‘திக்கற்றவர்களுக்கும், திசை தெரியாதவர்களுக்கும் தெய்வமே துணை‘ என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.
கர்ம வினையின் காரணமாக ஏதோ ஒரு பிரச்னையில் சிக்கிக் கொண்டிருக்கும்போது அவஸ்தைகள் அடுத்தடுத்து வரும். இதிலிருந்து எப்படி மீள்வது என்று தவிக்கும்போது ஒரு துணையையோ, தீர்வையோ நாடுவோம் அல்லவா?
அப்படிப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்டவர் ஒருவேளை மகா பெரியவா பக்தராக இருந்தால், அவர் ஆட்கொண்டு விடுவார். சிக்கலில் இருந்தும் மீட்டு விடுவார்.
நாம் வேண்டுவனவற்றை எல்லாம் அருளி தெய்வங்கள் நம்மை ஆசிர்வதிக்கின்றன அல்லவா? அதுபோல்தான் மகானான மகா பெரியவாளும்! தன் ஆத்மார்த்த பக்தனின் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீரைக் கண்டால், அடுத்த கணமே சூட்சுமமாக ஆட்கொண்டு, கண்ணீரைத் துடைத்துக் கரை சேர்த்து விடுவார்.
எந்தக் குறையாக இருந்தாலும், வேண்டுதலாக இருந்தாலும் மகா பெரியவாளின் திருப்பாதங்களை மானசீகமாக சரண் புகுந்தால் போதும்!
அப்படிப்பட்ட ஒரு பக்தரின் அனுபவத்தைப் பார்ப்போம்.
பாலசுப்ரமணியன் என்பவர் மத்திய அரசின் இன்ஷூரன்ஸ் துறையில் அப்போது பணி புரிந்து வந்தார். குடும்பத்துடன் இவர் தங்கி இருந்தது உமராபாத் என்ற ஊரில். வேலூருக்கு அருகில் உள்ள ஆம்பூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது உமராபாத்.
பாலசுப்ரமணியனின் மனைவியின் பெயர் வரலட்சுமி. இனிய இல்லறத்தின் நல்விளைவால், வரலட்சுமி தாய்மைப் பேற்றை அடைந்தார். குடும்பமே குதூகலமானது.
பிரசவ காலம் நெருங்க நெருங்க அனைவருக்கும் ஒரு பரபரப்பு. ‘பையன்தான் பிறப்பான்… பொண்ணுதான் பொறக்கும்‘ என்று குடும்பத்தில் இருந்த அனைவரும் ஆளாளுக்கு ஆரூடம் சொன்னார்கள்.
குடும்பத்தில் மூத்தவர்கள் சொன்னார்கள் – ‘பேரனோ, பேத்தியோ… ஆரோக்கியமா பொறந்தா போதும்.‘
இவர்களின் வாக்குதானே நியாயம்! பிறக்கின்ற குழந்தை ஆணாக இருந்தால் என்ன… பெண்ணாக இருந்தால் என்ன… உடல் ஆரோக்கியத்துடன் எந்தக் குறையும் இல்லாமல் பிறந்தால் போதும்தானே!
ஆனால், விதி என்னென்ன விளையாட்டுகளை நிகழ்த்தப் போகிறது என்பதை முன்கூட்டி அறிய முடியுமா, என்ன?!
1990-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அது.
பிரசவம் நெருங்குகிற வேளையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வரலட்சுமி.
ஆஸ்பத்திரியில் சேர்ந்த பின் திடீரென்று வரலட்சுமி தன் கணவர் பாலசுப்ரமணியனிடம் கவலையோடு, “ஏங்க, குழந்தையோட மூவ்மெண்ட் இதுவரைக்கும் என்னால நல்லா உணர முடிஞ்சுது. இப்ப திடீர்னு மூவ்மெண்ட்டே தெரியலை. குழந்தைக்கு என்னாச்சுன்னு எனக்கு பயமா இருக்குங்க“ என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டே சொன்னார். அவர் விழியோரங்களில் நீர் கோர்த்தது.
பாலசுப்ரமணியனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. மனதில் ஒரு பதைபதைப்பு இருந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல், “ஒண்ணும் கவலைப்படாதேம்மா… ஒனக்கு ஏதோ பிரமை போலிருக்கு. இரு, எதுக்கும் டாக்டரைக் கூட்டிட்டு வந்துடறேன்“ என்று பணியில் இருக்கிற டாக்டரிடம் ஓடினார். விஷயத்தைச் சொன்னார்.
