இதிஹாஸங்கள் – 7

வெவ்வேறு கோணங்களிலிருந்து பார்க்கப்பட்டு, ராஜநீதி மஹாபாரதத்தில், எவ்வாறு உரைக்கப்படுகிறது என்பதை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். பதவியைக் கைப்பற்றுவதிலிருந்து, யுத்தத்தில் வெல்வது வரை பல காரியங்களில், இந்த ராஜநீதியின் தாக்கத்தை மஹாபாரதத்தில் நாம் பார்க்கிறோம்.

தன் மகன் பரதனுக்கு முடிசூட்டப்பட வேண்டும் என்கிற எண்ணம் முதலில் கைகேயியின் மனதில் தோன்றவில்லை; கூனி (மந்தரை) யின் கெட்ட உபதேசத்தினால், கைகேயி இந்த ஆசையை வளர்த்துக் கொண்டு, அதன் காரணமாக பெரும் தீமை புரிந்தாள்என்பது ராமாயண நிகழ்ச்சி. மஹாபாரதத்திலும், இப்படி தனது வாரிசு மன்னனாக வேண்டும் என்கிற ஆசை ஒருவனுக்கு வர, அதனால் ஒரு பெரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சந்தனு மன்னன் ஒரு மீனவப் பெண் மீது ஆசை கொள்கிறான். அவளுடைய தந்தையோ, தனது வளர்ப்பு மகளாகிய சத்தியவதிக் குப் பிறக்கக் கூடிய மகனே நாடாளும் உரிமை பெற வேண்டும். என்று நிபந்தனை விதிக்கிறான். இதைக் கேட்டு திகைக்கிற சந்தனு மன்னன், இது நடக்காத காரியம் என்பதால் பெரும் குழப்பமுற் றான். ஏனென்றால், சந்தனுவிற்கு ஏற்கெனவே கங்கையின் மூலமாகப் பிறந்த தேவவ்ரதன் என்ற மகன் இருக்கிறான். அவன் வீரம், நற்குணம், கல்வி, கூர்மையான அறிவு, நியாய உணர்வு என்ற ஸகல சிறப்புக்களையும் பெற்றவன். அவனை ஒதுக்கி விட்டு, சத்தியவதிக்குப் பிறக்கக் கூடிய மகனுக்கு சிம்மாசனத்தைத் தருவதாக எப்படிச் சொல்வது?

மன்னனின் இந்த மனக் குழப்பத்தையும், சத்தியவதியை அவன் பெரிதும் விரும்புவதையும், தேரோட்டியின் மூலம் அறிந்த தேவவ்ரதன், சத்தியவதியின் தந்தையை சந்தித்து, தான் அரசு பதவியை விட்டுக் கொடுப்பதாக சத்தியம் செய்கிறான். சத்திய வதியின் தந்தைக்குத் திருப்தி ஏற்படவில்லை. ‘சரி! நீ விட்டுக் கொடுக்கலாம்! ஆனால் உனக்கு பிறக்கக் கூடிய மகன், அரசுரிமை யைக் கோர மாட்டான் என்பது என்ன நிச்சயம்?’ என்ற சந்தே கத்தை அவன் தெரிவிக்கிறான்.

அவனுடைய சந்தேகத்தை நீக்குவதாகச் சொன்ன தேவவ்ரதன், ‘நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். பிரம்மச்சரிய விரதம் பூண்கிறேன். ஆகையால் எனக்கு சந்ததி இருக்காது!’ என்று சபதம் செய்கிறான். இப்படி ஒரு அற்புதமான காரியத்தைச் செய்ததால் அவனுக்குபீஷ்மர்என்று பெயரிட்டு, தேவர்கள் பூமாரிப் பொழி கிறார்கள். சந்தனு மன்னனுக்கோ, தன் மகன் இப்படி சபதம் பூண்டது பின்னர்தான் தெரியும்.

தன் வாரிசுக்குப் பதவியைப் பெறுவதற்காக, சத்தியவதியின் தந்தை எந்த அளவிற்குப் போனார் என்பதைப் பார்க்கும்போது, இன்றைய அரசியலில் வாரிசுகளுக்காக நடக்கிற திணிப்புகள்எல்லாம் சர்வசாதாரணமாகி விடுகின்றன.

