உலக நலனை மட்டுமே பிரதானமாகக் கொண்டு பிரார்த்தித்து நாம் வாழ ஆரம்பித்தால், நம் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் எல்லாமும் தானாகவே நடக்கும். இதைத்தான் கிராமங்களில் ‘ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்‘ என்பர்.
மனிதர்கள் இதைப் பின்பற்றுகிறார்களோ, இல்லையோ… இதைப் பின்பற்றி வாழ வேண்டும் என்பதற்காகவே மகான்களின் அவதாரம் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
‘எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்‘ என்கிற கொள்கையுடன்தான் மகா பெரியவா பாரத தேசத்தின் பல கிராமங்களுக்குப் பயணப்பட்டார். அங்கே இருக்கிற பக்தர்களைத் தேடிப் போய் ஆசிர்வதித்தார்.
தன்னையே கதி என்று நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் ஆத்மார்த்த பக்தர்களுக்கு என்னென்ன அருள வேண்டுமோ, அவற்றை அருளி இருக்கிறார் மகா பெரியவா.
தீராத வியாதியால் பக்தர் ஒருவர் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறாரா? தன் தவ வலிமையால் வியாதியை வேரோடு விரட்டினார் மகா பெரியவா.
குழந்தைப் பேறு இல்லாமல் சோகத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாரா தன் பக்தையான ஒரு பெண்மணி? அவருக்கு அந்தப் பேற்றை அருளினார்.
விதியின் பலனால் ஒரு துர்மரணத்தை பக்தர் ஒருவர் சந்திக்க உள்ளாரா? அவரை நோக்கி வந்த காலனையே விரட்டி, காலசம்ஹார மூர்த்தியாக விளங்கினார்.
இறந்ததாகச் சொல்லப்பட்ட ஒரு பெண்மணியை மகா பெரியவா உயிர்ப்பித்த அற்புதம், எவராலும் நம்பவே முடியாத ஓர் அனுபவம்.
‘உயிர் காத்த உத்தமர்‘, ‘உயிரை மீட்டெடுத்த அற்புதர்‘ என்றெல்லாம் இந்த மகானை அனுதினமும் தொழுது அவரது திருவடி போற்ற வேண்டும்.
உண்மையான குரு பக்தியோடு, குருவருள் சிந்தனையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறவர்களுக்கு எந்தக் காலத்திலும் துயரம் இல்லை. விதியையும் வெல்லக் கூடிய ஆற்றலை மகா பெரியவா போன்ற மகான்கள் வழங்கி விடுவார்கள்.
காஞ்சி ஸ்ரீமடத்தில் நரசிம்மன் என்பவர் பணி புரிந்து வந்தார். ஸ்ரீமடத்தின் கணக்கு வழக்குகளைக் கவனித்துக் கொள்வது இவரது பணி. உத்தியோகம் என்பது ஒரு பெயருக்கே தவிர, மகா பெரியவாளுக்கு அருகில் இருந்து ஊழியம் பார்ப்பதைப் பெரும் பேறாக எண்ணியவர் நரசிம்மன். அந்த மகானைக் கண்ட மாத்திரத்தில் பக்திப் பரவசத்தில் அவரது கண்களில் நீர் பெருகும்.
இவரது மனைவியின் பெயர் ராஜேஸ்வரி. ‘பெத்தா‘ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுவார். பார்ப்பதற்கு மகாலட்சுமி போல் இருப்பார். இவரைப் பார்த்தாலே இரு கரங்களையும் உயர்த்தி வணங்கத் தோன்றும்.
ராஜேஸ்வரிக்குப் பிறந்த ஊர் – மரகதபுரம் என்கிற ஒழுக்கை கிராமம். விழுப்புரத்துக்கு அருகில் உள்ளது.
நரசிம்மன் காஞ்சி ஸ்ரீசங்கர மடத்திலேயே தங்கி இருந்து கணக்கு விவகாரங்களைக் கவனித்துக் கொண்டார். அவரது மனைவியான ராஜேஸ்வரி மரகதபுரத்தில் வசித்து வந்தார். அவ்வப்போது மரகதபுரத்துக்கு நரசிம்மன் செல்வதும், காஞ்சிக்கு ராஜேஸ்வரி வருவதும் வாடிக்கையானது.
ஏகாதசி வந்து விட்டால் போதும்… காஞ்சிபுரம் ஸ்ரீமடத்துக்கு ஓடி வந்து மகா பெரியவாளை ‘கிருஷ்ண சொரூபமாக‘த் தரிசிப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரி. வேறு எந்த ஒரு நாளில் மகா பெரியவாளைத் தரிசிக்கிற பாக்கியம் கிடைத்தாலும், ஏகாதசியைத் தவற விட மாட்டார்.
பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மகாமகம் என்கிற புனித நீராடல் நிகழ்வு கும்பகோணம் மகாமகக் குளத்தில் நடக்கும். இந்தியா மட்டுமல்லாமல், உலகின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரண்டு வந்து புனித நீராடுவது வழக்கம்.
1992-ஆம் ஆண்டு கும்பகோணம் நகரத்தில் மகாமகத் திருவிழா களைகட்டிருந்த நேரம் அது…
தனக்கு வரப் போகிற ஆபத்தை உணராத ராஜேஸ்வரியும், அந்த மகாமக தினத்தின்போது கும்பகோணம் சென்று மகாமகத் திருக்குளத்தில் புனித நீராட வேண்டும் என்று ஆசைப்பட்டார். விஷயத்தைக் கணவர் நரசிம்மனிடம் சொல்லி அவரையும் துணைக்கு அழைத்தார்.
”மகா பெரியவா ஸ்ரீமடத்துல இருக்கார். அவருக்கும் ரொம்ப முடியலை… ஏதாவது கணக்கு வழக்குன்னா என்னைத் தேடுவா. என்னால முடியாது. நீ மட்டும் போயிட்டு வா” என்று மனைவிக்கு அனுமதி தந்தார் நரசிம்மன்.
கணவரின் நிலையைப் புரிந்து கொண்ட ராஜேஸ்வரி, தான் மட்டும் தனியாகக் கிளம்பி கும்பகோணத்தை அடைந்தார்.
புனிதம் நிரம்பிய மாசி மாத மகம் நட்சத்திரத்தன்று கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடினால், பாவங்கள் தொலைந்து புண்ணியம் பெற்றவர்கள் ஆகி விடுவோம் என்கின்றன புராணங்கள். தவிர, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக் கூடிய மகாமகம் எண்ணற்ற சிறப்புகள் கொண்டது. சாதாரண மாசி மகமே விசேஷம் என்றால், மகாமகத் திருவிழாவின் கோலாகலத்துக்குக் கேட்பானேன்?!
பல லட்சக்கணக்கான பக்தர்கள் அன்றைய தினம் கும்பகோணத்தை நோக்கிப் படையெடுத்து வருவது வழக்கம். அதுபோல் 1992 மகாமகத்தின்போது கும்பகோணமே திமிலோகப்பட்டது.
குறிப்பிட்ட இந்த நிகழ்வின்போதுதான் மகாமகக் குளத்தில் குளிப்பதற்காக இறங்கிய பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க… அடுத்து நீராடுவதற்கென்று குளக்கரையில் கூடிய கூட்டத்தின் அளவும் கணிசமாகக் கூடிக் கொண்டே போனது. இப்படிக் கரையில் காத்திருக்கின்ற பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், இட நெருக்கடி தாங்க முடியாமல் ஒரு குறிப்பிட்ட சுவர் மீது சில பக்தர்கள் ஏறி நிற்கத் துவங்கினார்கள்.
சுவரைக் குறி வைத்து எண்ணற்ற பக்தர்கள் அதை நெருங்கிய நேரத்தில், அந்த சுவர் தன் ஆயுளை முடித்துக் கொள்ளும் விதமாகத் திடீரென சரிந்து விழுந்தது.
இந்த சுவர் அருகிலும், சுற்றிலும் நின்றவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் விதமாக கூட்ட நெரிசலையும் தள்ளிக் கொண்டு ஓட முற்பட்டார்கள்.
எண்ணற்ற பக்தர்கள் கூடி இருக்கிற இடத்தில் இந்த அசம்பாவிதம் நடந்ததும், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களும் தன்னார்வத் தொண்டர்களும் ஓடி வந்து பாதிக்கப்பட்ட பலரையும் காப்பாற்றத் துவங்கினர்.
இந்த அசம்பாவிதத்தில் பலரும் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயம் அடைந்தார்கள்.
இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடல்கள் அங்கேயே ஓர் ஓரத்தில் வரிசையாகக் கிடத்தப்பட்டிருந்தன.
அதில் ராஜேஸ்வரியின் உடலும் இருந்தது.