இதைக் கேட்டதும் பரபரத்த டாக்டர், ஒருவருக்கு இரண்டு பேராய் வரலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்குள் நுழைந்தனர். முதல் கட்டமாக வரலட்சுமியைப் பார்த்து, “ஒண்ணும் பயப்படாதீங்கம்மா… இதுவரைக்கும் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. தலைச்சன் குழந்தை பிறக்கப் போகுது
எந்தக் குறையாக இருந்தாலும், வேண்டுதலாக இருந்தாலும் மகா பெரியவாளின் திருப்பாதங்களை மானசீகமாக சரண் புகுந்தால் போதும்!
அப்படிப்பட்ட ஒரு பக்தரின் அனுபவத்தைப் பார்ப்போம்.
பாலசுப்ரமணியன் என்பவர் மத்திய அரசின் இன்ஷூரன்ஸ் துறையில் அப்போது பணி புரிந்து வந்தார். குடும்பத்துடன் இவர் தங்கி இருந்தது உமராபாத் என்ற ஊரில். வேலூருக்கு அருகில் உள்ள ஆம்பூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது உமராபாத்.
பாலசுப்ரமணியனின் மனைவியின் பெயர் வரலட்சுமி. இனிய இல்லறத்தின் நல்விளைவால், வரலட்சுமி தாய்மைப் பேற்றை அடைந்தார். குடும்பமே குதூகலமானது.
பிரசவ காலம் நெருங்க நெருங்க அனைவருக்கும் ஒரு பரபரப்பு. ‘பையன்தான் பிறப்பான்… பொண்ணுதான் பொறக்கும்‘ என்று குடும்பத்தில் இருந்த அனைவரும் ஆளாளுக்கு ஆரூடம் சொன்னார்கள்.
குடும்பத்தில் மூத்தவர்கள் சொன்னார்கள் – ‘பேரனோ, பேத்தியோ… ஆரோக்கியமா பொறந்தா போதும்.‘
இவர்களின் வாக்குதானே நியாயம்! பிறக்கின்ற குழந்தை ஆணாக இருந்தால் என்ன… பெண்ணாக இருந்தால் என்ன… உடல் ஆரோக்கியத்துடன் எந்தக் குறையும் இல்லாமல் பிறந்தால் போதும்தானே!
ஆனால், விதி என்னென்ன விளையாட்டுகளை நிகழ்த்தப் போகிறது என்பதை முன்கூட்டி அறிய முடியுமா, என்ன?!
1990-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அது.
பிரசவம் நெருங்குகிற வேளையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வரலட்சுமி.
ஆஸ்பத்திரியில் சேர்ந்த பின் திடீரென்று வரலட்சுமி தன் கணவர் பாலசுப்ரமணியனிடம் கவலையோடு, “ஏங்க, குழந்தையோட மூவ்மெண்ட் இதுவரைக்கும் என்னால நல்லா உணர முடிஞ்சுது. இப்ப திடீர்னு மூவ்மெண்ட்டே தெரியலை. குழந்தைக்கு என்னாச்சுன்னு எனக்கு பயமா இருக்குங்க“ என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டே சொன்னார். அவர் விழியோரங்களில் நீர் கோர்த்தது.
பாலசுப்ரமணியனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. மனதில் ஒரு பதைபதைப்பு இருந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல், “ஒண்ணும் கவலைப்படாதேம்மா… ஒனக்கு ஏதோ பிரமை போலிருக்கு. இரு, எதுக்கும் டாக்டரைக் கூட்டிட்டு வந்துடறேன்“ என்று பணியில் இருக்கிற டாக்டரிடம் ஓடினார். விஷயத்தைச் சொன்னார்.
இதைக் கேட்டதும் பரபரத்த டாக்டர், ஒருவருக்கு இரண்டு பேராய் வரலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்குள் நுழைந்தனர். முதல் கட்டமாக வரலட்சுமியைப் பார்த்து, “ஒண்ணும் பயப்படாதீங்கம்மா… இதுவரைக்கும் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. தலைச்சன் குழந்தை பிறக்கப் போகுது
இல்லியா? அந்த நினைப்போட இருக்கறப்ப வர்ற பயம்தான் இது“ என்று பொத்தாம்பொதுவாக ஆறுதல் சொல்லி விட்டு, பரிசோதிக்க ஆரம்பித்தார்கள்.