ராமாயணத்தில், கைகேயி தன் மகனை அரசனாக்க விரும்பியது, உணர்ச்சிக் கொந்தளிப்பின் விளைவு; அதனால் ஏற்படுகிற விளைவுகளும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவையே. ஆனால் பாரதத்தில், சத்தியவதியின் தந்தையோ உணர்ச்சிகளை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, திட்டமிட்டு, தன் எதிர்கால வாரிசுக்கு அரசுரிமை நாடுகிறான்; இது அவனுடைய அறிவு சென்ற வழி.

பின்னர், திரௌபதியை பாண்டவ சகோதரர்கள் ஐவரும் மணக்க முடிவு செய்யப்பட்டதும், உணர்ச்சிகளின் விளைவு அல்ல. நிதானமாகச் சிந்தித்து, விவாதித்து எடுக்கப்பட்ட முடிவு அது. அது ஒரு அரசியல் நிகழ்ச்சி.

ஆரம்பத்திலிருந்தே, பாண்டு குமாரர்கள், திருதராஷ்டிரன் மைந்தர்கள்ஆகிய இரு தரப்பினருக்குள் கசப்புணர்வு தோன்றி, அது பகையாக வளர்ந்து கொண்டிருந்ததால், இரு தரப்பு சிந்தனை யுமே வெல்வது எப்படி?’ என்பதிலேயே இருந்து வந்தது. இதனால், எதை எடுத்தாலும், ‘அவர்களுக்கு எதிராக இது நமக்கு உதவுகிற வகையில், நாம் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்என்ற எண்ணம் இரு தரப்பினருக்கும் தோன்றிக் கொண்டேயிருந்தது.

அர்ஜுனனால் வெல்லப்பட்ட திரௌபதியை ஐவரும் மணப் பது என்பதுசகோதரர்களாகிய தங்களிடையே மனஸ்தாபம் வருவதற்கு இடம் செய்துவிடக் கூடாதுஎன்று நினைத்து, தர்ம புத்திரர் எடுத்த முடிவு. துருபத மன்னன்ஒரு பெண் ஐவரை மணப்பதா?’ என்று கேட்டு இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கிறார். துருபதனின் மகன் திருஷ்டத்யும்னன்இதை என்னால் ஏற்க முடியாதுஎன்று கூறுகிறான். ஆனால் தர்மபுத்திரர், தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

வியாசர், ‘தேவர்களை வேண்டி குந்தியும், மாத்ரியும் பெற்ற புதல்வர்கள் பாண்டவர்கள். லட்சுமியின் அம்சத்தை உடைய தேவகுமாரி, திரௌபதிஅவள் ஒரு பிறவியில் ஐவரை மணக்கும் வரத்தை பரமசிவனிடம் பெற்றாள்என்று கூறி இந்த திருமணத் திற்கான நியாயங்களை எடுத்துச் சொன்னார்.

தர்மபுத்திரர், தனது உறுதியான முடிவிற்குக் கூறிய காரணங்கள் என்ன? ‘பிக்ஷை வந்திருக்கிறது என்றவுடன், அதை ஐவரும் உண்ணுமாறு குந்தி கூறியது பொய்யாகக் கூடாதுஎன்பது ஒரு காரணம். ஆனால் பகாசுரனை எதிர்கொள்ள, பீமனை அனுப்ப குந்தி முடிவெடுத்தபோது, ‘பீமனை இழந்தால், நமக்கு ராஜ்யமே கிட்டாதுஎன்று கூறி, குந்தியின் சொல்லை தர்மபுத்திரர் மறுத்துப் பேசுகிறார் என்பதை கவனிக்க வேண்டும். தர்மபுத்திரர் கூறுகிற இரண்டாவது காரணம், ‘மூத்தவன் இருக்க, இளையவன் திருமணம் செய்து கொள்ளக் கூடாதுஎன்பது. ஆனால் பீமன், இதற்கு முன்பு ஹிடிம்பியை மணந்த போது, இந்தக் காரணம் கூறப்பட்டு, அந்தத் திருமணம் தடுக்கப்படவில்லை.

மூன்றாவது காரணம் : ‘எது கிடைத்தாலும் ஐவரும் பகிர்ந்து கொள்வது என்ற விரதத்தை பாண்டவர்களால் மீற முடியாது‘. பீமன் ஹிடிம்பியை மணந்தபோது, ஐவரும் அவளை மணக்க வேண் டும் என்கிற யோசனை பிறக்கவில்லை. இதன் பிறகு அர்ஜுனன், உலூபி, சித்ராங்கதை, சுபத்திரை ஆகியோரை மணந்தபோதெல் லாம், இந்த விரதம் தர்மபுத்திரரால் சுட்டிக்காட்டப்படவில்லை.