புனித நீராட வந்தவர்களை ஏனோ எமன் அழைத்துச் சென்று விட்டான்.
அந்த வழியாகச் செல்கின்ற பக்தர்களும், குளக்கரை அருகே வீடுகளில் வசித்தவர்களும் இறந்தவர்களின் உடல்களைப் பார்த்து மனம் வருந்தினர். ‘பாவம்… இவர்களுடன் வேறு யார் யாரெல்லாம் வந்தார்கள் என்று தெரியவில்லையே… ஒருவேளை தனியாகத்தான் வந்திருப்பார்களா? இவர்களை எல்லாம் எப்போது அடையாளம் கண்டு அவரவர்களது உறவினர்களிடம் சேர்ப்பார்கள்?‘ என்றெல்லாம் நினைத்து வேதனைப்பட்டனர்.
உடல்கள் கிடந்த இடத்துக்கு அருகே இருந்த ஒரு வீட்டினர் இந்தக் காட்சிகளைப் பார்த்து மிகுந்த மன வேதனைப்பட்டனர். பொதுவாக விபத்தில் ஒருவர் நம் கண்களுக்கு நேராக இறந்தால், முகம் தெரியாதவர் என்றாலும், அவருக்காக நாம் அனுதாபப்படுவதில்லையா? அதுபோல்தான்!
சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அங்கே சைரன் ஒலியுடன் வந்தன. இறந்தவர்களையும் படுகாயம் அடைந்தவர்களையும் ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.
ஆம்புலன்ஸ்கள் செல்வதும் திரும்பி வருவதுமாக இருந்தது. அசம்பாவிதம் நடந்த இந்தக் குறிப்பிட்ட சில நேரம் மட்டும் மகாமகக் குளத்தில் பக்தர்கள் நீராடுவது நிறுத்தப்பட்டது.
ஒரு கட்டத்தில் ராஜேஸ்வரியின் உடல் மட்டும் அங்கே தனித்துக் காணப்பட்டது. ஏனைய உடல்கள் ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்டு விட்டன. அடுத்து ஆம்புலன்ஸ் வந்து ராஜேஸ்வரியை எடுத்துச் செல்ல வேண்டும்.
ராஜேஸ்வரியின் உடல் இருக்கும் அந்த வீட்டின் உரிமையாளரான அந்தணரும், அவரது மனைவியும் ராஜேஸ்வரியின் உடலைப் பார்த்து ஏகத்துக்கும் கலங்கினர். கண்ணீர் வடிய அழுதே தீர்த்தனர்.
காரணம் – ராஜேஸ்வரி பார்ப்பதற்கு சாட்சாத் மகாலட்சுமி போல் இருப்பார் என்று சொன்னேன் அல்லவா? தெய்வீகக் களை ததும்பும் முகம்.
‘அப்பேர்ப்பட்ட ஓர் உத்தமி – எந்த ஊரோ, எந்தக் குடும்பமோ என்கிற ஒரு தகவலும் தெரியாமல் இப்படி அநாதையாக நடுரோட்டில் கிடத்தப்பட்டிருக்கிறாரே?‘ என்று அந்த வீட்டு வாசலில் இருந்த கணவனும் மனைவியும் நா தழுதழுக்கப் பேசிக் கொண்டனர்.
ராஜேஸ்வரியின் உடலை ஆம்புலன்ஸ் வந்து எடுத்துச் செல்லும் என்று வாசலையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், பக்தர்களின் அபரிமிதமான கூட்டம் காரணமாக போன வண்டி இன்னும் உள்ளே வரவில்லை.
இந்த நிலையில், கணவனுக்கும் மனைவிக்கும் ஒரு விஷயம் தோன்றியது. அதாவது, இந்தப் பெண்மணியை – என்னதான் இறந்து விட்டதாகக் கருதப்பட்டாலும் அப்படியே நடு ரோட்டில் ரொம்ப நேரம் கிடத்தப்பட்டிருப்பது அவ்வளவு உசிதமாகப் படவில்லை அவர்களுக்கு. அப்போது மனைவி தன் கணவனைப் பார்த்துச் சொன்னாள்: ”ஏங்க… நாளைக்கு நம்ம வீட்டுலயே ஒருத்தர் இறந்து போனா இப்படி நடு ரோட்டுல ரொம்ப நேரம் போட்டு வெச்சிருந்தா அது போன்ற ஒரு காட்சியைப் பார்க்க முடியாது அல்லவா? எனவே, எனக்கு ஒண்ணு தோணுதுங்க…”
மனைவி சொல்ல வந்ததை – சொல்லத் தயங்குவதைக் கண்ட கணவன், ”சொல்லும்மா… நீ என்ன சொல்ல வந்தே?” என்று கேட்டான் கண்களில் நீருடன்.
”இந்தம்மாவை நாம ரெண்டு பேரும் தூக்கி நம்ம வீட்டு ரேழில (வாசல் கதவைத் தாண்டியதும் வரும் உள்பகுதி) போட்டு வைக்கலாமே… இந்தம்மா நிலையைப் பார்த்து என் மனசு ரொம்ப அடிச்சுக்குது. ஆம்புலன்ஸ் வருதோ, இவங்களை எடுத்திட்டுப் போக இவங்களோட உறவுகள் வருதோ… யார் வந்தாலும் அப்ப எடுத்திட்டுப் போகட்டும்ங்க” என்றாள்.
கணவனும் மறுப்பேதும் சொல்லாமல் அதற்கு முற்றிலும் உடன்பட்டான்.
அடுத்த விநாடியே கணவனும் மனைவியும் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். இருவரும் ஆகாசத்தைப் பார்த்து ‘கோவிந்தா… கோவிந்தா… கோவிந்தா‘ என்று இறைவனுடைய நாமங்களை முழங்கினார்கள்.
ராஜேஸ்வரியின் தலைப்பக்கத்தை இந்த வீட்டு அன்பர் பிடித்துக் கொள்ள… கால்மாட்டில் வீட்டு அன்பரின் மனைவி பிடிக்க… ராஜேஸ்வரியின் உடல் சாலையில் இருந்து ரேழிக்கு இடம் மாறியது.
ரேழியின் தரையில் ஒரு போர்வை விரிக்கப்பட்டு அதில் ராஜேஸ்வரியின் உடல் கிடத்தப்பட்டது.
அப்போதுதான் மனைவி தற்செயலாகப் பார்த்தார் – ராஜேஸ்வரியின் தோளில் ஒரு சிறு கைப்பை தொங்கிக் கொண்டிருந்தது.
”ஆகா… இதுல இவங்களோட விலாசம் இருக்குமே… இதைப் பார்த்து அவங்க வீட்டுக்குத் தகவல் சொல்லலாமே…” என்று கணவரிடம் சொல்லி, இறைவனை வணங்கி, கைப்பையை எடுத்தாள். பிரித்தாள்.
சிறு சிறு காகிதங்களாக ஏராளம் காணப்பட்டன. நிச்சயம் இதில் ஏதேனும் ஒன்றில் இவரது முகவரி இருக்கும் என்று நம்பிக்கையுடன் ஒவ்வொன்றாகப் பிரித்துப் பிரித்துப் பார்த்து அலசினாள்.
கிடைத்து விட்டது.
கணவனும் மனைவியுமாக எப்போதோ சேர்ந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம். அதன் கீழே நரசிம்மன் – ராஜேஸ்வரி என்று பெயர்கள் எழுதப்பட்டிருந்தது. கூடவே அந்தப் புகைப்படத்தின் ஒரு மூலையில் காஞ்சி ஸ்ரீமடத்தின் முகவரியும், தொலைபேசி எண்ணும் கிறுக்கலாகக் காணப்பட்டது.
‘ஓ… இறந்து கிடக்கும் இந்தப் பெண்மணி காஞ்சி காமகோடி மடத்தோடு தொடர்புடையவர் போலிருக்கிறது…. இவரது பெயர் ராஜேஸ்வரி… இவரது கணவர் பெயர் நரசிம்மன்‘ என்பதை எல்லாம் புரிந்து கொண்டனர்.
”ஏங்க… உடனே காஞ்சி ஸ்ரீமடத்துக்குத் தொடர்பு கொண்டு இந்தப் பெண்மணியோட கணவர் நரசிம்மனைக் கூப்பிட்டு இந்த சோகமான விஷயத்தைச் சொல்லிடலாம்” என்று கணவனிடம் சொன்னார் மனைவி.
உடனே வீட்டில் போன் இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தார் கணவன். போனைக் கையில் எடுத்தார். புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டிருந்த காஞ்சி ஸ்ரீமடத்தின் எண்ணை டயல் செய்தார்.
