வால்மீகி இயற்றிய ஆதி காவியமாகிய ராமாயணத்தைத் தவிர, வேறு சில ராமாயண நூல்கள், சில நூறு வருடங்களுக்கு முன்னால் இயற்றப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட ராமாயண நூல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவற்றில் கம்பர் எழுதிய ராமாயணமும், துளசிதாஸர் எழுதிய ராமசரிதமானஸமும் (ராம சரித்திரம் எனும் நீர்நிலை) மிகவும் பிரபலமானவை. வால்மீகியின் ராமாயணத்தையொட்டியே தனது நூலை இயற்றியிருப்பதாகக் கம்பரே கூறுகிறார். ஆனாலும் கூட, வால்மீகியின் ராமாயணத்திற்கும், கம்ப ராமாயணத்திற்கும் இடையே சில வேறுபாடுகள் இருக்கின்றன; சில நிகழ்ச்சிகள், சில குணசித்திரங்கள் ஆகியவற்றை விவரிக்கும்போது, கம்பர் தனது கவித் திறனுக்கும், கற்பனை வளத்திற்கும் ஏற்ப சில மாறுதல் களைச் செய்திருக்கிறார்.
துளசிதாஸரின் நூலோ, பெரும்பாலும் அத்யாத்ம ராமா யணத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது. அத்யாத்ம ராமாயணம் வால்மீகியின் காலத்திற்குப் பிறகு, நெடுங்காலம் கழித்து எழுதப் பெற்றது. அதையொட்டிய துளசிதாஸரின் நூல், கி.பி.16-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. கம்பர் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் தனது படைப்பைச் செய்தார். ஆனால் வால்மீகி ராமாயணமோ, பல பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக, த்ரேதா யுகத்தில், ராமர் காலத்திலேயே இயற்றப்பட்டது.
ஆகையால் ‘ஒரிஜினல்‘, வால்மீகியின் நூலே. அதன் பின்னர் பலர், தங்கள் தங்கள் பார்வைக்கேற்றபடி ராமாயண நிகழ்ச்சிகளை அமைத்து, மேற்சொன்ன மாதிரி பல்வேறு ராமாயண நூல்களை இயற்றியிருக்கிறார்கள். இவற்றில் கவித் திறனும், கற்பனாசக்தியும் நிரம்பியிருக்கலாம். ஆனால் ஆதி காவியமாகிய வால்மீகியின் ராமாயணமோ, ப்ரும்ம தேவனின் அருள் பெற்று இயற்றப்பட்டது. மற்ற நூல்களை காவிய நயத்திற்காகவும், இலக்கியச் சிறப்பிற் காகவும் படிக்கலாம்; வால்மீகியின் ராமாயணத்தையோ, காவியத் திறனுக்காக மட்டுமல்லாமல், புனிதமுறுவதற்காகவே கூட படிக்கலாம்.
பல ராமாயணங்கள் இருப்பதாலும், அவற்றை ஒட்டி இயற்றப் பட்ட நாடகங்கள், திரைக் கதைகள் போன்றவை மக்களிடையே பரவியதாலும், வால்மீகி ராமாயணத்தில் இடம் பெறாத பல நிகழ்ச்சிகளும், அந்த நூலில் இடம் பெறுகிற சில நிகழ்ச்சிகள், சில மாறுதல்களுடனும், பலர் மனதில் பதிந்து விட்டன.
ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம்.
ஜனகரிடம் இருந்த சிவ தனுஸை ராமர் ஒடிப்பதற்கு முன் பாகவே, ஸீதையும் ராமரும் பரஸ்பர அன்பு கொண்டு விட்டனர் என்பது வால்மீகி ராமாயணத்தில் இல்லாத விஷயம்.
