சில சந்த வகைகள்

இந்த்ர வஜ்ரா, உபேந்தர வஜ்ரா, ஸ்ரக்தரா என்றெல்லாம் காவியங்களிலும் ஸ்தோத்திரங்களிலும் பல சந்தஸ்கள் இருக்கின்றன. சிலது ரொம்பச் சிக்கலாக மஹா புத்திமான்களாலேயே இயற்றக் கூடியதாக இருக்கும்.

ஒரு பாதத்துக்கு எட்டு அக்ஷரம் இருப்பதைஅநுஷ்டுப்என்றேன். ஒன்பது அக்ஷரம் இருந்தால்ப்ருஹதீஎன்று அந்த சந்தஸுக்கு பெயர். ‘பங்க்திஎன்பது பாதத்துக்குப் பத்து அக்ஷரம் கொண்ட மீட்டர். ‘த்ரிஷ்டுப்என்பது பதினொன்று கொண்டது. பன்னிரண்டு அக்ஷரம் கொண்டதுஜகதீ’. இப்படியே ஒரு பாதத்துக்கு 26 அக்ஷரம் கொண்ட [‘உத்க்ருதிஎன்ற சந்தஸில்புஜங்க விஜ்ரும்பிதம்என்ற வகையில் அமைந்த] ச்லோகம் வரை பல மீட்டர்கள் உண்டு. அதற்கு மேல் போய்விட்டால்தண்டகம்என்று பெயர். தண்டகத்தில் பல வகைகள் உண்டு. “திருத்தாண்டகம்என்று அப்பர் பாடினது தண்டக சம்பந்தமுள்ளதுதான்.

வ்ருத்தங்களுக்குப் பேர் அழகாகவும், பொருத்தமாகவும், காவிய நயமுள்ளதாகவும் இருக்கும். புலி விளையாட்டாகப் பாய்ந்து பாய்ந்து போகிற மாதிரி ஒரு சந்தஸில் அக்ஷரங்கள் போகும். அதற்குசார்தூல விக்ரீடிதம்என்றே பேர். ‘சார்தூலம்என்றால் புலி; ‘விக்ரீடிதம்என்றால் விளையாட்டு. இது பாதத்துக்குப் பத்தொன்பது அக்ஷரம் கொண்டஅதி த்ருதிமீட்டர்களில் ஒரு வகை. ஒவ்வொரு பாதத்துக்குள்ளும் இந்த 19 அக்ஷரங்கள் 12 என்றும் 7 என்றும் பிரியவேண்டும். ஆச்சார்யாளின்சிவாநந்த லஹரியில் 28-லிருந்து பல ச்லோகங்கள் இப்படி அமைந்தனவே. காமாக்ஷியைப் பற்றியதானமூக பஞ்சசதீயில்ஸ்துதி சதகஆரம்ப ச்லோகங்கள் இந்த வ்ருத்தம்தான். கடைசி நூறானமந்தஸ்மித சதகம்முழுதும் இந்த வ்ருத்தமே. பாம்பு ஊர்ந்து போகிற மாதிரி சப்த அமைப்பு உள்ள சந்தஸுக்குபுஜங்க ப்ரயாதம்என்று பெயர். புஜங்கம் என்றால் பாம்பு தானே? ஆசார்யாளின்ஸுப்ரமண்ய புஜங்கம்இந்த மீட்டரில் இருப்பதுதான். இது பாதத்துக்குப் பன்னிரண்டு அக்ஷரமுள்ளஜகதீயில் ஒரு வகை. இந்தப் பன்னிரண்டும் சரியாக ஆறு ஆறாகப் பிரிந்திருக்க வேண்டும் என்பது விதி:

யூராதிரூடம்

ஹாவாக்யகூடம்

என்கிற மாதிரி.

