ஈ.பி. சீனிவாசனுக்கு எதிர்பாராத ஆசி

மூர்த்தி சிறிது என்றாலும், கீர்த்தி பெரிது என்பார்கள்.

அதாவது, பார்ப்பதற்கு உருவத்தில் சிறியது என்றாலும், புகழிலும் பெருமையிலும் உயர்ந்தது என்பது பொருள்.

தசாவதாரங்களில் ஒன்றான வாமனன் அவதாரம் எடுத்து வந்தபோது அவனது உயரம் இரண்டடிதான். ஆனால், தனது விஸ்வரூபத்தைக் காட்டி ஓரடியில் மண்ணுலகத்தையும், இரண்டாம் அடியில் விண்ணுலகத்தையும் அளந்தான் அல்லவா? இதைத்தான் மூர்த்தி சிறிது என்றாலும், கீர்த்தி பெரிது என்பர்.

மகா பெரியவா பார்ப்பதற்கு குள்ளமான ஒடிசலான தேகம். அதிகார முகம் கிடையாது. பிறரைவிட தான் உயர்ந்தவர் என்ற எண்ணம் கிடையாது. தான் எத்தனை அற்புதங்கள் நிகழ்த்தினாலும், ‘எல்லாவற்றுக்கும் காரணம் அன்னை காமாட்சியே என்பார் இயல்பாக. மூர்த்தி சிறிது என்றாலும் மகா பெரியவாளின் கீர்த்தி பெரிது.

எத்தனையோ குடும்பங்கள் மகா பெரியவாளின் பரிபூரண ஆசியைப் பெற்றிருக்கிறது. மகா பெரியவாளுக்கு பிட்சை செய்தவர்கள் (உணவிட்டவர்கள்), தங்கள் இல்லத்தில் தங்குவதற்கு இடம் கொடுத்தவர்கள், அவருடன் வந்த தொண்டர்களுக்கு அறுசுவை உணவிட்டவர்கள், ஸ்ரீமடத்தின் முகாம் செயல்பாட்டுக்குத் தங்களால் ஆன உதவிகளைச் செய்தவர்கள் என்று அந்த நடமாடும் தெய்வத்துக்குத் தங்கள் ஒத்துழைப்பைத் தந்தவர்கள் ஏராளம். என்றைக்கோ அந்த மகானிடம் இருந்து பெற்ற ஆசிகள்தான் அடுத்தடுத்து வரக் கூடிய அவர்களது வாரிசுகளையும் காப்பாற்றி வருகிறது என்பது நிதர்சனம்.

சுய நலம் என்பது இல்லாமல் பொது நலனோடு வாழ்கின்றவர்களை மகான்களுக்கு ரொம்பவே பிடிக்கும். தனக்கு என்று எதுவும் வைத்துக் கொள்ளாமல், பிறருக்கும் வழங்க வேண்டும் என்கிற எண்ணம் எவர் மனதில் இருக்கின்றதோ, அவர்கள் அனைவரும் மகா பெரியவாளின் பரிபூரண அருளைப் பெற்றவர்கள் ஆகிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு மகா பெரியவா பக்தர்தான் சீனிவாசன் என்பவர். இவருக்கு சொந்த ஊர் புதுக்கோட்டை. தமிழக அரசின் மின்வாரியத்தில் பணி புரிந்தவர். எனவே, ‘.பி. சீனிவாசன் என்று அவரது பெயரோடு துறையையும் சேர்த்துச் சொன்னால்தான், பலருக்கும் புரியும்.

இவரது குடும்பமே மகா பெரியவா பக்தியில் எப்போதும் திளைத்திருக்கும். எதற்கெடுத்தாலும் பெரியவா பெரியவா பெரியவாதான்.

சீனிவாசனுக்கு இசையிலும் ஆர்வம் உண்டு. நல்ல ரசிகர். இசைத் துறையில் பிரபலமாக விளங்கிய பலரும் சீனிவாசனுக்கு நெருக்கமாக இருந்துள்ளனர். காரணம், இவரது நல்ல குணம்தான்.

மகா பெரியவாளோடு சீனிவாசன் தொடர்பான அனுபவத்தைப் பார்ப்பதற்கு முன்னால், இசையோடு தொடர்பான ஒரு அனுபவத்தைப் பார்த்தால் இவரைப் பற்றி ஓரளவு புரிந்து கொள்ளலாம்.