லக்ஷ்மண் ரேகா – லக்ஷ்மணன் கிழித்த கோடு – என்பது பல ராலும் அடிக்கடிப் பேசப்படுகிற விஷயம். இது வால்மீகி ராமா யணத்தில் இல்லை. அதோடு, கம்ப ராமாயணத்திலோ, துளசி தாஸரின் ராமாயணத்திலோகூட இப்படி லக்ஷ்மணன் பூமியில் ஒரு கோட்டைக் கிழித்து, அதைத் தாண்ட வேண்டாம் என்று ஸீதையிடம் கூறுவதாக ஒரு நிகழ்ச்சி கிடையாது. ஆனாலும் இது எல்லோராலும் பேசப்படுகிற விஷயமாகி விட்டது. எப்படி? ஆனந்த ராமாயணம் என்ற நூலில் இந்த நிகழ்ச்சி இடம் பெற, அதுவே பின்னர் பல ராமாயண நாடகங்கள் போன்ற படைப்பு களில் இடம் பெற்று விட்டது என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. ராமர் கொடுத்த ரங்கநாதர் விக்ரஹத்தை, விபீஷணன் இலங் கைக்கு எடுத்துச் சென்றான் என்றும் வால்மீகி ராமாயணத்தில் இல்லை. ஸீதையின் மீது ஊர் மக்கள் கூறுகிற களங்கம் சலவைத் தொழிலாளி சொல்ல, ராமர் காதுக்கு போயிற்று என்பதும் வால்மீகி ராமாயணப்படி சரியல்ல. இப்படி பல நிகழ்ச்சிகளைக் கூறலாம்.
வால்மீகியின் நூலுக்குப் பிறகு வந்த பல ராமாயணங்கள் இப்படி இருப்பதாலும், அவற்றையொட்டிய கதைகள் பல வந்துவிட்டதாலும் – வால்மீகி ராமாயணத்தையே கூட ஆழ்ந்து படிக்கிற வாய்ப்பு பலருக்குக் கிட்டாததாலும் கூட ஒரு முக்கியமான ராமாயண நிகழ்ச்சி பற்றி, தவறான கருத்து உரு வாகியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இது வாலி வதம் என்கிற நிகழ்ச்சி. இது பற்றி, ராமாயண நூலில் நான் விவரமாக எழுதியிருப்பதையே நினைவூட்ட விரும்புகிறேன்.
இந்த கருத்து, ‘பிரதிவாதி பயங்கர, ராமாயண சிரோமணி, வால்மீகி ராமாயண ப்ரவசன சக்ரவர்த்தி ப்ரும்மஸ்ரீ சீதாராம் சாஸ்திரிகள் என்பவரால், 1939-ல் ஒரு நூலில் எழுதப்பட்ட விவரங்களை அடிப்படையாகக் கொண்டது.
பொதுவாக, ஒரு கதை கூறப்படுவதுண்டு. வாலியோடு யார் சண்டையிட்டாலும், அவர்களுடைய பலத்தில் பாதி பலம் வாலிக்கு வந்து விடும் என்றும், அதனால்தான் ராமர், வாலியின் எதிரில் வராமலே அம்பு செலுத்தினார் என்றும் போகிறது இந்தக் கதை. இது வால்மீகி ராமாயணத்தில் இல்லை. வால்மீகி ராமா யணத்தில், வாலியின் கழுத்தில் இருக்கிற மாலை பற்றி கூறப் படுகிற விவரம் ஒன்று உண்டு. அந்தத் தங்கச் சங்கிலி, இந்திரனால் வாலிக்கு அளிக்கப்பட்டது. வெற்றியைத் தருவது. இதைத்தான் வாலி மரணத்தறுவாயில் சுக்ரீவனுக்கு அளிக்கிறான். இந்தச் சங்கிலிக்கு எதிராளியின் பலத்தில் பாதியை இழுத்து விடுகிற சக்தி கிடையாது.
அடுத்து வாலி மீது ராமர் அம்பு எய்திய விவகாரத்தைப் பார்ப் போம். கம்ப ராமாயணத்திலும், துளசிதாஸரின் ராமாயணத்திலும் ராமர், மறைந்து இருந்து வாலியின் மீது அம்பு எய்தினார் என்று வருகிறது. ஆனால் வால்மீகி ராமாயணத்தில் எந்த ஒரு இடத்திலும், ‘ராமர் மறைந்திருந்து வாலியின் மீது அம்பு எய்தினார்‘ என்று கூறப் படவில்லை. ஆனால் ‘ஒருவேளை மறைந்திருந்துதான் அடித் தாரோ‘ என்ற எண்ணம் ஏற்படுகிற வகையில், வால்மீகி ராமாயண வர்ணனைகள் சில அமைந்திருக்கின்றன. அதனால்தான் இது பற்றி இன்றும் கூட சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறதோ என்னவோ!