தர்மபுத்திரர் ஏன் இப்படிப்பட்ட பலவீனமான வாதங்களை முன்வைத்தார்? அவர் எடுத்த முடிவு அரசியல் ரீதியானது; அதற்கு நியாய வாதங்கள் மூலம் ஒப்புதல் தேட முடியாது; அதனால்தான் அவர் வைத்த வாதங்கள் பலவீனமாக அமைந்தன. துருபத மன்னன் பெரும் வீரன் மட்டுமல்ல; பெரிய சைன்யத்தைக் கொண்டிருந் தவன்; அவனுக்கு வேண்டிய மன்னர்கள் பலர் இருந்தனர். அவர் களும் படைபலம் கொண்டவர்கள். துரியோதனனுடன் யுத்தம் செய்ய நேரிட்டால், இந்த பலம் எல்லாம் பாண்டவர்களுக்கு உதவியாக இருக்கும். ஐவரில் ஒருவர் மட்டும் துருபதனின் மகளை மணப்பது, இந்த உதவியை ஐவரும் ஒன்றாகப் பெறுவதில் என்ன பிரச்னையைத் தோற்றுவிக்குமோ? திரௌபதியை ஐவரும் மணந் தால் சிக்கல் இருக்காது. நிகழ்ச்சிகளின் ஓட்டத்தையும், வாதங் களின் தன்மையையும் சிந்தித்துப் பார்த்தால், இது இவ்வாறு எடுக்கப்பட்ட முடிவே என்பது தெளிவாகும். ஆக, அரசியல், இவ்வளவு தூரம் பாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்களை எல்லாம் பாதித்துள்ளது.

ஆனால் ஒன்று. திரௌபதியை ஐவர் மணப்பதற்கு எழுப்பப் பட்ட ஆட்சேபணைகளை வியாசர் மறைத்து விடவில்லை. தர்ம புத்திரரின் பலவீனமான வாதங்கள் ஏற்கத்தக்கவை என்று அவர் கூற வில்லை. நடந்ததை நடந்தபடி சொல்லி விட்டார். ஏனென்றால் இது சரித்திரம். கற்பனை அல்லசகுனியின் உதவியுடன், துரியோதனன் நடத்திய சூதாட்டமும், ஒரு அரசியல் சதியே. தர்மபுத்திரன் நடத்திய ராஜசூய யாகத்தின் விளைவாக, அந்த சூதாட்டத்திற்கான விதை துரியோதனன் மனதில் விழுந்து விட்டது. (அதைப் பற்றி பார்ப்பதற்கு முன், ஒரு விவரம். பல தேச மன்னர்கள், தாங்களாக முன்வந்தோ, அல்லது தோற் கடிக்கப்பட்டு பணிந்தோ, ராஜசூய யாகத்தை ஏற்க வேண்டும். இதற்காக, தர்மபுத்திரனின் நான்கு சகோதரர்களும் நான்கு திசையில் திக்விஜயம் செய்கிறார்கள். சகதேவன் தென்திசைக்குச் செல்கிறான். அவன் காவிரிக் கரையை அடைந்தபோது, ‘நமது ராஜ்யத்தில் கங்கை பெற்றுள்ள சிறப்பை, இங்கே காவிரி பெற்றிருக்கிறதுஎன்று கூறுகிறான்.

திரமிட தேசங்களைச் சார்ந்தவர்கள், சகதேவனைக் காண கூட்டம் கூட்டமாகச் சென்றனர். மக்கள் பல பரிசுகளை அளித்து அவனை கௌரவித்தனர். சோழ தேசத்து அரசன், சகதேவன் அனுப் பிய தூதுவர்களுக்கு உரிய மரியாதைகளைச் செய்து, யாகத்தை ஏற்றான். பாண்டிய மன்னன் போர் செய்ய, ஒரே நாளில் அந்தப் போரில் சகதேவன் வெற்றி பெற, பாண்டியனும் ராஜசூய யாகத்தை ஏற்றான். சௌராஷ்டிர தேச அரசனும் இதே போல நடந்து கொண்டான்‘.