ஆசார்யாளின்ஸெளந்தர்ய லஹரிஸ்தோத்திரமானதுசிகரிணிவிருத்தத்தில் அமைந்ததாகும். இதிலே பாதத்துக்குப் பதினேழு எழுத்து. ‘அத்யஷ்டிஎன்பது இப்படிப்பட்ட பதினேழு எழுத்துப் பாத வ்ருத்தங்களுக்குப் பொது பெயர். இந்தப் பதினேழு எழுத்தும் ஆறுபதினொன்று என்று பிரிந்து பிரிந்து வந்தால் அதற்குசிகரிணிஎன்று பெயர். “மூகபஞ்சசதீயில்பாதாரவிந்த சதகம்இந்த மீட்டரில் இருப்பதே. வாய் கொள்ளாமல், ச்லோகங்களைக் கடல் மடை திறந்தது போல் சொல்லிக் கொண்டே போவதற்குஸ்ரக்தராரொம்பவும் ஏற்றதாகும். (‘ப்ரகிருதிஎன்ற) 21 அக்ஷரம் கொண்ட பாதத்தை உடைய இந்த மீட்டரில், ஒவ்வொரு பாதமும் மூன்று ஏழு அக்ஷரங்களாகப் பிரிந்திருக்கும். ஈச்வரன், விஷ்ணு இருவரைக் குறித்தும் ஆசார்யாள் செய்திருக்கிற பாதாதி கேச, கேசாதி பாத வர்ணனை ஸ்தோத்திரங்களை இந்த வ்ருத்தத்திலேயே பாடியிருக்கிறார்.

முதலில்இந்த்ர வஜ்ராஎன்றேனே, அது பாதத்துக்குப் பதினொரு அக்ஷரம் கொண்டத்ருஷ்டுப்என்ற சந்தஸில் ஒரு வகை. இந்தப் பதினொரு அக்ஷரத்திலேயே வேறு விதமானது உபேந்த்ர வஜ்ரா. இரண்டையும் கலந்ததுஉபஜாதி’. காளிதாசனின்குமார ஸம்பவம்இந்த உபஜாதி மீட்டரில் தான் ஆரம்பிக்கிறது.

இவையெல்லாம் வேதத்துக்குப் பிற்பட்ட காவியங்களிலும் ஸ்தோத்திரங்களிலும் வருகிற சந்தஸ்கள். வேதத்திலும் வருவதான சந்தஸ்கள்: ‘காயத்ரீ’, ‘உஷ்ணிக்’, ‘அநுஷ்டுப்’, ‘ப்ருஹதீ’, ‘பங்க்தீ’, ‘த்ருஷ்டுப்’, ‘ஜகதீமுதலானவை.

காயத்ரீமஹா மந்திரம், அதுவே மந்திரராஜன் என்று கொண்டாடுகிறமே, அப்படிப்பட்ட உயர்ந்த மந்திரத்துக்கு அது அமைந்துள்ளகாயத்ரீஎன்ற சந்தஸை வைத்தே பெயர் அமைந்திருக்கிறது. ஸாதாரணமாக ஒரு மந்திரம் என்றால், அது எந்த தேவதையைக் குறித்ததோ அதை வைத்தே பேர் சொல்வோம். சிவ பஞ்சாக்ஷரீ, நாராயண அஷ்டாக்ஷரீ, ராம த்ரயோதசீ என்று தேவதையின் பெயரையும் மந்திரத்திலுள்ள அக்ஷரங்களின் எண்ணிக்கையையும் சேர்த்துச் சொல்கிறோம். காயத்ரீ மந்திரத்துக்கு தேவதைஸவிதா”. காயத்ரீ என்பது மீட்டரின் பெயர்தான். ஆனாலும் மீட்டரையே வைத்து மந்திரத்துக்குப் பேர் சொல்கிறோம். சப்தத்துக்கும் ஸ்வரத்துக்குமே தனியாக தெய்விக சக்தி உண்டு என்பதுபோல், சந்தஸின் அமைப்புக்கும் இருக்கிறது என்று இதிலிருந்து தெரிகிறது.