வாலி, ராமரைக் கடிந்து பேசுவதெல்லாம் – ‘அவன் சித்தம் கலங்கிப் பேசிய வார்த்தைகள்‘ என்பது வால்மீகியாலேயே கூறப்படுகிறது. அவனே கூட பிறகு, ‘நான் தவறாகப் பேசி விட் டேன்‘ என்று சொல்கிறான். இப்படி அவன் சொல்வது, ராமரை மனம் போனபடி ஏசியதை நினைத்தும் இருக்கலாம் – அல்லது அவர் தன்னால் பார்க்கப்படாமல் இருந்தபோது, தன்னை அடித்தார். என்று கூறியதற்காகவும் இருக்கலாம்.
ஆனால் ‘யுத்தத்தில் உன்னை வீழ்த்தினேன்‘ என்று ராமர் சொல்வதற்கு வாலி மறுப்புக் கூறவில்லை என்பது கவனிக்கத் தக்கது. இவை ஒருபுறமிருக்க, வாலி வீழ்ந்த செய்தியைத் தாரைக்கு தெரிவிக்கிற வானரர்கள், ‘வாலி தூக்கி எறிந்த மரங்களையும், பாறைகளையும் ஒரே நொடியில் ஒரு மின்னலைப் போல் பொடி செய்து, ராமர் அவரை வீழ்த்தி விட்டார்‘ என்று கூறுகின்றனர்.
அந்த வானரர்கள் பொய் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை; அவர்கள் பொய் சொன்னதாக வால்மீகி சொல்லவும் இல்லை. இப்படியிருக்க, வாலி பார்க்காதபோது, ராமர் அவனை வீழ்த்தினார் என்று எப்படி உறுதியிட்டுச் சொல்வது? ‘தனது வில் லில் ராமர் நாணேற்றியபோது உண்டாகிய பேரொலியைக் கேட்டு பயந்து பறவைகளும், மான்களும் சிதறி ஓடின‘ என்றும் வால்மீகி கூறுகிறார். அப்படியிருக்க, வாலி மட்டும் தை அறியவில்லை என்பது எப்படி?
கம்ப ராமாயணத்தில் வருவது போல் – வால்மீகி ராமாயணத் தில் மறைந்து நின்று அடிக்க ராமர் திட்டமிடவில்லை; கம்ப ராமாயணத்தில் லக்ஷ்மணன், ராமர் மறைந்து அடித்ததாக ஒப்புக் கொள்வது போல், வால்மீகி ராமாயணத்தில் எதுவும் கூறப்பட வில்லை; ‘என்னால் பார்க்கப்படாதபோது நீ அடித்தாய்‘ என்று வாலி சொன்ன போது, அவன் ‘சித்தம் கலங்கிய நிலையில் இருந் தான்‘ என்று வால்மீகி கூறுகிறார். அவன் ‘குழப்பத்துடன் பேசி னான்‘ என்றும் சொல்கிறார்.
அவனுக்குப் பதில் கூறுகிற ராமர், தர்ம நியாயங்களையும், மிருகங்களை அடிக்கிற அரசர்களின் வழக்கத்தையும் எடுத்துச் சொல்லியது, அவனுடைய வாதங்களுக்குப் பதில் அளிப்பதற்காக; ஆனால் ராமர் அதோடு நிற்கவில்லை; மிகவும் தெளிவாக ‘யுத்தத்தில் என்னால் நீ வீழ்த்தப்பட்டாய்‘ என்று கூறுகிறார்; இதை வாலி மறுக்கவில்லை; ராமரின் வீரத்தைப் பிறகு பாராட்டுகிற சுக்ரீவன், அவர் மறைந்திருந்து அடித்திருந்தால் பாராட்டியிருப் பானா? என்ற கேள்வியும் எழுகிறது; ஒருவன் பாராதபோது அவனை அடிப்பதை, ஹனுமானே கூட இகழ்ந்து பேசுவதாக யுத்த காண்டத்தில் பின்னர் வருகிறது. ராவணனோடு ஏற்பட்ட மோதலின் போது ஹனுமான் அவ்வாறு பேசுகிறார். அப்படியிருக்க ராமர் அவ்வாறு செய்திருந்தால், அதை ஹனுமான் உட்பட யாராவது பாராட்டியிருப்பார்களா?’ – என்ற கேள்வியும் எழுகிறது.