பரிசோதனையின் முடிவு ஒட்டுமொத்த டாக்டர்கள் குழுவுக்கே பெரும் அதிர்ச்சியைத் தந்தது.
ஆம்! பிரசவம் நெருங்குகின்ற வேளையில் குழந்தையின் மூவ்மெண்ட்டை வரலட்சுமியால் ஏன் உணர முடியவில்லை என்று புரிந்து கொண்டு விட்டார்கள்.
குழந்தைக்குத் தொப்புள்கொடி சுற்றி இருந்தது. இதனால், மூச்சடைத்து பிறப்பதற்கு முன்னாலேயே தாயின் வயிற்றுக்குள் இறந்து விட்டிருந்தது. ‘இனியும் தாமதிக்கக் கூடாது… தாயின் உடல்நிலை பாதிக்கப்பட்டு விடக் கூடாது‘ என்று மருத்துவர்கள் இறந்த குழந்தையை வெளியே எடுத்தனர்.
பாலசுப்ரமணியனுக்கு டாக்டர்கள் ஆறுதல் சொன்னார்கள். மனைவி வரலட்சுமியின் கைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்டு தேற்றினார் பாலசுப்ரமணியன்.
ஆனால், இந்த இருவராலும் சோகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படிப்பட்ட வேளையில் தாய் மற்றும் தந்தையின் மன நிலை எப்படி இருக்கும்?
இந்த சோக நிகழ்வு நடந்தது 1990 ஏப்ரல் 23-ஆம் தேதி.
பத்து மாதத்தின் பெரும்பாலான வேளைகளில், தன் பருத்த வயிற்றைத் தடவித் தடவி, கண்களுக்குத் தெரியாமல் இருந்த குழந்தையுடன் ஏராளமான கதைகளைப் பேசிய தாய்க்கு இத்தகைய செய்தியை ஜீரணிப்பது என்பது கஷ்டம்தான்! வரலட்சுமி சமாதானமாகவில்லை.
தலைச்சன் குழந்தை – அதுவும் ஆண் குழந்தை.
இறந்தே பிறந்தால், இது சோகமா? கர்மாவா?
“கவலைப்படாதே… எடுக்கத் தெரிந்த இறைவனுக்கு அடுத்து ஒன்றைக் கொடுக்கவும் தெரியும்“ என்று வரலட்சுமியை ஆறுதல்படுத்தினார்.
இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத சோகத்தில் – ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தால், சோகத்தின் வீரியம் அதிகமாகும். எனவே, அடுத்து வந்த ஒரு சில நாட்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் ஓடிப் போனது.
கால ஓட்டம்தான் எல்லாவற்றுக்கும் மருந்து.
பாலசுப்ரமணியனின் அம்மாவழி உறவினர் – பிரதோஷம் மாமா என்று அழைக்கப்படும் பிரதோஷம் வெங்கட்ராமய்யர். ரயில்வே துறையில் பணி புரிந்து, அப்போது ஓய்வும் பெற்று விட்டார். காஞ்சிபுரத்தில் எல்லப்ப நகரில் வசித்து வந்தார். இவருக்குத் தெய்வம் என்றால், அது மகா பெரியவாதான்!
இன்றைக்கு காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை என்கிற கிராமத்தில் மகா பெரியவாளுக்கு எழுப்பப்பட்ட பிரமாண்டமான மணி மண்டபத்துக்கு ஒரு காரணமாக அமைந்தவர் இந்த பிரதோஷம் மாமா.
மகா பெரியவா‘ என்றால், பிரதோஷம் மாமா உருகி விடுவார். அழுது விடுவார். அவர் வழியில் அவரது குடும்பத்தினரும் இன்றைக்கு மகா பெரியவா பக்தியில் அளவில்லா ஆனந்தம் அடைந்து வருகின்றனர்.
பாலசுப்ரமணியனின் தாயார், மகனிடம் சொன்னார்: “நீ போய் பிரதோஷம் மாமாவைப் பாரு. மகா பெரியவா அனுக்ரஹத்துனால அடுத்து ஒனக்கு குழந்தை பொறக்க நல்லபடியா ஆசி பண்ணுவார். ஏதாவது வழி சொல்லுவார்.“
உமராபாத்தில் இருந்து புறப்பட்டார் பாலசுப்ரமணியன்.