சிருங்கேரி ஸ்ரீமடத்தின் பீடாதிபதி அப்போது சென்னையில் முகாமிட்டிருந்தார். ஒவ்வொரு நாளும் திரளான பக்தர்கள் வந்து பீடாதிபதியைத் தரிசித்துச் சென்று கொண்டிருந்தார்கள். ஆன்மிகத் துறவியை தரிசித்து ஆசி பெறுவதற்குப் பல்துறை வித்தகர்களும் வருவது வழக்கம். அந்த வகையில் இசைத் துறையில் பிரபலமாக விளங்கிய பலரும் சிருங்கேரியின் சென்னை முகாமுக்கு வந்து ஆச்சார்யரைத் தரிசித்து ஆசி பெற்றனர். பிரபல சங்கீத அரசியும்கானக் குயில் என்று வர்ணிக்கப்படுபவருமான எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களும் சிருங்கேரி பீடாதிபதியைத் தரிசித்து ஆசி பெறுவதற்கு அன்றைய தினம் வந்திருந்தார்.

கூட்டமென்றால் அப்படி ஒரு கூட்டம். ‘எள் போட்டால் எண்ணெய் ஆகி விடும் என்று கூறுவோம் அல்லவா? அதுபோல் பக்தர்கள் நெருக்கியடித்தபடி பீடாதிபதியைத் தரிசித்து ஆசி பெறுவதற்காக அமர்ந்திருந்தனர்.

அன்றைய தினம் சிருங்கேரி ஆச்சார்யரை தரிசிப்பதற்கு சீனிவாசனும் வந்திருந்தார். பீடாதிபதி இருக்கின்ற இடத்தில் இருந்து சற்றுத் தொலைவில் பக்தர்கள் கூட்டத்தோடு கலந்திருந்தார். அதற்கு மேல் அவரால் நெருங்கிச் செல்ல முடியவில்லை. தான் இருந்த இடத்தில் இருந்தபடியே உடலைக் குறுக்கிக் கொண்டு இரு கைகளையும் குவித்து பக்திப் பெருக்கோடு தரிசித்த வண்ணம் இருந்தார்.

எம்.எஸ். சுப்புலட்சுமி அந்த முகாமுக்குள் நுழைந்ததும், சிருங்கேரி மடத்து முக்கியஸ்தர்கள் பலரும் ஓடிச் சென்று புன்னகையுடன் வரவேற்றனர். கசகசவென்று பக்தர்கள் அமர்ந்திருந்த அந்தக் கூட்டத்தில் மெள்ள வழியேற்படுத்தி, பீடாதிபதியின் அருகே தக்க மரியாதையோடு எம்.எஸ்.ஸை அழைத்துக் கொண்டு சென்றார்கள்.

தாங்கள் மிகவும் மதிக்கக் கூடிய பிரபல பாடகி இங்கே வந்திருக்கிறார் என்பது தெரிந்தவுடன் புன்னகை தவழும் அந்த முகத்தைக் காண பக்தர்கள் ஆர்வம் காட்டினார்கள். தவிர, எப்படியும் அவரது குரலை இங்கே கேட்கலாம்நிச்சயம் ஒரு பாடல் பாடுவார் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

சிருங்கேரி பீடாதிபதியின் வெகு அருகே வந்ததும், முன்னால் ஒரு இடம் காட்டப்படபீடாதிபதியை இரு கைகளையும் குவித்து வணங்கி, அவருக்கு ஒரு நமஸ்காரம் புரிந்து தரையில் அமர்ந்தார் எம்.எஸ்.! பாடகி அமர்ந்த இடமும் தக்கனூண்டு இடம்தான். அருகே ஓரிரு பெண் பக்தைகள் அமர்ந்திருக்ககஷ்டப்பட்டு நெருக்கடியான இடத்தில் அமர்ந்தார். ஆச்சார்யரைத் தரிசித்தார்.

அப்போது சென்னையின் பிரபலமான ஓர் ஆலயத்தில் இருந்து சிருங்கேரி ஆச்சார்யருக்குப் பிரசாதம் கொண்டு வந்தார்கள் ஆலய அர்ச்சகர்கள். மந்திர முழக்கத்துடன் அவர்கள் இந்தத் திருச்சந்நிதிக்குள் நுழையும்போது அங்கே அமர்ந்திருந்த அனைத்து பக்தர்களின் பார்வையும் பின்னால் திரும்பியது.