இவற்றையெல்லாம் விட முக்கியமாக இன்னொரு விஷயமும் இருக்கிறது. வால்மீகிக்கு ராமாயண வரலாற்றை முதலில் கூறியவர் நாரதர் என்பதை இந்தத் தொடரின் ஆரம்பத்தில் பார்த்தோம். அவ்வாறு கூறிய நாரதர், சுக்ரீவனின் வேண்டுகோளை ஏற்று, வாலியை யுத்தத்தில் ராமர் வதம் செய்தார்‘ என்று சொல்கிறார். இது போதாதென்று ராமரின் பட்டாபிஷேகத்தின்போது ராவணன், வாலி, ஹனுமான், இந்திரஜித் போன்றவர்களின் பூர்வ கதைகளை யும், அவர்களுடைய சக்திகளையும் ராமருக்கு விவரிக்கிற அகஸ்திய முனிவர், வாலியை வீழ்த்தியதற்காக ராமரின் வீரத்தைப் பாராட்டு கிறார். நாரதரோ, அகஸ்தியரோ – மறைந்து இருந்து அடித்ததற் காகவா ராமரைப் பாராட்டுகிறார்கள்?
வாலியும், சுக்ரீவனும் இறுகப் பிடித்துக் கொண்டுதான் முழுச் சண்டையும் போட்டுத் தீர்த்தார்கள் என்று நினைத்துக் கொள்ளக் வால்மீகி இயற்றிய ஆதி காவியமாகிய ராமாயணத்தைத் தவிர, வேறு சில ராமாயண நூல்கள், சில நூறு வருடங்களுக்கு முன்னால் இயற்றப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட ராமாயண நூல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவற்றில் கம்பர் எழுதிய ராமாயணமும், துளசிதாஸர் எழுதிய ராமசரிதமானஸமும் (ராம சரித்திரம் எனும் நீர்நிலை) மிகவும் பிரபலமானவை. வால்மீகியின் ராமாயணத்தையொட்டியே தனது நூலை இயற்றியிருப்பதாகக் கம்பரே கூறுகிறார். ஆனாலும் கூட, வால்மீகியின் ராமாயணத்திற்கும், கம்ப ராமாயணத்திற்கும் இடையே சில வேறுபாடுகள் இருக்கின்றன; சில நிகழ்ச்சிகள், சில குணசித்திரங்கள் ஆகியவற்றை விவரிக்கும்போது, கம்பர் தனது கவித் திறனுக்கும், கற்பனை வளத்திற்கும் ஏற்ப சில மாறுதல் களைச் செய்திருக்கிறார்.
துளசிதாஸரின் நூலோ, பெரும்பாலும் அத்யாத்ம ராமா யணத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது. அத்யாத்ம ராமாயணம் வால்மீகியின் காலத்திற்குப் பிறகு, நெடுங்காலம் கழித்து எழுதப் பெற்றது. அதையொட்டிய துளசிதாஸரின் நூல், கி.பி.16-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. கம்பர் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் தனது படைப்பைச் செய்தார். ஆனால் வால்மீகி ராமாயணமோ, பல பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக, த்ரேதா யுகத்தில், ராமர் காலத்திலேயே இயற்றப்பட்டது.
ஆகையால் ‘ஒரிஜினல்’, வால்மீகியின் நூலே. அதன் பின்னர் பலர், தங்கள் தங்கள் பார்வைக்கேற்றபடி ராமாயண நிகழ்ச்சிகளை அமைத்து, மேற்சொன்ன மாதிரி பல்வேறு ராமாயண நூல்களை இயற்றியிருக்கிறார்கள். இவற்றில் கவித் திறனும், கற்பனாசக்தியும் நிரம்பியிருக்கலாம். ஆனால் ஆதி காவியமாகிய வால்மீகியின் ராமாயணமோ, ப்ரும்ம தேவனின் அருள் பெற்று இயற்றப்பட்டது. மற்ற நூல்களை காவிய நயத்திற்காகவும், இலக்கியச் சிறப்பிற் காகவும் படிக்கலாம்; வால்மீகியின் ராமாயணத்தையோ, காவியத் திறனுக்காக மட்டுமல்லாமல், புனிதமுறுவதற்காகவே கூட படிக்கலாம்.
பல ராமாயணங்கள் இருப்பதாலும், அவற்றை ஒட்டி இயற்றப் பட்ட நாடகங்கள், திரைக் கதைகள் போன்றவை மக்களிடையே பரவியதாலும், வால்மீகி ராமாயணத்தில் இடம் பெறாத பல நிகழ்ச்சிகளும், அந்த நூலில் இடம் பெறுகிற சில நிகழ்ச்சிகள், சில மாறுதல்களுடனும், பலர் மனதில் பதிந்து விட்டன.
ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம்.
ஜனகரிடம் இருந்த சிவ தனுஸை ராமர் ஒடிப்பதற்கு முன் பாகவே, ஸீதையும் ராமரும் பரஸ்பர அன்பு கொண்டு விட்டனர் என்பது வால்மீகி ராமாயணத்தில் இல்லாத விஷயம்.
லக்ஷ்மண் ரேகா – லக்ஷ்மணன் கிழித்த கோடு – என்பது பல ராலும் அடிக்கடிப் பேசப்படுகிற விஷயம். இது வால்மீகி ராமா யணத்தில் இல்லை. அதோடு, கம்ப ராமாயணத்திலோ, துளசி தாஸரின் ராமாயணத்திலோகூட இப்படி லக்ஷ்மணன் பூமியில் ஒரு கோட்டைக் கிழித்து, அதைத் தாண்ட வேண்டாம் என்று ஸீதையிடம் கூறுவதாக ஒரு நிகழ்ச்சி கிடையாது. ஆனாலும் இது எல்லோராலும் பேசப்படுகிற விஷயமாகி விட்டது. எப்படி? ஆனந்த ராமாயணம் என்ற நூலில் இந்த நிகழ்ச்சி இடம் பெற, அதுவே பின்னர் பல ராமாயண நாடகங்கள் போன்ற படைப்பு களில் இடம் பெற்று விட்டது என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. ராமர் கொடுத்த ரங்கநாதர் விக்ரஹத்தை, விபீஷணன் இலங் கைக்கு எடுத்துச் சென்றான் என்றும் வால்மீகி ராமாயணத்தில் இல்லை. ஸீதையின் மீது ஊர் மக்கள் கூறுகிற களங்கம் சலவைத் தொழிலாளி சொல்ல, ராமர் காதுக்கு போயிற்று என்பதும் வால்மீகி ராமாயணப்படி சரியல்ல. இப்படி பல நிகழ்ச்சிகளைக் கூறலாம்.
வால்மீகியின் நூலுக்குப் பிறகு வந்த பல ராமாயணங்கள் இப்படி இருப்பதாலும், அவற்றையொட்டிய கதைகள் பல வந்துவிட்டதாலும் – வால்மீகி ராமாயணத்தையே கூட ஆழ்ந்து படிக்கிற வாய்ப்பு பலருக்குக் கிட்டாததாலும் கூட ஒரு முக்கியமான ராமாயண நிகழ்ச்சி பற்றி, தவறான கருத்து உரு வாகியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இது வாலி வதம் என்கிற நிகழ்ச்சி. இது பற்றி, ராமாயண நூலில் நான் விவரமாக எழுதியிருப்பதையே நினைவூட்ட விரும்புகிறேன்.
இந்த கருத்து, ‘பிரதிவாதி பயங்கர, ராமாயண சிரோமணி, வால்மீகி ராமாயண ப்ரவசன சக்ரவர்த்தி ப்ரும்மஸ்ரீ சீதாராம் சாஸ்திரிகள் என்பவரால், 1939-ல் ஒரு நூலில் எழுதப்பட்ட விவரங்களை அடிப்படையாகக் கொண்டது.
பொதுவாக, ஒரு கதை கூறப்படுவதுண்டு. வாலியோடு யார் சண்டையிட்டாலும், அவர்களுடைய பலத்தில் பாதி பலம் வாலிக்கு வந்து விடும் என்றும், அதனால்தான் ராமர், வாலியின் எதிரில் வராமலே அம்பு செலுத்தினார் என்றும் போகிறது இந்தக் கதை. இது வால்மீகி ராமாயணத்தில் இல்லை. வால்மீகி ராமா யணத்தில், வாலியின் கழுத்தில் இருக்கிற மாலை பற்றி கூறப் படுகிற விவரம் ஒன்று உண்டு. அந்தத் தங்கச் சங்கிலி, இந்திரனால் வாலிக்கு அளிக்கப்பட்டது. வெற்றியைத் தருவது. இதைத்தான் வாலி மரணத்தறுவாயில் சுக்ரீவனுக்கு அளிக்கிறான். இந்தச் சங்கிலிக்கு எதிராளியின் பலத்தில் பாதியை இழுத்து விடுகிற சக்தி கிடையாது.