திரமிடர்கள் ராஜசூய யாகத்தை ஏற்றனர். பாண்டிய ராஜனின் புதல்வி சித்ராங்கதை சகதேவனுக்கு விசேஷ ரத்திரனங்களை அனுப்பி வைத்து கௌரவித்தாள். தாமிரபரணி நதிக்கும் சகதேவன் செல்ல, தென்தேசம் முழுவதும் ராஜசூய யாகத்தை அங்கீகரித்தது. மஹாபாரதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டதிலிருந்தே, இந்த தேசத்தின் பல பகுதிகள் பல மன்னர்களால் ஆளப்பட்டாலும், அவர்கள் அனைவரும் தங்களுக்கு ஒரு மன்னனை சிறந்தவனாக அங்கீகரித்தார்கள் என்பது புரிகிறது. வியாச பாரதத்தில் கூறப் பட்டிருக்கிற விவரங்களைத் தவிர, வேறொரு குறிப்பையும் காண நேர்ந்தது. பாரதப் போர் நடந்தபோது இரு தரப்பு சைன்யங்களுக்கும் சோறு படைத்தான் ஒரு சேர மன்னன். ‘சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்என்று இம்மன்னனின் பெயர் சரித்திரத்தில் விளங்குகிறது. இதுஅபிதான சிந்தாமணிஎன்ற நூலில் குறிப் பிடப்பட்டுள்ளது.) வெவ்வேறு கோணங்களிலிருந்து பார்க்கப்பட்டு, ராஜநீதி மஹாபாரதத்தில், எவ்வாறு உரைக்கப்படுகிறது என்பதை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். பதவியைக் கைப்பற்றுவதிலிருந்து, யுத்தத்தில் வெல்வது வரை பல காரியங்களில், இந்த ராஜநீதியின் தாக்கத்தை மஹாபாரதத்தில் நாம் பார்க்கிறோம்.

தன் மகன் பரதனுக்கு முடிசூட்டப்பட வேண்டும் என்கிற எண்ணம் முதலில் கைகேயியின் மனதில் தோன்றவில்லை; கூனி (மந்தரை) யின் கெட்ட உபதேசத்தினால், கைகேயி இந்த ஆசையை வளர்த்துக் கொண்டு, அதன் காரணமாக பெரும் தீமை புரிந்தாள்என்பது ராமாயண நிகழ்ச்சி. மஹாபாரதத்திலும், இப்படி தனது வாரிசு மன்னனாக வேண்டும் என்கிற ஆசை ஒருவனுக்கு வர, அதனால் ஒரு பெரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சந்தனு மன்னன் ஒரு மீனவப் பெண் மீது ஆசை கொள்கிறான். அவளுடைய தந்தையோ, தனது வளர்ப்பு மகளாகிய சத்தியவதிக் குப் பிறக்கக் கூடிய மகனே நாடாளும் உரிமை பெற வேண்டும். என்று நிபந்தனை விதிக்கிறான். இதைக் கேட்டு திகைக்கிற சந்தனு மன்னன், இது நடக்காத காரியம் என்பதால் பெரும் குழப்பமுற் றான். ஏனென்றால், சந்தனுவிற்கு ஏற்கெனவே கங்கையின் மூலமாகப் பிறந்த தேவவ்ரதன் என்ற மகன் இருக்கிறான். அவன் வீரம், நற்குணம், கல்வி, கூர்மையான அறிவு, நியாய உணர்வு என்ற ஸகல சிறப்புக்களையும் பெற்றவன். அவனை ஒதுக்கி விட்டு, சத்தியவதிக்குப் பிறக்கக் கூடிய மகனுக்கு சிம்மாசனத்தைத் தருவதாக எப்படிச் சொல்வது?

மன்னனின் இந்த மனக் குழப்பத்தையும், சத்தியவதியை அவன் பெரிதும் விரும்புவதையும், தேரோட்டியின் மூலம் அறிந்த தேவவ்ரதன், சத்தியவதியின் தந்தையை சந்தித்து, தான் அரசு பதவியை விட்டுக் கொடுப்பதாக சத்தியம் செய்கிறான். சத்திய வதியின் தந்தைக்குத் திருப்தி ஏற்படவில்லை. ‘சரி! நீ விட்டுக் கொடுக்கலாம்! ஆனால் உனக்கு பிறக்கக் கூடிய மகன், அரசுரிமை யைக் கோர மாட்டான் என்பது என்ன நிச்சயம்?’ என்ற சந்தே கத்தை அவன் தெரிவிக்கிறான்.

