சந்தியாவந்தனத்தின் பெருமை

ல்லோருக்குமே இறை வழிபாடு என்பது அவசியம். ஒவ்வொருவரும் அவரவரது வழிப்படி இறைவனைத் தொழ வேண்டும். என்னென்ன தர்மங்கள் சொல்லப்பட்டிருக்கிறதோ, அவற்றை முறைப்படி செய்ய வேண்டும். அந்தணர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் வேளை தவறாமல் தங்களுக்கு உண்டான அனுஷ்டானங்களைச் செய்ய வேண்டும்.

இதில், சந்தியாவந்தனம் முக்கியமான ஒன்று. இதன் அவசியத்தைப் பற்றியும், சந்தியாவந்தனத்தின் பெருமை குறித்தும் எண்ணற்றோர் சொல்லி இருக்கிறார்கள். காஞ்சி மகா ஸ்வாமிகளும் சந்தியாவந்தனத்தின் முக்கியத்துவத்தைப் பல மேடைகளில் சொல்லி இருக்கிறார். 16.12.1939-ல் கும்பகோணத்துக்கு அருகே இருக்கிற முடிகொண்டான் கிராமத்தில் சந்தியாவந்தனத்தின் மகிமை குறித்து நீண்ட சொற்பொழிவாற்றினார். அந்த மேடையில் மகா ஸ்வாமிகள் பேசியதை அவரது உரையில் இருந்தே கேட்போம்.

மனுஸ்ம்ருதியில்ரிஷயோ தீர்க்க ஸந்த்யாவாத் தீர்க்கமாயுரவாப்நுயு ப்ரக்ஞாம் யசச்ச கீர்த்திம் சப்ரஹ்ம வர்ச்சஸ மேவச என்று இருக்கிறதுஇதன் அர்த்தம் என்ன என்றால், ரிஷிகள் தீர்க்காயுள், ஞானம், தேஜஸ் அடைந்ததற்குக் காரணம்அவர்கள் விடாமல் செய்து வந்த சந்தியாவந்தனத்தின் பலன்தான். சந்தியாவந்தனத்தின் பலத்தைத் தெரிந்து கொள்ள இது ஒன்றே போதும். ஏராளமான பொருட்செலவு செய்து உபநயனம் செய்து வைத்ததன் பலன் பூஜ்யமாகி விடாமல் பார்த்துக் கொள்வது இன்றைக்கு இருக்கிற பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களின் பொறுப்பாகும். அவர்கள்தான் இதைக் கண்காணிக்க வேண்டும்.

நம்முடைய பெரியோர்கள் சந்தியாவந்தனத்தை ஒவ்வொரு காலத்திலும் தவறாமல் அதன் விதிப்படி செய்து வந்தார்கள். அதனால், அவர்கள் சகல வளங்களோடு வாழ்ந்தார்கள். ஆனால், இப்போதோ, ஆங்கிலப் படிப்பு படித்த அநேகம் பேர், சந்தியாவந்தனத்தை முறையாகச் செய்வதாகத் தெரியவில்லை. ஒருவேளை இதைச் செய்வது, நாகரிகக் குறைபாடு என்று கூட சிலர் நினைக்கிறார்கள்.

சந்தியாவந்தனம் போன்ற கர்மாக்கள் முறையானபடி ஒழுங்காக நடைபெறாததன் காரணமாக இப்போது லோக க்ஷேமத்தில் குறைவு ஏற்பட்டிருக்கின்ற காரியங்கள் தோன்றி இருக்கின்றன. ஒருவர் சந்தியாவந்தனத்தை ஒழுங்காகச் செய்வதால் அவருக்கு மட்டுமே அந்த நற்பலன் போய்ச் சேரவில்லை. உலகத்தில் இருக்கின்ற அனைவருக்குமே அந்தப் பலன் போய்ச் சேருகிறது. இதனால்தான், ராஜாக்கள் தங்கள் ராஜ்யத்தில் வசித்து வந்த அந்தணர்களைப் போற்றினார்கள். அவர்கள் தங்களது நித்ய கர்மாக்களைக் குறைவில்லாமல் செய்தால், நாட்டின் வளம் பெருகும் என்று அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார்கள்.