அடுத்து வாலி மீது ராமர் அம்பு எய்திய விவகாரத்தைப் பார்ப் போம். கம்ப ராமாயணத்திலும், துளசிதாஸரின் ராமாயணத்திலும் ராமர், மறைந்து இருந்து வாலியின் மீது அம்பு எய்தினார் என்று வருகிறது. ஆனால் வால்மீகி ராமாயணத்தில் எந்த ஒரு இடத்திலும், ‘ராமர் மறைந்திருந்து வாலியின் மீது அம்பு எய்தினார்’ என்று கூறப் படவில்லை. ஆனால் ‘ஒருவேளை மறைந்திருந்துதான் அடித் தாரோ’ என்ற எண்ணம் ஏற்படுகிற வகையில், வால்மீகி ராமாயண வர்ணனைகள் சில அமைந்திருக்கின்றன. அதனால்தான் இது பற்றி இன்றும் கூட சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறதோ என்னவோ!
வாலி, ராமரைக் கடிந்து பேசுவதெல்லாம் – ‘அவன் சித்தம் கலங்கிப் பேசிய வார்த்தைகள்’ என்பது வால்மீகியாலேயே கூறப்படுகிறது. அவனே கூட பிறகு, ‘நான் தவறாகப் பேசி விட் டேன்’ என்று சொல்கிறான். இப்படி அவன் சொல்வது, ராமரை மனம் போனபடி ஏசியதை நினைத்தும் இருக்கலாம் – அல்லது அவர் தன்னால் பார்க்கப்படாமல் இருந்தபோது, தன்னை அடித்தார். என்று கூறியதற்காகவும் இருக்கலாம்.
ஆனால் ‘யுத்தத்தில் உன்னை வீழ்த்தினேன்’ என்று ராமர் சொல்வதற்கு வாலி மறுப்புக் கூறவில்லை என்பது கவனிக்கத் தக்கது. இவை ஒருபுறமிருக்க, வாலி வீழ்ந்த செய்தியைத் தாரைக்கு தெரிவிக்கிற வானரர்கள், ‘வாலி தூக்கி எறிந்த மரங்களையும், பாறைகளையும் ஒரே நொடியில் ஒரு மின்னலைப் போல் பொடி செய்து, ராமர் அவரை வீழ்த்தி விட்டார்’ என்று கூறுகின்றனர்.
அந்த வானரர்கள் பொய் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை; அவர்கள் பொய் சொன்னதாக வால்மீகி சொல்லவும் இல்லை. இப்படியிருக்க, வாலி பார்க்காதபோது, ராமர் அவனை வீழ்த்தினார் என்று எப்படி உறுதியிட்டுச் சொல்வது? ‘தனது வில் லில் ராமர் நாணேற்றியபோது உண்டாகிய பேரொலியைக் கேட்டு பயந்து பறவைகளும், மான்களும் சிதறி ஓடின’ என்றும் வால்மீகி கூறுகிறார். அப்படியிருக்க, வாலி மட்டும் தை அறியவில்லை என்பது எப்படி?
கம்ப ராமாயணத்தில் வருவது போல் – வால்மீகி ராமாயணத் தில் மறைந்து நின்று அடிக்க ராமர் திட்டமிடவில்லை; கம்ப ராமாயணத்தில் லக்ஷ்மணன், ராமர் மறைந்து அடித்ததாக ஒப்புக் கொள்வது போல், வால்மீகி ராமாயணத்தில் எதுவும் கூறப்பட வில்லை; ‘என்னால் பார்க்கப்படாதபோது நீ அடித்தாய்’ என்று வாலி சொன்ன போது, அவன் ‘சித்தம் கலங்கிய நிலையில் இருந் தான்’ என்று வால்மீகி கூறுகிறார். அவன் ‘குழப்பத்துடன் பேசி னான்’ என்றும் சொல்கிறார்.