காஞ்சி ஸ்ரீமடத்தில் பணியில் இருக்கிற அன்பர் ஒருவர் போனை எடுத்தார். ”காஞ்சி சங்கர மடம்… சொல்லுங்கோ” என்றார்.
மகாமகக் குளத்தில் நடந்த சோகமான சம்பவம் எதிர்முனைக்குப் பக்குவமாகத் தெரிவிக்கப்பட்டது.
காஞ்சி மடத்தில் இருந்தபடி போனில் பேசிக் கொண்டிருந்தவர், ”யாரு… நரசிம்மனோட மனைவியா? ராஜேஸ்வரியா? மகாலட்சுமி சொரூபம் ஆச்சே அந்த மாமி… மடத்துக்கு வந்துட்டு கும்பகோணம் போறதா சொல்லிட்டுப் போனாளே? அட ஈஸ்வரா… நல்லவாளை எல்லாம் ஏன் இப்படி சோதனை பண்றே?” என்று குரல் கமற மூச்சு விடாமல் பேசியவர்… சட்டென்று நிதானத்துக்கு வந்தார்.
”சிரத்தையா நீங்க போன் பண்ணிச் சொல்லி இருக்கேள்… இதுக்கு இப்ப நன்றில்லாம் சொல்லப்படாது. சரி, இப்ப என்ன பண்ணப் போறேள்? மாமியோட ஒடம்பு அங்கேதான் இருக்கா?” என்று சன்னமான குரலில் கேட்டார் ஸ்ரீமடத்து அன்பர்.
கும்பகோணத்தில் இருந்து போனில் அழைத்தவர், ”ஆமா… இங்கதான் எங்க ஆத்துல இருக்கு. இவ்ளோ நல்ல ஆன்மாவுக்கு இப்படி ஒரு சோதனையானு அந்த மாமியோட முகத்தைப் பாக்கறப்பல்லாம் எங்களுக்கு சோகம் பிசையறது. ஒண்ணுமே புரியல… பகவானோட தீர்மானம் எதுவோ, அதுதான் எல்லா காலத்துலயும் இருக்கும்.
சரி, கவலைப்படாம ஆக வேண்டியதைப் பார்க்க ஏற்பாடு செய்யுங்கோ. மடத்துக்குத் தகவலைச் சொல்லிடுங்கோ. அந்த மாமியோட கணவர் நரசிம்மனுக்கும் மெள்ள பக்குவமாக விஷயத்தைச் சொல்லுங்கோ.
நாங்களே கும்பகோணத்துலேர்ந்து ஒரு ஆம்புலன்ஸ் வெச்சு மாமியோட ஒடம்பை பத்திரமா ஒடனே துணைக்கு ஆள் போட்டு அனுப்ப ஏற்பாடு பண்றோம்” என்று சொல்லி விட்டு கனத்த மனதுடன் போனை வைத்தார்.
கீழே ரேழியில் கிடத்தப்பட்டிருக்கும் ராஜேஸ்வரியின் உடலைப் பார்த்தாலே சோகம் பிடுங்கித் தின்றது இருவருக்கும்.
”ஏங்க… பாக்கறதுக்கு மகாலட்சுமி மாதிரி இருக்கிற இந்த சுமங்கலி இறந்துட்டா அப்படீங்கறதை என்னால நம்பவே முடியலை. ஏதோ ஆழ்ந்த தூக்கத்துல இருக்கிற மாதிரிதான் எனக்குப் படறது. ஆனா, இது நிரந்தர தூக்கமா போயிடுத்தே” என்று சொன்ன மனைவி, வாய் விட்டுக் கதறவும் செய்தார்.
எழுதப்பட்டிருந்தது. கூடவே அந்தப் புகைப்படத்தின் ஒரு மூலையில் காஞ்சி ஸ்ரீமடத்தின் முகவரியும், தொலைபேசி எண்ணும் கிறுக்கலாகக் காணப்பட்டது.
‘ஓ… இறந்து கிடக்கும் இந்தப் பெண்மணி காஞ்சி காமகோடி மடத்தோடு தொடர்புடையவர் போலிருக்கிறது…. இவரது பெயர் ராஜேஸ்வரி… இவரது கணவர் பெயர் நரசிம்மன்‘ என்பதை எல்லாம் புரிந்து கொண்டனர்.
”ஏங்க… உடனே காஞ்சி ஸ்ரீமடத்துக்குத் தொடர்பு கொண்டு இந்தப் பெண்மணியோட கணவர் நரசிம்மனைக் கூப்பிட்டு இந்த சோகமான விஷயத்தைச் சொல்லிடலாம்” என்று கணவனிடம் சொன்னார் மனைவி.
உடனே வீட்டில் போன் இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தார் கணவன். போனைக் கையில் எடுத்தார். புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டிருந்த காஞ்சி ஸ்ரீமடத்தின் எண்ணை டயல் செய்தார்.
காஞ்சி ஸ்ரீமடத்தில் பணியில் இருக்கிற அன்பர் ஒருவர் போனை எடுத்தார். ”காஞ்சி சங்கர மடம்… சொல்லுங்கோ” என்றார்.
மகாமகக் குளத்தில் நடந்த சோகமான சம்பவம் எதிர்முனைக்குப் பக்குவமாகத் தெரிவிக்கப்பட்டது.
காஞ்சி மடத்தில் இருந்தபடி போனில் பேசிக் கொண்டிருந்தவர், ”யாரு… நரசிம்மனோட மனைவியா? ராஜேஸ்வரியா? மகாலட்சுமி சொரூபம் ஆச்சே அந்த மாமி… மடத்துக்கு வந்துட்டு கும்பகோணம் போறதா சொல்லிட்டுப் போனாளே? அட ஈஸ்வரா… நல்லவாளை எல்லாம் ஏன் இப்படி சோதனை பண்றே?” என்று குரல் கமற மூச்சு விடாமல் பேசியவர்… சட்டென்று நிதானத்துக்கு வந்தார்.
”சிரத்தையா நீங்க போன் பண்ணிச் சொல்லி இருக்கேள்… இதுக்கு இப்ப நன்றில்லாம் சொல்லப்படாது. சரி, இப்ப என்ன பண்ணப் போறேள்? மாமியோட ஒடம்பு அங்கேதான் இருக்கா?” என்று சன்னமான குரலில் கேட்டார் ஸ்ரீமடத்து அன்பர்.
கும்பகோணத்தில் இருந்து போனில் அழைத்தவர், ”ஆமா… இங்கதான் எங்க ஆத்துல இருக்கு. இவ்ளோ நல்ல ஆன்மாவுக்கு இப்படி ஒரு சோதனையானு அந்த மாமியோட முகத்தைப் பாக்கறப்பல்லாம் எங்களுக்கு சோகம் பிசையறது. ஒண்ணுமே புரியல… பகவானோட தீர்மானம் எதுவோ, அதுதான் எல்லா காலத்துலயும் இருக்கும்.
சரி, கவலைப்படாம ஆக வேண்டியதைப் பார்க்க ஏற்பாடு செய்யுங்கோ. மடத்துக்குத் தகவலைச் சொல்லிடுங்கோ. அந்த மாமியோட கணவர் நரசிம்மனுக்கும் மெள்ள பக்குவமாக விஷயத்தைச் சொல்லுங்கோ.
நாங்களே கும்பகோணத்துலேர்ந்து ஒரு ஆம்புலன்ஸ் வெச்சு மாமியோட ஒடம்பை பத்திரமா ஒடனே துணைக்கு ஆள் போட்டு அனுப்ப ஏற்பாடு பண்றோம்” என்று சொல்லி விட்டு கனத்த மனதுடன் போனை வைத்தார்.
கீழே ரேழியில் கிடத்தப்பட்டிருக்கும் ராஜேஸ்வரியின் உடலைப் பார்த்தாலே சோகம் பிடுங்கித் தின்றது இருவருக்கும்.
”ஏங்க… பாக்கறதுக்கு மகாலட்சுமி மாதிரி இருக்கிற இந்த சுமங்கலி இறந்துட்டா அப்படீங்கறதை என்னால நம்பவே முடியலை. ஏதோ ஆழ்ந்த தூக்கத்துல இருக்கிற மாதிரிதான் எனக்குப் படறது. ஆனா, இது நிரந்தர தூக்கமா போயிடுத்தே” என்று சொன்ன மனைவி, வாய் விட்டுக் கதறவும் செய்தார்.
கணவர் மேல்துண்டை தன் வாயில் பொத்திக் கொண்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்தார்.