காஞ்சியை அடைந்தார். பிரதோஷம் மாமா இல்லத்தை அடைந்து, அவருக்கு நமஸ்காரம் செய்து, விவரத்தைச் சொன்னார்.
“ஒண்ணும் கவலைப்படாத… மகா பெரியவா எல்லாத்தையும் நன்னா பண்ணி வெப்பார். எல்லாருக்கும் அவர்தான் கண் கண்ட தெய்வம். நீ என்ன உத்தியோகம் பண்றே?“ என்று கேட்டார் பிரதோஷம் மாமா.
பாலசுப்ரமணியன் சொன்னார்.
“வாராவாரம் செவ்வாய்க்கிழமை அன்னிக்கு அதிகாலைல மகா பெரியவாளோட விஸ்வரூப தரிசனத்தைப் பண்ணு. நீ ஆம்பூர் பக்கம் இருக்கறதுனால, விடிகாலைல பொறப்பட்டு காஞ்சிக்கு வந்து விஸ்வரூப தரிசனம் பண்றது கஷ்டம். அதனால, திங்கட்கிழமை சாயந்திரம் ஆபீஸ்ல ஒன் ஜோலி முடிஞ்சவுடனே, ஆத்துக்கு வந்து குளிச்சு முடிச்சுட்டு ஆம்பூர்லேர்ந்து வேலூர் வந்துடு. வேலூர்லேர்ந்து காஞ்சிபுரத்துக்கு பஸ் இருக்கு. திங்கட்கிழமை ராத்திரியே மடத்துல வந்து தங்கிடு. அப்பதான் செவ்வாய்க்கிழமை விடிகார்த்தால விஸ்வரூப தரிசனம் பண்றது ஒனக்கு சாத்தியமாகும்“ என்றார் பிரதோஷம் மாமா.
சற்றும் யோசிக்காமல் இதற்கு சம்மதித்தார் பாலசுப்ரமணியன்.
இதை அடுத்து, பிரதோஷம் மாமா, “வாரா வாரம் காஞ்சிபுரம் போறப்ப வேலூர் மார்க்கெட்லேர்ந்து ஒன்னால முடிஞ்ச காய்கறிகளை வாங்கிண்டு போ. மடத்துல சேர்த்துடு“ என்றார்.
“நிச்சயம் மாமா. அப்படியே பண்ணிடறேன்“ என்று சொன்ன பாலசுப்ரமணியன், அன்றைக்கு ஸ்ரீமடத்திலும் தரிசனத்தை முடித்து விட்டு, உமராபாத் புறப்பட்டார்.
வீட்டை அடைந்த பின் அம்மா உட்பட எல்லோரிடமும் இந்த விஷயத்தைத் தெரிவித்தார்.
‘மகா பெரியவா அனுக்ரஹத்தால் அடுத்து ஒரு குழந்தை நல்லபடியாகப் பிறக்க வேண்டுமே‘ என்று அந்த மகானையே ஆத்மார்த்தமாக வேண்டிக் கொண்டார் வரலட்சுமி.
திங்கட்கிழமை வந்தது. மாலை ஆபீஸில் இருந்து வீடு வந்தார் பாலசுப்ரமணியன். குளித்து முடித்து விட்டுப் புறப்பட்டார்.
உமராபாத்தில் இருந்து ஆம்பூர். அங்கிருந்து வேலூருக்கு ஒரு பஸ். வேலூர் மார்க்கெட்டில் கொஞ்சம் காய்கறிகளை வாங்கி ஒரு பையில் வைத்துக் கொண்டார்.
வேலூரில் இருந்து காஞ்சிபுரம் செல்கிற கடைசி பஸ் (எண்: 156) இரவு எட்டேமுக்கால் மணிக்கு. ரிலாக்ஸாகவே அந்தப் பேருந்தில் ஏறி இடம் பிடித்து விட்டார்.
காஞ்சி மடத்தில் இரவு உறக்கம். அதிகாலையில் எழுந்து, அங்கேயே குளித்து, மகா பெரியவாளின் விஸ்வரூபத்தை தரிசித்தார்.
காஞ்சி மகா பெரியவாளின் விஸ்வரூப தரிசனம், பாக்கியம் செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
திருப்பாத தரிசனம் தீராத வினைகளைப் போக்கும்.
விஸ்வரூப தரிசனம் வேண்டும் வரங்களை நல்கி விடும்.
