இதிஹாஸங்கள் – 8

மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை மாற்றாமல், அப்படியே தனதுபாஞ்சாலி சபதம்என்ற கவிதையில், பாரதி வடித்திருக்கிற விதம், மிகவும் சுவையானது.

திருதராஷ்டிரனிடம் சூதாட்ட யோசனை பற்றி, துரியோதனன் சார்பாக முதலில் சகுனி பேசுகிறான்:

….செல்வத்தாபத்தை நெஞ்சில் வளர்த்திடல்மன்னர் சாத்திரத்தே முதற் சூத்திரம்பின்னும் ஆபத்து அரசர்க்கு வேறுண்டோ, நம்மில் அன்னியர் செல்வம் மிகுதல் போல

பாண்டவர்கள் நமது உறவினர்கள், நண்பர்கள் என்று திருத ராஷ்டிரன் சுட்டிக்காட்டி, இதற்கு மறுப்புரை பேசும்போது, துரி யோதனன் குறுக்கிடுகிறான். பிருஹஸ்பதியின் நீதி சாஸ்திரத்தையே புறக்கணித்து, அவரையே அறிவற்றவர் என்று திருதராஷ்டிரன் கருதுவதாக துரியோதனன் இடித்துரைத்து பேசுகிறான்:

மன்னர்க்கு நீதி ஒரு வகைபிற மாந்தர்க்கு நீதி மற்றோர் வகைஎன்று சொன்ன வியாழ முனிவனைஇவன் சுத்தமடையன் என்று எண்ணியே மற்றும் என்னென்னவோ கதை சொல்கிறான்உற வென்றும் நட்பென்றும் கதைக்கிறான்…”

அதாவது, ராஜநீதி, சாதாரண மனிதர்களுக்கான தர்மத்திலிருந்து மாறுபட்டது என்று அன்றே உரைக்கப்பட்டிருப்பதை, துரியோ தனன் மேலே கூறியவாறு சுட்டிக் காண்பிக்கிறான்.

குழைதல் என்பது மன்னர்க்கில்லை; கூடக்கூடப் பின்னும் கூட்ட வேண்டும். பிழைஒன்றே அரசர்க்குண்டு கண்டாய், பிறரைத் தாழ்த்துவதில் சலிப்பெய்தல்

துரியோதனன் தரப்புதான் இப்படி நேர்வழியை விட்டு விலகி, வெற்றியை நாடியது என்றும் சொல்லிவிட முடியாது. ஒரு உதாரணம்: சல்யன் தொடர்பான நிகழ்ச்சி.

சல்யன் பெரும் வீரன்; படைபலம் கொண்டவன். பாண்டவர் தரப்பில் சேர்வதற்காக அவன் வந்து கொண்டிருந்த வழியில் ஆங்காங்கே, அளிக்கப்பட்ட வரவேற்பு அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர், இது துரியோதனன் அளித்த மரியாதை என்று தெரிந்தவுடன், தர்மசங்கடத்தில் சிக்கிய அவன், துரியோதனன் தரப்பிலேயே போரிட சம்மதிக்கிறான்.

இப்படி சம்மதித்த பிறகு, போர் ஆரம்பிப்பதற்கு முன்பு, தர்மபுத்திரர் அவனை அணுகி, ‘சல்ய மன்னனே! தேரோட்டுவதில் உனக்கு இருக்கும் நிபுணத்துவம் அனைவருக்கும் தெரியும். அதனால் துரியோதனன், கர்ணனுக்கு தேரை செலுத்தித் தருமாறு உன்னைக் கேட்டுக் கொள்வான். அந்தப் பணியை ஏற்று, கர்ண னுக்குத் தேரோட்டும்போது, அவனுடைய தன்னம்பிக்கையை நீ குலைக்க வேண்டும்என்று கேட்டுக் கொள்கிறார். இப்படி, எதிரி யின் படையில் பிளவைத் தோற்றுவிக்க தர்மபுத்திரர் முனைந்தார்.