”சரிங்க… மடத்துக்கு போன் போட்டு விஷயத்தைச் சொல்லியாச்சு… அடுத்து நம்ம சைடுல நடக்க வேண்டிய காரியத்தை நாம மளமளன்னு செய்யணும். ஒடனே ஒரு ஆம்புலன்ஸுக்கு ஏற்பாடு பண்ணுங்கோ. பாவம், இந்த மாமியோட வீட்டைச் சேர்ந்தவால்லாம் அடுத்து என்ன பண்ணறதுன்னு அங்கே யோசிச்சுண்டு இருப்பா. சட்டுன்னு அனுப்பிடணும். நம்மளால ஒரு தாமதம் வந்துடக் கூடாது” என்று கணவரிடம் சொன்னாள் அந்தக் குடும்பத் தலைவி.
ஆம்புலன்ஸுக்குத் தகவல் சொல்வதற்காக போன் அருகே சென்றார் குடும்பத் தலைவர்.
இதே வேளையில் அப்படியே காஞ்சி ஸ்ரீமடத்தில் நடக்கும் காட்சிகளையும் பார்ப்போமா?
ஸ்ரீமடத்தில் முக்கியமான கணக்கு வழக்குகளை அந்தப் பகல் வேளையில் பார்த்துக் கொண்டிருந்த நரசிம்மனுக்கு ரொம்ப பக்குவமாக இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவ்வளவுதான்… அதுவரை மடத்துச் செயல்பாடுகள் ஆகட்டும்… தன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட நிகழ்வாக இருக்கட்டும்… எதற்குமே கலங்காமல் இருந்த நரசிம்மன் ஓவென்று பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்து விட்டார். ‘இடிபாடுகளில் சிக்கி ராஜேஸ்வரி இறந்து விட்டார்… கும்பகோணத்தில் இருந்து அவரது உடல் ஆம்புலன்ஸில் காஞ்சிக்கு வர இருக்கிறது‘ என்ற தகவல் பேரிடியாகத் தாக்கி விட்டது.
தான் பணி புரிந்த இருக்கையிலேயே கைகளைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு திக்பிரமை பிடித்தது மாதிரி உட்கார்ந்து விட்டார் நரசிம்மன். அருகில் இருந்த ஸ்ரீமடத்துச் சிப்பந்திகள் மெள்ள அவரைத் தேற்ற முற்பட்டனர்.
எப்போதும் மஞ்சளும் குங்குமமுமாகத் தன் முன்னால் சிரித்த முகத்துடன் வளைய வளைய வந்து கொண்டிருக்கும் ராஜேஸ்வரி அதே கோலத்தில் நரசிம்மனின் நினைவுகளில் மெள்ள மெள்ள வந்து போனாள்.
தன்னைத் தானே தேற்றிக் கொண்டு தரையில் கையை ஊன்றி எழுந்தார்.
வயது முதிர்ச்சியின் காரணமாக மகா பெரியவா அப்போது ஸ்ரீமடத்திலேயேதான் இருந்தார். எங்கும் வெளியில் செல்வதில்லை.
நேராக மகா பெரியவா இருக்கும் திருச்சந்நிதிக்குச் சென்றார். ஓவென்று அழுதபடி அவருக்கு ஒரு நமஸ்காரத்தைச் செய்து விட்டு கைகளைக் கூப்பியபடி எழுந்து நின்றார்.
ஒன்றும் புரியாத ஒரு கேள்விக்குறியுடன் நரசிம்மனையும் அவருடன் வந்து நின்றவர்களையும் பார்த்தார் மகா பெரியவா.
பிறகு, தன் தீர்க்கமான பார்வையை நரசிம்மன் மீது திருப்பி, ‘என்னாச்சு?‘ என்பது போல் வலக்கையை அசைத்துக் கேட்டார்.
”பெரியவா… ராஜேஸ்வரி என்னை விட்டுட்டுப் போயிட்டா££££…” என்று சொன்னவர், ”கும்பகோணம் மகாமகத்துக்குக் குளிக்கப் போனவ, இப்ப சடலமா ஆம்புலன்ஸ்ல வரப் போறாளாம் பெரியவா… நானும் அவளும் யாருக்கு என்ன துரோகம் பண்ணோம் பெரியவா… ஒங்களுக்கு சேவை பண்றதையே பெரும் பாக்கியமா நினைச்சுண்டு வாழ்ந்தோமே… இப்ப எனக்கு வந்திருக்கிற இந்த சோகத்தைத் தாங்க முடியலையே பெரியவா… தாங்க முடியலை…” என்று கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டு அழ ஆரம்பித்தார் நரசிம்மன்.
‘நரசிம்மனின் இந்த சோகத்துக்கு மகா பெரியவா என்ன பதில் சொல்லப் போகிறார்… எப்படி ஆறுதல்படுத்தப் போகிறார்?‘ என்று சிஷ்யகோடிகள் அனைவரும் பயபக்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
கலியுக தெய்வமான அந்தப் பரப்பிரம்மம், நரசிம்மனைக் கூர்ந்து பார்த்தது.
இந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம்?
எவருக்கும் புரியவில்லை.
பேரமைதி என்று சொல்வோமே… அப்படி ஒரு அமைதி இந்தத் திருச்சந்நிதியில்.
இரண்டு மூன்று நிமிடங்கள் கடந்திருக்கும்.
நரசிம்மனைப் பார்த்துக் கலியுக தெய்வம் ஒரு புன்னகை புரிந்தது.
நரசிம்மனுக்குப் புரியவில்லை – ‘சோகமான ஒரு விஷயத்தை நாம் சொல்லி இருக்கிறோம்… ஆனால், மகா பெரியவா நம்மைப் பார்த்துப் புன்னகைக்கிறாரே?‘ என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்தார்.
நரசிம்மனின் குழப்பதைப் பார்த்த மகா பெரியவா பெரும் சிரிப்பு சிரித்தார்.
நரசிம்மன் மட்டுமல்ல… அங்கே கூடி இருந்த சிப்பந்திகளும் ஒரு கணம் குழம்பினர்.
ஒரு துக்கச் செய்தியை நரசிம்மன் சொன்னதற்கு, இதுதான் பதிலா? மகா பெரியவா என்ன சொல்ல வருகிறார்? ஒன்றும் புரியவில்லையே என்று கூடி இருந்தோர் தவித்தனர்.
நரசிம்மன், ”பெரியவா… நாங்கல்லாம் ஒங்களைத்தான் சர்வேஸ்வரனாவும், பராசக்தியாவும் நெனச்சிண்டிருக்கோம். எங்களுக்கு எல்லாமே நீங்கதான். ஒங்களோட அனுக்ரஹம் எங்களுக்குக் கிடைச்சாலே போதும். என்னோட துக்கத்தை எப்படி தாங்கிக்கறதுன்னு தெரியலை. நீங்கதான் எனக்கு அந்த சக்தியைக் குடுக்கணும்” என்றார்.
மகா பெரியவா மெள்ள திருவாய் மலர்ந்தார். ”எதுடா துக்கம்? ராஜேஸ்வரி உயிரோட கும்மோணத்துல இருக்காளே… அது ஒனக்கு துக்கமா?” என்று ஒரு கேள்வியக் கேட்டு மீண்டும் சிரித்தார்.
நரசிம்மனுக்கு ஒன்றும் புரியவில்லை. பெரியவா சொல்ல வருவதன் அர்த்தம் அவருக்கு விளங்கவில்லை.
”பெரியவா… என்ன சொல்ல வரேள்? என்னோட ராஜேஸ்வரி… என்னோட ராஜேஸ்வரி… உயிரோட இருக்காளா கும்பகோணத்துல? செத்துட்டாள்னு போன் வந்ததே… ரேழில போட்டிருக்கானு சொன்னாளே… ஆம்புலன்ஸ்ல ஏத்தி அனுப்பறோம்னு முகம் தெரியாத யாரோ சோகம் கப்பின குரல்ல சொன்னாளே… அத்தனையும் நிஜம் இல்லையா பெரியவா? என் தெய்வமே… சர்வேஸ்வரா… சொல்லுங்கோ பெரியவா” என்று நடமாடும் தெய்வத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டு அவருக்கு ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். அவரது திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
”ஏண்டா… உயிரோட இருக்கறவாளை செத்துட்டாள்னு சொன்னா எப்படிடா? ராஜேஸ்வரி பத்திரமா இருக்காடா… இன்னிக்கு ராத்திரிக்குள்ள இங்க வந்துடுவா!”
– உலகத்தின் சகல இயக்கங்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் அந்த தெய்வம் சிரித்துக் கொண்டே இயல்பாகச் சொன்னது.
நரசிம்மன் உட்பட சிப்பந்திகள் அனைவரும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்படியே கும்பகோணத்துக்குப் போய் வருவோமா?
ராஜேஸ்வரியின் உடலைப் பத்திரமாகப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் அந்தத் தம்பதியரின் வீட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பார்க்கலாமா?