அதிகாலை மகா பெரியவாளின் விஸ்வரூப தரிசனத்தைப் பார்க்கும்போதுதான் பாலசுப்ரமணியனுக்குத் தெரிந்தது – எத்தனை பேர் இந்த தரிசனத்துக்காக நாட்டின் எங்கெங்கிருந்தோ வந்து குவிகிறார்கள் என்று.
விஸ்வரூப தரிசனம் தன்னுள் ஏற்படுத்துகிற பரவசத்தை நன்றாகவே உணர்ந்தார். ‘புத்திரப் பேறு வழங்க வேண்டும் பெரியவா‘ என்று மனதுக்குள் பிரார்த்தித்தார்.
எல்லோரையும் ஆசிர்வதிப்பது போல், பாலசுப்ரமணியனைப் பார்த்து ஒரு புன்னகையுடன் வலக் கரம் உயர்த்தி அருள் புரிந்தார் மகா பெரியவா.
உமராபாத் வந்தார். மனைவியிடமும், தாயிடமும் விவரங்களைச் சொன்னார்.
வரலட்சுமிக்கு சந்தோஷம். தாய்மைப் பேறு அடுத்து வாய்க்க மகான் அருள் புரிய வேண்டுமே!
இது வாரா வாரம் அப்படியே தொடர ஆரம்பித்தது.
எந்த ஒரு காரியம் நின்று போனாலும், திங்கட்கிழமை இரவு வேலூர் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிக் கொண்டு, எட்டேமுக்கால் மணிக்குக் காஞ்சிக்குப் புறப்படுகிற கடைசி பஸ்ஸைத் தவற விடவே மாட்டார் பாலசுப்ரமணியன். செவ்வாய்க்கிழமை அதிகாலை விஸ்வரூப தரிசனம்.
தொடர்ந்து பல மாதங்களாகக் காஞ்சிக்குத் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், ஸ்ரீமடத்தில் இருக்கிற ஒரு சில சிப்பந்திகளுக்கும் பழக்கமானார் பாலசுப்ரமணியன்.
அதுபோல் ஒரு திங்கட்கிழமை. வழக்கம்போல் உமராபாத்தில் இருந்து புறப்பட்டார்.
ஆம்பூர் வந்து பேருந்து ஏறி வேலூர் வந்தார்.
மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிக் கொண்டு பைகளைச் சுமந்தபடி வேலூர் பேருந்து நிலையம் வந்தால் அதிர்ச்சி.
காஞ்சிபுரம் செல்ல வேண்டிய கடைசிப் பேருந்து அன்றைக்கு சற்று முன்னதாகவே புறப்பட்டு விட்டிருந்தது.
வேலூரில் இருந்து காஞ்சிக்குச் செல்லும் கடைசி பஸ் புறப்பட்டது போய் விட்டது என்று அறிந்ததும், தவித்துப் போனார் பாலசுப்ரமணியன். காரணம், இது போன்ற அனுபவம் இதற்கு முன் ஏற்பட்டதில்லை. ஒவ்வொரு திங்கட்கிழமை அன்று இரவும் அந்தக் கடைசி பஸ்ஸைப் பிடித்துக் காஞ்சிக்குச் சென்று விடுவார்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து ஸ்ரீமடத்தை அடைவார். வாட்ச்மேனிடம் சொல்லி விட்டு உள்ளே நுழைந்து, ஆட்கள் இல்லாத ஒரு மூலையில் தன் மேல்துண்டை விரித்து, குட்டித் தூக்கம் போடுவார்.
அதிகாலை பொழுது விடிந்ததும் எழுந்து, குளித்து முடித்து அனுஷ்டானங்களைப் பூர்த்தி செய்த பின், தான் வாங்கி வந்த காய்கறிகளை மகா பெரியவா திருச்சந்நிதியில் சமர்ப்பிக்க வேண்டியும், விஸ்வரூப தரிசனத்துக்காகவும் கைகளைக் கூப்பிக் காத்திருப்பார். இதுதான் நடைமுறை.
இப்போது இருப்பது போல் பேருந்து வசதிகள் அப்போது இல்லை. இரவு கடைசி பஸ் போய் விட்டது என்றால், அடுத்த பஸ் அதிகாலையில்தான் வரும்.