தர்மபுத்திரர் எதிர்பார்த்த மாதிரியே, கர்ணன் படைத் தலைமை ஏற்றபோது, அவனுக்கு தேரோட்டுமாறு சல்யனை துரியோதனன் கேட்டுக் கொள்கிறான். சல்யன் முதலில் சம்மதிக்கவில்லை. ‘தேரோட்டி மகனாகிய கர்ணனுக்கு, மன்னனும், மஹாவீரனு மாகிய நான் தேரோட்டுவதா?’ என்று கோபத்துடன் பேசுகிறான். அப்போது துரியோதனன், சல்யனுக்கு நிகரானவர்கள் உலகில் இல்லை என்று கூறி, அவனைப் பலவாறாகப் புகழ்ந்து, தங்கள் தரப்பு வெற்றி பெறுவதற்காக, கர்ணனுக்குத் தேரோட்டுமாறு வேண்டிக் கொள்கிறான். துரியோதனனின் புகழ்ச்சி, சல்யனை மகிழ்வித்தது. ‘துரியோதனா! உங்கள் அனைவரைக் காட்டிலும் கிருஷ்ணனைக் காட்டிலும் கூடநான் மேலானவன் என்பதை நீ உணர்ந்திருக்கிறாய். ஆனால் கர்ணன் சம்பந்தமாக நான் கொடுத்த வார்த்தை ஒன்றிருக்கிறது. அதற்குட்பட்டு, நான் தேரோட்டுவேன்என்கிறான் சல்யன்.

இங்கேகொடுத்த வார்த்தை என்று சல்யன் கூறுவது, கர்ணன் தன்னம்பிக்கையைக் குலைப்பதாக தர்மபுத்திரருக்கு அவன் கொடுத்த வாக்குறுதி.

பதினேழாவது நாள் யுத்தம் நடக்க இருந்தபோது, படைத் தலைமை ஏற்றிருந்த கர்ணன், ‘குதிரைகளை நடத்துவாயாக! பாண்டவர்களை அழிக்கிறேன். பாண்டவர்களின் அழிவின் பொருட்டும், துரியோதனன் வெற்றியின் பொருட்டும், நான் இப்போது செய்ய இருக்கிற அற்புத யுத்தத்தை உலகம் பார்க்கட்டும்என்று கூறினான்.

சல்யன், தர்மபுத்திரருக்குக் கொடுத்த வார்த்தையை நிறைவேற்ற ஆரம்பித்தான்: ‘யாராலும் வெல்ல முடியாத பாண்டவர்களை நீ எப்படி இவ்வளவு அலட்சியமாகப் பேசலாம்? அவர்களை யுத்தத்தில் சந்திக்கிறபோது, உன்னுடைய வறட்டுத்தனமான இந்த சுயப்பிரதாபம் நின்று போகும்என்றான் சல்யன்.

என் போர்த்திறனை நீ பார்க்கத்தான் போகிறாய்என்று மட்டும், சல்யனிடம் சொல்லி விட்டு, துரியோதனன் தரப்பு வீரர்களையும் அரசர்களையும் உற்சாகப்படுத்துகிற வகையில் கர்ணன் சில வார்த்தைகளைப் பேசினான்:

விசித்திரவீர்யனுடைய பேரனும், திருதராஷ்டிர மன்னனின் மகனுமாகிய துரியோதனனுக்காக, நான் என் உயிரையும் விடுவேன். இந்தத் தேர், எனக்கு பரசுராமரால் அளிக்கப்பட்டது. இந்த ரதத்தின் மீதேறி அர்ஜுனனை வீழ்த்துவேன். எமனே வந்து அர்ஜுனனைப் பாதுகாத்தாலும் சரி, அவன் என்னால் கொல்லப்படுவான். இது நடக்கவில்லையென்றால், சூரியனைப் போன்ற தேஜஸ் உடைய வரும், விஷ்ணுவுக்கு சமமான பராக்கிரமம் படைத்தவருமான துரோணர் சென்ற வழியில் நான் செல்வேன்‘.

வ்வாறு, தனது படை வீரர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் பேசிய கர்ணனை, சல்யன் மீண்டும் பரிகசித்தான்: ‘கர்ணா! தற் புகழ்ச்சியை நிறுத்து! மனிதர்களில் சிறந்தவனாகிய அர்ஜுனன் எங்கே? மனிதர்களில் தாழ்ந்தவனாகிய நீ எங்கே? முன்பு விராட நகரத்திற்கு அருகில் நடந்த மோதலில், நீங்கள் அனைவரும் பின் வாங்கி ஓடினீர்கள் அல்லவா? – அதே போல நீ மீண்டும் ஓட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த யுத்த களத்தில் நின்றால், நீ மடிவாய்! ஓடினால்தான் பிழைப்பாய்!’