எம்.எஸ். அம்மாவும் ஆர்வக் கோளாறில் யதேச்சையாகத் தன் பார்வையைப் பின்னால் திருப்பஅப்போது சீனிவாசன் இவரது கண்களுக்கு சிக்கி இருக்கிறார். சீனிவாசனைப் பார்த்த மறுகணம் எம்.எஸ்.ஸுக்கு அப்படி ஒரு பரவசம். இசை ஆர்வலர் என்கிற முறையில் எம்.எஸ்.ஸை அடிக்கடி சந்தித்து அவரது ஆசிகளைப் பெற்றிருக்கிறார் சீனிவாசன். பின்னால், தள்ளி அமர்ந்திருக்கிற சீனிவாசனைப் பார்த்து, கைவிரல்களால் ஒரு ஜாடை காண்பித்து, அருகே வருமாறு அழைத்தார் எம்.எஸ்.

பொதுவாக பெரிய ஒரு ஆன்மிகத் தலைவரையோ, ஆலயத்தின் சிறப்பு தரிசனத்துக்கோ வி..பி. ஒருவர் அழைக்கப்பட்டால், அந்த நேரத்தில் தனக்குத் தெரிந்த மற்றவர்களையும் உடன் அழைத்துச் செல்வது என்பது ஒரு மரபல்ல. ப்ரொட்டோகால் அதற்கு இடம் கொடுக்காது. ‘என்னடாஇவரைக் கூப்பிட்டு ஒரு சிறப்பு தரிசனம் செய்து வைக்கலாம் என்றால், இவர் தனக்குத் தெரிந்தவர்களை எல்லாம் இந்தக் கூட்டத்தில் இருந்து தேடி அழைக்கிறாரே என்று சம்பந்தப்பட்டவர்களை யோசிக்க வைக்கும்!

ஆனால், சிருங்கேரி பீடாதிபதியின் முன் எம்.எஸ். அம்மா மிகுந்த சிரமப்பட்டு அமர்ந்திருந்த வேளையில் பின்னால் திரும்பிப் பார்த்து சீனிவாசனுக்கு ஒரு ஜாடை காண்பித்து அழைத்திருக்கிறார்.

எம்.எஸ். அம்மா யாரையோ அடையாளம் காண்பித்துத் தன் அருகே அழைப்பதைப் பின்னால் அமர்ந்திருந்த பலரும் பார்த்தனர். சீனிவாசனும் பார்த்தார். எம்.எஸ்.ஸை பர்ஸனலாகத் தெரிந்தாலும், ‘இந்தக் கூட்டத்தில் நம்மை எங்கே அழைக்கப் போகிறார்? தனக்கு வேண்டப்பட்ட வேறு யாரையோ அழைக்கிறார் போலிருக்கிறது என்று சீனிவாசன் நினைத்திருந்தார்.

அதன் பின் சீனிவாசனின் பிரதான அடையாளங்களான முறுக்கிய மீசையையும், நெற்றியில் காணப்படும் குங்குமத்தையும் சைகையால் அடையாளம் சொல்லி, ”உன்னைத்தாம்ப்பாகிட்ட வா என்று எம்.எஸ். சொல்லபக்தர்கள் பலரும் சீனிவாசனைப் பார்த்து, ”உங்களைத்தான் அம்மா கூப்பிடறாங்கஒங்க அடையாளத்தை சொல்றாங்களேபோங்கோ என்று பக்தர்கள் சற்றே விலகி, வழி விட்டனர்.

கண்கள் பனிக்க இரு கைகளையும் கூப்பிக் கொண்டு சீனிவாசன் எழுந்து நடந்து சிருங்கேரி பீடாதிபதியின் அருகே வந்தார். சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். அதன் பின் சீனிவாசனை அடையாளம் காட்டி சிருங்கேரி பீடாதிபதிக்கு எம்.எஸ். அறிமுகம் செய்து வைக்கபிரசாதம் வழங்கப்பட்டது. நெகிழ்ச்சியான தருணங்கள். கூட்டத்தில் இருந்த அத்தனை பேரும் சீனிவாசனை ஒருவி..பி.யாகப் பெருமையுடன் பார்த்தனர்.

மகா பெரியவாளின் பரிபூரண அனுக்ரஹம் பெற்ற இந்த சீனிவாசன் யார் என்பதற்கான ஒரு சின்ன அறிமுகம்தான் மேலே. ஒரு பிரபலத்திடம் எத்தனைதான் நல்ல பெயர் வாங்கி இருந்தாலும், மேலே சொன்னது போன்ற பொது இடங்களில் இத்தனை மரியாதை கிடைப்பது என்பது ஒருவரது தனிப்பட்ட குணநலன்களைப் பொறுத்தது.