அவனுடைய சந்தேகத்தை நீக்குவதாகச் சொன்ன தேவவ்ரதன், ‘நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். பிரம்மச்சரிய விரதம் பூண்கிறேன். ஆகையால் எனக்கு சந்ததி இருக்காது!’ என்று சபதம் செய்கிறான். இப்படி ஒரு அற்புதமான காரியத்தைச் செய்ததால் அவனுக்குபீஷ்மர்என்று பெயரிட்டு, தேவர்கள் பூமாரிப் பொழி கிறார்கள். சந்தனு மன்னனுக்கோ, தன் மகன் இப்படி சபதம் பூண்டது பின்னர்தான் தெரியும்.

தன் வாரிசுக்குப் பதவியைப் பெறுவதற்காக, சத்தியவதியின் தந்தை எந்த அளவிற்குப் போனார் என்பதைப் பார்க்கும்போது, இன்றைய அரசியலில் வாரிசுகளுக்காக நடக்கிற திணிப்புகள்எல்லாம் சர்வசாதாரணமாகி விடுகின்றன.

ராமாயணத்தில், கைகேயி தன் மகனை அரசனாக்க விரும்பியது, உணர்ச்சிக் கொந்தளிப்பின் விளைவு; அதனால் ஏற்படுகிற விளைவுகளும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவையே. ஆனால் பாரதத்தில், சத்தியவதியின் தந்தையோ உணர்ச்சிகளை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, திட்டமிட்டு, தன் எதிர்கால வாரிசுக்கு அரசுரிமை நாடுகிறான்; இது அவனுடைய அறிவு சென்ற வழி.

பின்னர், திரௌபதியை பாண்டவ சகோதரர்கள் ஐவரும் மணக்க முடிவு செய்யப்பட்டதும், உணர்ச்சிகளின் விளைவு அல்ல. நிதானமாகச் சிந்தித்து, விவாதித்து எடுக்கப்பட்ட முடிவு அது. அது ஒரு அரசியல் நிகழ்ச்சி.

ஆரம்பத்திலிருந்தே, பாண்டு குமாரர்கள், திருதராஷ்டிரன் மைந்தர்கள்ஆகிய இரு தரப்பினருக்குள் கசப்புணர்வு தோன்றி, அது பகையாக வளர்ந்து கொண்டிருந்ததால், இரு தரப்பு சிந்தனை யுமே வெல்வது எப்படி?’ என்பதிலேயே இருந்து வந்தது. இதனால், எதை எடுத்தாலும், ‘அவர்களுக்கு எதிராக இது நமக்கு உதவுகிற வகையில், நாம் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்என்ற எண்ணம் இரு தரப்பினருக்கும் தோன்றிக் கொண்டேயிருந்தது.

அர்ஜுனனால் வெல்லப்பட்ட திரௌபதியை ஐவரும் மணப் பது என்பதுசகோதரர்களாகிய தங்களிடையே மனஸ்தாபம் வருவதற்கு இடம் செய்துவிடக் கூடாதுஎன்று நினைத்து, தர்ம புத்திரர் எடுத்த முடிவு. துருபத மன்னன்ஒரு பெண் ஐவரை மணப்பதா?’ என்று கேட்டு இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கிறார். துருபதனின் மகன் திருஷ்டத்யும்னன்இதை என்னால் ஏற்க முடியாதுஎன்று கூறுகிறான். ஆனால் தர்மபுத்திரர், தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

வியாசர், ‘தேவர்களை வேண்டி குந்தியும், மாத்ரியும் பெற்ற புதல்வர்கள் பாண்டவர்கள். லட்சுமியின் அம்சத்தை உடைய தேவகுமாரி, திரௌபதிஅவள் ஒரு பிறவியில் ஐவரை மணக்கும் வரத்தை பரமசிவனிடம் பெற்றாள்என்று கூறி இந்த திருமணத் திற்கான நியாயங்களை எடுத்துச் சொன்னார்.