‘ராஜேஸ்வரியின் உடலை பத்திரமாக காஞ்சிபுரம் அனுப்ப வேண்டுமே… அங்கு இவரது கணவர் நரசிம்மன் போன்றோர் சோகத்துடன் காத்திருப்பார்களே‘ என்றெல்லாம் நினைத்து கும்பகோணத்தில் தன் இல்லத்தில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருந்தார், குடும்பத் தலைவர்.
அவ்வப்போது இவரது மனைவியும், ஆம்புலன்ஸ் வருகிறதா என்று அடிக்கடி வாசலுக்குப் போய்க் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
மகாலட்சுமி சொரூபமாக விளங்கக் கூடிய ராஜேஸ்வரி, பாவம், யாரும் அற்றவர் போல் ரேழியில் கிடத்தப்பட்டிருந்தார்.
நடந்து முடிந்த இந்த மிகப் பெரிய சோகத்துக்குப் பின் மகாமகக் குளம் மெள்ள இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஒரு சில நிமிடத் துளிகளில் என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டுமோ, அனைத்தையும் செய்து முடித்தனர் வேத பண்டிதர்கள்.
குளத்தின் படிக்கட்டுகளிலும், சாலைகளில் நீண்ட வரிசையிலும் நீராடுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிற பக்தகோடிகளை மீண்டும் குளத்துக்குள் வெகு ஜாக்கிரதையாக அனுப்பிக் கொண்டிருந்தனர் காவல்துறையினர்.
ராஜேஸ்வரியின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் இன்னமும் வந்து சேரவில்லை.
எந்த ஒரு தாமதமும் நல்லனவற்றுக்கே! மனித மனம் இதை உணர மறுக்கிறது.
குளக்கரையை ஒட்டிய இந்த இல்லத்தில் ஒரு திடீர் அற்புதம்.
ராஜேஸ்வரியைத் தூக்கிச் செல்ல இன்னும் ஆம்புலன்ஸ் வரவில்லை. ஆனால், அதற்குள் காஞ்சியில் வீற்றிருக்கிற கருணைக் கடவுள், நடமாடும் தெய்வம் இங்கே ஒரு அதிசயத்தை நிகழ்த்தினார். தன்னை வணங்குகிற பக்தர்களை எந்நாளிலும் ஏமாற்ற மாட்டேன் என்பதை மீண்டும் நிரூபிப்பது போல் இந்த அற்புதம் இங்கே அரங்கேறியது என்று சொல்லலாம்!
இறந்து கிடப்பதாகச் சொல்லப்படும் ஓர் அன்பரின் உடலில் இருந்து அசைவுகள் தென்பட்டால், அங்கிருக்கும் மற்றவர்களது ரியாக்ஷன் எப்படி இருக்கும்?!
ஆம்! திடீரென்று ராஜேஸ்வரியின் கைகளும் கால்களும் மெள்ள அசைந்தன. உதடுகள் அசைந்தன.
ஆம்புலன்ஸ் வண்டியை எதிர்பார்த்து வீட்டு வாசலில் நின்றிருந்த தம்பதியர், முதலில் இதைக் கவனிக்கவில்லை.
யதேச்சையாக வீட்டு உரிமையாளரான அந்தணரின் மனைவிதான் கவனித்தாள். அதிர்ந்தாள்.
கை, கால்களில் அசைவு! தலை அசைகிறது.
‘இத்தனை பேர் பலியானார்கள் என்று சொல்லி விட்டு அனைவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்று அடுத்தடுத்த காரியங்களையும் ஆரம்பிச்சாச்சு… இங்கே ராஜேஸ்வரியின் உடலில் அசைவுகள் தெரிகின்றனவே‘ என்று பிரமித்த மனைவி, வாசலில் ஆம்புலன்ஸை எதிர்பார்த்துக் காத்திருந்த கணவனை அவசரம் அவசரமாக அழைத்தாள்.
என்னவோ ஏதோவென்று கணவர் ஓடி வந்தார். ”குளிக்கறதுக்குக் கூட்டம் திரும்ப சேர்ந்துட்டதால, ஆம்புலன்ஸ் உள்ளே புகுந்து வர்றதில் கொஞ்சம் சிக்கல் இருக்கு போலிருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும்மா. எனக்கும் அதே தவிப்பாதான் இருக்கு” என்றார் மனைவியைப் பார்த்து.
”ஏங்க, அதுக்காக நான் உங்களைக் கூப்பிடலைங்க… உள்ளே இருக்கிற ராஜேஸ்வரியோட உடல் அசைய ஆரம்பிக்குது. பாக்கவே சந்தோஷமா இருக்கு. அந்தம்மா உசிரோட இருக்காங்க… ஏதோ அவசரப்பட்டு இறந்தவங்க லிஸ்ட்டுல அவங்களையும் சேர்த்துட்டாங்க போலிருக்கு. கொஞ்சம் உள்ளே ஓடி வாங்க…” என்று பரபரத்தாள்.
கணவருக்கு ஆச்சரியம். ”என்ன சொல்றே நீ?”
”ஆமாங்க… மொதல்ல உள்ள வாங்க… பெருமாளோட லீலைகள்ல இதுவும் ஒண்ணு போலிருக்கு. இந்தம்மா காஞ்சி மடத்தோட பக்தை அல்லவா… இவா வணங்கற மகா பெரியவாளும் ஆயுளை நீட்டிச்சுக் கொடுத்திட்டா” என்று கணவனின் கையைப் பிடித்துக் கொண்டு ரேழியில் வந்து நின்றாள்.
ராஜேஸ்வரியின் உடல் இருந்த இடத்தைப் பார்த்த குடும்பத் தலைவருக்கு வியப்பு தாங்க முடியவில்லை.
ஆம்! ராஜேஸ்வரியின் உடலில் மெள்ள மெள்ள அசைவுகள்.
”ஆமாம்டீ… இந்த மாமி உயிரோடதான் இருக்கா… பெருமாளே… நாம அவசரப்பட்டு ஏதேனும் அபசாரம் பண்ணிட்டோமா… உயிரோட இருக்கிறவாளை செத்துப் போனதா சொல்லிப் போட்டுட்டுப் போயிட்டாளே… நானும் இதை அப்படியே நம்பி இவாளோட கணவருக்குத் தகவல் சொல்லிட்டேனே…” என்று புலம்பியவர், ராஜேஸ்வரியின் உடலுக்கு அருகில் தரையில் அமர்ந்தார்.
ராஜேஸ்வரியின் முகத்தை உற்றுப் பார்த்தார். மனைவியைப் பார்த்து, தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்.
இறந்து கிடப்பதாகச் சொல்லப்படும் ஓர் அன்பரின் உடலில் இருந்து அசைவுகள் தென்பட்டால், அங்கிருக்கும் மற்றவர்களது ரியாக்ஷன் எப்படி இருக்கும்?!
ஆம்! திடீரென்று ராஜேஸ்வரியின் கைகளும் கால்களும் மெள்ள அசைந்தன. உதடுகள் அசைந்தன.
ஆம்புலன்ஸ் வண்டியை எதிர்பார்த்து வீட்டு வாசலில் நின்றிருந்த தம்பதியர், முதலில் இதைக் கவனிக்கவில்லை.
யதேச்சையாக வீட்டு உரிமையாளரான அந்தணரின் மனைவிதான் கவனித்தாள். அதிர்ந்தாள்.
கை, கால்களில் அசைவு! தலை அசைகிறது.
‘இத்தனை பேர் பலியானார்கள் என்று சொல்லி விட்டு அனைவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்று அடுத்தடுத்த காரியங்களையும் ஆரம்பிச்சாச்சு… இங்கே ராஜேஸ்வரியின் உடலில் அசைவுகள் தெரிகின்றனவே‘ என்று பிரமித்த மனைவி, வாசலில் ஆம்புலன்ஸை எதிர்பார்த்துக் காத்திருந்த கணவனை அவசரம் அவசரமாக அழைத்தாள்.
என்னவோ ஏதோவென்று கணவர் ஓடி வந்தார். ”குளிக்கறதுக்குக் கூட்டம் திரும்ப சேர்ந்துட்டதால, ஆம்புலன்ஸ் உள்ளே புகுந்து வர்றதில் கொஞ்சம் சிக்கல் இருக்கு போலிருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும்மா. எனக்கும் அதே தவிப்பாதான் இருக்கு” என்றார் மனைவியைப் பார்த்து.
”ஏங்க, அதுக்காக நான் உங்களைக் கூப்பிடலைங்க… உள்ளே இருக்கிற ராஜேஸ்வரியோட உடல் அசைய ஆரம்பிக்குது. பாக்கவே சந்தோஷமா இருக்கு. அந்தம்மா உசிரோட இருக்காங்க… ஏதோ அவசரப்பட்டு இறந்தவங்க லிஸ்ட்டுல அவங்களையும் சேர்த்துட்டாங்க போலிருக்கு. கொஞ்சம் உள்ளே ஓடி வாங்க…” என்று பரபரத்தாள்.