தற்போதைய நிலையில் அக்னி மறையும் தருவாயில் இருக்கிறது. இனிமேலாவது எல்லோரும் சந்தியாவந்தனத்தை ஒழுங்காகச் செய்ய ஆரம்பித்தால், மறைந்திருக்கும் அக்னி, பூர்ணஜோதியை அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. இதன் மூலம் உலக நலன் விருத்தி ஆகும். எல்லா ஜீவ ராசிகளும் சந்தோஷத்தை அடையும்.

சைக்கிள் வேகமாக வரும்போது பெடல் பண்ணப்படுவது நின்றபோதிலும், கொஞ்ச தூரத்துக்கு தானாகவே சென்று கொண்டிருக்கும். அதுபோல் சந்தியாவந்தனம் போன்ற கர்மாக்கள் செய்யப்பட்டுத் திடீரென்று நின்று விட்டாலும், முன்னோர்கள் செய்த கர்ம பலத்தைக் கொண்டு இப்போது நன்றாக இருப்பது போல் தோற்றம் அளிக்கும். ஆனால், அது நிலையானது அல்ல.

தாமதமாகக் கிளம்பும் ஒருவன், தான் பிடிக்க வேண்டிய ரயிலைத் தவற விட நேர்ந்தால், போக வேண்டிய காரியம் நஷ்டம் ஆகி விட்டதே என்பதற்காக ரொம்பவும் வருத்தப்படுகிறான். ஆனால் உலக நலனுக்காக, தான் செய்ய வேண்டிய சந்தியாவந்தனக் கடமையை விட்டு விட்டால், அதற்காகக் கொஞ்சமும் வருத்தப்படாமல் இருக்கிறான்.

காயத்ரி மந்திரத்தைத் தினமும் குறைவு படாமலும், வசதிப்பட்டால் சொல்ல வேண்டிய அளவுக்கு அதிகமாகவும் ஒருவன் ஜபிக்க வேண்டும். இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. எவன் ஒருவன் சிரத்தையுடனும் பக்தியுடனும் காயத்ரி மந்திரத்தைத் தினமும் தியானபூர்வமாக ஜபித்து வருகிறானோ, அவன் பக்தி சிரத்தையை அனுசரித்து, அதே ஜன்மாவிலோ அல்லது தொடர்ந்து வரும் ஜன்மாக்கள் ஒன்றிலோ மிகப் பெரிய பதவியை அடைகின்றான்.

சந்தியாவந்தனத்தின் மகிமையைப் பற்றி ஒரு கதை இருக்கின்றது. இது கதை அல்ல. நடந்த சம்பவம். சுமார் 600 வருடங்களுக்கு முன் நடந்திருக்கலாம். சென்னை அரசாங்கம் பிரசுரித்திருக்கும் ரெக்கார்டுகளில், இந்தக் கதைக்குத் தேவையான ஆதாரங்கள் இருக்கின்றன.

திருவனந்தபுரத்தை ஆண்ட ராஜாக்களில் ஒருவர் எள்ளினால் ஒரு கால புருஷன் உருவத்தைத் தயார் செய்து அதற்குள் ஏராளமான தங்கத்தை உள்ளடக்கி வைத்து, ஒரு தானம் செய்யப் போவதாக விளம்பரப்படுத்தினார். கால புருஷன் என்கிற இந்த வடிவத்துக்குள் இருக்கும் தங்கத்தின் மேல் உள்ள ஆசையால் அநேகம் பேர் இந்த தானம் வாங்குவதற்காக அவனது அரசவைக்குநான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வந்தார்கள்எத்தகைய செல்வத்தையும் சுலபமாக அடைந்து விடமுடியாதே… அதுபோல் இதில் ஒரு நிபந்தனையும் உண்டுஅதாவது, அந்தக் கால புருஷன் கேட்கின்ற சில கேள்விகளுக்கு தானம் வாங்க வருபவர்கள் தக்க பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்லி விட்டால், அந்தத் தங்கப் புதையல் கிடைத்து விடும். அப்படிப் பதில் சொல்லத் தவறினால், அவரது உயிரை கால புருஷன் எடுத்துக் கொண்டு விடுவான். ‘எப்படியும் பதில் சொல்லித் தங்கத்தைப் பெற்றுச் சென்று விடலாம் என்கிற ஆசையில் அரசவைக்கு வந்த பலர் அடுத்தடுத்து மாண்டு போனார்கள். கால புருஷன் மிகுந்த எக்காளத்துடன் காணப்பட்டான்.