தர்மபுத்திரர், தனது உறுதியான முடிவிற்குக் கூறிய காரணங்கள் என்ன? ‘பிக்ஷை வந்திருக்கிறது என்றவுடன், அதை ஐவரும் உண்ணுமாறு குந்தி கூறியது பொய்யாகக் கூடாதுஎன்பது ஒரு காரணம். ஆனால் பகாசுரனை எதிர்கொள்ள, பீமனை அனுப்ப குந்தி முடிவெடுத்தபோது, ‘பீமனை இழந்தால், நமக்கு ராஜ்யமே கிட்டாதுஎன்று கூறி, குந்தியின் சொல்லை தர்மபுத்திரர் மறுத்துப் பேசுகிறார் என்பதை கவனிக்க வேண்டும். தர்மபுத்திரர் கூறுகிற இரண்டாவது காரணம், ‘மூத்தவன் இருக்க, இளையவன் திருமணம் செய்து கொள்ளக் கூடாதுஎன்பது. ஆனால் பீமன், இதற்கு முன்பு ஹிடிம்பியை மணந்த போது, இந்தக் காரணம் கூறப்பட்டு, அந்தத் திருமணம் தடுக்கப்படவில்லை.

மூன்றாவது காரணம் : ‘எது கிடைத்தாலும் ஐவரும் பகிர்ந்து கொள்வது என்ற விரதத்தை பாண்டவர்களால் மீற முடியாது‘. பீமன் ஹிடிம்பியை மணந்தபோது, ஐவரும் அவளை மணக்க வேண் டும் என்கிற யோசனை பிறக்கவில்லை. இதன் பிறகு அர்ஜுனன், உலூபி, சித்ராங்கதை, சுபத்திரை ஆகியோரை மணந்தபோதெல் லாம், இந்த விரதம் தர்மபுத்திரரால் சுட்டிக்காட்டப்படவில்லை.

தர்மபுத்திரர் ஏன் இப்படிப்பட்ட பலவீனமான வாதங்களை முன்வைத்தார்? அவர் எடுத்த முடிவு அரசியல் ரீதியானது; அதற்கு நியாய வாதங்கள் மூலம் ஒப்புதல் தேட முடியாது; அதனால்தான் அவர் வைத்த வாதங்கள் பலவீனமாக அமைந்தன. துருபத மன்னன் பெரும் வீரன் மட்டுமல்ல; பெரிய சைன்யத்தைக் கொண்டிருந் தவன்; அவனுக்கு வேண்டிய மன்னர்கள் பலர் இருந்தனர். அவர் களும் படைபலம் கொண்டவர்கள். துரியோதனனுடன் யுத்தம் செய்ய நேரிட்டால், இந்த பலம் எல்லாம் பாண்டவர்களுக்கு உதவியாக இருக்கும். ஐவரில் ஒருவர் மட்டும் துருபதனின் மகளை மணப்பது, இந்த உதவியை ஐவரும் ஒன்றாகப் பெறுவதில் என்ன பிரச்னையைத் தோற்றுவிக்குமோ? திரௌபதியை ஐவரும் மணந் தால் சிக்கல் இருக்காது. நிகழ்ச்சிகளின் ஓட்டத்தையும், வாதங் களின் தன்மையையும் சிந்தித்துப் பார்த்தால், இது இவ்வாறு எடுக்கப்பட்ட முடிவே என்பது தெளிவாகும். ஆக, அரசியல், இவ்வளவு தூரம் பாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்களை எல்லாம் பாதித்துள்ளது.

ஆனால் ஒன்று. திரௌபதியை ஐவர் மணப்பதற்கு எழுப்பப் பட்ட ஆட்சேபணைகளை வியாசர் மறைத்து விடவில்லை. தர்ம புத்திரரின் பலவீனமான வாதங்கள் ஏற்கத்தக்கவை என்று அவர் கூற வில்லை. நடந்ததை நடந்தபடி சொல்லி விட்டார். ஏனென்றால் இது சரித்திரம். கற்பனை அல்லசகுனியின் உதவியுடன், துரியோதனன் நடத்திய சூதாட்டமும், ஒரு அரசியல் சதியே. தர்மபுத்திரன் நடத்திய ராஜசூய யாகத்தின் விளைவாக, அந்த சூதாட்டத்திற்கான விதை துரியோதனன் மனதில் விழுந்து விட்டது. (அதைப் பற்றி பார்ப்பதற்கு முன், ஒரு விவரம். பல தேச மன்னர்கள், தாங்களாக முன்வந்தோ, அல்லது தோற் கடிக்கப்பட்டு பணிந்தோ, ராஜசூய யாகத்தை ஏற்க வேண்டும். இதற்காக, தர்மபுத்திரனின் நான்கு சகோதரர்களும் நான்கு திசையில் திக்விஜயம் செய்கிறார்கள். சகதேவன் தென்திசைக்குச் செல்கிறான். அவன் காவிரிக் கரையை அடைந்தபோது, ‘நமது ராஜ்யத்தில் கங்கை பெற்றுள்ள சிறப்பை, இங்கே காவிரி பெற்றிருக்கிறதுஎன்று கூறுகிறான்.