என்ன செய்வதென்று யோசித்தவர், காய்கறிப் பைகளைத் தூக்கிக் கொண்டு வேலூர் பஸ் ஸ்டாண்டில் இருக்கிற டைம் கீப்பர் ஆபீஸுக்கு நடந்தார்.
ஒரு கூண்டுக்குள் பிஸியாக இருந்த டைம் கீப்பரை “சார்… சார்…“ என்று இரண்டு மூன்று முறை கூப்பிட்ட பாலசுப்ரமணியனை நிமிர்ந்து பார்த்தார்.
“என்ன சார்?“
“காஞ்சிபுரத்துக்கு அடுத்து பஸ் இருக்கா சார்?“
“கடேசி பஸ் இப்பதான் போச்சே…?“
“அதை நான் விட்டுட்டேன் சார். அதான் கேக்கறேன்.“
டைம் கீப்பர் தன் டேபிளில் இருந்த ஏதோ ஒரு ஷீட்டை ஆராய்ந்தார். பிறகு, “ராத்திரி பதினொண்ணரை மணிக்கு பெங்களூர்லேர்ந்து சென்னைக்கு ஒரு பஸ் வரும். அது காஞ்சிபுரம் வழியா போகும். ஆனா, அதுல ஸ்டாண்டிங் ஏத்த மாட்டாங்க. உக்கார்றது எடம் இருந்தா, ஏத்திப்பாங்க“ என்று பொறுமையாகச் சொல்லி விட்டு, அடுத்த வேலையில் மும்முரமானார்.
பாலசுப்ரமணியனுக்கு ஒரு நிம்மதி. ‘எப்படியாவது ஒரு ஸீட் அந்த பஸ்ல கிடைச்சுடணும்‘ என்று மகா பெரியவாளை மானசீகமாகப் பிரார்த்தித்துக் கொண்டார்.
மணி ஒன்பதுதான் ஆகிறது. இன்னும் இரண்டரை மணி நேரம் ஓட வேண்டுமே என்று அருகில் இருந்த ஒரு காபிக் கடைக்குள் நுழைந்து ஒரு கப் பால் வாங்கிக் குடித்தார்.
வேலூர் பேருந்து நிலையத்தில் பஸ்களின் வரத்தும் குறைய ஆரம்பித்தது. சில கடைகளை மூடிக் கொண்டிருந்தார்கள் வியாபாரிகள். பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைய ஆரம்பித்தது.
காலியாக இருந்த ஒரு சிமெண்ட் பலகையில் உட்கார்ந்தார் பாலசுப்ரமணியன். காய்கறிப் பைகளைத் தன் அருகே வைத்துக் கொண்டார்.
தூங்கி விடக் கூடாது என்பதற்காக, கொட்டாவி வருகின்ற நேரத்திலெல்லாம் வாய்க்கு முன் வலக்கை விரல்களைக் கொண்டு வந்து சொடக்குப் போட்டார்.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது.
கடிகாரத்தைப் பார்த்தார். இரவு மணி 11.30.
பேருந்துகளே அதிகம் காணப்படாத அந்த பஸ் ஸ்டாண்டுக்குள் மிகச் சரியான நேரத்துக்கு வந்து நின்றது பெங்களூர் பஸ். முகப்பில் சென்னை – வழி காஞ்சிபுரம் என்று காணப்பட்டது.
டைம் கீப்பர் ஆபீஸில் ஒரு கையெழுத்துப் போடுவதற்காக பெங்களூர் பஸ் கண்டக்டர் இறங்கினார். நடந்தார்.
பஸ்ஸுக்குள் இருந்த பயணிகள் எவரும் இறங்கவில்லை. பேருந்துக்குள் இருந்தவர்கள் நல்ல உறக்கத்தில் இருந்தனர்.
பாலசுப்ரமணியனைத் தவிர, வேறு எவரும் இந்த பஸ்ஸுக்காகக் காத்திருக்கவில்லை. இது அவருக்கு ஒரு தெம்பையும் கொடுத்தது. ‘வேறு யாரும் காஞ்சி வழியாக சென்னை செல்வதற்குக் காத்திருக்கவில்லை என்றால், நிச்சயம் எனக்குப் பேருந்தில் இடம் கிடைத்து விடும். எப்படியாவது ஓரிரு இருக்கைகளாவது காலியாக இருக்கும்‘ என்று நினைத்து, டைம் கீப்பர் அலுவலகம் நோக்கி நடந்த கண்டக்டரைப் பார்த்துப் புன்னகைத்தார்.