இப்படிப் பேசிய சல்யன், மேலும் கர்ணனை இழிவுபடுத்திப் பேசினான்: ‘ஒரு புலியைக் கண்டு ஒரு நாய் குரைப்பது போல, நீ அர்ஜுனனைப் பார்த்து குரைக்கிறாய். நீ என்றுமே நரிதான்; அர்ஜுனன் என்றும் சிங்கம்தான்! அவன் பூனை என்றால், நீ எலி! அவன் யானை என்றால், நீ முயல்! அவன் அமிர்தம் என்றால், நீ விஷம்!’.

சல்யனின் இந்த பரிகாசமெல்லாம், தர்மபுத்திரர் கேட்டுக் கொண்டபடி, அவன் கர்ணனுக்கு இழைத்த அநீதி.

இப்படி பரிகாசம் பேசி, இழிவு செய்து, அல்லது வேறு வழியில் ஒருவனுடைய தன்னம்பிக்கையை சிதைக்க முயற்சிப்பதுதேஜோபங்கம்‘. அதாவது, ஒருவனுடைய ஒளியை மங்கச் செய்தல்; அவனுடைய தன்னம்பிக்கையைக் குலைத்து, அதன் மூலம் அவனுடைய திறமையில் குறைவு ஏற்படுத்த முனைவது. இன்று வரை கையாளப்படுகிற வழிமுறை இது.

கிரிக்கெட் ஆட்டத்தில் இப்போது ஒருவருக்கொருவர் வசை பாடிக் கொள்கிறார்கள்; இதற்கு முன்பு பாட்ஸ்மேனின் திறமை யைப் பற்றி, பௌலர் பரிகாசமாகப் பேசுவார். ‘போய் மட்டையைப் பிடிக்கக் கற்றுக் கொண்டு வாஉன் அம்மாவிடம் போய், அடைக்கலம் புகுந்து விடுஇவ்வளவு மட்டமாக ஆட எங்கே கற்றுக் கொண்டாய்?’ என்றெல்லாம் பேசப்படும். பேட்ஸ் மேனின் நிதானம் தவறும்; கோபம் வரும்; முனைப்பு மழுங்கும்; தவறு செய்வார். இதுதான்தேஜோபங்கம்.

இப்படி கர்ணனுக்கு தேஜோபங்கம் ஏற்படுத்த முனைந்த சல்யன், யுத்தத்தின் இறுதி நாளாகிய பதினெட்டாவது தினத்தில் அரைநாள் துரியோதனன் படைக்குத் தலைமை தாங்கினான். அது மட்டுமல்ல; பெரும் போர் புரிந்தான்; பாண்டவ சேனையையே அழித்துவிடப் போகிறவன் போல அவன் செய்த யுத்தம், பாண்டவ சகோதரர்களைக்கூட அச்சுறுத்தியது. இறுதியில் கிருஷ்ணர் சொல் லியபடி, சல்யனை வீழ்த்திக் கொன்றது தர்மபுத்திரர்தான்.

எந்த தர்மபுத்திரரிடம் கொடுத்த வார்த்தைக்காக, கர்ணனை இழிவுபடுத்திப் பேசி, அவனுடைய தன்னம்பிக்கையைக் குலைக்க முனைந்தானோ அதே தர்மபுத்திரரால் கொல்லப்பட்டான் சல்யன். அவனும் தர்மபுத்திரரை வீழ்த்திக் கொன்றுவிட முனைந்தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அதாவது, யுத்தத்தில், சாதாரண தர்மங்கள் பல அடிபட்டுப் போகின்றன. யுத்தம் தவிர்க்கத் தக்கதுஎன்று பாரதமும்; வேறு பல நூல்களும் வலியுறுத்துவது, உயிர்கள் அழிவை தடுப்பதற்காக மட்டுமல்ல; தர்மத்தின் நாசத்தைத் தடுப்பதற்கும் கூட யுத்தம் தவிர்க்கப்படுவது நல்லது. இது அன்றிலிருந்து, இன்று வரை அழி யாமல் இருக்கிற உண்மை.

