்கள்.

பிறரைக் கொல்லவோ, ஹிம்சிக்கவோ எண்ணம் கொண்டு, அந்த எண்ணம் ஈடேறும் என்று நினைத்துக் கொண்டு, அதற்காக என்னை பூஜிப்பவர்கள் – தமோ குணம் உடையவர்கள்.

‘விவேகமின்மையை தரக் கூடியதும், சோம்பலை உண்டாக்கக் கூடியதுமான தமோகுணமானது ஒருவனிடம் மேலாக இருந்தால், அப்போது அவன் பிறரை ஹிம்சிப்பவனாகவும், பேராசை கொண்டவனாகவும் திகழ்ந்து துக்கத்தில் வீழ்கிறான்.

‘ஒருவனிடம் ரஜோ குணமானது மேலாக இருந்தால், அப்படிப் பட்டவனின் மனம் ஒரு கட்டுக்குள் அடங்காமல் அலைபாய, இன்பங்களிலேயே ஈடுபட்டு, அதற்காகவே அவன் முனைகிறான்.

ஒருவனிடம், ஸத்வ குணம் மேலோங்கி இருந்தால், யாரிடத் திலும் பயமின்றி, எவரிடத்திலும் பகையின்றி, ஆசைகளை வளர்த்துக் கொள்ளாமல், பகவானிடம் சரணடைகிற தன்மை அவனிடம் இருக்கும்.

‘பயனை எதிர்பார்த்து செய்யப்படுகிற காரியம்

ராஜஸம்; பிறரை ஹிம்ஸிப்பதைக் குறியாகக் கொண்ட காரியம் தாமஸம்; பயனை எதிர்பாராமல் பகவானுக்கு அர்ப்பணம் செய்து மேற் கொள்ளப்படுகிற காரியம் – ஸாத்வீகம்.

உணவுகளை எடுத்துக் கொண்டால், அசுத்தமானது தாமஸம்; ருசிக்கு ஏற்றதாக இருப்பது – ராஜஸம்; எளிதாகக் கிட்டுவது (இயற்கையானது) – ஸாத்வீகம்.

‘ஆசையை வளர்த்துக் கொள்ளாமல், என்னையே வழிபட்டு வந்தால் ஸத்வ குணம் ஓங்கி, சாந்தமான மனம் கிட்டி, சித்தம் பிரகாசிக்கும்’.

இவ்வாறு கூறிய கிருஷ்ணர் மேலும் தொடர்ந்தார்.