பாலசுப்ரமணியன் ‘காஞ்சிபுரத்துக்கு ஒரு டிக்கெட்‘ என்று ஆரம்பிக்கும் முன்னேயே கண்டக்டர், “ஸீட் எதுவும் காலி இல்லை சார்“ என்று சொல்லிக் கொண்டே டைம் கீப்பர் ஆபீஸில் தனக்கு உண்டான பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
“சார்… ஒரே ஒரு ஸீட்தான். அர்ஜென்ட்டா நைட்டே காஞ்சிபுரம் போயாகணும்“ என்று கையில் கனமாக இருந்த காய்கறிப் பைகளை இடமும் வலமும் மாற்றிக் கொண்டே கெஞ்சினார்.
கையெழுத்திட்டுப் பேருந்தை நோக்கித் திரும்பும்போது, “ஸீட் இல்லை சார்… நான் என்ன பண்ண முடியும்“ என்று பேருந்தின் படிகளில் ஏறினார்.
மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே விடாமல் கண்டக்டரைப் பின்தொடர்ந்தார் பாலசுப்ரமணியன்.
பஸ்ஸுக்குள் ஏறிய கண்டக்டர், உள்பக்கம் ஒரு நோட்டம் விட்டு விட்டு, “சான்ஸே இல்லை சார்“ என்று பாலசுப்ரமணியனைப் பார்த்துச் சொல்லி விட்டு, புறப்படுவதற்கான விசில் ஒலியை எழுப்பினார்.
பாலசுப்ரமணியனை வேலூர் பஸ் நிலையத்திலேயே விட்டு விட்டு, அந்தப் பதினொண்ணரை மணிப் பேருந்தும் பெரும் சத்தத்துடன் புறப்பட்டுப் போய் விட்டது.
தவித்துப் போனார். என்ன செய்வதென்று தெரியவில்லை. ‘இதற்கு மேல் பேருந்தும் கிடையாதே… டைம் கீப்பர் சொல்லி விட்டாரே… குழந்தை வரம் வேண்டி பிரதோஷம் மாமா சொல்லி, தொடர்ந்து செவ்வாய் அதிகாலையில் விஸ்வரூப தரிசனத்தைக் கண்டு பரவசம் கொள்கிறேனே… இந்த வாரம் அது சாத்தியப்படாதா? இப்படி தரிசனம் தடைபட்டு விட்டால், மகா பெரியவாளிடம் நாம் வைத்திருக்கிற பிரார்த்தனை நிறைவேறாமல் போய் விடுமா?‘ என்று சம்பந்தம் இல்லாமல் பல கேள்விகளைத் தனக்குத் தானே கேட்டுக் கொண்டு பதில் புரியாமல் புலம்ப ஆரம்பித்து விட்டார் பாலசுப்ரமணியன்.
எந்த சிமெண்ட் பலகையில் இதற்கு முன் வெகு நேரத்துக்கு அமர்ந்திருந்தாரோ, அதே பலகையில் மீண்டும் வந்து அமர்ந்தார்.
இரண்டு கைகளையும் முன்தலையில் சோகமாக வைத்துக் கொண்டு, கண்களை மூடி காருண்யமூர்த்தியான அந்த மகா பெரியவாளையே பிரார்த்திக்க ஆரம்பித்தார். அவருடைய கண்களும் பனிக்க ஆரம்பித்தன.
எத்தனை நிமிடங்கள் கடந்திருக்கும் என்று தெரியாது. யாரோ தன் அருகில் நின்று “சார்… சார்…“ என்று அழைக்கின்ற குரல் கேட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தார் பாலசுப்ரமணியன்.
அதிசயித்துப் போனார். அவர் கண்களை அவராலேயே நம்ப முடியவில்லை.
சற்று முன் கிளம்பிப் போன பேருந்தின் கண்டக்டர்.
“சார்… சீக்கிரம் வாங்க… பஸ் சி.எம்.சி. கிட்ட நெருங்கும்போது யதேச்சையாக உள்ளே போய்ப் பார்த்தேன். ஒரே ஒரு ஸீட் காலியா இருக்கறது தெரிய வந்திச்சு. ஒரு ஸீட் காஞ்சிபுரம்னு நீங்க சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. அதான் பஸ்ஸை அங்கேயே நிக்கச் சொல்லிட்டு, ஒரு கி.மீ. தொலைவுக்கு ஓடி வந்தேன். புறப்படுங்க, சீக்கிரம் சீக்கிரம்“ என்று படபடப்பாகப் பேசினார் கண்டக்டர்.