கணவருக்கு ஆச்சரியம். ”என்ன சொல்றே நீ?”
”ஆமாங்க… மொதல்ல உள்ள வாங்க… பெருமாளோட லீலைகள்ல இதுவும் ஒண்ணு போலிருக்கு. இந்தம்மா காஞ்சி மடத்தோட பக்தை அல்லவா… இவா வணங்கற மகா பெரியவாளும் ஆயுளை நீட்டிச்சுக் கொடுத்திட்டா” என்று கணவனின் கையைப் பிடித்துக் கொண்டு ரேழியில் வந்து நின்றாள்.
ராஜேஸ்வரியின் உடல் இருந்த இடத்தைப் பார்த்த குடும்பத் தலைவருக்கு வியப்பு தாங்க முடியவில்லை.
ஆம்! ராஜேஸ்வரியின் உடலில் மெள்ள மெள்ள அசைவுகள்.
”ஆமாம்டீ… இந்த மாமி உயிரோடதான் இருக்கா… பெருமாளே… நாம அவசரப்பட்டு ஏதேனும் அபசாரம் பண்ணிட்டோமா… உயிரோட இருக்கிறவாளை செத்துப் போனதா சொல்லிப் போட்டுட்டுப் போயிட்டாளே… நானும் இதை அப்படியே நம்பி இவாளோட கணவருக்குத் தகவல் சொல்லிட்டேனே…” என்று புலம்பியவர், ராஜேஸ்வரியின் உடலுக்கு அருகில் தரையில் அமர்ந்தார்.
ராஜேஸ்வரியின் முகத்தை உற்றுப் பார்த்தார். மனைவியைப் பார்த்து, தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்.
தண்ணீர் கொண்டு வந்தாள் மனைவி. அதை வாங்கி, சிறிது சிறிதாக ராஜேஸ்வரியின் முகத்தில் தெளித்தார் குடும்பத் தலைவர்.
அடுத்த ஒரு சில விநாடிகளில் – அனைவரும் வியக்கத்தக்க வகையில் மெள்ள சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்தார் ராஜேஸ்வரி.
ஒரு நிமிஷம்… ‘ராஜேஸ்வரி எழுந்து உட்கார்ந்து விட்டார்‘ என்பதை வரை பார்த்து விட்டோம். மகா பெரியவாளின் பூரண அனுக்ரஹம் பெற்ற அவருக்கு மறுஜன்மம் கிடைத்து விட்டது.
இந்த இடத்தில் ஒரே ஒரு விஷயத்தை யோசியுங்கள்…
இறந்ததாகக் கருதப்பட்டவர் எழுந்து உட்கார்ந்தார் என்று ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக எப்போதாவது படித்திருக்கிறோம்… கேள்விப்பட்டிருக்கிறோம்… இல்லியா?
இதெல்லாம் எப்படி சாத்தியம்?
‘சர்வ புலன்களும் அடங்கி விட்டது… இயக்கம் அனைத்தும் நின்று விட்டது. இவர் இறந்து விட்டார்‘ என்பதை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்த பின்தான் சம்பந்தப்பட்ட மருத்துவமனையோ, மருத்துவர்களோ அறிவிக்கிறார்கள். ஆனால், அதையும் மீறி இறந்ததாகக் கருதப்பட்டவர் எழுந்து உட்கார்வதெல்லாம்…..?
குருவருளும் திருவருளும் ஒன்று கூடினால் மட்டுமே இது போன்ற ஆச்சரியங்களும் அதிசயங்களும் நம் கண்களுக்கு முன்னால் அரங்கேறும்.
ராஜேஸ்வரிக்கு எப்பேர்ப்பட்ட அருள் வாய்த்திருக்கிறது! மகா பெரியவாளின் பரிபூரண ஆசிர்வாதம் இவருக்கு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள இதை விட என்ன வேண்டும்?!
ராஜேஸ்வரிக்கு இருந்தது போன்ற குருபக்தி அனைவருக்கும் வாய்க்க வேண்டும்.
காஞ்சியில் ராஜேஸ்வரியின் கணவர் நரசிம்மன், ‘மனைவியின் உடல் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் வரும் என்று மகா பெரியவாளிடம் போய் புலம்பியபோது, ‘யாருடா சொன்னா… அவ உயிரோட இருக்காடா‘ என்று சொன்னாரே… என்னே ஒரு ஞான திருஷ்டி… தபஸ் வலிமை!
முகத்தில் தண்ணீர் தெளித்து, தன்னை ஆசுவாசப்படுத்தியதும் தான் எங்கு இருக்கிறோம், என்ன நிலையில் இருக்கிறோம் என்பது புரியாமல் எழுந்து உட்கார்ந்தார் ராஜேஸ்வரி.
முகத்தில் ஓரளவு தெளிவுடன் அந்த வீட்டையே சுற்றிச் சுற்றிப் பார்த்தாள் ராஜேஸ்வரி. அந்த இல்லத்தில் குடும்பத் தலைவரையும், அவரது அருகே இருந்த மனைவியையும் பார்த்தார். உடலெங்கும் இனம் புரியாத ஒரு வலி எடுத்தது ராஜேஸ்வரிக்கு. ஆங்காங்கே சிராய்ப்புகள். ஊமைக் காயங்கள்.
ஒன்றும் புரியாத நிலையில் ராஜேஸ்வரியின் குழப்பமான முகத்தைப் பார்த்த தம்பதியர், ஆறுதலாக அவரைப் பார்த்துப் புன்னகைத்தனர்.
”நீங்கள்லாம் யாருன்னு தெரியலியே… என்னை ஒடனே காஞ்சிபுரம் கொண்டு போங்கோ… மகா பெரியவாகிட்ட கொண்டு போய் என்னை விட்டுடுங்கோ. எனக்கு ஒடம்பு முடியல.” – இதுதான் ராஜேஸ்வரி முதலில் பேசியது.
குடும்பத் தலைவர் சொன்னார்: ”கவலைப்படாதீங்கோ… ஒங்களை பத்திரமா கொண்டு போய் காஞ்சியில சேர்க்கறோம்… அதுவரைக்கும் பதட்டப்படாம இருங்கோ… ஒங்களுக்கு உடம்பெல்லாம் அவஸ்தையா இருக்கும். அதெல்லாம் சரி ஆகணும். அப்பதான் நீங்க பத்திரமா காஞ்சிபுரம் பயணிக்க முடியும்.”
கணவரைப் பார்த்து வெந்நீர் போடச் சொன்னார் மனைவி. அடுப்படி ஓடினார் கணவர். அதன் பின் ராஜேஸ்வரிக்கு ஒத்தடம் கொடுப்பதற்கு உண்டான ஆயத்தங்களை மேற்கொண்டார் மனைவி.
வெந்நீர் வந்தது. ஒரு வெள்ளை காட்டன் துணியைக் கொதிக்கின்ற நீரில் நனைத்து ஒத்தடம் கொடுக்கும்போதுதான் தெரிந்தது – எந்தெந்த இடத்திலெல்லாம் ராஜேஸ்வரிக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது என்பது.
என்னே ஒரு பரிவு… இவர்களைப் போன்ற தம்பதியர் லோகத்தில் இருக்கின்ற வரை மனித நேயமும் சாகாது… மழை பொழிவதும் குறையாது.
ஒவ்வொரு இடமாக ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தபோதுதான் அந்தக் காட்சியைப் பார்த்து மயக்கமே வந்தது மனைவிக்கு.
ராஜேஸ்வரியின் கால் முட்டிக்கு அருகே ஓரிடத்தில் உள்ளே இருக்க வேண்டிய எலும்பு ஒரு துளை போட்டுக் கொண்டு மெள்ள வெளியே துருத்திக் கொண்டிருந்த காட்சியைக் காண நேர்ந்தது. என்ன ஒரு கோரம்! ஆனால், இந்த வலி, வேதனையை எல்லாம் மகா பெரியவாளை நினைத்தபடி பொறுமையுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறாள்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது.
மெள்ளக் கைதாங்கலாக ராஜேஸ்வரியைப் பிடித்துக் கூட்டி வந்தார்கள். குடும்பத் தலைவரும் அவரது மனைவியும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள் – காஞ்சிபுரம் வரை நாங்களும் உங்களுடன் துணைக்கு வருகிறோம் என்று.