ராஜநீதியிலும், யுத்த தர்மத்திலும், க்ஷத்ரிய தர்மத்திலும் இந்த மாதிரி வழிமுறைகள் வேறு வழியின்றி ஏற்றுக் கொள்ளப்படு கின்றன; ஆனால் இதுவே தர்மம் ஆகி விடாது என்பதும் மஹா பாரதத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு சிறிய உதாரணம்: லட்சக்கணக்கான பாம்புகளை தீயில் விழச் செய்து ஜனமேஜயன் நடத்திய யாகத்தின் போது, வைசம்பாயனர், ஜனமே ஜயனுக்கு, வியாசரின் மஹாபாரதத்தை விரிவாக எடுத்துச் சொல் கிறார். இப்படி லட்சக்கணக்கில் பாம்புகளைக் கொன்றதற்காக, மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை மாற்றாமல், அப்படியே தனதுபாஞ்சாலி சபதம்என்ற கவிதையில், பாரதி வடித்திருக்கிற விதம், மிகவும் சுவையானது.

திருதராஷ்டிரனிடம் சூதாட்ட யோசனை பற்றி, துரியோதனன் சார்பாக முதலில் சகுனி பேசுகிறான்:

….செல்வத்

தாபத்தை நெஞ்சில் வளர்த்திடல்மன்னர் சாத்திரத்தே முதற் சூத்திரம்பின்னும் ஆபத்து அரசர்க்கு வேறுண்டோ, நம்மில் அன்னியர் செல்வம் மிகுதல் போல

பாண்டவர்கள் நமது உறவினர்கள், நண்பர்கள் என்று திருத ராஷ்டிரன் சுட்டிக்காட்டி, இதற்கு மறுப்புரை பேசும்போது, துரி யோதனன் குறுக்கிடுகிறான். பிருஹஸ்பதியின் நீதி சாஸ்திரத்தையே புறக்கணித்து, அவரையே அறிவற்றவர் என்று திருதராஷ்டிரன் கருதுவதாக துரியோதனன் இடித்துரைத்து பேசுகிறான்:

மன்னர்க்கு நீதி ஒரு வகைபிற மாந்தர்க்கு நீதி மற்றோர் வகைஎன்று சொன்ன வியாழ முனிவனைஇவன் சுத்தமடையன் என்று எண்ணியே மற்றும் என்னென்னவோ கதை சொல்கிறான்உற வென்றும் நட்பென்றும் கதைக்கிறான்…”

அதாவது, ராஜநீதி, சாதாரண மனிதர்களுக்கான தர்மத்திலிருந்து மாறுபட்டது என்று அன்றே உரைக்கப்பட்டிருப்பதை, துரியோ தனன் மேலே கூறியவாறு சுட்டிக் காண்பிக்கிறான்.

குழைதல் என்பது மன்னர்க்கில்லை; கூடக்கூடப் பின்னும் கூட்ட வேண்டும். பிழைஒன்றே அரசர்க்குண்டு கண்டாய், பிறரைத் தாழ்த்துவதில் சலிப்பெய்தல்

துரியோதனன் தரப்புதான் இப்படி நேர்வழியை விட்டு விலகி, வெற்றியை நாடியது என்றும் சொல்லிவிட முடியாது. ஒரு உதாரணம்: சல்யன் தொடர்பான நிகழ்ச்சி.

சல்யன் பெரும் வீரன்; படைபலம் கொண்டவன். பாண்டவர் தரப்பில் சேர்வதற்காக அவன் வந்து கொண்டிருந்த வழியில் ஆங்காங்கே, அளிக்கப்பட்ட வரவேற்பு அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர், இது துரியோதனன் அளித்த மரியாதை என்று தெரிந்தவுடன், தர்மசங்கடத்தில் சிக்கிய அவன், துரியோதனன் தரப்பிலேயே போரிட சம்மதிக்கிறான்.