அந்த நாளில் கன்னடியர் என்கிற ஒரு பிராமணர் இருந்தார். சந்தியாவந்தனம் போன்ற கர்மாக்களில் மிகுந்த சிரத்தை உள்ளவர். திருவனந்தபுரம் ராஜா வின் விளம்பரத்தைப் பார்த்து விட்டு அவரும் அரசவைக்கு வந்தார். இதுவரை வந்து நின்ற பலரும் மாண்டு போன நிலையில் இப்போது கன்னடியரின் முறை வந்தது. அவரைப் பார்த்ததும் கால புருஷன் உருவம் எதுவும் கேள்வி கேட்கவில்லை. தன் மூன்று விரல்களை மட்டும் காட்டியது. அது என்ன கேட்கிறது என்பதைப் புரிந்து கொண்ட கன்னடியர், ‘முடியாது என்றார் அழுத்தம் திருத்தமாகபிறகு, தன் இரண்டு விரல்களைக் காட்டியது கால புருஷன். ‘முடியவே முடியாது என்றார் கன்னடியர்கடைசியாகத் தன் ஒரு விரலைக் காட்டியது கால புருஷன் உருவம்சரி… போனால் போகிறதென்று தருகிறேன் என்றார் கன்னடியர்.

இதற்கு மேல் தான் இங்கிருந்து பலன் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட அந்தக் கால புருஷன், சட்டென்று அங்கிருந்து மாயமானான். அரசரும் மகிழ்ந்தார். கால புருஷன் வடிவத்துக்குள் இருந்த தங்கப் புதையல் கன்னடியருக்குக் கிடைத்தது. சரி, கடைசியில் ஒரு விரல் காட்டியபோது, ‘சரிபோனால் போகிறதென்று தருகிறேன் என்று சொன்னாரே கன்னடியர்இதன் பொருள் என்ன?

கால புருஷன் மூன்று விரல்களைக் காட்டிக் கேட்டதன் அர்த்தம், ‘மூன்று வேளைகளில் நீ செய்யும் சந்தியாவந்தனத்தின் பலனை எனக்குக் கொடுஇதே போல் இரண்டு விரல் காட்டிக் கேட்டதன் ர்த்தம், ‘காலை, மாலை ஆகிய இரு வேளைகளின் செய்யும் சந்தியாவந்தனத்தின் பலனை எனக்குக் கொடுஇவை இரண்டுக்கும் கன்னடியர் மறுத்த பிறகு தன் ஒரு விரலைக் காட்டிக் கேட்டது கால புருஷன்அதாவது, ‘மதிய வேளையில் நீ செய்யும் சந்தியாவந்தனத்தின் பலனை எனக்குக் கொடு என்பதாகும். எனவே, ஒரு வேளை தான் செய்யும் சந்தியாவந்தனத்தின் பலனை தானம் கொடுத்து விட்டார் என்று சொல்கிற மகா ஸ்வாமிகள், கன்னடியர் இப்படி தானம் கொடுத்ததால், பிற்பாடு அவர் சாபத்துக்கு உள்ளானதைப் பற்றியும், அதில் இருந்து மீண்ட கதையையும் சொல்லி இருக்கிறார்.