ஆனால், ராஜேஸ்வரி, ”வேண்டாம் வேண்டாம்… என்னை ஏத்தி விட்டாச்சுன்னா, காஞ்சிபுரம் போய்த்தான் இறங்கப் போறேன். மகாமகம்ங்கிறதால உங்களுக்குத் தெரிஞ்சவால்லாம் ஆசுவாசப்படுத்திக்க உங்க வீட்டுக்கு வருவா… நீங்க இங்கே வேலையைப் பாருங்கோ. என்னை மகா பெரியவா பாத்துப்பா” என்று உடைந்த குரலோடு சொல்லி, அவர்களின் செயலுக்கு கைகளைக் கூப்பி நன்றியும் சொன்னாள்.
பத்திரமாக காரில் ராஜேஸ்வரியை ஏற்றி விட்டார்கள்.
கும்பகோணத்தில் புறப்பட்ட கார் எங்கும் நிற்காமல் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தபோது இரவு சுமார் 8 மணி இருக்கும்.
நரசிம்மனும் ஸ்ரீமடத்துப் பணியாளர்களும் மாலையில் இருந்தே வாசலில் காத்துக் கொண்டு இருந்தனர் – ‘ராஜேஸ்வரி எப்போது வருவாளோ? அவள் எந்த நிலையில் இருக்கின்றாளோ?‘ என்கிற பரிதவிப்புடன்.
கார் வந்து நின்றதும், கண்களில் கொப்பளிக்கும் நீருடன் காரின் கதவைத் திறந்தார் நரசிம்மன்.
மெள்ளக் கைகொடுத்து ராஜேஸ்வரியைக் கீழே இறங்க உதவி செய்தார்.
வெகு நேரம் காரிலேயே சற்றும் அசையாமல் பயணித்து வந்திருக்கிறாள் ராஜேஸ்வரி. தொடர்ந்து அமர்ந்து வந்த காரணத்தால், தரையில் ராஜேஸ்வரி கால் வைத்த உடனே அவளால் வலியைத் தாங்க முடியவில்லை.
தன்னைப் பார்க்கக் கூடி இருக்கும் ஸ்ரீமடத்து சிப்பந்திகள் கும்பலில் கணவர் நரசிம்மனை ராஜேஸ்வரியின் கண்கள் தேடின.
உடைந்த கண்களுடன் தன்னை வரவேற்கக் காத்திருக்கும் நரசிம்மனைக் கண்டதும், ராஜேஸ்வரி ஆனந்தப் பெருக்கில் அழ ஆரம்பித்து விட்டாள்.
”ராஜேஸ்வரி… ராஜேஸ்வரி…” என்று ஓடிப் போய் மனைவியை அன்புடன் அணைத்துக் கொண்டார் நரசிம்மன்.
பிறகு, ”எல்லாம் மகா பெரியவா கிருபை ராஜேஸ்வரி… ஒனக்கு என்னமோ ஒரு மறுஜன்மத்தைத்தான் அவரு குடுத்திருக்கார். வா, வா… மெதுவா, அடியை எடுத்து வெச்சு வா. நாமல்லாம் கும்பிடுற அந்த நடமாடும் தெய்வம் ‘ராஜேஸ்வரி வந்தாச்சா… ராஜேஸ்வரி வந்தாச்சா?‘னு உள்ளே கேட்டுண்டே இருக்கு…” என்று தேம்பித் தேம்பிச் சொன்ன நரசிம்மன், ராஜேஸ்வரியின் கையைப் பிடித்துக் கொண்டு ஸ்ரீமடத்தினுள் அழைத்துச் சென்றார்.
எவ்வளவோ கட்டுப்படுத்தியும் முடியாமல், தன் விழிகளில் சுரக்கும் கண்ணீரை வலது ஆட்காட்டி விரலால் மெள்ளத் துடைத்துக் கொண்டு, கணவருடன் உள்ளே சென்றாள் ராஜேஸ்வரி.
காஞ்சி ஸ்ரீசங்கர மடத்தின் வாசல் படியில் காலடி எடுத்து வைத்ததும் எப்படித்தான் அப்படி ஒரு உற்சாகம் ராஜேஸ்வரியைத் தொற்றிக் கொண்டதோ, தெரியவில்லை. ”மகா பெரியவா… மகா பெரியவா” என்று அவரது திருநாமத்தைத் தடை இல்லாமல் ஜபித்தபடி ஸ்ரீமடத்தினுள் நுழைந்தாள். நடந்தாள்.
முதுமையின் காரணமாக ஒரு பெரிய ஆசனத்தில் மகா பெரியவா சாய்ந்து பரமேஸ்வர சொரூபமாக அமர்ந்திருக்க… அவருக்கு இரு பக்கத்திலும் கைங்கர்யம் செய்து வரும் தொண்டர்கள் கர்மமே கண்ணாகக் காணப்பட்டனர்.
சவுக்குகளால் ஆன ஒரு தடுப்பைத் தாண்டி ஒரு சில பக்தர்கள் உட்கார்ந்திருந்தனர். காணக் கிடைக்காத தெய்வத்தை– கலியுகத் தெய்வத்தைக் கண்ணாரக் கண்டு வணங்கிக் கொண்டிருந்தனர்.
மகா பெரியவா வீற்றிருக்கிற திருச்சந்நிதிக்குள் ராஜேஸ்வரி சிரமப்பட்டு நுழைந்ததும், ”பெரியவா££…” என்று பெரும் குரல் எடுத்துத் தேம்பியபடி நடமாடும் தெய்வத்தை நோக்கி வேகமாக அடி எடுத்து வைத்து நடந்தாள்.
தடுப்புக்கு அருகே – பருமனான ஒரு சவுக்குக் கட்டையை ஆதரவாகப் பற்றிக் கொண்டு மகா பெரியவாளைக் கண்ணீர் மல்கப் பார்த்தாள். பிறகு, இரு கரம் கூப்பி வணங்கினாள்.
தன் வலக் கையை மெள்ள உயர்த்தி, ராஜேஸ்வரியை நேருக்கு நேராகப் பார்த்து ஆசிர்வதித்தார் மகா பெரியவா.
இறந்ததாகக் கருதப்பட்ட ராஜேஸ்வரியை உயிர்ப்பித்ததோடு மட்டுமல்ல… அடுத்து ஒரு பேரதிசயத்தையும் மகா பெரியவா அடுத்த நாள் காலை அந்தத் திருச்சந்நிதியில் நிகழ்த்தியது, எவரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாத அற்புதம் (கட்டுரையின் இறுதியில் அந்த அற்புதத்தைப் பார்க்கலாம்).
மகா பெரியவா திருச்சந்நிதிக்கு எதிரே பலரின் வற்புறுத்தலுக்குப் பிறகு ஒரு நாற்காலியில் அமர்த்தி வைக்கப்பட்டாள் ராஜேஸ்வரி.
அப்போது மணி இரவு சுமார் ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.
‘ஒரு பெரிய அசம்பாவிதத்தில் சிக்கி, பத்திரமாக மீண்டு ராஜேஸ்வரி காஞ்சிபுரத்துக்கு வேனில் வந்து கொண்டிருக்கிறார்‘ என்கிற தகவல் தெரிந்தவுடனே ஸ்ரீமடத்துடன் தொடர்பில் இருக்கக் கூடிய மருத்துவர்கள் முன்கூட்டியே வரவழைக்கப்பட்டிருந்தனர்.
ராஜேஸ்வரியின் தற்போதைய உடல்நிலையை மகா பெரியவாளுக்கு எதிரிலேயே சோதிக்க ஆரம்பித்தனர்.
இருபது நிமிடம் கடந்த பிறகு, அவர்களில் தலைமை மருத்துவர் போல் தோற்றமளித்த ஒருவர், மடத்து ஸ்ரீகார்யத்தை நெருங்கினார். ”சார், கீழே விழுந்த அதிர்ச்சில அவங்களோட கால்முட்டில ஒரு சின்ன எலும்பு துருத்திக்கிட்டு இருக்கறது ரிஸ்க்கான ஒண்ணு. இதன் வலியையும் வேதனையையும் எப்படித்தான் தாங்கறாங்கனு தெரியல. பொதுவா இப்படி இருக்கிறவங்களால ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது. ஆனா, பெரியவா கிருபைலதான் இதனோட சீரியஸ் தெரியாம கும்பகோணத்துல இருந்து காஞ்சிபுரத்துக்கு வந்திருக்காங்க. இது மட்டும்தான் சீரியஸ் ப்ராப்ளம். கால் முட்டிக்கு மேல தசையைக் கிழிச்சுண்டு வெளிய தெரியற எலும்பை சரிபண்ணணும்னா உடனே ஆபரேஷன் பண்ணணும். ‘ராடு‘ (கம்பி) வைக்கணும். மத்தபடி எல்லாமே காயங்கள்தான். ஆஸ்பத்திரில தங்க வெச்சு மருந்து, மாத்திரை குடுத்து குணமாக்கிடலாம். கால்முட்டில ஒரு எலும்பு துருத்திண்டு இருக்கறதால ஒடனே ராத்திரியே ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணிடறது நல்லது” என்றார்.