நாலு கால் சேர்ந்தால் ஒன்று. அதனால் ஒரு மந்திரமானாலும், ச்லோகமானாலும் நாலு பாதம் உண்டுஎன்றேன். இதற்கு வித்யாஸமாக, இந்த காயத்ரீ மந்திரத்தில் மூன்று பாதங்கள்தான் இருக்கின்றன. ஒவ்வொன்றும் எட்டெழுத்துக்கொண்ட மூன்றே பாதங்களாலான 24 அக்ஷர மீட்டராகவே வேதத்திலுள்ள இந்தகாயத்ரீஇருக்கிறது. மூன்று பாதம் இருப்பதால், இதைத்ரிபதா காயத்ரீஎன்கிறோம். வேறு பல காயத்ரீ வகைகளும் உண்டு. வேதத்தின் முதல் மந்திரமானஅக்னீமீளேஸூக்தமே காயத்ரீ சந்தஸில் அமைந்ததுதான்.

காவிய, ஸ்தோத்திரங்களில் 24 அக்ஷர காயத்ரீயானது தலைக்கு ஆறு அக்ஷரமுள்ள நாலு பாதங்களாகப் பிரியும். பாதமொன்று ஏழு அக்ஷரமுள்ள 28 அக்ஷர வ்ருத்தம்உஷ்ணிக்எனப்படும்.

இது வரை சொன்னதெல்லாம் அக்ஷரக் கணக்கு. அதாவது குறில் நெடில் என்று வித்யாஸம் பார்க்காமல் , இரண்டையும் ஒரே அக்ஷரமாகக் கணக்குப் பண்ணும் முறை. மற்ற இடங்களில் குறிலைஹ்ரஸ்வம்என்றும், நெடிலைதீர்க்கம்என்றும் சொன்னாலும் இந்த prosody-ல், அதாவது சந்தஸ் சாஸ்திரத்தில், குறிலைலகுஎன்றும், நெடிலைகுருஎன்றுமே சொல்வது வழக்கம். குறில் நெடில் வித்யாஸமில்லாதவையேவ்ருத்தம்என்றும், வித்யாஸம் பார்த்து மாத்திரைக் கணக்கெடுப்பதைஜாதிஎன்றும் சொன்னேன். இப்படிப்பட்டஜாதிகளில் குறிலுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரை என்று கணக்கு. குறிலே இன்னின்ன எழுத்துக்கு முன்னால் வந்தால் இரண்டு மாத்திரை என்றும் அதில் உண்டு. ஒவ்வொரு பாதத்திலும் இத்தனை அக்ஷரம் இருக்க வேண்டும் என்பதற்குப் பதில், இத்தனை மாத்திரை இருக்க வேண்டும் என்பது விதி.

முன்னமேயே சொன்னஆர்யாஎன்ற மீட்டரில்தான்மூக பஞ்சசதீயின் ஆரம்பமானஆர்யா சதகம்உள்ளது. ரொம்பவும் உயர்ந்தவளாதலால்ஆர்யையாக இருக்கப்பட்ட அம்பாளை ஸ்தோத்திரம் பண்ணுவதோடு, மீட்டரும் ஆர்யாவாக இருப்பதாலேயேஆர்யா சதகம்என்று பேர். இதிலே அக்ஷரங்களைக் கணக்குப் பண்ணாமல், மாத்திரைகளைக் கணக்குப் பண்ணினால்தான் ச்லோகங்கள் ஒரு கிரமத்தில் செய்யப்பட்டிருக்கின்றன என்று தெரியும். அக்ஷரக்கணக்குப் பண்ணினால், “இதென்ன, ச்லோகத்துக்கு ச்லோகம் மீட்டர் வித்யாஸமாயிருக்கிறதே?” என்று தோன்றும்.