அவனுக்குப் பதில் கூறுகிற ராமர், தர்ம நியாயங்களையும், மிருகங்களை அடிக்கிற அரசர்களின் வழக்கத்தையும் எடுத்துச் சொல்லியது, அவனுடைய வாதங்களுக்குப் பதில் அளிப்பதற்காக; ஆனால் ராமர் அதோடு நிற்கவில்லை; மிகவும் தெளிவாக ‘யுத்தத்தில் என்னால் நீ வீழ்த்தப்பட்டாய்’ என்று கூறுகிறார்; இதை வாலி மறுக்கவில்லை; ராமரின் வீரத்தைப் பிறகு பாராட்டுகிற சுக்ரீவன், அவர் மறைந்திருந்து அடித்திருந்தால் பாராட்டியிருப் பானா? என்ற கேள்வியும் எழுகிறது; ஒருவன் பாராதபோது அவனை அடிப்பதை, ஹனுமானே கூட இகழ்ந்து பேசுவதாக யுத்த காண்டத்தில் பின்னர் வருகிறது. ராவணனோடு ஏற்பட்ட மோதலின் போது ஹனுமான் அவ்வாறு பேசுகிறார். அப்படியிருக்க ராமர் அவ்வாறு செய்திருந்தால், அதை ஹனுமான் உட்பட யாராவது பாராட்டியிருப்பார்களா?’ – என்ற கேள்வியும் எழுகிறது.
இவற்றையெல்லாம் விட முக்கியமாக இன்னொரு விஷயமும் இருக்கிறது. வால்மீகிக்கு ராமாயண வரலாற்றை முதலில் கூறியவர் நாரதர் என்பதை இந்தத் தொடரின் ஆரம்பத்தில் பார்த்தோம். அவ்வாறு கூறிய நாரதர், சுக்ரீவனின் வேண்டுகோளை ஏற்று, வாலியை யுத்தத்தில் ராமர் வதம் செய்தார்’ என்று சொல்கிறார். இது போதாதென்று ராமரின் பட்டாபிஷேகத்தின்போது ராவணன், வாலி, ஹனுமான், இந்திரஜித் போன்றவர்களின் பூர்வ கதைகளை யும், அவர்களுடைய சக்திகளையும் ராமருக்கு விவரிக்கிற அகஸ்திய முனிவர், வாலியை வீழ்த்தியதற்காக ராமரின் வீரத்தைப் பாராட்டு கிறார். நாரதரோ, அகஸ்தியரோ – மறைந்து இருந்து அடித்ததற் காகவா ராமரைப் பாராட்டுகிறார்கள்?
வாலியும், சுக்ரீவனும் இறுகப் பிடித்துக் கொண்டுதான் முழுச் சண்டையும் போட்டுத் தீர்த்தார்கள் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. ஒருவர் மீது ஒருவர் மலைகளைப் பிடுங்கி எறிந்தார்கள். மரங்களைத் தூக்கி எறிந்தார்கள் என்றெல்லாம் வால்மீகி வர்ணிக்கிறார். இவையெல்லாம் ஒருவருக்கொருவர் அருகில் நின்று செய்யும் தாக்குதல்கள் அல்ல. இது தவிர, சண்டை யிடும்போது அவர்கள் இருவரும் அந்தக் காட்டில் பல இடங்களில் அலைந்தார்கள் என்றும் வால்மீகி கூறுகிறார். கம்ப ராமாயணத்தில் தனது இரு கைகளால் வாலி, சுக்ரீவனைத் தூக்கியபடி நின்றபோது, ராமர் அம்பெய்தினார் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் வால்மீகி ராமாயணத்தில் இப்படி இல்லை. சுக்ரீவன் சண்டையில் ஓய்ந்து போய்விட்டான்; என்ன செய்வது என்று தெரியாமல் நாலாபுறமும் நோக்குகிறான்; அந்தச் சமயத்தில் தான் ராமர் அம்பு எய்துகிறார். அதாவது ராமர் அம்பு எய்தது- வாலி, சுக்ரீவன் சண்டை நடந்து கொண்டிருந்தபோது அல்ல; சுக்ரீவன் ஓய்ந்து, ஒதுங்கி நின்றபோதுதான். ஆகையால் வாலி, சுக்ரீவனோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, ராமர் அவனை அடித்து வீழ்த்தினார் என்று எப்படிச் சொல்வது?
இந்தக் கோணங்களில் இருந்தெல்லாம் இந்த விவகாரத்தைப் பார்க்கும்போது ராமர், வாலியை மறைந்திருந்து அடித்தார் என்றோ, அவர் பார்க்காமல் இருந்தபோது, அவனை வீழ்த்தினார் என்றோ சொல்வது – சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை.
வால்மீகி ராமாயணம் பற்றி இன்னமும் கொஞ்சம் பார்ப்போம்.