ஸ்ரீகார்யம் இந்தத் தகவலைக் கேட்டு விட்டு, மகா பெரியவாளிடம் நகர்ந்தார். விஷயத்தை அப்படியே அவரிடம் ஒப்புவித்தார்.
கருணை ததும்பும் அந்த மகான் என்ன உத்தரவு தரப் போகிறாரோ என்று ஸ்ரீகார்யம், நரசிம்மன், ராஜேஸ்வரி, டாக்டர்கள் உட்பட அனைவரும் அவரது திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஸ்ரீகார்யத்தைப் பார்த்து மகா பெரியவா கேட்டார்: ”ஏண்டா… ஆபரேஷன் பண்ணணும்… ஒடனே அட்மிஷன் போடணும்னு சொன்னாளே… அட்மிஷன் ஆன ஒடனே ஆபரேஷனை இந்த ராத்திரிலயே பண்ணிடுவாளாமா?”
மகா பெரியவா கேட்ட கேள்வியை உள்வாங்கிக் கொண்டு மருத்துவர்களிடம் போய் அப்படியே ஒப்பித்தார் ஸ்ரீகார்யம்.
”அட்மிஷன் மட்டும்தான் இப்ப… கார்த்தாலதான் ஆபரேஷன்.”
”அப்ப ராத்திரில ஆஸ்பத்திரில அட்மிஷன் போட்டுட்டு என்ன பண்ணுவாளாம்?” – இது பெரியவா கேள்வி.
”ராத்திரி அட்மிட் ஆன உடனே ஒடம்புல இருக்கிற காயங்கள், உள்காயங்கள் இதுக்கெல்லாம் மருந்து போட்டு விடுவோம்.” – இது டாக்டர்கள் பதில்.
”ஆபரேஷன் தேவைன்னா கார்த்தால பாத்துக்கலாம். இன்னிக்கு ராத்திரி ராஜேஸ்வரி இங்கயே இருக்கட்டும்னு அவாகிட்ட சொல்லிடு.”
ஸ்ரீகார்யம் ஓடிப் போய் இதைச் சொல்ல… அதை ஏற்றுக் கொண்ட டாக்டர்கள் குழு அங்கிருந்து கலைந்தது.
எதிரில் நின்றிருந்த நரசிம்மனை ஜாடை காட்டித் தன் அருகே வரழைத்தார். ”பெரியவா… பெரியவா” என்று வந்து நின்றார்.
”பாவம்டா, ராஜேஸ்வரி… ரொம்ப கஷ்டப்படறா. அவளோட கால்ல எலும்பு துருத்திண்டு தெரியறதாமே… அந்த இடத்துலயும், அவளோட கால்– கைலயும் இதை இன்னிக்கு ராத்திரி முழுக்கத் தூங்காம இருந்து லேசா தடவி விட்டுண்டே இரு” என்று சொன்ன மகா பெரியவா, தன் கைப்பட விபூதியையும் வில்வத்தையும் நரசிம்மனிடம் தந்தார்.
மகா பெரியவா அங்கிருந்து தன் சயனத்துக்கு மெள்ள நடந்து சென்றார், தொண்டர்கள் உதவியுடன்.
அன்றைய இரவு முழுக்க சற்றும் கண்ணயராமல் மகா பெரியவா திருநாமத்தை உச்சரித்தபடி, எலும்பு லேசாக வெளியே துருத்திக் கொண்டிருந்த இடத்தில் விபூதிக் கையால் தடவி விட்டார். வில்வ இலைகளால் மெள்ள நீவி விட்டார்.
‘வலிக்கிறது… வலிக்கிறது‘ என்று கொஞ்ச நேரத்துக்கு முனகிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி மகா பெரியவாளின் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டோ என்னவோ… சற்று நேரத்தில் அயர்ந்து தூங்க ஆரம்பித்து விட்டார்.
நரசிம்மன் மட்டும் விடிய விடிய தூங்கவில்லை. கண்களுக்கு நேரே மகாலட்சுமி போல் வளைய வளைய வந்த தன் மனைவி ராஜேஸ்வரிக்கு இப்படி ஒரு அவஸ்தையா என்று இவர்தான் அதிகம் துடிதுடித்திருக்கிறார்.
பொழுது புலர்ந்தது.
நடமாடும் தெய்வத்தின் அதிகாலை விஸ்வரூப தரிசனத்தைக் கண்டு ஆனந்திக்க வேண்டும் என்று பக்தர்கள் கூட்டம் நீராடி விட்டு சுத்தம்பத்தமாக வெளியே காத்திருந்தது.
மகா பெரியவா வெளியே வந்தார். அந்தப் பரப்பிரம்ம சொரூபம், ஒரு குழந்தை போல் நடந்து வந்தது.
நரசிம்மனும், ராஜேஸ்வரியும் இருக்கின்ற அறையின் வெளியே நின்றார்.
உள்பக்கம் திரும்பிப் பார்த்தார். தொண்டையை செருமிக் கொண்டார்.
உடனே தொண்டர் ஒருவர் நரசிம்மனுக்கு ‘பெரியவா வந்திருக்கார்‘ என்று ஜாடை காட்ட… உட்கார்ந்திருந்தவர் கைகளை உதறிக் கொண்டு விருட்டென்று எழுந்தார். ”பெரியவா… பெரியவா…” என்று நா தழுதழுத்தார்.
”ராஜேஸ்வரி ராத்திரி நன்னா தூங்கினாளா?”
நன்றாகத் தூங்க வேண்டும் என்கிற மந்திரத்தை அருளியவரே மகா பெரியவாதானே!
”தூங்கினா பெரியவா…” – நரசிம்மன்.
”அவளோட கால்முட்டில எலும்பு துருத்திண்டிருக்குனு ராத்திரி சொன்னியே… டாக்டர்கள்லாம் பாத்துட்டு கார்த்தால ஆபரேஷன் பண்ணணும்னு சொன்னாளே…
இப்ப எப்படி இருக்கு?”
அப்போதுதான் சட்டென்று ராஜேஸ்வரியை நோக்கி நகர்ந்து, அவளது கால்முட்டியைப் பார்த்தார் நரசிம்மன். விபூதி மற்றும் வில்வ வாசனை கலந்து வந்ததே தவிர, எலும்பு துருத்திக் கொண்டிருப்பது தெரியவே இல்லை.
நரசிம்மனுக்கு ஆச்சரியம். ‘நேற்று இரவு பார்த்தோமே… கைவிரல்களுக்கு நன்றாகத் தட்டுப்பட்டதே…‘ என்று அந்தக் கால்முட்டியை மீண்டும் தன் கைவிரல்களால் ஒரு முறை மெள்ளத் தடவிப் பார்த்தார்.
ஆனால், முந்தைய தினம் இரவு அனைவரது கண்களுக்குத் தெரியுமளவுக்குத் துருத்திக் கொண்டிருந்த எலும்பு, இப்போது தெரியவில்லை.
ஆச்சரியத்தில் பிரமித்துப் போனார் நரசிம்மன். அவரால் நம்ப முடியவில்லை. ”பெரியவா… நேத்திக்கு எலும்பு துருத்திண்டிருந்த அடையாளமே இப்ப தெரியலை.”
”எல்லாம் காமாட்சியோட கிருபைடா…” என்றபடி நடந்து சென்ற மகா பெரியவாளைப் பார்த்து ”சர்வேஸ்வரா… சங்கரா…” என்றபடி எத்தனையோ ஜோடிக் கரங்கள் இணைந்து மேலே உயர்த்தி வணங்கிக் கொண்டிருந்தன.
வலிக்கான எந்த மாத்திரையும் விழுங்காமல், இரவு முழுக்க ராஜேஸ்வரி நன்றாகத் தூங்கியது எப்படி?
கால்முட்டியில் துருத்திக் கொண்டிருக்கும் எலும்பை உள்ளே தள்ளி, ஆபரேஷன் பண்ண வேண்டும் என்றார்களே டாக்டர்கள்? அந்த எலும்பு எங்கே போனது?
‘எல்லாம் காமாட்சியோட கிருபை‘ என்று இயல்பாகச் சொல்லி விட்டுத் தனக்கு எதுவும் தெரியாதது போல் சென்று கொண்டிருக்கிறாரே?
‘ராஜேஸ்வரிக்கு எதுக்குடா டாக்டர்… நான் இருக்கேன்டா‘ என்று சொல்லாமல் மகா பெரியவாளே ஒரு மருத்துவராக இருந்து தன் ஆசிர்வாதத்தால் வைத்தியம் பார்த்தது நரசிம்மனுக்குக்குத்தானே தெரியும்!