திரமிட தேசங்களைச் சார்ந்தவர்கள், சகதேவனைக் காண கூட்டம் கூட்டமாகச் சென்றனர். மக்கள் பல பரிசுகளை அளித்து அவனை கௌரவித்தனர். சோழ தேசத்து அரசன், சகதேவன் அனுப் பிய தூதுவர்களுக்கு உரிய மரியாதைகளைச் செய்து, யாகத்தை ஏற்றான். பாண்டிய மன்னன் போர் செய்ய, ஒரே நாளில் அந்தப் போரில் சகதேவன் வெற்றி பெற, பாண்டியனும் ராஜசூய யாகத்தை ஏற்றான். சௌராஷ்டிர தேச அரசனும் இதே போல நடந்து கொண்டான்‘.

திரமிடர்கள் ராஜசூய யாகத்தை ஏற்றனர். பாண்டிய ராஜனின் புதல்வி சித்ராங்கதை சகதேவனுக்கு விசேஷ ரத்திரனங்களை அனுப்பி வைத்து கௌரவித்தாள். தாமிரபரணி நதிக்கும் சகதேவன் செல்ல, தென்தேசம் முழுவதும் ராஜசூய யாகத்தை அங்கீகரித்தது. மஹாபாரதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டதிலிருந்தே, இந்த தேசத்தின் பல பகுதிகள் பல மன்னர்களால் ஆளப்பட்டாலும், அவர்கள் அனைவரும் தங்களுக்கு ஒரு மன்னனை சிறந்தவனாக அங்கீகரித்தார்கள் என்பது புரிகிறது. வியாச பாரதத்தில் கூறப் பட்டிருக்கிற விவரங்களைத் தவிர, வேறொரு குறிப்பையும் காண நேர்ந்தது. பாரதப் போர் நடந்தபோது இரு தரப்பு சைன்யங்களுக்கும் சோறு படைத்தான் ஒரு சேர மன்னன். ‘சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்என்று இம்மன்னனின் பெயர் சரித்திரத்தில் விளங்குகிறது. (இதுஅபிதான சிந்தாமணிஎன்ற நூலில் குறிப் பிடப்பட்டுள்ளது.) இப்படி நடத்தப்பட்ட ராஜசூய யாகம், துரியோதனனின் பொறாமையைக் கிளறி விடுகிறது. ஏனென்றால், தர்மபுத்திரனுக்கு, பாரத தேசத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் பரிசுகள் வந்து குவிந்தன. சோழ ராஜன், கேரள ராஜன், பாண்டிய ராஜன் ஆகியோர் அளித்த பரிசுகளின் வகைகளும் விவரிக்கப்படுகின்றன.

இதையெல்லாம் கண்டு பொருமுகிறான் துரியோதனன். போதாதற்கு, பாண்டவர்கள் கூடியிருந்த மாளிகையின் விந்தைகள் புரியாமல், தான்பட்ட அவஸ்தையையும், அதைக் கண்டு பீமன், அர்ஜுனன், திரௌபதி ஆகியோர் சிரித்ததையும், துரியோதனன் நினைத்து நினைத்து கோபம் கொண்டு, ‘பாண்டவரை வீழ்த்த வேண்டும்; அதில்லையேல் நான் விழ வேண்டும்என்று சகுனி யிடம் பொருமினான்.

அப்போதுதான், சகுனி சூதாட்ட யோசனையைத் தெரிவிக் கிறான். சூதாட்டத்தின் குற்றங்களை அறிந்திருந்தாலும், பிள்ளைப் பாசத்தின் காரணமாக, இறுதியில் திருதராஷ்டிரனும் சம்மதிக் கிறான். பாண்டவர்களின் செல்வத்தையும், நாட்டையும் கவர்ந்து, அவர்களை விரட்டுவதுதான் இதன் நோக்கம். இதற்கு திருத ராஷ்டிரன் முதலில் ஆட்சேபம் தெரிவித்தாலும், விதுரன் ஆட் சேபித்தாலும் கூட, இறுதியில் சம்மதிப்பதும், அரசியலே.