பாலசுப்ரமணியனுக்கு அந்த நேரத்தில் பேச்சே வரவில்லை. ‘இடமில்லை‘ என்று சொல்லி விட்டுப் போன கண்டக்டர், என்னை ஏற்றிச் செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு கி.மீ. ஓடி வந்திருக்கிறாரா? ‘பெரியவா…‘ என்று அந்த இடத்தில் பெருங்குரல் எடுத்துக் கதற வேண்டும் போல் இருந்தது பாலசுப்ரமணியனுக்கு.
“சார், எழுந்திருங்க… பஸ்ல பாசஞ்ஜர்ஸ் எல்லாம் இருக்காங்க. தாமதம் ஆகக் கூடாது. சீக்கிரம் எழுந்திருங்க. என் பின்னால ஓடி வாங்க“ என்ற கண்டக்டர், பாலசுப்ரமணியன் தன் அருகே வைத்திருந்த கனமான காய்கறிப் பைகளை எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தார்.
மகா பெரியவாளின் கருணையை நினைத்துத் தேம்பித் தேம்பி அழுது கொண்டே கண்டக்டரைத் தொடர்ந்து ஓடினார்.
உண்மையிலேயே சி.எம்.சி.க்கு அருகில் – அதாவது புறப்பட்ட இடத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் சாலையின் ஓர் ஓரமாக அந்தப் பேருந்து நிறுத்தப்பட்டிருந்ததை அப்போதுதான் கவனித்தார்.
காய்கறிப் பைகளுடன் நின்ற கண்டக்டர், பாலசுப்ரமணியன் முதலில் ஏறுவதற்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு, “சீக்கிரம் ஏறுங்க சார்… உள்ளே போங்க. ஒரே ஒரு ஸீட் காலியா இருக்கும் பாருங்க. அங்கே உக்காருங்க. பைகளை நானே உங்ககிட்ட கொண்டு வந்து குடுக்கறேன்“ என்று சொன்னார்.
பஸ்ஸுக்குள் ஏறிய பாலசுப்ரமணியன், காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தார்.
ஒரு சில நிமிடங்களில் காய்கறிப் பைகளைக் கொண்டு வந்து கண்டக்டர் வைத்து விட்டு, காஞ்சிபுரத்துக்கு டிக்கெட் கொடுத்தார்.
தன் பக்தனை ஏமாற்றக் கூடாது என்பதில், காஞ்சி மகானுக்குத்தான் எத்தனை அக்கறை!
ஒரு சோதனையை முதலில் கொடுத்து விட்டு, அந்த சோதனையின் வலி ஆறும் முன் சம்பந்தப்பட்ட பக்தனை ஆட்கொள்வதுதான் தெய்வங்கள் மற்றும் மகான்களின் இயல்பு!
அந்த வகையில் பாலசுப்ரமணியனும் கொடுத்து வைத்தவரே!
நள்ளிரவு ஒண்ணேகால் மணிக்குக் காஞ்சியை அடைந்தவர், மடத்துக்கு வந்து படுத்தார்.
அதிகாலையில் அற்புதமான விஸ்வரூப தரிசனம்!
‘கஷ்டத்தைக் குடுத்தாலும் ஒன்னை என் சந்நிதிக்கு வரவழைச்சுட்டேன் பாத்தியா?‘ என்பது போல் தன்னைப் பார்த்து மகா பெரியவா புன்னகைப்பதாகப் பட்டது பாலசுப்ரமணியனுக்கு!
விழுந்து நமஸ்கரித்தார். ஆசிர்வதித்தார் மகான்.
ஊர் திரும்பினார். வாரா வாரம் காஞ்சிக்கு யாத்திரை தொடர்ந்தது.
அடுத்து கூடிய விரைவில் வரலட்சுமி கர்ப்பம் தரித்தார். உரிய வேளையில் எந்த விதமான சிக்கலும் இல்லாமல் சங்கரன் என்கிற லட்சுமிநாராயணன் பிறந்தான்.
அடுத்து ஒரு மகளும் பிறந்தாள்.
இப்போது குடும்பமே பெரியவா அருளால் சுபிட்சமாக இருந்து வருகிறது.