இப்படி சம்மதித்த பிறகு, போர் ஆரம்பிப்பதற்கு முன்பு, தர்மபுத்திரர் அவனை அணுகி, ‘சல்ய மன்னனே! தேரோட்டுவதில் உனக்கு இருக்கும் நிபுணத்துவம் அனைவருக்கும் தெரியும். அதனால் துரியோதனன், கர்ணனுக்கு தேரை செலுத்தித் தருமாறு உன்னைக் கேட்டுக் கொள்வான். அந்தப் பணியை ஏற்று, கர்ண னுக்குத் தேரோட்டும்போது, அவனுடைய தன்னம்பிக்கையை நீ குலைக்க வேண்டும்என்று கேட்டுக் கொள்கிறார். இப்படி, எதிரி யின் படையில் பிளவைத் தோற்றுவிக்க தர்மபுத்திரர் முனைந்தார்.

தர்மபுத்திரர் எதிர்பார்த்த மாதிரியே, கர்ணன் படைத் தலைமை ஏற்றபோது, அவனுக்கு தேரோட்டுமாறு சல்யனை துரியோதனன் கேட்டுக் கொள்கிறான். சல்யன் முதலில் சம்மதிக்கவில்லை. ‘தேரோட்டி மகனாகிய கர்ணனுக்கு, மன்னனும், மஹாவீரனு மாகிய நான் தேரோட்டுவதா?’ என்று கோபத்துடன் பேசுகிறான். அப்போது துரியோதனன், சல்யனுக்கு நிகரானவர்கள் உலகில் இல்லை என்று கூறி, அவனைப் பலவாறாகப் புகழ்ந்து, தங்கள் தரப்பு வெற்றி பெறுவதற்காக, கர்ணனுக்குத் தேரோட்டுமாறு வேண்டிக் கொள்கிறான். துரியோதனனின் புகழ்ச்சி, சல்யனை மகிழ்வித்தது. ‘துரியோதனா! உங்கள் அனைவரைக் காட்டிலும் கிருஷ்ணனைக் காட்டிலும் கூடநான் மேலானவன் என்பதை நீ உணர்ந்திருக்கிறாய். ஆனால் கர்ணன் சம்பந்தமாக நான் கொடுத்த வார்த்தை ஒன்றிருக்கிறது. அதற்குட்பட்டு, நான் தேரோட்டுவேன்என்கிறான் சல்யன்.

இங்கேகொடுத்த வார்த்தை என்று சல்யன் கூறுவது, கர்ணன் தன்னம்பிக்கையைக் குலைப்பதாக தர்மபுத்திரருக்கு அவன் கொடுத்த வாக்குறுதி.

பதினேழாவது நாள் யுத்தம் நடக்க இருந்தபோது, படைத் தலைமை ஏற்றிருந்த கர்ணன், ‘குதிரைகளை நடத்துவாயாக! பாண்டவர்களை அழிக்கிறேன். பாண்டவர்களின் அழிவின் பொருட்டும், துரியோதனன் வெற்றியின் பொருட்டும், நான் இப்போது செய்ய இருக்கிற அற்புத யுத்தத்தை உலகம் பார்க்கட்டும்என்று கூறினான்.

சல்யன், தர்மபுத்திரருக்குக் கொடுத்த வார்த்தையை நிறைவேற்ற ஆரம்பித்தான்: ‘யாராலும் வெல்ல முடியாத பாண்டவர்களை நீ எப்படி இவ்வளவு அலட்சியமாகப் பேசலாம்? அவர்களை யுத்தத்தில் சந்திக்கிறபோது, உன்னுடைய வறட்டுத்தனமான இந்த சுயப்பிரதாபம் நின்று போகும்என்றான் சல்யன்.

என் போர்த்திறனை நீ பார்க்கத்தான் போகிறாய்என்று மட்டும், சல்யனிடம் சொல்லி விட்டு, துரியோதனன் தரப்பு வீரர்களையும் அரசர்களையும் உற்சாகப்படுத்துகிற வகையில் கர்ணன் சில வார்த்தைகளைப் பேசினான்:

விசித்திரவீர்யனுடைய பேரனும், திருதராஷ்டிர மன்னனின் மகனுமாகிய துரியோதனனுக்காக, நான் என் உயிரையும் விடுவேன். இந்தத் தேர், எனக்கு பரசுராமரால் அளிக்கப்பட்டது. இந்த ரதத்தின் மீதேறி அர்ஜுனனை வீழ்த்துவேன். எமனே வந்து அர்ஜுனனைப் பாதுகாத்தாலும் சரி, அவன் என்னால் கொல்லப்படுவான். இது நடக்கவில்லையென்றால், சூரியனைப் போன்ற தேஜஸ் உடைய வரும், விஷ்ணுவுக்கு சமமான பராக்கிரமம் படைத்தவருமான துரோணர் சென்ற வழியில் நான் செல்வேன்‘.