மேலே சொன்ன இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னால் சீனிவாசன் 1986-ஆம் வருடம் புதுக்கோட்டை மின்வாரியத்தில் பணியில் இருந்தார். அப்போது அங்கே ஒரு சொந்த வீடு கட்டி கிரஹப் பிரவேசத்துக்கு ஏற்பாடு ஆகி இருந்தது. தங்கள் வீட்டில் ஒரு சுப நிகழ்வு என்றால், அதற்குண்டான பத்திரிகையை ரெடி பண்ணி, முதல் பிரதியை மகா பெரியவாளிடம் கொடுத்து ஆசி பெறுவது பல குடும்பத்தினரது வழக்கம்.

அந்த வகையில் தயாரான பத்திரிகையை ஒரு மஞ்சள் பையில் வைத்து எடுத்துக் கொண்டு மகா பெரியவாளிடம் சமர்ப்பித்து ஆசி பெற வேண்டும் என்று புதுக்கோட்டையில் இருந்து காஞ்சிபுரம் கிளம்பினார் சீனிவாசன்.

காஞ்சிபுரத்தை அடைந்தாகி விட்டது. ஸ்ரீமடத்திலேயே நீராடி, காலைக் கடமைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட்டு, மகா பெரியவா தரிசனத்துக்காக அவரது திருச்சந்நிதி நோக்கி நகர்ந்தார் சீனிவாசன்.

நடமாடும் தெய்வத்தைத் தரிசிக்கக் கூட்டமான கூட்டம். ஒரு பெரிய சவுக்குத் தடுப்புக்கு அந்தப் பக்கம் பக்தர்கள் தரிசனத்துக்காக அமர்ந்திருந்தனர். தாமதமாக வந்து சேர்ந்தாலும் மகா பெரியவாளின் கடைக்கண் பார்வை கிடைத்து, அடையாளம் காணப்பட்டு சவுக்குத் தடுப்புக்கு அருகே வரவழைக்கப்பட்டார் சீனிவாசன்.

இடது கையில் கிரஹப் பிரவேசப் பத்திரிகை அடங்கிய பை. சவுக்குத் தடுப்பில் கைவைத்தபடி மகானை ஆனந்தமாக தரிசிக்கும்போது விழியோரங்களில் நீர் கோர்த்தது சீனிவாசனுக்கு. பையும் இடக் கையில் இருக்கஇரு கரங்களையும் உயர்த்தி வழிபட்டார். பிறகு, நமஸ்காரம் செய்தார்.

தன் தொண்டர் ஒருவரிடம், ”அவனுக்கு என்ன வேணும்னு கேளு என்று சீனிவாசனை அடையாளம் காட்டிக் கேட்டார் பெரியவா.

அந்தத் தொண்டரும் அப்படியே கேட்கமகானிடம் இருந்து கிடைத்த பரவசமான தரிசனத்தில் தான் என்ன காரணத்துக்காக இங்கே வந்தோம் என்பதே மறந்து, ”லோகம் நன்னா இருக்கணும் பெரியவாஎல்லாருக்கும் எல்லா நல்லதும் நடக்கணும் என்று பிரார்த்தித்தார் சீனிவாசன்.

இது காதில் விழுந்த மகா பெரியவா, தொண்டரிடம், ”லோக க்ஷேமமெல்லாம் இருக்கட்டும்அதெல்லாம் தானா நடக்கும். என்கிட்ட குடுக்கணும்னு கொண்டு வந்த புதுக்கோட்டை கிரஹப்பிரவேச பத்திரிகையை மொதல்ல எடுத்துக் குடுக்கச் சொல்லு என்று சொல்லஇதைக் கேட்ட சீனிவாசனின் கண்கள் குளமாகின.

எந்த தெய்வம் இப்படிக் கேட்டுக் கேட்டு ஆசி வழங்கும்?

பக்தனே மறந்தாலும், தேடித் தேடி வந்து அனுக்ரஹம் வழங்குபவர் அல்லவா காஞ்சி மகா பெரியவா!

அதன் பின் பத்திரிகை இடம் மாறஆசி அபரிமிதமாகக் கிடைத்தது.

அந்தப் புண்ணியத்தால்தான் இன்றைக்கும் நல்ல நிலையில் சென்னை மயிலாப்பூரில் வசித்துக் கொண்டிருக்கிறார் சீனிவாசன்.