வ்வாறு, தனது படை வீரர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் பேசிய கர்ணனை, சல்யன் மீண்டும் பரிகசித்தான்: ‘கர்ணா! தற் புகழ்ச்சியை நிறுத்து! மனிதர்களில் சிறந்தவனாகிய அர்ஜுனன் எங்கே? மனிதர்களில் தாழ்ந்தவனாகிய நீ எங்கே? முன்பு விராட நகரத்திற்கு அருகில் நடந்த மோதலில், நீங்கள் அனைவரும் பின் வாங்கி ஓடினீர்கள் அல்லவா? – அதே போல நீ மீண்டும் ஓட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த யுத்த களத்தில் நின்றால், நீ மடிவாய்! ஓடினால்தான் பிழைப்பாய்!’

இப்படிப் பேசிய சல்யன், மேலும் கர்ணனை இழிவுபடுத்திப் பேசினான்: ‘ஒரு புலியைக் கண்டு ஒரு நாய் குரைப்பது போல, நீ அர்ஜுனனைப் பார்த்து குரைக்கிறாய். நீ என்றுமே நரிதான்; அர்ஜுனன் என்றும் சிங்கம்தான்! அவன் பூனை என்றால், நீ எலி! அவன் யானை என்றால், நீ முயல்! அவன் அமிர்தம் என்றால், நீ விஷம்!’.

சல்யனின் இந்த பரிகாசமெல்லாம், தர்மபுத்திரர் கேட்டுக் கொண்டபடி, அவன் கர்ணனுக்கு இழைத்த அநீதி.

இப்படி பரிகாசம் பேசி, இழிவு செய்து, அல்லது வேறு வழியில் ஒருவனுடைய தன்னம்பிக்கையை சிதைக்க முயற்சிப்பதுதேஜோபங்கம்‘. அதாவது, ஒருவனுடைய ஒளியை மங்கச் செய்தல்; அவனுடைய தன்னம்பிக்கையைக் குலைத்து, அதன் மூலம் அவனுடைய திறமையில் குறைவு ஏற்படுத்த முனைவது. இன்று வரை கையாளப்படுகிற வழிமுறை இது.

கிரிக்கெட் ஆட்டத்தில் இப்போது ஒருவருக்கொருவர் வசை பாடிக் கொள்கிறார்கள்; இதற்கு முன்பு பாட்ஸ்மேனின் திறமை யைப் பற்றி, பௌலர் பரிகாசமாகப் பேசுவார். ‘போய் மட்டையைப் பிடிக்கக் கற்றுக் கொண்டு வாஉன் அம்மாவிடம் போய், அடைக்கலம் புகுந்து விடுஇவ்வளவு மட்டமாக ஆட எங்கே கற்றுக் கொண்டாய்?’ என்றெல்லாம் பேசப்படும். பேட்ஸ் மேனின் நிதானம் தவறும்; கோபம் வரும்; முனைப்பு மழுங்கும்; தவறு செய்வார். இதுதான்தேஜோபங்கம்.

இப்படி கர்ணனுக்கு தேஜோபங்கம் ஏற்படுத்த முனைந்த சல்யன், யுத்தத்தின் இறுதி நாளாகிய பதினெட்டாவது தினத்தில் அரைநாள் துரியோதனன் படைக்குத் தலைமை தாங்கினான். அது மட்டுமல்ல; பெரும் போர் புரிந்தான்; பாண்டவ சேனையையே அழித்துவிடப் போகிறவன் போல அவன் செய்த யுத்தம், பாண்டவ சகோதரர்களைக்கூட அச்சுறுத்தியது. இறுதியில் கிருஷ்ணர் சொல் லியபடி, சல்யனை வீழ்த்திக் கொன்றது தர்மபுத்திரர்தான்.

எந்த தர்மபுத்திரரிடம் கொடுத்த வார்த்தைக்காக, கர்ணனை இழிவுபடுத்திப் பேசி, அவனுடைய தன்னம்பிக்கையைக் குலைக்க முனைந்தானோ அதே தர்மபுத்திரரால் கொல்லப்பட்டான் சல்யன். அவனும் தர்மபுத்திரரை வீழ்த்திக் கொன்றுவிட முனைந்தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அதாவது, யுத்தத்தில், சாதாரண தர்மங்கள் பல அடிபட்டுப் போகின்றன. யுத்தம் தவிர்க்கத் தக்கதுஎன்று பாரதமும்; வேறு பல நூல்களும் வலியுறுத்துவது, உயிர்கள் அழிவை தடுப்பதற்காக மட்டுமல்ல; தர்மத்தின் நாசத்தைத் தடுப்பதற்கும் கூட யுத்தம் தவிர்க்கப்படுவது நல்லது. இது அன்றிலிருந்து, இன்று வரை அழி யாமல் இருக்கிற உண்மை.

ராஜநீதியிலும், யுத்த தர்மத்திலும், க்ஷத்ரிய தர்மத்திலும் இந்த மாதிரி வழிமுறைகள் வேறு வழியின்றி ஏற்றுக் கொள்ளப்படு கின்றன; ஆனால் இதுவே தர்மம் ஆகி விடாது என்பதும் மஹா பாரதத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு சிறிய உதாரணம்: லட்சக்கணக்கான பாம்புகளை தீயில் விழச் செய்து ஜனமேஜயன் நடத்திய யாகத்தின் போது, வைசம்பாயனர், ஜனமே ஜயனுக்கு, வியாசரின் மஹாபாரதத்தை விரிவாக எடுத்துச் சொல் கிறார். இப்படி லட்சக்கணக்கில் பாம்புகளைக் கொன்றதற்காக, ஜனமேஜயனுக்கு பாதிப்பு எதுவும் வரவில்லை. ஆனால் ஒரு பிராம்மணர் ஒரே ஒரு பாம்பைக் கொல்ல முயற்சிக்கிறபோது, அவருக்கு இந்த உரிமை மறுக்கப்படுகிறது. ஒரு பாம்பு செய்த தீதின் காரணமாக, பாம்புகள் இனத்தின் மீதே கோபம் கொண்ட ருரு என்கிற பிராம்மணன், ஒரு தண்ணீர்ப் பாம்பைக் கண்டதும் அதை அழிக்க முயற்சிக்கிறான். ஒரு சாபத்தின் காரணமாக பாம்பாக மாறி இருந்த ரிஷி, தனது சுய உருவைப் பெறுகிறார். அவர் அந்த ருருவைப் பார்த்து, ‘அந்தணரே! உமக்கு உபதேசம் தேவைப் படுகிறதுஎன்று கூறி மேலும் சொல்கிறார்: ‘எந்தக் காரணத்தைக் கொண்டும், ஒரு பிராம்மணன், எந்த பிராணியையும் ஹிம்ஸிக்கக் கூடாது. பிராம்மணனுக்கு ஆபரணம் பொறுமை. பொய் கூறாமை, கொல்லாமை, வேதங்களை மறவாமை, பொறுமை போன்றவை ஒரு உண்மையான பிராம்மணனின் லட்சணங்கள். தண்டனை தருகிற உரிமை, பிராம்மணனுக்குக் கிடையாது; அது க்ஷத்ரிய தர்மம். கடுமை காட்டுவது, தண்டனை தருவது, மக்களைக் காப்பாற்றுவது ஆகியவை க்ஷத்ரிய லட்சணம். அதை நீர் மேற்கொள்வது தகாது‘.

தண்டனை வழங்குகிற உரிமை, ஆட்சியாளர்களுக்கு உண்டு; க்ஷத்ரியர்கள்தான் ஆட்சியாளர்கள். மற்றவர்களுக்கு இந்த அதிகாரம் இல்லை என்பது அன்றே விதிக்கப்பட்டிருக்கிறது. ‘தர்மம் மிகவும் சூட்சுமமான விஷயம்; அதைப் புரிந்து கொள்வது எல்லோராலும் முடியாது; அதனால் பெரியவர்கள் சென்ற வழியில் செல்வதுதான் சிறந்ததுஎன்று இதனால்தான் மஹாபாரதம் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறது.